New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-20

பழைய விஷயங்களை நினைத்து கொண்டே அன்றிரவு தூங்காமல் இருந்தாள் சஞ்சனா. எனவே மறுநாள் கல்லூரிக்கு விடுப்பு சொல்லிவிட்டு வீட்டில் இருந்து விட்டாள். பாரதி தூங்கி எழுந்ததும் சற்று தெளிந்திருந்தாள், எப்போதும்போல சிரித்து பேசிக்கொண்டே கிளம்பி பள்ளிக்கு சென்றாள். அதுவே ஆதிக்கும், சஞ்சனாவிற்கும் நிம்மதியாக இருந்தது. கல்லூரிக்கு கிளம்பாமல் இருப்பவளிடம் என்ன ஆச்சு என்று கேட்கவேண்டும் என்று தோன்றியது ஆதிக்கு உனக்கு என்ன அதைப்பற்றி என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று கேட்காமல் அவளை பார்ப்பதும் பைலை எடுத்துவைப்பதுமாக இருந்தான்.

அவனை கவனித்து கொண்டிருந்த சஞ்சனாவிற்கு அவனது எண்ணவோட்டம் புரிந்தது. எனவே அவனிடம் சென்று எனக்கு நேத்து நைட் தூக்கம் இல்லை அதான் ரெஸ்ட் எடுக்கலானு லீவ் போட்டேன் என்றாள், அவளே வந்து காரணம் சொல்லவும் அவ்ளோதானே உடம்புக்கு ஒண்ணுமில்லயே என்று கேட்டான், இல்லை என்று அவள் தலையசைக்க அவன் நிம்மதியாக அலுவலகம் சென்றான்.

அன்று முழுவதும் யோசனையிலே இருந்தாள் சஞ்சனா. ஆதி கூறியதுபோல அவன் அருகில் இப்படி யாரோ போல் இருப்பது அவளுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. நடந்த எதுவும் இல்லை என்று அவளால் மறக்க முடியாது, ஆனால் நீண்ட ஆறு வருடங்கள் அவளது காயத்தை ஆற்றியுள்ளது, எனவே விரோதி போல் முகம் திருப்பாமல் அவனுடன் இயல்பாக பேச அவளால் முடியும், ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண முடியும் என்று தோன்றியது. குறைந்தது அதையாவது இனி செய்வது என்று முடிவு செய்தாள்.

அன்று மாலை பாரதியை கோச்சிங் அழைத்து செல்ல மாயா வந்தாள். சஞ்சனாவை பார்த்ததும் என்ன மேடம் இன்னைக்கு சீக்கிரம் வந்துடீங்களா ரிலாக்ஸ்ஸ இருக்கீங்க.

இன்னைக்கு நான் லீவ் அதான் என்றவள், மாயா நேத்து பாரதி ஸ்கூல்ல நடந்த விஷயம் தெரியுமா?

சார் சொன்னாரு மேடம், இந்த காலத்து பசங்களை என்ன சொல்றது. வளரும்போதே இப்படி இருந்தா பெருசாகி என்ன செய்யபோகுதுங்களோ என்று அலுத்துக்கொண்டாள் மாயா.

நீ இன்னைக்கு பாரதிகிட்ட பேசி பாரு அவ மார்னிங் ஆல்ரைட்டா தான் இருந்தாள் எனக்குத்தான் இன்னும் படபடனே இருக்கு.

கண்டிப்பா மேடம் நான் பேசுறேன் அவளுக்கு இன்னும் ஒரு மாசத்துல அவளுக்கு ஸ்டேட்ஸ் செலெக்ஷன் வருது, இந்த டைம்ல அவ கவனம் சிதறது நல்லது இல்லை.

செலெக்ஷன் எங்க நடக்குது,

இங்க சென்னையில தான் மேடம், ஆனா நடக்குற ஸ்கூல்லயே தங்குறதுதான் நல்லது அவளுக்கும் எல்லாரையும் பார்குறப்ப அந்த சீரியஸ்னெஸ் இருக்கும்.

சரி மாயா, நீ பார்த்துக்கோ எனக்கு டீடைல்ஸ் ஷேர் பண்ணு நானு ஒரு டைம் செக் பண்ணிக்கிறேன் என்றாள் சஞ்சனா, சரி என்று கூறிய மாயா பாரதி தயாராகி வரவும் அவளுடன் கிளம்பினாள்.

அன்று இரவு நேரம் கழித்து வீட்டிற்கு வந்தான் ஆதி, அவனிடம் இருந்த சாவி கொண்டு கதவை திறக்க வந்தவன் தானே கதவு திறப்பதை கண்டு யாரென்று பார்த்தான். நிச்சியமாக அவன் சஞ்சனாவை எதிர்பார்க்கவில்லை. கதவை திறந்தவள் அமைதியாக வழி விட்டு நின்றாள். கார் சத்தம் கேட்டு ரூம்மில் இருந்து வந்த பாரதி அப்பா என்று ஆசையாக ஓடிவந்து கட்டிக்கொண்டாள். மகளை அணைத்துக்கொண்டவன், பேபி கேர்ள் இன்னும் தூங்கலையா?

