காதல் கொண்டேனடி-39

காதல் கொண்டேனடி-39

பல மணி நேரம் அனைவரையும் தவிக்கவிட்டுவிட்டு கண் திறந்த அவந்திகா முதலில் தேடியது செழியனை தான். அவள் இறுதியாக குண்டு அடி பட்டு மயங்கும் முன் அவள் பார்த்த காட்சி ஷாலினி செழியனை சுட்டது எனவே செழியனுக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என்று பயந்தவள் அவனை தான் முதலில் கேட்டாள்.

அவந்திகா கண் திறந்ததும் டாக்டரை அழைத்து வந்தார்  நர்ஸ், டாக்டர் பார்த்துவிட்டு இப்போது ஒன்றும் பிரச்னை இல்லை என்று கூறவும், நர்ஸ் சென்று செழியனை, அவந்திகா கூப்பிடுவதாக அழைத்து வந்தாள்.

உள்ளே வந்த செழியனை முழுவதுமாக பார்த்த பின்பு தான் அவந்திகாவிற்கு நிம்மதியாக இருந்தது. வேகமாக அவள் அருகில் சென்று அமர்ந்தவனை பார்த்து அவந்திகா திக்கி திணறி மாமா உங்களுக்கு ஒன்றும் இல்லையே என்று கேட்டாள் .

தன்னால் தான் இவளுக்கு இந்த நிலை என்று தெரியாமலேயே அவள் தன்னை கேட்கவும்  மிகவும் நொந்துபோன செழியனுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

என்ன ஆச்சு மாமா என அவந்திகா கேட்கவும்,

எனக்கு ஒன்றும் இல்லை அம்மு ஒன்றும் இல்லை, என்று அவளை சமாதானம் படுத்தியவன் அவள் தலை கோதி முன் நெற்றியில் முத்தம் இட்டான்.

அவனுக்கு ஒன்றும் இல்லை என்று அறிந்த அவந்திகா மீண்டும் மருந்தின் தாக்கதில் மயக்கத்தில் விழுந்தாள்.

அவளை பரிசோதித்த டாக்டர் இப்போது ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் அவள் கை கால்களில் உள்ள எலும்புமுறிவினாலும், படியில் இருந்து உருண்டதால் தலையில் ஏற்பட்ட காயத்தினாலும் இப்போது ஏதும் பிரச்சனை இல்லை என்றாலும்,  பின்னர் ஏதேனும் விளைவுகள் வரலாம். அதனால் அவந்திகா பத்து  பதினைந்து நாட்கள் மருத்துவமனையில் இருந்து அனைத்து பரிசோதனைகளையும் செய்த பின் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று கூறிவிட்டனர்.

அவளுக்கு ஒன்றும் இல்லை என்ற பின்பு தான் அங்கிருந்தஅனைவருக்கும் சீரான சுவாசமே வந்தது. யாரும் தப்பி தவறி கூட ஷாலினி இருக்கும் அறை பக்கம் செல்லவில்லை. அவள் எப்படி இருக்கிறாள் என்று கூட அறிந்துகொள்ள முயற்சிக்கவில்லை. அவந்திகா நன்றாக இருக்கிறாள் என்ற உணர்வில் அனைவரும் அமைதியாக இருக்க,

சூர்யா வந்து செழியனிடம் பேசவேண்டும் என்று சற்று தள்ளி அழைத்து சென்றான்.

செழியன் அங்கிருந்து அகன்றதும் வீரச்சாமியும், அவந்திகாவின் அப்பா, தாமரையின் அப்பா என்று அனைவரும் என்ன நடந்தது என்று வெற்றியிடமும் தாமரையிடடமும் கேட்டனர்.

வெற்றியும் தாமரையும் ஆரம்பத்தில் இருந்து நடந்தவற்றை கூறினர் 

கூடவே கனகவள்ளிக்கு ஏற்பட்ட சந்தேகம், அதன் பின் வெற்றி டிடெக்ட்டிவ் வைத்து அவந்திகாவை சுற்றி என்ன நடக்கிறது என்று அறிய சொன்னது, அதன் பின் செழியன் உண்மையை கண்டறிந்தது என்று அனைத்தையும் கூறினர்.

அதை எல்லாம் கேட்ட அவர்கள் அசந்து தான் போனார்கள் ஒரு பெண்ணால் இவ்வளவு தூரம் செய்ய முடியுமா ?????அதுவும் யார் துணையும் இல்லாமல் பணம் இருக்கிறது என்று என்னவெல்லாம் செய்திருக்கிறாள் என்று அனைவருமே மிகவும் அதிர்ந்து போயினர்.

மேலும், அவந்திகாவிற்கு குழந்தை பிறக்காது என்றும், அது  தெரிந்தும் அதை பற்றி எதுவும் கவலை இல்லாமல், செழியன் அதை தங்களிடம் இருந்து மறைத்தது பற்றியும் அதற்காக தான் அவந்திகா திருமணத்தை நிறுத்தினாள் என்றும், அதனால் தான் தாங்கள் இப்படி ஒரு திருமணத்தை நடத்தியதாகவும் வெற்றி கூற,

 உண்மை தெரியாமல் செழியனை திட்டி விட்டோமே என்று மீனாட்சிக்கு வருத்தமாக இருந்தது.

அடுத்த நாள் ஷாலினியின் தாத்தா விவேகானந்தர், பாட்டி கோகிலா மற்றும் ஷாலினியின் தாய் தந்தை  அனைவரும் கனடாவில் இருந்து வந்து சேர்ந்தனர்.

