காதல் கொண்டேனடி-9

காதல் கொண்டேனடி-9

ரூமிற்கு வந்த செழியன் தன்னையே திட்டிக்கொண்டிருந்தான், என்ன வேலைடா செஞ்சுவெச்சிருக்க இப்படியா அவகிட்ட உளருவ நாளைக்கு அவ உன்கூட எப்படி வருவா, நல்லா சொதப்பிவெச்சிருக்க நாளைக்கு என்ன நடக்கபோகுதோ என்று மனதோடு புலம்பிக்கொண்டிருந்தான். அவந்திகா என்ன  சொல்லுவாளோ என்ற எண்ணத்தில் அவனுக்கு அன்று இரவு சுத்தமாக தூக்கம் வரவில்லை.

அங்கு அவந்திகா நிலையோ வேறாக இருந்தது, அவன் திடீரென சொன்னது அதிர்ச்சியாக இருந்தாலும், அவளும் இது ஒருநாள் நடக்குமென எதிர்பார்த்துதான் இருந்தாள், என்ன இது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவனை பார்த்த முதல் நாள் முதல் நடந்த ஒவ்வொரு சந்திப்பையும் நினைத்து பார்த்து கொண்டிருந்தாள். செழியனை பார்த்தது முதல் அவனிடம் பலநாள் பழகியது போல தான் பேசியது அவளுக்கு இப்போது ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் ஒன்று மட்டும் அவளுக்கு தெளிவாக புரிந்தது செழியனை தவிர வேறு யாரிடமும் அவளுக்கு இது போன்ற உணர்வு எழுந்ததில்லை, இருக்கட்டும் ஊருக்கு போறவரைக்கும் டாக்டர் சார் யோசிச்சுட்டே இருக்கட்டும் சியாட்டில் போய் சொல்லிகலாம், நீங்க சொன்னது சரிதான் நீங்கதான் கொடுத்துவெச்சவருனு , இப்படியாக அவளாக தனக்குள் முடிவெடுத்துட்டு தூங்கி போனாள்.

காலை செழியன் போன் செய்தபின்தான் எழுந்தாள், ஆனால் அவனிடம் பேசாமல் எழுந்துவிட்டதாக மெசேஜ் அனுப்பிவிட்டு கிளம்ப சென்றாள். இங்கு செழியன் நிலைதான் பாவம், என்கிட்ட மேடம் பேச கூட ரெடியா இல்லை என்று நினைத்து வருந்தினான். கிளம்பி வெளியில் வந்தவள் அவனிடம் தேவைக்கு மட்டும்தான் பேசினாள், அவன் அவள் லக்கேஜ் எடுத்தபோதும், காரை அவன் எடுக்க சென்றபோதும் கூட அவன் அவளை தடுக்கவில்லை என்றதும் , எப்படியோ என்கூட வரமாட்டேன்னு சொல்லலை என்று நினைத்து செழியன் சற்று நிம்மதியாக உணர்ந்தான்.

ஏர்போர்ட் வந்து காரை ட்ராப் பண்ணிவிட்டு இருவரும் போர்டிங்க்கு வெயிட் பண்ணிக்கொண்டிருந்தனர், அவந்திகாவிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் செழியன் யோசித்துக்கொண்டிருந்தான், அவந்திகா அதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கினாள். சிறிது நேரத்தில் அழைப்பு வர இருவரும் போர்டிங் முடித்து அவர்கள் இடம் பார்த்து அமர்ந்தனர். செழியன் முன்னமே ஆன்லைனில் இருவருக்கும் அருகருகில் வருவது போல சீட் செக்-இன் செய்திருந்தான்.

அவள் அமைதியாக அவன் அருகில் அமரவும், அவன் குழம்பி போனான்  இவளை புரிஞ்சுக்கவே முடியலை பேச மாட்டங்குற ஆனா கூட வர எதாவது திட்டிட்டா கூட பரவாயில்லை என்று நினைத்தவனுக்கு ஒரு யோசனை வந்தது. காலை அவள் மெசேஜ் அனுப்பியது போல இப்போது இவன் சாரி என்று போட்டு கூடவே குரங்கு வாய்மூடி இருக்கும் ஸ்மைலி போட்டு அனுப்பினான்.

