காதல் கொண்டேனடி-42

காதல் கொண்டேனடி-42

அன்றிலிருந்து ஒருவாரத்தில் ஒரு மதிய நேரத்தில் அனைவரும் டெல்லி சென்று இறங்கினர். அன்வர் அவர்களை எர்போர்ட் வந்து அழைத்து கொண்டான். அவந்திகா அனைவருக்கும் அன்வரை அறிமுகம் செய்து வைத்தாள் . சம்பிரதாய நலம் விசாரிப்புகள் முடித்து,

அவந்திகா அன்வரிடம் செழியன் எப்போது மருத்துவமனையில் இருந்து வருவான் என்று கேட்க,

அவன் வருவதற்கு மாலை ஆகிவிடும் அதனால் தான் நான் உங்களை இந்த நேரத்தில் வருமாறு பிளைட் புக் பண்ண சொன்னேன் என்று கூறினான்.

அவர்கள் காரில் சென்றுகொண்டே செழியன் டெல்லி வந்தது பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அன்வர் அவர்களிடம், முதலில் செழியன் போன் செய்து பேசிய போது அவனும் அவந்திகாவும் ஒன்றாக வருவதாக நினைத்ததாக கூறினான். ஹரிணி சொல்லி தான் தனக்கே நடந்த குழப்பங்கள் தெரியும் என்று அன்வர் கூறினான்.

அன்வர் அவர்கள் அனைவரையும் செழியன் தங்கி இருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றான். அன்வர் வீட்டிற்கு அருகிலேயே அவன் செழியனுக்கும் வீடு பார்த்து கொடுத்திருந்தான்.

வீடு  மூன்று படுக்கை அறைகளுடன் வசதியாக இருந்தது. வீட்டை பார்த்த அன்னபூரணி, இவன் இங்கயே முழுசா செட்டில் ஆகிவிடலாம் என்னும் எண்ணத்தில் வந்திருப்பான் போல பாரு எப்படி நல்லா வீடு பார்த்திருக்கிறான் என்று கூற,

அன்வர் என்ன என்று அவந்திகாவை பார்த்தான். அவந்திகா அன்னபூரணி கூறியதை அவனிடம் கூற,

 அன்வரோ இல்லை இல்லை இது என் பிரண்ட் வீடு. அவர்கள் பாரினில் இருக்கிறார்கள் வீடு இங்க சும்மா தான் பூட்டி இருந்தது. செழியன் வருவதாக சொன்னவுடன் வேறு எங்கேயாவது வீடு பார்ப்பதற்கு இந்த வீடுன்னா எனக்கும் பக்கமா இருக்கும் என்று நான் தான் இந்த வீட்டை பார்த்து கொடுத்தேன் என்று விளக்கம் கொடுத்தான்.

அதன் பின் சிறிது நேரம் அவர்களை ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு அவன் அவனது வீட்டிற்கு சென்றுவிட்டான்.

இன்னைக்கு வரட்டும் அவன் என்று அன்னப்பூரணி கோபத்தோடு புலம்பிக்கொண்டிருக்க, அவந்திகாவோ அத்தை அவர் வந்தபிறகு அவர்கூட சண்டை போட எனர்ஜி வேண்டும் இப்போ கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க என்று கூறிவிட்டு அவர்களை படுக்க சொல்லிவிட்டு வெளியில் வந்தாள்.

அங்கு வெற்றியும் தாமரையும் அமர்ந்திருக்க, அவர்களோடு சென்று அமர்ந்துகொண்டாள். தாமரையோ என்ன அவந்தி பெரியம்மா என்ன சொல்றாங்க என்று கேட்க, அவங்க இப்போ இருந்து சண்டைக்கு ரெடியாகிட்டு இருக்காங்க, இன்னைக்கு டாக்டர் சார் ஒருவழி ஆகப்போறாரு என்று அவந்திகா கூற,

தாமரையோ உனக்கு அண்ணா மீது கோபம் இல்லையா? என்று கேட்டாள்.

