காதல் கொண்டேனடி- 8

காதல் கொண்டேனடி- 8

புளோரிடா சென்று இறங்கிய அவந்திகா தான் பத்திரமாக வந்துசேர்ந்துவிட்டதாக மாலினி மற்றும் தன் அண்ணன் வெற்றிக்கு தகவல் சொல்லிவிட்டு செழியனை அழைத்தாள் போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. சிறிதுநேரம் கழித்து முயற்சிக்கலாம் என்று விட்டுவிட்டாள். ஆனால் அதன்பின் அவள் உறங்க செல்லும் வரைகூட அவன் போன் கிடைக்கவில்லை. முதலில் அவனை மனதினில் திட்டிக்கொண்டிருந்தவள், நேரம் செல்ல செல்ல அவனுக்கு எதாவது பிரச்சனையோ என்று கவலைபட தொடங்கினாள். அந்த கவலையில் உறக்கம் வராமல் யாரைக்கேட்பது, பேசாம ஹாஸ்பிடல்க்கு போன் செஞ்சு கேட்டால் என்ன என்று யோசித்தாள். ஆனால் ஹாஸ்பிடலில் என்னமாதிரி விவரங்கள் கேட்பார்கள் என்று தெரியாதே, என்று எண்ணி அந்த யோசனையை கைவிட்டாள்.

இப்படி யோசித்து கொண்டிருந்தவளின் கவனத்தை அவளது போன் பாடி கலைத்தது, போனில் செழியன் எண்ணை கண்டவள் போனை அட்டெண்ட் செய்து அவனை பேசவிடாமல் திட்டதொடங்கினாள். உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க, போன் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு அப்படி என்ன வேலை, எவ்வளவு நேரமா ட்ரை பண்ற தெரியுமா, காலைல பிளைட் ஏத்திவிட்டவ என்ன ஆனானு கொஞ்சமாவது கவலை இருக்க, நான் தான் போன் எடுக்கலைனு லூசு மாதிரி கவலைபட்டுக்கிட்டு இருக்க என்று பொரிந்து தள்ளினாள்.

ஒரு சின்ன சிரிப்போடு மேடம் செம சூடா இருக்கீங்க போல இதுக்குத்தான் சொன்ன புளோரிடால வேண்டான்னு  கேட்டயா இப்ப பாரு ஊரு மாதிரி நீயும் சூடா இருக்க என்றான்.

என்ன நக்கலா, எனக்கு வர கோவத்துக்கு என்று தொடங்கியவளை

போதும் போதும் ரிலாக்ஸ், நீ பத்திரமா ஹோட்டல் போயிட்டிய என்று கேட்டான்,

அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க,

 இதுக்குமட்டும் பதில் சொல்லிட்டு அப்புறம் உன்னோட கோவத்தை  கண்டின்யு பண்ணு ப்ளீஸ்,

ஹ்ம்ம் ஹோட்டல்ல இருந்துதான் பேசுற,

ஓகே  சாரி, இன்னைக்கு ஒரு எமெர்ஜென்சி சர்ஜெரி, அதுதான் உனக்கு கரெக்ட் டைம்க்கு கால் பண்ண முடியல. வெளில வந்தவுடனே உனக்குத்தான் முதல் போன் பண்ண, அதுக்குள்ள நீ இப்படி காளி அவதாரம் எடுத்திருப்பனு நான் நினைக்கவே இல்லை.

சாரி ரொம்போ நேரம் போன் எடுக்கலைனு பயந்துட்ட என்கிட்ட வேற யாரோட கான்டெக்ட் நம்பரும் இல்லை, ஹாஸ்பிடல்க்கு கூப்பிட்ட என்ன கேட்பாங்கனு தெரியாது, அந்த டென்ஷன்ல நீங்க போன் பண்ணதும் கோவமா பேசிட்ட என்று தன்னிலை விளக்கம் கொடுத்தாள் அவந்திகா.

ஹே இப்ப எதுக்கு சாரி சொல்ற, நீ என்ன நினைச்சு கவலைப்பட்டுத்தான கோவப்பட்ட, நான் இனி சர்ஜெரி இருந்த உனக்கு முன்னாடியே மெசேஜ் பண்ணிடுற ஓகே வா என்று கேட்டவன். அவனது ஹாஸ்பிடல் போன் நம்பர், அவனுடைய எக்ஸ்டென்ஷன்  நம்பர் அனைத்தையும் அவளுக்கு குடுத்தான். பின் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தார்கள்.

