காதல் கொண்டேனடி -6

காதல் கொண்டேனடி -6

அடுத்த நாள் காலை மாலினி அவந்திகாவை விசாரிக்க, அவந்திகா தனக்கு தலைவலி என்று கூறி சமாளித்தாள். மாலினியும் அதன்பின் அவளிடம் எதுவும் கேட்டகவில்லை. மூன்று வாரத்திற்கு பிறகு ஒருநாள் தனது அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த அவந்திகா பார்க்கிங் லாட்டில் நின்று சுற்றும் முற்றும் பார்த்தாள், சற்று தள்ளி இருந்த அந்த ஒயிட் பீஎம்டப்ளியூ அவள் கண்ணில்பட்டது. இன்னைக்கு என்னனு கேட்காம விடுறதில்லை என்று மனதில் நினைத்தவள், அவள் காரில் ஏறி செல்வதுபோல போக்குக்காட்டிவிட்டு அந்த ஒயிட் காருக்கு தெரியாதவண்ணம் தன் காரை நிறுத்திவிட்டு, அந்த காரின் பாஸ்சேஞ்சர் சீட்சைடு விண்டோவை தட்டினாள்.

அவந்திகா சுற்றி முற்றி பார்த்தவுடன் தன்னை பார்த்திவிடக்கூடாது என்று மறைந்துகொண்டு செழியன் அவளது கார் செல்வதை பார்த்து அப்பாடா தப்பிச்சேன் என்று பெருமூச்சுவிட்டான். என்னைக்கு நேரில் பேச தைரியம் வரப்போகுதோ என்று அவன் நினைத்து கொண்டிருக்க, யாரோ  விண்டோ தட்டும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். அவந்திகாவை அங்கு கண்டவன் போச்சு வகையா மாட்டுன என்று நினைத்துக்கொண்டே காரில் இருந்து இறங்கினான்.

அவள் எதுவும் பேசாமல் அவனையே பார்க்க, எப்படியாவது சமாளிச்சுடு செழியா என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு வெளியில் போலி வியப்பு காட்டி, ஹாய் நீங்க எப்படி இங்க உங்கள இங்க பார்ப்பேனு நினைக்கவே இல்லை என்றான்.

ஓ !! என்ன இங்க பார்க்க முடியுனு உங்களுக்கு தெரியாது என்று போலியாக வியந்தாள்,

ஆமா நான் என்னோட ப்ரண்ட்  பார்க்க வந்தேன், இங்கதான் ஒர்க் பன்றான் என்றான் செழியன்,

ஹ்ம்ம், பாவம் மூணு நாளா உங்க ப்ரண்ட் வரல போல, நான் வேணுனா தேடி கண்டுபிடிக்க ஹெல்ப் பண்ணவா,என்றவளை பரிதாபமாக பார்த்தான் செழியன்.

அவனை பார்த்து அவந்திகாவிற்கு சிரிப்பு வந்தது. மூன்று நாளாக அவள் ஆபீஸ் பார்க்கிங் லாடில் வந்து நிற்கிறான், அவனாக வந்து பேசுவான் என்று பார்த்தால் நடப்பதாக தெரியவில்லை, அதுதான் இன்று அவளே பேசிவிடுவதாக முடிவு செய்தாள்.

நீங்க காலேஜ் படிக்குறப்ப ரொம்போ படிப்பாளியோ,  முன்னபின்ன பொண்ணுங்ககிட்ட பேசி பழக்கம் இல்லபோல என்று அவனை பார்த்து புருவத்தை உயர்த்தினாள். தொடர்ந்து அவளே  டாக்டர் சார் நீங்க இன்னும் காலேஜ் பையன் இல்ல கொஞ்சம் பெட்டர்ர ஏதாவது ட்ரை பண்ணுங்க என்றாள்.