கோபம் எல்லாம் இல்லை…. ஆனால் இருக்கு என்று கூற,

தாமரையோ இப்படி சொன்னால் என்ன அர்த்தம் என்று கேட்டாள்.

எனக்கு சொல்ல தெரியவில்லை அண்ணி கோபமும் இருக்கு என்னால் அவரது நிலைமையை புரிந்துகொள்ளவும்  முடிகிறது என்று கூறினாள்.

அனைவரும் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு செழியன் வரும் நேரம் தயாராக இருந்தனர்.

மாலை வீட்டிற்க்கு வந்து காரை நிறுத்திவிட்டு தன்னிடம் இருக்கும் சாவியை வைத்து வீட்டை திறக்க சென்ற செழியன் கதவு தானாக திறக்கவும் அதிர்ந்து போய் பார்த்தான். கதவை திறந்த வெற்றியை அவன் அங்கு சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

உள்ளே வாங்க மாப்பிள்ளை என்று வெற்றி அழைக்க,

ஒருநிமிடம் தான் கனவு தான் காண்கிறோமா என்று நினைத்தான் செழியன். அதன் பின் தான் அவன் வீட்டிற்குள் இருந்த அனைவரையும் கவனித்தான். உள்ளே வந்தவன் கனவில் இத்தனை பேர் எல்லாம் வர மாட்டாங்க அப்போ இது நிஜம் தான் என்று நினைத்துக்கொண்டான்.

அங்கிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன் இறுதியாக அவந்திகாவிடம் வந்து தன் பார்வையை நிறுத்தினான். இரண்டு வாரமாக இந்த முகத்தை எப்படி பார்க்காமல் இருந்தோம் என்று அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சுற்றி இருந்த யாரையும் கண்டுகொள்ளாமல் அவந்திகாவை பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தவன், திடீரென்று ஏதோ தோன்ற, உனக்கு இப்போ தானே உடம்பு சரியாகியிருக்கு உன்னை யாரு பிளைட் ட்ராவல் பண்ண சொன்னாங்க என்று கேட்டான்.

அனைவரும் இவனை என்ன செய்றது என்று பார்க்க,

தாமரையோ வெற்றியிடம் நெருங்கி அவந்திகா சொன்ன மாதிரி  டாக்டரை லவ் பண்ணுவது கொஞ்சம் கஷ்டம் தான் மச்சான் என்று கூறினாள்.

அதை கேட்டு புன்னகைத்த வெற்றி, செழியனிடம் அவ்வளவு அக்கறை இருக்கிறவர் உங்க பொண்டாட்டியை விட்டுட்டு சொல்லாமல் கொள்ளாமல் டெல்லி வந்திருக்க கூடாது என்று பொண்டாட்டியில் ஒரு அழுத்தம் கொடுத்து கூறினான்.

செழியனோ என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்க,

அன்னபூரணி அவனிடம் வந்து அன்னைக்கு அவ்வளவு வாய் பேசின, இப்போ பொண்ணு கொடுத்தவங்க கேட்குறாங்க பதில் சொல்லு என்று அவன் மீது பாய்ந்தார்.

அவன் அதற்கும் அமைதியாக இருக்க,

மீனாட்சியோ, உங்களை நம்பி நீங்க நல்லா பார்த்துப்பீங்கனு தானே எங்க பொண்ணை கொடுக்க சம்மதிச்சோம் எங்ககிட்ட கூட சொல்லாமல் கல்யாணம் செய்துகொண்டு இப்போ சொல்லாமல் விட்டுட்டும் வந்தா என்ன அர்த்தம் என்று ஆதங்கத்தோடு கேட்டார்.

இந்த புறம் தாமரையின் அம்மா பார்வதியோ எங்க பொண்ணுக்கு அண்ணன் இருக்கிறார் முன்னாடி நின்று கல்யாணத்தை நடத்துவார் என்று நங்கள் நினைத்துக்கொண்டு இருக்க, நீங்க யாரிடமும்  சொல்லாமல் இங்க வந்து ஒழிந்துகொண்டால் நல்லாவா இருக்கிறது என்று அவர் அவர் பங்கிற்கு  கேட்டார்.

