Tamil Audio Novel - kadhal kondenadi

காதல் கொண்டேனடி-40

ஷாலினி இன்னும் கோமாவில் இருப்பதால் அவள் கண் முழித்தால் தான் மேற்கொண்டு கேஸை மூவ் பண்ண முடியும் என்று போலீஸ் சொல்லிவிட செழியன் அப்போதைக்கு அந்த பிரச்னையை ஒத்திவைத்தான்.

ஹாஸ்பிடலில் இருந்து வந்து ஒருமாதம் வரைக்கும் செழியன் அவந்திகா கூடவே இருந்து அவளை பார்த்துக்கொண்டான். செழியன்  தாமரை வீட்டில் தங்கிக்கொண்டான், காலை அவந்திகா வீட்டிற்கு வந்தால், இரவு அவள் உறங்கிய பின்தான் தாமரை வீட்டிற்கு செல்வான்.

சில சமயம் தாமரையும் செழியனோடு வருவாள். வெற்றி, தாமரை, அவந்திகா, செழியன் நால்வரும் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடிப்பது, படம் பார்ப்பது, தாயம் விளையாடுவது என்று வீடே கலகலப்பாக இருக்கும். நேரம் இருக்கும்போது கனகவள்ளியும் அவர்களோடு சேர்ந்து தாயம் விளையாடுவார்.இப்படியாக அவந்திகாவிற்கு வீட்டிற்குள்ளயே அடைந்திருக்கும் உணர்வு இல்லாமல் பார்த்து கொண்டனர்.

அவந்திகாவிற்கு சிறு வயதில் இருந்து மாத்திரை சாப்பிடுவது என்றால் பாகற்காயாய் கசக்கும், இப்போதோ தினம் ஐந்து, ஆறு மாத்திரைகள் சாப்பிடவேண்டும், தினமும் செழியன் அவளுக்கு மாத்திரை கொடுப்பதால் அவனிடம் ஒன்றும் சொல்ல முடியாமல் பேசாமல் இருந்தால்.

அன்று சரியாக மாத்திரை சாப்பிடும் நேரம் செழியன் முக்கியமான போன் வந்தது என்று, பேசிவிட்டு வந்து மாத்திரை தருவதாக கூறி சென்றான்.

அதற்குள் அங்கு வந்த வெற்றியிடம், அவந்திகா, அண்ணா எனக்கு ஒரு ஹெல்ப் பண்றயா என்றாள்,

என்ன அவந்தி சொல்லு என்றவனை, அருகில் அமர சொன்னவள், அண்ணா டாக்டர் சார் போன் பேச போயிருக்காரு நீ என்ன பண்ற அவரு வந்ததும் எனக்கு மாத்திரையெல்லாம் நீயே எடுத்துகுடுத்துட்ட நான் சாப்பிட்டுட்டேனு சொல்றயா, ப்ளீஸ் என்று கெஞ்சினாள்,

அது சரி நீ மாத்திரை சாப்பிடாம ஏமாத்த என்ன கூட்டு சேர்த்துரையா, என்னால முடியாது என்றான் வெற்றி . அதற்குள் போன் பேசிவிட்டு வந்த செழியன் அவர்கள் பேசுவதை கேட்டு கத்தவருகிலேயே நின்று கொண்டான்.

அண்ணா இன்னைக்கு ஒரு நாள் ப்ளீஸ் உனக்குத்தான் தெரியுமே எனக்கு மாத்திரை பிடிக்காதுனு, உன் மாப்பிள்ளைகிட்ட சொன்ன அவ்வளோதான், நானே இந்த ஒருவாரம ஏன்டா டாக்டரை லவ் பண்ணோணு யோசிச்சுட்டு இருக்க என்று சொல்ல,

வெற்றியோ அடி கழுதை உன் நல்லதுக்கு தானே சொல்றாரு அவரையே கிண்டல் பண்றயா என்று போலியாக மிரட்டியவன், கொஞ்சநாளைக்குத்தான சாப்பிட்டுக்கோட என்று தங்கையிடம் சொல்ல, அவள் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.

அதற்குள் செழியன் உள்ளே வர, வெற்றி தங்கையிடம் உனக்கு வேணுனா நீயே அவர்கிட்ட சொல்லிக்கோ என்று கூறி ஒரு முறைப்பை பெற்றுக்கொண்டான்.

வெற்றி தோட்டத்திற்கு செல்வதாக கூறி சென்றுவிட, செழியன் மாத்திரையை எடுத்து குடுத்தான், அதை கையில் வாங்காமல் அவனை பார்த்தவள், மாமா இன்னைக்கு மாத்திரைக்கு லீவ் விட்டுடலாமா என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கேட்டாள்.

அவளை பார்த்தவனுக்கு அவனை மீறி முகத்தில் புன்னகை அரும்பியது, கூடவே இந்த முகம் பார்க்காமல் தன்னால் இருக்க முடியுமா என்ற கேள்வியும் தோன்றியது, அவளிடம் அதை காட்டிக்கொள்ளாமல் இன்னைக்கு மட்டுந்தான் என்று கண்டிப்பாக சொன்னான்.