போன் மெசேஜ் பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது அதை வெளியில் தெரியாமல் மறைத்தவள், அதற்கு பதில் அனுப்பாமல் போனை சுவிட்ச் ஆப் செய்து உள்ளே வைத்தாள். அவன் இனி தான் பேசாமல் இருப்பது சரியில்லை என்று நினைத்து இங்க பாரு நான் நேத்து அப்படி சொல்லனுனு  நினைச்சு சொல்லலை, நீ சியாட்டில் வந்ததுக்கப்புறம் உங்கிட்ட பொறுமையா சொல்லலானு நினைச்சிருந்தேன், நேத்து உன்கூட ஸ்பென்ட் பண்ண டைம், 2 வாரம் உன்ன பார்க்காம இருந்தது எல்லா சேர்ந்து என்ன மீறி சொல்லிட்டேன்.

திட்டு,அடி, இனி மூஞ்சுலயே முழிக்காதனு சொல்லு ஆனா இப்படி பேசாம இருக்காத எனக்கு ரொம்போ கஷ்டமா இருக்கு என்ன யாருனு முழுசா தெரியாதப்பவே பிடிச்சவங்ககிட்ட தப்பு கண்டுபிடிக்க தோணாதுனு சொன்ன, இன்னைக்கு என்கிட்ட பேச கூட உனக்கு பிடிக்கலை, நான் உனக்கு அவ்வளோ வேண்டாதவன் ஆகிட்டன என்று கேட்டவன் இனி சொல்ல என்ன இருக்கு என்று எண்ணி முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டான்.

அவன் பேசத்தொடங்கியதும் அவந்திகா வெளியில் பார்ப்பதுபோல  முகத்தை திருப்பிக்கொண்டாள், எங்கே தன் முகம் அவனுக்கு காட்டிக்கொடுத்து விடுமோ என்று எண்ணித்தான் அவள் அப்படி செய்தாள் ஆனால் அவன் பேசியதை கேட்டு அவளுக்கு கஷ்டமாக இருந்தது, தான் அவனை சீண்ட நினைத்து செய்தது இப்படி அவனை கஷ்டப்படுத்தும் என்று அவள் நினைக்கவில்லை.

இப்போது எப்படி அவனிடம் சொல்வது என்று அவளுக்கு தயக்கமாக இருந்தது, சுற்றி பார்த்தாள் பிலைட் கிளம்பி சிறிதுநேரம் ஆகியிருந்தது, சிலர் படம் பார்த்து கொண்டிருந்தனர், சிலர் தூங்க தொடங்கியிருந்தனர்.

அவள் செழியனை பார்த்தாள் அவன் அவளுக்கு முகம்காட்டாமல் மறுபுறம் திரும்பி கண் மூடி அமர்ந்திருந்தான்.

எதுவும் சொல்லாமல் அவன் தோள்  சாய்ந்து,அவன் கையோடு கை கோர்த்துக்கொண்டாள்.

அவள் தோள்  சாய்ந்ததும் கண் தெரிந்த செழியன் அவள் அவன் கையோடு கை கோர்க்கவும் நம்ப முடியாமல் அவளை பார்த்தான். அவனுக்கு ஒரு நிமிடம் கனவு காண்கிறோமோ என்று தோன்றியது, அவள் கை கோர்த்துக்கொண்ட போது ஏற்பட்ட சிலிர்ப்பு இது கனவல்ல நிஜம் என்று அவனுக்கு சொன்னது. கண்களை மூடி அந்த நிமிடத்தை ரசித்தான்.

