காதல் கொண்டேனடி-41

காதல் கொண்டேனடி-41

ஒரு வாரமாக செழியனிடமும் பேசாமல், அன்னபூரணியும் போன் எடுக்காததில்  அவந்திகா  தவித்து போனாள். வெற்றியை அனுப்பி என்னவானது என்று பார்த்து வர சொல்லலாம் என்று அவள் நினைத்துக்கொண்டிருக்க, அன்னப்பூரணியே அவந்திகாவை தேடிக்கொண்டு மதுரைக்கு வந்தார்.

அது தான் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விட்டதே. நல்லநாள் பார்த்து இரண்டு திருமணங்களையும் நடத்திவிடலாம் என்று பேசுவதற்கு அன்று தாமரையின் அப்பாவும் அம்மாவும்  அவந்திகாவின்  வீட்டிற்கு  வந்திருந்தனர்.

அவர்கள் அந்த பேச்சை தொடங்குவதற்கு முன்பே அன்னபூரணி அங்கு வந்து சேர்ந்தார். அவரை பார்த்ததும் பதட்டமான அவந்திகா அத்தை என்ன ஆச்சு, நாலு நாளா உங்களுக்கு நான் போன் பண்ணினேன் நீங்களும் போன் எடுக்கவில்லை, அவரும் போன் எடுக்கவில்லை, அவர் எங்கே அவர் உங்க கூட வரவில்லையா? என்று  கேட்க, அன்னபூரணி ஒருநிமிடம் அமைதியாக நின்றார்.

என்ன ஆச்சு அத்தை சொல்லுங்க ஏதாவது பிரச்சனையா என்று அவந்திகா பதட்டப்பட …

அவன் ஊரில்  இல்லைம்மா கனடா போய்விட்டான் என்று அன்னபூரணி கூற,

கனடாவா எதற்கு என்று அவந்திகா கேட்க,

உனக்கு நடந்ததற்கெல்லாம் அவன் தான் காரணமாம், அவனால் தான் நீ இவ்வளவு கஷ்டப்படுறியாம்  இனிமேல் உன் வாழக்கையில் அவன் தொந்தரவா இருக்க கூடாதுனு கனடா போய்ட்டான் மா என்று கூறினார் அன்னபூரணி,

 அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போயினர். எல்லா பிரச்சனையும் முடிஞ்சதுனு பார்த்தா இது என்ன புது பிரச்சனையா இருக்கு என்று தாமரையின் அப்பா கேட்க,

அதை ஏன் அண்ணா கேட்குறீங்க எவ்வளவோ எடுத்து சொன்னேன் சொல்ல சொல்ல கேட்காமல் கிளம்பி போய்விட்டான் என்று அன்னபூரணி ஆதங்கப்பட்டார்.

ஒரு நிமிடம் அமைதியாக இருந்த அவந்திகா அத்தை அவர் கனடா போறதா உங்களுக்கு யார் சொன்னது என்று கேட்டாள்,

 ஏம்மா அவன் தான் சொன்னான் என்றார் அன்னபூரணி.

என்கிட்ட சொல்லவேண்டாம்னு உங்ககிட்ட அவர் சொல்லலையா என்று அவள் கேட்க,

சொன்னான் சொன்னான் … உங்களுக்கு அவள் மீது  அக்கறை இருந்தா  அவள் கிட்ட சொல்லாதீங்கன்னு சொன்னான். ஆனால் எனக்கு உன் மேல அக்கறை இருக்கு நீ எங்களை காணாமல் தேடுவன்னு எனக்கு தெரியும் அதனால் தான் நான் உன்கிட்ட சொல்ல வந்தேன் என்றார் அன்னபூரணி.

சிறிதுநேரம் அமைதியாக யோசித்து கொண்டிருந்த அவந்திகா அத்தை அவர் கனடா எல்லாம் போகலை வேற எங்கேயோ போயிருக்கார், நீங்க கண்டிப்பா என்கிட்ட சொல்லுவீங்கன்னு அவருக்கு தெரியும், உங்ககிட்ட எங்க போறன்னு உண்மைய சொல்லிட்டு போகும் அளவுக்கு உங்கள் பையன் முட்டாள் இல்லை. ஒரு இரண்டு நாள் டைம் கொடுங்க எங்க இருக்கார்னு கண்டுபிடிச்சு சொல்கிறேன் என்றாள் அவந்திகா.

அன்னபூரணியோ அப்படி கூட இருக்குமோ அதனால் தான் தன்னிடம் கனடா போறேன்னு ஈஸியா சொல்லிட்டு போய்ட்டானோ என்று நினைத்தார்.

கோயம்பத்தூருக்கும் மதுரைக்கும் இனி அலைய வேண்டாம் என்று அன்னபூரணியை அவந்திகா அங்கேயே தங்க சொல்லிவிட்டாள்.

இரண்டு நாட்களில் அவந்திகா செழியன் எங்கு இருக்கிறான் என்பதையும்  கண்டுபிடித்துவிட்டாள் .  குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் டாக்டர் சார் இன்னும் நாட்டை விட்டெல்லாம் வெளியில் போகவில்லை, டெல்லியில் தான் இருக்கார். அவர் பிரண்ட் அன்வர் மூலமா ஜாப் அரேஞ்சு பண்ணிட்டு அங்கே தான் இருக்கார்.

