வீர வணக்கம்

வீர வணக்கம்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.”

மகா கவி பாரதி

என் அன்பு சகாக்களுக்கு

அஹிம்சை என்னும் வலிமை மிக்க ஆயுதம் கொண்டு மீட்டு  எடுத்த நம் தாய் திருநாட்டை, அள்ளும் பகலும் காத்து  நின்ற காவல் தூண்களை இன்று தீவிரவாதத்துக்கு பலிகொடுத்து இருக்கிறோம். நம் அனைவரையும் இந்த சம்பவம் ஒருசேர அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. வீர மரணம் அடைந்த சகோதரர்களுக்கும் அவர்களுது குடும்பங்களுக்கும் நம் வீர வணக்கத்தை காணிக்கை ஆக்குவோம்.

தாயை விட்டு

தாய்நாடு காக்க சென்றாய்

மனைவி மக்கள் மறந்து

நாட்டு மக்களுக்கு அரண் ஆனாய்

சகோதரன், சகோதரியை விட்டு விலகி

இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள்

என உறுதிமொழி ஏற்றாய்

நீ காவல் காத்தாய்

நாடு அமைதியாய் இருக்க

நீ தூக்கம் துறந்தாய்

நங்கள் துயில் கொள்ள

நீ தூணாய் நின்றாய்

நங்கள் இளைப்பாறினோம்

தோழனே இன்று எங்களை விட்டு

நீ இளைப்பாற சென்றாயோ …….

என்றும் உன் தியாகத்தை இந்த நாடும் நாட்டும் மக்களும் மறவோம்

எங்கள் அடுத்த தலைமுறைக்கு உன் வீர சரித்திரம் நிச்சயம் சொல்லப்படும்.

வந்தே மாதரம் .

என்றும் அன்புடன்

சக தோழி

4

No Responses

Write a response