காதல் கொண்டேனடி-7

காதல் கொண்டேனடி-7

அன்று மாலை புன்னகையோடே வீட்டிற்குள் நுழைந்த அவந்திகாவை பார்த்த மாலினி, என்ன அவந்தி உள்ள நுழையும் போதே இந்த ஐடில  குப்பை கொட்டுறதுக்கு பேசாம ஊருல போய் விவசாயம் பார்க்கலாம்னு புலம்பிகிட்டே வருவ இன்னைக்கு ஒரே சந்தோசமா வந்திருக்க என்றாள், என்ன சொல்வது என்று யோசித்த அவந்திகா சும்மா ப்ரண்ட் கூட பேசிட்டு வந்த அதுதான் என்று கூறி மழுப்பியவள், நின்றால் வம்பு என்று தன் அறைக்குள் சென்று மறைந்தாள்.

அன்றைய சந்திப்பிற்கு பிறகு அவந்திகாவும், செழியனும் அடிக்கடி சந்திக்க தொடங்கினர் ஒரு கப் காபியோடு ஊரு கதை, உலக கதை, அலுவலக கலாட்டாக்கள், குடும்ப கதை என்று அனைத்தும் பேசினர். சில வாரங்கள் இப்படி செல்ல, நேரில் சந்தித்து மட்டும் பேசிக்கொண்டிருந்தவர்கள் நேரம் கிடைக்கும் போது போனிலும் பேச தொடங்கினர். அடிக்கடி போனோடு விலகி செல்லும் அவந்திகாவை மாலினியும் கவனித்து கொண்டுதான் இருந்தாள், ஆனால் எதுவும் கேட்கவில்லை. தனக்கே உறுதியாக தெரியாத ஒன்றை என்னவென்று மாலினியிடம் சொல்வது என்று அவந்திகாவும் அவளிடம் எதுவும் சொல்லவில்லை.

அன்றும் அது போல அவர்கள் காபி ஷாப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர், செழியன் ஏதோ பேசிக்கொண்டிருக்க அவந்திகா அமைதியாக அதை கேட்டுக்கொண்டிருந்தாள். செழியன் பேசுவதை நிறுத்திவிட்டு அவளையே பார்க்க, என்ன அப்படி பாக்குறீங்க என்றாள்,

மேடமுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு இவ்வளவு  அமைதி,

நான் இந்த வீகெண்ட் புளோரிடா போற வரதுக்கு இரண்டு வாரம் ஆகும் அதுதான் யோசிச்சுட்டு இருக்க

ஓஹ்,, என்ன திடீருனு புளோரிடா?

ஆபீஸ்ல இருந்து அனுப்புறாங்க ட்ரைனிங்க்காக,

ஏன் இங்க ட்ரைனிங் குடுக்க இடமே இல்லையா என்று கேட்டவனை பார்த்து புன்னகைத்தவள், இதையெல்லாம் நான் ஆபீஸ்ல கேட்க முடியாது எல்லா ஆரேஞ்சுமென்டும்  பண்ணிட்டாங்க நான் போயிட்டு ட்ரைனிங் அட்டெண்ட் பண்ணிட்டு வரணும் அவ்ளோதான்.

அதன்பின் இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை, அந்த வாரம் முழுவதுமே செழியன் பிஸியாக இருந்ததால் அவர்கள் போனிலும் பேசிக்கொள்ளவில்லை.

அவந்திகா சனிக்கிழமை மாலை தனது பெட்டியை அடுக்கிக்கொண்டிருந்தாள், அப்பொழுது செழியனிடம் இருந்து அவளுக்கு போன் வந்தது, போனை எடுத்தவள், பாருடா சார் இன்னும் என்னோட நம்பர்லாம் வெச்சிருக்காரு என்று அவனை வம்புக்கிழுத்தாள் ,

புளோரிடா போற மேடமுக்கு போன் பேச டைம் இருக்கும்போது நாங்க நம்பர் கூடவா வெச்சிருக்க மாட்டோம் என்றான், அவனே தொடர்ந்து கிண்டல் எல்லாம் அப்புறம் நாளைக்கு எத்தனை மணிக்கு பிளைட், அங்க ரீச் ஆகுற டைம் என்ன, ஏர்போர்ட்ல இருந்து ஹோட்டல்க்கு எப்படி போவ என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான்.