வேகமாக தலையை ஆட்டியவள், அவனை கைபிடித்து அருகில் அமரவைத்தாள்.

என்ன அவந்தி என்றவனிடம், என்ன ஆச்சு மாமா எப்பவும் ஏதோ யோசனையிலேயே இருக்கீங்க, உங்க முகமே சரியில்லை ஒழுங்கா தூங்குறீங்களா இல்லையா? என்று கேட்டாள் அவந்திகா.

அவந்திகா தன்னை கவனிக்குற, ரொம்போ நாள் அவமுன்னாடி இப்படி இருக்க முடியாது என்று நினைத்தவன், அவளிடம் அவந்தி நீ இப்படி இருக்கப்ப  என்னோட மூஞ்சு வேற எப்படி இருக்குனு எதிர்பார்க்குற, நீ பழைய மாதிரி எழுந்து நடமாட ஆரம்பிச்ச நானும் சரியாயிடுவேன் என்றான்.

அன்றில் இருந்து ஒரு வாரத்தில், அவந்திகாவிற்கு கை, கால்களில் கட்டு பிரித்து அவள் கொஞ்சம் கொஞ்சம் தனியாக நடக்க தொடங்கிவிட்டாள். கொஞ்சம் வேலை இருப்பதாக கூறி செழியன் கோயம்பத்தூர் சென்றான். அவந்திகா ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனதில் இருந்து செழியன் மதுரையில் தான் இருக்கிறான், மதுரை வந்த அன்னப்பூரணியை கூட வெற்றி தான் கோயம்பத்தூரில் விட்டுட்டு வந்தான். எனவே ஊருக்கு சென்று வருகிறேன் என்று கூறியவனை அவந்திகா தடுக்கவில்லை.

அங்கு சென்றவன் எங்கோ கிளம்ப தயாராக, அன்னப்பூரணி எங்கடா செழிய கிளம்பிட்ட என்றார், அவரை பார்க்காமல் சுவற்றை பார்த்துக்கொண்டு கனடாக்கு என்றான் செழியன்,

எதாவது காண்ப்ரென்ஸ்ஸா எப்ப வருவ என்றார் அன்னப்பூரணி , அம்மா திரும்பி வர எண்ணத்துல நான் போகலை என்றான் செழியன்,

அப்போது சரியாக அவன் நண்பன் சூர்யா உள்ளே வந்தான். அவனை பார்த்த அன்னப்பூரணி சூர்யா இவன் என்னடா சொல்றான் என்று கேட்டார்,

அம்மா, அவந்திகா நிலைமைக்கு இவன் தான் காரணம்னு சொல்லிக்கிட்டு நாட்டைவிட்டு போறான் என்றான் சூர்யா.

அன்னப்பூரணி அதிர்ந்து போனார், அப்படி நினைக்குறவன் எதுக்குடா அவ்வளோ அவசரமா கல்யாணம் செஞ்சுக்கிட்ட, இப்ப நீ விட்டுட்டு போறது உன்னோட பொண்டாட்டியை, இதெல்லாம் உனக்குபுரியுதா இல்லையா என்று கத்தினார் அன்னப்பூரணி.

யாருக்கும் தான் எங்க கல்யாணம் தெரியாதே என்ற மகனை ஓங்கி அறைந்தார் அன்னப்பூரணி, நீ நான் வளர்த்த பிள்ளையாட ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு யாருக்கும்தான் தெரியாதுனு சொல்ற என்று கோவத்தோடு கேட்க,

அவரை கலங்கிய கண்களோடு பார்த்த செழியன் எனக்கு மட்டும் அவளை விட்டுட்டு போகனுன்னு ஆசையாம்மா, முன்னாடியெல்லாம் அவளை பார்குறப்ப அவ்வளோ இதமா இருக்கும், மனசுமுழுக்க அவ மேல இருந்த காதலை விட இப்ப எனக்கு குற்றவுணர்ச்சி தான் அதிகமா இருக்கு. ஒன்னுக்கு ரெண்டுதரவை என்னால, எனக்காகனு அவ சாவைத்தொட்டு திரும்பி வந்திருக்க. போதுமா இனியாவது அவ நிம்மதியா இருக்கட்டும், உங்களுக்கு நிஜமாவே அவமேல அக்கறை இருந்த நான் எங்கபோறேன், ஏன் போறேனு அவகிட்ட சொல்லாதீங்க என்று கூறியவன். அன்றில் இருந்து ஒருவாரத்தில் கோயம்பத்தூரில் இருந்து கிளம்பினான்.

அங்கு ஒருவாரமாக அவனிடம் சரியாக பேசமுடியாத அவந்திகாவிற்கு எதுவோ சரியில்லை என்று மனசு சொல்லியது.

அவந்திகா, செழியன் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்வாளா?????அவர்கள் காதல் கைகூடுமா ?????? அறிய தொடர்ந்து வாசியுங்கள்…….

-நறுமுகை

No Responses

Write a response