இல்லப்பா உங்ககூட பேசிட்டு தூங்கலானு தான் வெயிட் பண்ற,

எனக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாமே சீக்கிரம் வந்திருப்பேன்

அவனிடம் ரகசியமாக உங்க வைப் உங்கள டிஸ்டர்ப் பண்ணகூடாதுனு சொல்லிட்டாங்க என்றாள் பாரதி.

அப்பாவும் மகளும் பேசுவதை கேட்டுக்கொண்டே அவனுக்கு சாப்பாடு எடுத்துவைத்து கொண்டிருந்த சஞ்சனா என்ன ரகசியம் பேசுறாங்க என்று நினைத்துக்கொண்டே பாரதி விடு அப்பா டிரஸ் மாத்திட்டு வரட்டும் சாப்பிடுறப்ப பேசிக்கலாம் என்று மகளிடம் கூறினாள்.

பாரதி சிறுவயதாக இருக்கும் போதே அவர்கள் பிரிந்துவிட்டதால் இதுபோன்ற உரையாடல்கள் அவர்களிடம் நடந்ததில்லை, மகள் ரகசியம் பேசியதை நினைத்து சிரித்து கொண்டே உடைமாற்றி கீழே வந்தான் ஆதி. அங்கு டைனிங் டேபிள் மீது அமர்ந்து சஞ்சனாவிடம் கதையடித்துக்கொண்டிருந்தாள் பாரதி.

அவனை பார்த்ததும் அப்பா நீங்க சொல்லுங்க கேம்ல நான் சர்வீஸ் நல்ல போடுறனா இல்ல மாயா அக்காவா?

இது என்ன கேள்வி என்னோட பேபி கேர்ள் தான்

அதுசரி உங்க பொண்ணுன்னு இப்படி பொய் சொல்றதா என்று பேசிக்கொண்டே ஆதிக்கு உணவு பரிமாறினாள் சஞ்சனா.

ஆதியால் அதை நம்பவேமுடியவில்லை ஆறு வருடம் கழித்து அவனுக்கு பரிமாறுகிறாள். இங்க வந்தபின்பும் சாப்பிட்டானா என்று பார்த்துக்கொள்வாளே தவிர பரிமாறமாட்டாள்.  இன்று பலதும் யோசித்து அவனிடம் வேற்று ஆள் போல் நடந்துகொள்வதில்லை என்று முடிவுசெய்தபின் அவனுக்கு பரிமாறுவதில் அவளுக்கு தயக்கம் இல்லை.

ஆதி அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க என்னங்க கேக்குறள உங்க பொண்ணுன்னு பொய் சொல்லுவீங்களா?

அப்போதுதான் சுயஉணர்வுக்கு வந்தவன் என்ன பொய் சொன்ன அதுதானே உண்மை என்னோட பொண்ணுதான் பெஸ்ட்

சரிதான் நாளைக்கு மாயா வரட்டும் இதை பேசிக்கலாம் என்றாள் சஞ்சனா.

பாரதியோ ஒரு பேச்சுக்குத்தானே கேட்டேன் அதுக்கு எதுக்கு அக்கா கிட்ட மாட்டிவிட பாக்குறீங்க அம்மா என்று பாவமாக கேட்க சஞ்சனா, ஆதி இருவருக்கும் சிரிப்பு வந்தது.

சிரிக்குறீங்களா ஒருநாளைக்கு மாயா அக்காவே என்னவிட பாரதிதான் சூப்பரா சர்வீஸ் போடுறானு சொல்லுவாங்க என்று உறுதியான குரலில் கூறினாள்.

தட்ஸ் தி ஸ்பிரிட் பேபி கேர்ள். உன்னால கண்டிப்பா முடியும் என்று மகளை மோட்டிவேட் செய்தான் ஆதி. மூவரும் வரவிற்கும் செலெக்ஷன் பற்றி சிறிதுநேரம் பேசிவிட்டு தூங்க சென்றனர்.

தூங்க அறைக்கு செல்லும்முன் சஞ்சனாவிடம் தாங்ஸ் என்று சொல்லிவிட்டு சென்றான் ஆதி. அவனுக்கு உணவு பரிமாறியதற்கு தான் இந்த தாங்ஸ் என்று அவளுக்கு புரிந்தது. அன்று இருவரும் நிம்மதியாக உறங்கினர். அதன்பின் வந்த ஒருமாதமும் ஆனந்தமாக சென்றது. சஞ்சனா ஆதிக்கு பரிமாறுவது தினமும் தொடர்ந்தது. அவன் நேரமாக வந்துவிட்டால் இருவருமாக பாரதி கோச்சிங் பார்க்க சென்றனர். ஒன்றாக வரும் இருவரையும் பார்க்க மாயாவிற்கு திருப்தியாக இருந்தது.

