காதல் கொண்டேனடி-5

காதல் கொண்டேனடி-5

அங்கு செழியனை சற்றும் எதிர்பார்க்காத அவந்திகா ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் நின்றாள், அவள் கண் முன் கையை அசைத்தவன் என்ன மேடம் அப்படி ஒரு ஷாக் என்றான்.

பின்ன இப்படி திடீரென வந்து முன்னாடி நின்றால்  ஷாக் ஆக மாட்டாங்களா என்றாள்,

உள்ளவரும் போது உங்கள பார்த்தேன் எனக்கு அதே ஷாக் தான், நீங்க எப்படி இங்க என்றான்,

என்னோட ப்ரண்ட் கூட வந்தேன், என்னோட ப்ரண்ட் ஹஸ்பண்டும், அங்கிளும் பிசினெஸ்  ப்ரண்ட்ஸ் என்றவள் அவனை கேள்வியாக பார்க்க,

அய்யயோ நான் யாரையும் சைட் அடிக்க வரலை உங்க அங்கிள் எனக்கு தூரத்து சொந்தம் எனக்கு தாத்தா முறை, என்றான்.

ஏனோ எனக்கு ஒரு பேரன் இருந்திருந்தா உன்ன அவனுக்கே கல்யாணம் செஞ்சு வெச்சிருப்பேனு மேகலா சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது. தலையை உலுக்கி அந்த எண்ணத்தை விரட்டினாள்.

அவளையே பார்த்து கொண்டிருந்தவன் என்னவென்று கேட்க  ஒன்னுமில்லை என்றவளை நம்பாமல் பார்த்தவன், உங்க ஹஸ்பண்டும், குழந்தையும் உங்க செகண்ட் மேரேஜ்கு ஒத்துக்கிட்டாங்களா என்றான்,

ஒன்றும் புரியாமல் அவனை பார்த்தவள் என்ன சொல்ரீங்க எனக்கு புரியலை என்றாள்,

இல்ல அன்னைக்கு பிலைட்ல உங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சு ஒரு குழந்தை இருக்குனு சொன்னீங்க, இன்னைக்கு தாத்தாவும், பாட்டியும் மனசுக்கு பிடிச்சவன கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோசமா இருக்கனும், அப்படினு ஆசீர்வாதம் செஞ்சாங்க மனசுக்கு பிடிச்சவன் என்பதில் அழுத்தம் கொடுத்து சொன்னான். அதுதான் செகண்ட் மேரேஜ்க்கு அவங்க ஒத்துக்கிட்டாங்கலானு கேட்ட என்றவனை பொய்யாக முறைத்தவள், அவனோடு இணைந்து சிரித்தாள்.

சும்மா உங்கள கிண்டல் பண்ண அப்படி சொன்னேன் , உங்ககிட்ட சொன்னதை நான் மறந்தே போய்டேன் என்றவள், என்ன பார்த்த உங்களுக்கு ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா தெரியுது என்றாள்,

அவள் சொன்ன பின்பு அவளை பார்த்தவன், இமைக்கவும் மறந்து அவளை பார்த்து கொண்டிருந்தான்.அந்த இரவில் நீச்சல் குளத்தின் விளக்குகள் ஒளியில் தேவதையின் அழகோடு தன்முன்  நின்றவளை கண்டு அவனுக்கு உலகமே மறந்து போனது.

வெள்ளையில் தங்க பூக்கள் போட்ட லெஹெங்க அணிந்து அதற்கு பொருத்தமாக சற்று பெரிய காதணி அணிந்திருந்தாள், அன்று பிலைட்டில் வருவதால் கொண்டை போட்டிருந்த கூந்தலை இன்று சிறிய கிளிப்பில் அடைத்து விரித்து விட்டிருந்தாள், அவள் இடையை தாண்டி வளர்ந்திருந்த கருங்கூந்தல் அவனுக்கு மயில் தோகையை நினைவூட்டியது . அளவாக மை தீட்டிய கண்களும், வில்லென வளைந்திருந்த புருவமும், அவள் பேசும்போது அவளோடு சேர்ந்து அபிநயம் பிடித்த அவளது கண்களும் அவனை கட்டிப்போட்டன.