ஷாலினியின் அம்மா, வந்தனா தன் பெண்ணின் நிலைக்கு செழியன் தான் கரணம் என்று, செழியனிடமும், அன்னப்பூரணியிடமும் சண்டைக்கு வந்தார்.

அதை பார்த்து கொண்டிருந்த கனகவள்ளி  இங்க பாருங்க உங்க பெண்ணால் தான்  எங்க பேத்தி இந்த நிலைமையில் இருக்கிறாள் நாங்க மட்டும் ஒரே ஒரு கம்பளைண்ட் கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா , உங்க  பொண்ணு  செய்த அனைத்திற்கும் எங்க கிட்ட ஆதாரம் இருக்கு இங்க நின்று தேவை இல்லாமல் எங்க வீட்டு பையனை   சத்தம் போடும் வேலை வேண்டாம்,உங்கள் பெண்ணை தான் கொண்டு வந்து ஹாஸ்பிடலில் சேர்த்தாச்சு இல்லை உங்க பொண்ணை காப்பாற்றும் வழியை  போய்  பாருங்க  என்று கனகவள்ளி கறாராக  சொல்லிவிட, 

விவேகானந்தரோ தனது மகளை அமைதியாக இருக்க சொல்லி, மருமகனோடு அவ்விடம் விட்டு அனுப்பிவைத்தார்.

பின்னர் செழியனிடம் திரும்பியவர், மன்னிச்சுடு செழியா  ஷாலினியால உங்க குடும்பத்துக்கு இவ்ளோ பிரச்னை வரும்னு நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கே பிளைட் ஏறுவதற்கு முன்னாடி தான் எல்லா விஷயமும்  தெரியும். உனக்கு தெரிஞ்ச உடனே நீ என்கிட்டே சொல்லி இருக்கலாம்,  உன் மேல தப்பு  சொல்ல வரவில்லை, நீ முன்னாடியே என்னிடம் சொல்லி இருந்தால் அவந்திகாவிற்கு இந்த நிலை ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம் என்று தான்  சொன்னேன். எந்த காலத்திலும் ஷாலினி செய்தது சரினு  நான் நியாயம் படுத்தமாட்டேன். எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க என்று அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு திரும்பியவரை

ஒருநிமிடம் என்று தடுத்த செழியன் , உங்கள்  பேத்தியால் இந்த கொஞ்ச நாளில் நான் நிறைய அனுபவித்துவிட்டேன்.  அவள் எப்படியோ போகட்டும்னு அங்கேயே விட்டுட்டு வர அளவுக்கு எனக்கு இன்னும் மனிதாபிமானம் செத்து போகவில்லை. அதுபோக நான் ஒரு டாக்டர் அந்த ஒரே காரணத்திற்காக மட்டும் தான் நான் அவளை கொண்டு வந்து ஹாஸ்பிடலில் சேர்த்தேன். அதுக்காக அவளை நான் அப்படியே விட்டுட மாட்ட கண்டிப்பா போலீஸ் கம்பளைண்ட் குடுப்ப, கோர்ட்ல கேஸ் நடத்தி உங்க பேத்தியை காப்பதிக்கோங்க என்றவன், இனி உங்க யார் முகத்தையும் நான் என்வாழ்க்கையில பார்க்க கூடாது என்று அவர்முன் கைகூப்பினான்.

குனிந்த தலையோடு அங்கிருந்து நகர்ந்தார் விவேகானந்தர்.

அன்னப்பூரணியோ அவந்திகா குடும்பத்திடம், ஷாலினியால அவந்திகாவுக்கு இவ்வளோ பிரச்சனை வருனு நான் எதிர்பார்க்கவேயில்ல, செழியன் அவந்திகா வாழ்க்கையில வரமாயிருந்திருந்த அவந்திகா சந்தோசமா இருந்திருப்ப, எல்லாரும் எங்களை மன்னிச்சுடுங்க என்று கூறி அழுக,

அவரை நெருங்கிய மீனாட்சி, நல்லாயிருக்கு அண்ணி நீங்க பேசுறது, நம்ப எல்லாரும் ஒரே குடும்பம் நீங்க எதுக்கு யாரோ செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேக்குறீங்க என்று கூறி அணைத்துக்கொண்டார்.

தான் நினைத்ததை தனது தாயும் சொல்ல, தனது முடிவில் மேலும் உறுதியாக இருந்தான் செழியன்.

அதன் பின் பதினைந்து நாட்கள் ஆள் மாற்றி ஆள் அவந்திகாவை பார்த்து கொண்டனர்.

ஆனால் பதினைந்து நாளும் செழியன் மட்டும் மருத்துவமனையை விட்டு வேறு எங்கும் செல்லவில்லை.

அவந்திகாவும் முழித்திருக்கும் நேரம் முழுவதும் அவன் கையையே பிடித்திருந்தாள்.அவனை விட்டால் மீண்டும் அவனுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணியோ என்னவோ, அவள் அவனை விடவே இல்லை.

செழியனும் அதனை உணர்ந்துகொண்டு அவள் விழித்திருக்கும் நேரம் முழுவதும் அவளுடன் இருந்தான்.

பதினைந்து நாட்கள் கழித்து அவந்திகாவை வீட்டிற்கு அழைத்து வந்தனர். செழியன் ஏற்கனவே முடிவு செய்தது போல அவந்திகாவின் வாழ்க்கையை விட்டு முழுவதுமாக விலகிவிட வேண்டும் என்று நினைத்தான்.

இந்த முடிவை அவந்திகா எப்படி எடுத்துக்கொள்ள போகிறாள் இனி அவர்கள் காதல் என்ன ஆகும் என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள்…………

-நறுமுகை

No Responses

Write a response