பிரிவுக்கு முன்னர் இருந்ததுபோல சஞ்சனாவும் ஆதியும் அவர்கள் அலுவலக கதை, கல்லூரி கதைகளை பேசிக்கொண்டனர். நாட்கள் இனிமையாக சென்றது. ஒரு மாதம் முடிந்து மாயா பாரதியை கூட்டிக்கொண்டு செலெக்ஷன்க்கு கிளப்பினாள். மேட்ச்க்கு ஒரு நாள் முன்னரே சென்றுவிட்டனர். ஆதியும் பாரதியும் மறுநாள் மேட்ச்க்கு வருவதாக கூறியிருந்தனர்.

சஞ்சனா திரும்பி வந்ததில் இருந்து இதுதான் முதல்முறை பாரதி இல்லாமல் அவளும் ஆதியும் தனியாக இருப்பது. வீட்டுக்குள் இருக்க ஒருமாதிரி இருக்கவே தோட்டத்தில் உலாத்திக்கொண்டிருந்தாள் சஞ்சனா. உணவு நேரம் ஆகியும் அவள் உள்ளே வரவில்லை எனவே ஆதி அவளை தேடிக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான்.

சனா சாப்பிட வரலையா என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் சென்றான்.

தீடீரென கேட்ட அவன் குரலில் திடுக்கென திரும்பியவள் அவனை பார்த்ததும் அமைதியானாள். பசிக்கலை நீங்க சாப்பிடுங்க என்று மெல்லிய குரலில் கூறினாள்.

சாப்பிட மட்டுந்தான் போறதில்லையா, இல்ல பாரதி வரவரைக்கும் வீட்டுக்குள்ளயே வரபோறது இல்லையா என்று ஒரு மாதிரி குரலில் கேட்டான்.

தன்னை கண்டுகொண்டான் என்று நினைத்தவள் பதில் சொல்லாமல் நின்றாள்.

அந்தளவுக்கு மோசமாவ என்ன நினைக்குற. என்மேல அந்தளவுக்கு உனக்கு நம்பிக்கை இல்லையா என்று வேதனை நிறைந்த குரலில் கேட்டான்.

உங்க மேல நம்பிக்கை இல்லாமல் இல்ல என்மேல நம்பிக்கை இல்லாம வெளில வந்தேன் என்று பட்டென சொன்னவள் தான் சொன்னதை உணர்ந்து நாக்கை கடித்துக்கொண்டாள்.

தன்னை அவள் நம்பவில்லை என்ற எண்ணத்தில் இருந்தவன் அவள் கூறிய பதில் கேட்டு ஆச்சரியமாக அவள் முகம் பார்த்தான்.

சஞ்சனாவிற்கு கண்ணீர் வந்தது எத்தனை நாளுக்கு இந்த கொடுமை அவனை வெறுக்கவும் முடியாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அவன் நிம்மதியையும் கெடுத்துக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்து அழுதாள்.

அவள் அருகில் வந்து அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் கலங்கிய கண்களுக்குள் ஆழமாக பார்த்தான். பல வருடங்கள் கழித்து இவ்வளவு நெருக்கத்தில் இருப்பது இருவருக்கும் இதமாக இருந்தது.

சனா உன்ன எந்த அளவுக்கு நான் காயப்படுத்தியிருக்கனு எனக்கு தெரியும், அதை தாண்டி இப்ப இந்த அளவுக்கு நீ என்கிட்ட பேசுறதே நான் பெருசா நினைக்குற. உன்கூட ஒரே வீட்டுல உன்கையாலே சாப்பிட்டு, எல்லாத்தையும் உன்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டு இருக்குற இந்த வாழ்க்கை எனக்கு நிலைக்கனுன்னுதான் தினமும் கடவுளை வேண்டிக்குற. அதுக்காக எனக்கு உன்மேல ஆசை இல்லைன்னு இல்ல, ஆனா உன்ன கஷ்டப்படுத்தி எனக்கு எதுவும் வேண்டாம். என்ன கஷ்டப்படுத்துறத நீ நினைச்சு உன்ன வருத்திக்காத. இன்னும் நமக்கு வாழ்க்கை இருக்கு டேக் யுவர் டைம் என்று கூறியவன் மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து சென்றான்.

சஞ்சனா அமைதியாக அவன் பின்னால் வீட்டிற்குள் சென்றாள். தனக்காக யோசிக்குறாள் என்று அவனும், தனக்காக யோசிக்குறான் என்று அவளும் நிம்மதியாக சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றனர். ஆனால் அவர்கள் நிம்மதிக்கு ஆயுள் கம்மி அடுத்தநாள் செலெக்ஷன் சென்ற பாரதி காணவில்லை என்ற செய்தி இடியென அவர்களை தாக்கியது.

பாரதியை எங்கே? பாரதிக்கு என்ன ஆனது? அறிய தொடர்ந்து வாசியுங்கள் ” மீண்டும் மலர்வாய்”….

-நறுமுகை

11

No Responses

Write a response