அவனது பார்வை அவளுக்கு நாணத்தை கொடுக்க அவன் கண் முன் சொடுகுபோட்டு அவனை நினைவுலகத்துக்கு கொண்டுவந்தாள். யாரையும் சைட் அடிக்க வரலைனு யாரோ சொன்னாங்க அவரை நீங்க பார்த்தீங்களா டாக்டர் சார் என்றவளை பார்த்து சிரித்தவன்,

நான் ஒன்னு சைட் அடிக்கல  என்ன பார்த்த உங்களுக்கு ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா தெரியுதுனு நீங்கதானே கேட்டீங்க அதுதான் பார்த்தேன் என்றவனை பார்த்தவளுக்கு அவளை மீறி முறுவல் தோன்றியது.

அந்த இரவில் இப்படி ஒருவருக்கு ஒருவர் வார்த்தையாடி கொண்டிருப்பது இருவருக்குமே பிடித்திருந்தது, அவர்கள் சுற்றுப்புறம் மறந்து பேசிக்கொண்டிருக்க அத்தான் இங்க என்ன பண்றீங்க என்ற குரல் இருவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

அங்கு அவந்திகா வயதை ஒத்த பெண் கிட்டத்தட்ட திருமண பெண் அலங்காரத்தில் நின்றுகொண்டிருந்தாள். அவந்திகா யார் இவள் என்று யோசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அங்கு அவந்திகா என்றே ஒருத்தி இல்லாதது போல நேராக செழியனிடம் வந்தவள் இங்க என்ன கண்டவங்க கூட பேசிட்டு இருக்கீங்க வாங்க போகலாம் என்று செழியன் கை பிடித்து கிட்டத்தட்ட இழுத்துச்சென்றாள்.

அவந்திகாவிற்கு அவள் கண்டவங்க என்று சொன்னது கோபத்தை உண்டுபண்ணியது, நேராக மாலினியிடம் சென்றவள் சற்று தள்ளி செழியனிடம் பேசிக்கொண்டிருந்தவளை காட்டி யாரென்று விசாரித்தாள். அவள் காட்டிய திசையில் பார்த்த மாலினி, ஓஹ் அந்த பொண்ணா அவ ஷாலினி, விவேகானந்தன் அங்கிள் பேத்தி கனடாவில் படித்து முடித்துவிட்டு தற்போது தாத்தா பாட்டியுடன் தங்கி பிசினெஸ் கத்துக்கிட்டு இருக்க என்றாள். ஒன்றும் சொல்லாத அவந்திகா நீங்க வர டைம் ஆகும்னா நான் பூஜாவை கூட்டிகிட்டு வீட்டுக்கு போகவா என்றாள். எதுவோ சரியில்லை என்று புரிந்துகொண்ட மாலினி சரி என்று கூறி தன் மகளை தோழியுடன் வீட்டுக்கு அனுப்பிவைத்தாள்.

வீட்டிற்கு சென்று பூஜாவிற்கு உடையை மாற்றி தூங்க வைத்தவள், தனது உடையை கூட மாற்றாமல் ஷாலினியை திட்டிக்கொண்டிருந்தாள், ரெண்டு பேர் பேசிட்டு இருக்கோம் கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம வந்துட்டு என்ன கண்டவங்கனு சொல்ற, இதுல அத்தான், பொத்தானு வேற, ஏன் அவருக்கு பேர் இல்லை என்று தனக்கு தானே பேசி திட்டிக்கொண்டிருந்தவள், அப்படியே பூஜா அருகில் படுத்து உறங்கிவிட்டாள், வீட்டிற்கு வந்த மாலினி இருவரையும் பார்த்துவிட்டு ட்ரெஸ் கூட மாற்றமா தூங்குற என்ன ஆச்சு இவளுக்கு காலைல முதல் வேலைய அவகிட்ட பேசணும் என்று எண்ணிக்கொண்டு உறங்க சென்றாள்.

அவந்திகா, செழியன்  வாழ்க்கையில் ஷாலினியால் நடக்கபோறது என்ன என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள்….

-நறுமுகை

No Responses

Write a response