அவந்திகாவிற்கு ட்ரைனிங் பிடித்திருந்தது, இருந்தாலும் இங்கு தனியாக ஹோட்டலில் இருப்பது என்னவோபோல இருந்தது. மாலை வந்தவுடன் பூஜாவுடன் வீடியோ கால் பேசுவாள், இரவு செழியனிடம் 5 நிமிடங்களாவது பேசிவிட்டுத்தான் தூங்க செல்வாள்.

இப்படியாக ஒரு வார ட்ரைனிங் முடிந்தது, அந்த வார இறுதிக்கு மாலினி குடும்பம் புளோரிடா சென்றது. சனி, ஞாயிறு இரு நாட்களும் மாலினி மற்றும் பூஜாவுடன் டிஸ்னி, நாசா, கடற்கரை என்று சுற்றி திரிந்தாள். மாலினி குடும்பம் திங்கள் அதிகாலை பிளைடில் கிளம்பி சென்றனர். முதல் வாரத்தை போல இந்த வாரம் செழியன் அவளிடம் பேசவில்லை, இவளாக அழைத்தாலும் வேலை இருக்கிறது என்று அவனிடம் இருந்து அவளுக்கு மெசேஜ் தான் வந்தது. அவளும் அதற்கு பின் அவனை அழைக்கவில்லை.

ஆனால் மனதில் அவனை திட்டிக்கொண்டிருந்தாள், அவருக்கா தோணுன ஏர்போர்ட் வருவாரு, இல்லைனா போன் கூட பேச மாட்டாரு, இருக்கட்டும் இனி நானா கூப்பிடவே மாட்ட என்று நினைத்தவள் அவனை திட்டிக்கொண்டே அந்தவார ட்ரைனிங்கை முடித்தாள். வெள்ளிக்கிழமை மாலை சற்று நேரமாகவே ட்ரைனிங் முடிந்துவிட்டது, கூட ட்ரைனிங் வந்திருந்தவர்களிடம் சொல்லிவிட்டு வெளியில் வந்தவள் அங்கு அவளது கார் அருகில் நின்றிருந்த செழியனை கண்டு பேச்சின்றி நின்றுவிட்டாள், ஒருவேளை நம்ம அவரை நினைச்சுகிட்டே இருக்கனால அப்படி தோணுதா என்று எண்ணி கண்ணை தேய்த்துவிட்டு கொண்டாள், அவளை பார்த்து புன்னகைத்தவன் கனவல்ல நிஜம் என்றான்.

நீங்க இங்க எப்படி என்று அவனை பார்த்து  ஆச்சரியம் குறையாமல் கேட்டாள்,

அதுவா நான் ஒருவாரம போன் பண்ணலைனு ஒருத்தங்க என்ன திட்டிகிட்டு இருக்காங்க, அதுதான் அவங்களை பார்த்து சமாதானம் செய்யலாம்னு வந்த என்றான்,

வெயிட் பண்ணி இருந்த நாளைக்கு அங்க பார்த்தே சமாதானம் செஞ்சிருக்கலாமே இவ்வளோ தூரம் எதுக்கு வரணும் என்று அவனை பார்த்து புருவத்தை  உயர்த்தினாள்,

சும்மாவே இவ கண்ணை பார்த்து பேசுறது எனக்கு பெரிய சவால், இதுல இவ இப்படி புருவத்தை உயர்த்தினா நான் அம்பேல், இதுக்குமேல பேச்சை வளர்த்துறது உனக்கு ஆபத்துடா செழியா என்று தனக்குள் பேசிகொண்டவன், அவந்திகா மேடம் உங்கள பார்த்து பத்திரமா நாளைக்கு ஊருக்கு கூட்டிட்டு போகத்தான் வந்தேன் போதுமா என்றான்.

அவனை பார்த்து புன்னகைத்தவள் அவனோடு ஹோட்டலிற்கு கிளம்பினாள். அவந்திகா தங்கி இருந்த ஹோட்டலில் அவனுக்கும் ரூம் புக் செய்திருந்தான். இருவரும் ரிபிரெஷ் ஆகிவிட்டு வெளியில் சென்று சாப்பிட்டுவிட்டு, அப்படியே கடற்கரை சென்றுவரலாம் என்று முடிவு செய்தனர்.