சிறிது நேரத்துக்கு பின் கண் திறந்தவன், அம்மு என்ன பாரு என்றான், அவனிடம் தன் மனதில் இருப்பதை எப்படியாவது புரியவைத்து விடவேண்டும் என்ற உந்துதலில் தோள் சாய்ந்துவிட்டாள் இப்போது அவனை பார்க்க அவளுக்கு தயக்கமாக இருந்தது. அவன் இருமுறை அழைத்தும் அவள் நிமிர்ந்து அவனை பார்க்கவில்லை.

அவளை சீண்டிவிட எண்ணி, ஓ தூங்கிட்டாளா, தூக்கத்துல தெரியாம சாஞ்சுட்டா போல நான்தான் தேவையில்லாம பீல் பண்ணிட்டனா என்று சத்தமாக சொன்னான். அவன் சொன்னதை கேட்டு வேகமாக நிமிர்ந்தவள் தூக்கத்துல உங்க ஊருல கையெல்லா பிடிச்சுப்பாங்களா என்று கேட்டவள் அவன் முகத்தில் இருக்கும் குறுநகையை கண்டு அவன் தன்னை சீண்டிவிட்டிருக்கிறான் என்று புரிந்தது.

அச்சோ லூசு என்று தன் தலையில் தானே தட்டிக்கொண்டு முகத்தை மறுபுறம் திருப்ப முயன்றால், வேகமாக அதை தடுத்து அவளை அவன் புறம் திரும்பியவன், தூங்கும்போது கைபிடிக்கமாட்டாங்க சரி வேற எதுக்கு கை பிடிப்பாங்க அம்மு என்று கேட்டான்.

அவனது பார்வையும், அம்மு என்ற அழைப்பும் அவளுக்கு வெட்கத்தை கொடுத்தது, வெட்கத்தில் சிவந்த அவளது முகத்தை பார்த்தவனுக்கு, அவளை அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது, இருக்கும் இடம் கருதி தன் மனதை அடக்கினான்.

நேத்து நைட் எல்லா நான் எவ்வளோ பயந்த தெரியுமா, நீ என்கூட வரமாட்டேன்னு சொல்லிட்டா என்ன  செய்றதுன்னு யோசிச்சேன், உன்ன எப்படி சமாதான படுத்துறதுனு நினைச்சு நைட்ல தூங்கலை  இப்படியா பேசாம இருந்து என கலங்கடிப்ப என்று தனது மனநிலையை அவளிடம் கூறினான்.

நான் என்ன நினைக்குறன்னு கூட தெரியமாதான் ப்ரொபோஸ் பண்ணுனீங்களா என்று அவந்திகா கேட்க,

அவளை பார்த்து சிரித்தவன் உங்கிட்ட கேட்டதுக்கு அப்புறம் தான் நான் ப்ரொபோஸ் பண்ணுன விஷயமே எனக்கு புரிஞ்சுது என்றான்,

தொடர்ந்து அவனே, மேடம் எப்ப லவ் பண்றத பீல் பண்ணுனீங்க என்று கேட்டான்.

ப்ரொபோஸ் பண்ணது நீங்க தான அப்ப நீங்கதான் முதல்ல சொல்லணும் என்றாள்,

ஓகே, உன்ன முதல் முறை பிளைட்ல பார்த்தப்ப தோணுச்சு,

வாட்!! அப்பவேவ என்று அவந்திகா ஆச்சரியமாக கேட்க, எப்போதும்போல அவள் கண்களின் பாஷையில் செழியனுக்கு பேச வந்த விஷயம் மறந்தே போனது.

அவனது பார்வை மாற்றத்தை கண்டவள், இப்படி பார்த்த எப்படி பேசுறது என்று மெல்ல முணுமுணுத்தாள், அவள் சொன்னதை கேட்டு சிரித்தவன் எப்படி பார்த்த,என்று அவளிடமே திருப்பி கேட்டான்.

அவனது கையில் தட்டியவள் சொல்லவந்ததை சொல்லுங்க என்றாள், தன் கைகளோடு கோர்த்திருந்த அவளது விரல்களோடு விளையாடியபடியே சொல்ல தொடங்கினான்.