ஆஸ்திரேலியா போகும் ஐடியாவில இருக்கார் ஆனால் தற்சமயம் போகமுடியாத சூழ்நிலை, அதுவரை தற்காலிகமா டெல்லியில் டேரா போட்டிருக்கார் என்றாள் அவந்திகா.

அன்னபூரணியோ இவனுக்கு மட்டும் எப்படி எங்க போனாலும் வேலை கிடைக்குது என்று கடுப்புடன் கேட்க,

உங்க பிள்ளையோட ட்ராக் ரெக்கார்டு அப்படி அத்தை,  யூ எஸ் ல உங்க பையன் அட்டென்ட் பண்ணின எந்த சர்ஜெரியும் பெயிலியர் ஆனது இல்லை, அதை வைத்து தான் எங்க போனாலும் உடனே வேலை கிடைக்குது என்றாள் அவந்திகா.

ஹ்ம்ம்ம் அவன் இவ்வளவு புத்திசாலியா இருந்திருக்க வேண்டாம் என்றார் அன்னபூரணி,

அதைக்கேட்ட அவந்திகாவிற்கு முறுவல் தோன்றியது.

அண்ணா நீயும் நானும் போய் என்னனு கேட்டுட்டு வந்திடுவோம் என்றாள் அவந்திகா,

அன்னபூரணியோ நானும் வரேன்மா நான் சொல்ல சொல்ல கேட்காமல் கிளம்பி போயிருக்கான் அவனை நாலு வார்த்தை கேட்டால் தான் எனக்கு கோபமே அடங்கும் என்றார்.

உடனே மீனாட்சியோ நாங்களும் வரோம், அது எப்படி  எங்க பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டு  இப்படி விட்டுட்டு போகலாம்னு நாங்களும் கேட்கனுமில்ல என்றார்,

உடனே தாமரையின் அப்பாவோ நாங்களும் வரோம், எங்க பொண்ணுக்கு அண்ணனா இருந்து முன்னாடி நின்னு கல்யாணத்தை பண்ணுவார்னு பார்த்தா இவர் பாட்டுக்கு போய் டெல்லியில் இருந்துகிட்டார் என்றார்,

ஆளாளுக்கு தாங்கள் வருவதற்கான காரணத்தை கூற வெற்றியோ , இவர்களெல்லாம் மாப்பிள்ளைக்கிட்ட கேள்விகேட்க வருவதுபோல தெரியவில்லை டெல்லியை சுத்திப்பார்க்க வருவது போல தெரியுது என்று அவந்திகாவிடம் கூறினான்.

தன் அண்ணனை பார்த்து புன்னகைத்த அவந்திகா, விடு அண்ணா ட்ரிப் செலவை உங்க மாப்பிள்ளை தலையில் கட்டிவிடலாம் என்றார்.

அதன் பின் செழியனின் நண்பன் அன்வரிடம் பேசி எந்த நேரத்தில வந்தால் செழியன் வீட்டில் இருக்க மாட்டான் என்று தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப டிக்கெட் ஏற்பாடு செய்தான் வெற்றி.

டிக்கெட் புக் செய்த விஷயத்தை அவந்திகாவிடம் சொல்ல வந்த வெற்றி, அவள் ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்து என்னடா மாப்பிள்ளை இப்படி பண்ணது உனக்கு கஷ்டமா இருக்க என்றான்.

அவனை பார்த்து முறுவலித்தவள், இல்லண்ணா நான் காரணம் சொல்லாமல் கல்யாணத்தை நிறுத்துனப்ப அவருக்கு இப்படித்தான கஷ்டமா இருந்திருக்கும் அதுதான் யோசிச்சுட்டு இருந்தேன் என்றால் அவந்திகா,

தொடர்ந்து அவளே நீங்க எனக்கு ஷாக் குடுத்த மாதிரி உன்னோட மாப்பிள்ளைக்கும் ஷாக் குடுத்து ஊருக்கு கூட்டிட்டு வந்திடுவோம் என்றால்.

சரிதான் என்று புன்னகைத்தான் வெற்றி, அவன் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த அவந்திகா என்னால உன்னோட லைப்லையும் பிரச்சனை, நிச்சயம் நடந்தும் கல்யாணம் நடக்காம தள்ளிகிட்டே போகுது சாரி அண்ணா என்று கூறிய தங்கையை பார்த்த வெற்றி,

லூசு மாதிரி பேசாத அவந்தி உன்னோட சந்தோசத்தை விட எதுவும் பெருசில்லை, உன்னை  மாப்பிள்ளை கையில ஒப்படைச்சாத்தான் எனக்கு நிம்மதி என்றவன், கண்டதையும் யோசிக்காம ரெடி ஆகு மாப்பிள்ளைய ஒரு கை பார்த்திடுவோம் என்று சிரித்தான், அவந்திகாவும் அவன் சிரிப்பில் இணைந்து கொண்டாள்.

அடுத்த பகுதியில்  கதையின் நிறைவு பகுதியுடன் உங்களை சந்திக்கிறேன். தொடர்ந்து வாசியுங்கள்…….

-நறுமுகை

No Responses

Write a response