அந்த மாலைப்பொழுதில் கடற்கரையில் அமர்ந்து சூரியன் மறைவதை பார்ப்பது இருவருக்கும் பிடித்திருந்தது. சிறிதுநேரம் கடல் அலையில் விளையாடிவிட்டு வந்து அமர்ந்தனர். அவந்திகா செழியனை பார்த்து இன்னைக்கு ஒரு நைட் நாளைக்கு நானே அங்க வந்திருப்பேன் எதுக்கு ஒருநாளைக்காக இவளோ தூரம் ட்ராவல் பண்ணிட்டு என்று கேட்டாள், அவளையே ஒருநிமிடம் பார்த்தவன், இந்த ஸ்வீட் மினிட்ஸ்ஸ மிஸ் பண்ண வேண்டானுதான் வந்தேன். நான் லாஸ்ட் வீக் வரணுன்னு நினைச்ச உன்னோட  ப்ரண்ட் பேமிலி வந்துட்டாங்க என்றான்.

அதுக்கப்புறம் வழக்கம் போல இருவரும் ஊர் கதை பேசத்தொடங்கினர், அப்போது அவந்திகாவிற்கு அவள் அண்ணன் வெற்றியிடம் இருந்து போன் வந்தது. வெற்றி அவளுக்கு இரவு பிளைட் என்று நினைத்து நேரமாக எழுந்து போன் செய்திருந்தான் அவள் தனக்கு காலையில் தான் பிளைட் என்று கூறி சிறிதுநேரம் பேசிவிட்டு வைத்தாள். அவள் பேசுவதை பார்த்துக்கொண்டிருந்தவன் அண்ணன், தம்பி, தங்கச்சி இப்படி இருக்குறது ஒரு ஜாலிதான் என்ன பாரு ஒரே பையன் செம போர் என்றான்.

ஓ, உங்களுக்கு தங்கச்சி இல்லைனு வருத்தமா வேணுனா என்ன என்று அவள் சொல்லிமுடிப்பதற்குள் கண்டிப்பா எனக்கு உன்ன மாதிரி ஒரு தங்கச்சி வேண்டாம் என்றான். அவன் சொன்னதை கேட்டு சிரித்தவள் வேண்டான போங்க என்ன மாதிரி தங்கச்சி கிடைக்க கொடுத்துவெச்சிருக்கனும் என்றாள்.

அப்படியா உங்க அண்ணா கூட நீ எத்தனை வருஷம் இருந்த அதாவது உங்க அண்ணாகூடவே என்று கேட்டான்.

சிறிதுநேரம் யோசித்தவள் அவன் ஹாஸ்டல்ல இருந்தது, நான் ஹாஸ்டல்ல இருந்தது இப்ப இங்க இருக்குறது இப்படி எல்லா கூட்டி கழிச்ச ஒரு 10 வருஷம் அவன்கூடவே இருத்திருப்ப.

ஹ்ம்ம், நாளைக்கு உனக்கு மேரேஜ் ஆனா உன் ஹஸ்பண்ட்  கூட எத்தனை வருஷம் இருப்ப என்றான்,

தன் தலையில் தட்டி யோசித்தவள் என்ன ஒரு 30 வருசமாவது இருக்க மாட்ட என்று அவனையே திருப்பி கேட்டாள்,

அவளையே இமைக்காமல் பார்த்தவன் அப்ப உங்க அண்ணனை விட நான்தான கொடுத்துவெச்சவன் என்றான்.அவன் சொன்னதை கேட்டு அவந்திகா இமைக்க மறந்து அவனை பார்த்தாள். அவன் ஒரு எதிர்பார்ப்போடு அவளை பார்த்திருந்தான். கடல் காற்று இதமாக அவர்கள் தேகம் தொட்டு சென்றது. வானில் எழுந்திருந்த முழு நிலாவின் ஒளியில் ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் வெகுநேரம் அமர்ந்திருந்தனர். அவந்திகாதான் முதலில் தன்னை மீட்டு கொண்டாள், நேரம் ஆச்சு மார்னிங் பிளைட்க்கு நேரமா கிளம்பனும் போலாமா என்று எதுவும் நடக்காதது போல கேட்டாள்.செழியனும் எதுவும் சொல்லாமல் அவளோடு கிளம்பினான். அவந்திகாவின் முடிவு என்ன? அறிய தொடர்ந்து வாசியுங்கள்…….

நறுமுகை

No Responses

Write a response