இப்படி சொதப்பிட்டயே செழிய, மானமே போச்சு சும்மாவே உன்ன கிண்டல் பண்ணுவ இனி அவ்வளவுதான் என்று தனக்குள்ளயே பேசிக்கொண்டிருந்தான். அவந்திகா செழியனையே ஒரு முறுவலோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.  அவளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அவன் முழித்துக்கொண்டிருக்க, ஓகே டாக்டர் சார் நீங்க இருந்து உங்க ப்ரண்ட் பார்த்துட்டு கிளம்புங்க எனக்கு டைம் ஆச்சு என்று அவள் திரும்பி நடக்க தொடங்க,

ஒரு நிமிஷம் என்று கூறி அவள் முன் சென்று நின்றான் செழியன் , அவளை இப்பொழுதுதான் பார்ப்பதுபோல பேச தொடங்கினான், ஹாய் என்ஜினீயர் மேடம்! உங்கள பார்க்கத்தான் மூணு நாளா இங்க வந்துட்டு இருக்க, உங்ககிட்ட ஒரு சாரி கேட்கணும், சாரிய எதுக்கு ரோட்ல வெச்சு கேட்டுகிட்டு உங்களுக்கு எப்ப டைம்  இருக்குனு சொல்லுங்க ஒரு காபி சாப்பிட்டுக்கிட்டே சாரி கேட்டுடுற என்றவனை பார்த்து பெரிதாக புன்னகைத்தவள் நாட் பேட் என்றாள்.

அப்பாய்ண்ட்மெண்ட் எப்ப கிடைக்கும் மேடம் என்றவனிடம், டாக்டர் சார் இப்ப பிஸியா என்றாள், அட் யுவர் சர்வீஸ் என்றவன், அவள் அலுவலக கட்டிடத்தில் இருந்த காபி ஷாப்பிற்கு அழைத்து சென்றான். இருவரும் அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டு ஜன்னல் ஓரம் இருந்த டேபிளில் எதிர் எதிரில் அமர்ந்தனர்.

சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை, ஒருவழியாக செழியனே பேச்சை தொடங்கினான். சாரி, அன்னைக்கு ஷாலினி அப்படி நடந்துக்கிட்டது தப்பு, நீங்க கண்டிப்பா என்ன பார்த்த பேசமாட்டிங்க செம கோவத்துல இருப்பீங்கனு நினைச்ச, அதுனாலதான் மூணுநாளா தூரத்துல இருந்து பார்த்துட்டு எதுவும் பேசாம போயிட்ட என்றான்.

உங்கமேல எனக்கு எதுக்கு கோவம் வரணும், நீங்க என்ன செஞ்சீங்க உங்க மேல எனக்கு எந்த கோவமும் இல்லை, உங்கள முதல் நாளே பார்த்துட்ட, நீங்க சொன்ன மாதிரி யாரையோ பார்க்க வந்திருக்கீங்கனு நினைச்ச, தொடர்ந்து நீங்க வந்து என்னோட காரை பார்த்துட்டு இருக்கவும்தான் சந்தேகம் வந்துச்சு என்றாள் அவந்திகா.

ஒரு நிமிடம் அவளையே பார்த்தவன், உரிமை இல்லாதவங்க மீது கோவம் வராது என்றான்,

ஜன்னல் புறம் திரும்பி வெளியில் பார்த்துக்கொண்டிருந்தவள், பிடிச்சவங்ககிட்ட தப்பு கண்டுபிடிக்க தோணாது என்றாள்,

அதை கேட்ட செழியனுக்கு வானில் பறப்பதை போன்று இருந்தது, ஒரு புன்னகையோடு எனக்கு இந்த ஷாப்ல காபி ரொம்போ பிடிச்சிருக்கு, அடிக்கடி வரலானு நினைக்குற உன்னோட நம்பர் குடு வரும்போது சொல்ற நீ ப்ரீயா இருந்தா என்கூட காபிக்கு ஜாய்ண்ட் பண்ணிக்கலாம் என்றான்.

ஒன் ஹவர்ல நல்ல இம்ப்ரூவ்மென்ட் டாக்டர் என்று அவனை கிண்டல் செய்தவள், நம்பர் குடுக்குற ஆன வேற நல்ல ஷாப்ல காபி நானே வாங்கித்தர இங்க மட்டும் வேண்டாம் என்று கூறி சிரித்தாள் அவளோடு இணைந்து புன்னகைத்தவன் டீல் ஓகே என்றான்.

இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு, நம்பரை வாங்கிக்கொண்டு புன்னகையோடே அவர் அவர் இல்லம் நோக்கி சென்றனர்.

இந்த சந்திப்பு இவர்கள் வாழ்க்கையில் கொண்டுவரப்போகும் மாற்றங்கள் என்னென்ன என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள்…..

-நறுமுகை

No Responses

Write a response