டாக்டர் சார் ஸ்டாப் ஸ்டாப் கொஞ்சம் மூச்சு விடுங்க உங்க மெயில் ஐடிக்கு நீங்க கேட்ட எல்லா டீடெயில்ஸ்யும் அனுப்பி இருக்க பொறுமையா உக்காந்து பாருங்க எனக்கு பேக்கிங் வேலை இருக்கு நாளைக்கு அங்க ரீச் ஆகிட்டு உங்களுக்கு போன் பண்ற என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

அதன்பின் அவளும் மாலினியும் சேர்ந்து பேக்கிங் முடித்தனர், அவந்திகா அங்கு இருவாரம் இருக்கப்போவதால், இடையில் இருக்கும் ஒரு வீக்கெண்ட் மாலினி குடும்பம் புளோரிடா வருவதாக முடிவு செய்திருந்தனர், அதை பற்றி சிறிதுநேரம் பேசிவிட்டு அவந்திகா உறங்க சென்றாள், அதிகாலை பிளைட் என்பதால் அவள் மாலினி, ராஜ் யாரையும் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். மாலினி மட்டும் காலை எழுந்து அவள் கிளம்பும் வரை உடனிருந்து அவளை வழிஅனுப்பினாள்.

அவந்திகா ஏர்போர்ட் போனபோது மணி காலை 5.30 அவளுக்கு 7.45 க்குத்தான் பிளைட், ஹ்ம்ம் 2 மணிநேரம் ஓட்டனுமா என்று நினைத்துக்கொண்டு உள்ளே சென்றவள் பின்னால் தன்னை யாரோ அழைக்கும் குரல் கேட்டு திரும்பி பார்த்தாள், அங்கு நின்றிருந்த செழியனை கண்டு அவள் திகைத்து நின்றாள். நேற்று அவளிடம் பேசிவிட்டு வைத்தவன் திரும்ப அவளை அழைக்கவில்லை, அது அவந்திகாவிற்கு வருத்தமாக இருந்தது, கூடவே அவன்மீது கோவமும் வந்தது. ஆனால் இப்படி அதிகாலையில் ஏர்போர்ட் வருவான் என்று அவள் நினைக்கவே இல்லை.

திகைத்து நின்றவள் முன் கையை அசைத்தவன், என்ன மேடம் அப்படி ஷாக் ஆகி பாக்குறீங்க,

நீங்க இங்க என்ன பண்றீங்க,

 சரியா போச்சு போ அலாரம்லா வெச்சு எழுந்து கிளம்பி வந்தா இங்க என்ன பண்றனு கேக்குற

ஒரு போன் பண்ணி பேசி இருக்கலாமே இவளோ தூரம் வரணுமா என்றவளை ஆழமாக பார்த்தவன் ஒரு சிறு புன்னகையோடு போன்ல எப்படி காபி குடிக்குறது அதுதான் நேருல வந்தேன் என்றான். 

அவனை பார்த்து புன்னகைத்தவள் உங்களுக்கு காபி ரொம்போ அடிக்க்ஷன் ஆயிடுச்சு நல்லது இல்ல டாக்டர்,

அவளை பார்த்து வாய் விட்டு சிரித்தவன் என்ன பண்றது இந்த அடிக்க்ஷன் எனக்கு பிடிச்சிருக்கு என்றான்,

அவன் சொல்வது புரிந்தாலும், அதை பற்றி எதுவும் பேசாமல், இப்படியே பேசிட்டு இருந்த எப்படி வாங்க போவோம் என்று காபி ஷாப் நோக்கி சென்றாள்.

கிளம்பு நேரம் அவந்திகாவிற்கு என்னவோ போல் இருந்தது, அவன் நேரில் வராமல் இருந்திருந்தால் கூட இவ்வளவு தெரிந்திருக்காதோ என்று எண்ணினாள்.

அவ்வளவு நேரம் நன்றாக பேசிக்கொண்டிருந்தவள், இப்போது அமைதியாக இருப்பது அவனுக்கும் என்னவோ போல இருந்தது, என்னவானாலும் சரி அவள் திரும்பி வந்தவுடன் மனதில் இருப்பதை சொல்லி விட வேண்டும் என்று நினைத்தான்.

அவனிடம் எதுவும் சொல்லாமல் ஒரு தலை அசைபோடு விடைபெற்றாள், அவள் உள்ளே சென்று மறையும் வரை நின்று பார்த்துவிட்டு தன் கார் நோக்கி சென்றான், காரில் அமர்ந்தவன் காரை எடுக்க மனமில்லாமல் அமர்ந்திருக்க அவந்திகாவிடமிருந்து அவனுக்கு குறுந்செய்தி வந்திருந்தது.

நான் வரவரைக்கும் ஸ்ட்ரிக்ட்லி நோ காபி என்று அனுப்பி இருந்தாள், அதை பார்த்து புன்னகைத்தவன், ஐ எம் வெயிட்டிங் என்று அனுப்பினான்.

இந்த புளோரிடா பயணம் அவந்திகா செழியன் வாழ்க்கையில் கொண்டுவர போகும் மாற்றங்கள் என்ன என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள்.

-நறுமுகை

No Responses

Write a response