அன்னைக்கு பிளைட்ல அந்த குழந்தையை சமாதானம் படுத்துனயே அப்ப தோணுச்சு செழிய இவதான் உன்னோட வாழ்க்கையின், எதுக்கு அப்படி தோணுச்சுனு எனக்கு தெரியல ஆனா இதுக்கு முன்னாடி யார பார்த்தும் எனக்கு அப்படி தோணுனது இல்லை. ஆனா நீ உனக்கு கல்யாணம் ஆய்டுச்சுன்னு சொன்ன, எனக்கு அது ரொம்போ ஏமாற்றமா இருந்துச்சு அதுக்கப்புறம் உன்ன தாத்தா வீட்டுல பாக்குற வரைக்கும் உன்ன மறக்க ரொம்போ கஷ்டப்பட்ட.

அன்னைக்கு தாத்தா வீட்டுக்கு வர ஐடியாவே எனக்கு இல்லை பாட்டி ரொம்போ கம்பெல் பண்ணி கூப்பிட்டதுனால வந்த, வந்த இடத்துல உன்ன பார்ப்பேனனு நான் நினைக்கவே இல்லை அதைவிட சந்தோசம் உனக்கு மேரேஜ் ஆகலைனு தெரிஞ்சது. அப்புறம் நடந்ததுதான் உனக்கே தெரியுமே. உன்கிட்ட எப்படி எல்லா ப்ரொபோஸ் பண்ணனுனு பிளான் வெச்சிருந்த தெரியுமா இப்படி சொதப்புவனு நினைக்கவே இல்லை என்றவனை காதலோடு பார்த்தவள், இதைவிட அழகா உங்களால ப்ரொபோஸ் பண்ணி இருக்க முடியாது என்றாள்.

சொன்ன அவளையே பார்த்தவன் கஷ்டப்பட்டு தன் பார்வையை விலகிக்கொண்டான். சில நிமிடம் கழித்து இப்ப நீ சொல்லு அம்மு உனக்கு எப்ப இந்த பீல் வந்துச்சு என்று கேட்டான்.

உங்ககூட டெய்லி பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் எனக்கு சந்தேகம் இருந்துச்சு ஆனா நான் அது என்னனு உக்காந்து யோசிக்கலை, புளோரிடா போற அன்னைக்கு நீங்க ஏர்போர்ட் வந்தீங்களே உங்களை விட்டுட்டு கிளம்ப எனக்கு மனசே இல்லை, நான் முதல் முறை யு எஸ் வந்தப்ப  என்னோட பேமிலி விட்டுட்டு வர எனக்கு எப்படி  கஷ்டமா இருந்துச்சோ அப்படி பீல் பண்ண. அன்னைக்கு பிளைட்ல  இதைப்பத்தி நிறைய யோசிச்ச என்னால உங்கள விட்டுட்டு இருக்கமுடிடியாதுனு புரிஞ்சுது, ஊருக்கு வந்துட்டு உங்ககிட்ட பேசனுனு இருந்த நீங்க இப்படி புளோரிடா வந்து ஷாக் குடுப்பீங்கனு நான் எதிர்பார்க்கவே இல்லை.

அவள் கையை எடுத்து தன் மார்போடு சேர்த்து அணைத்துகொண்டவன் அவளது கண்களை பார்த்து, அம்மு உன் கை பிடிச்சு வழக்கையோட கடைசி வரைக்கும் போகனும் என்றான், நான் அந்த பயணத்துக்கு ரெடி என்று கூறியவள் அவன் தோள் சாய்ந்து கண் மூடிக்கொண்டாள்.

தனி தனியாக புளோரிடா வந்தவர்கள் ஒரே மனதாக திரும்பி ஊர் சென்றனர். இவர்கள் காதல் வெற்றி பெறுமா என்பதை அறிய தொடர்ந்து வாசியுங்கள்…….

-நறுமுகை

No Responses

Write a response