இப்படி ஆள் ஆளிற்கு மாற்றி மாற்றி கேள்வி கேட்க பதில் சொல்லாமல் அமைதியாக  நின்றுகொண்டிருந்தான் செழியன்.

அப்போது வீரபாண்டி தன் தொண்டையை கனைத்துக்கொண்டு பேச தொடங்கினார். செழியா நீ எதையும் யோசித்து செய்வாய் ரொம்ப பக்குவமான ஆள்னு எனக்கு தெரியும். அவந்திகாவிற்கு கையில் காயம் பட்டபோதே பார்த்துக்கோங்க கை எரிச்சல் எடுக்கும் என்று எங்களுக்கே சொன்ன ஆள் நீ. ஆனால் இப்பொழுது அவள் முழுதாக கூட உடம்பு தேராமல் இருக்கும் நிலையில் அவளை விட்டுவிட்டு நீ இவ்வளோ தூரம் வந்திருக்கிறாய் என்றால் அதற்கு எதாவது காரணம் இருக்கும். அதை நீ எங்களிடம் சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் அவளிடமாவது சொல்லிவிடு.

அடுத்து என்ன செய்வது என்று நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு எடுங்க, உங்களது முடிவு என்னவென்று மட்டும் எங்களிடம் சொன்னால் போதும் என்று சொன்னவர் பேச்சு முடிந்ததாக அங்கிருந்து  எழுந்து செல்ல,

அனைவரும் செழியனை விரோதமாக பார்த்துவிட்டு ஆளுக்கொரு அறையில் சென்று முடங்கினர்.

அவந்திகா மட்டும் அங்கு நிற்க, அம்மு என்று அவன் ஒரு அடி எடுத்து வைக்க அவள் வேகமாக அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.

என்னை திட்டுவதற்கு தான் இவர்கள் எல்லோரும் கிளம்பி வந்தார்களா, அவந்திகா கிட்ட பேசுனு தாத்தா சொல்லிவிட்டு போய்ட்டாடரு, இவள் நிற்க கூட மாட்டேங்கிறா என்று செழியன் நினைக்க, ஆமா நீ சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்துட்டு அம்முனு கூப்பிட்டவுடனே சொல்லுங்க மாமானு உன்கிட்ட வந்து பேசுவாள் என்று எதிர்பார்கிறாயா கையில் காலில் விழுந்து தான் நீ பேசவேண்டும் என்று அவனது மனசாட்சி சொல்ல, அதுவும் சரி தான் என்று நினைத்து அங்கிருந்து நகர்ந்தான்.

அன்று முழுவதும் யாரும் செழியனுடன் பேசவில்லை, அன்று இரவு அவர்களுக்கு அன்வர் வீட்டிலிருந்து உணவு வந்தது. அனைவரும் சாப்பிட்டுவிட்டு, பெரியவர்கள் அனைவரும் வீட்டின் முன்னிருந்த சிட் அவுட்டில் அமர்ந்து பொதுவாக பேசிக்கொண்டிருந்தனர். வெற்றி, தாமரை, அவந்திகா மூவரும் சிறிது நடந்துவிட்டு வருவதாக கூறி சென்றனர். யாரும் அங்கு செழியன் என்று ஒருவன் இருப்பதாக கண்டுகொள்ளவில்லை.

வெற்றி, தாமரை, அவந்திகாவும் வெளியில் சென்றதும் அவர்கள் பின்னால் சென்ற செழியன், சிறிது தூரத்தில் அவர்களை வழிமறித்து நின்றான். வெற்றியும், தாமரையும் அவனை தாண்டி செல்ல அவர்கள் பின்னால் செல்ல சென்ற அவந்திகாவை கை பிடித்து நிறுத்தியவன், சண்டை போடதான வந்த அப்புறம் எதுக்கு பேசாம இருக்க என்றான்.

அவள் அவனை தீர்க்கமாக பார்க்க, எனக்கு உன்கிட்ட பேசனும் ப்ளீஸ் அம்மு என்றவனிடம் மேற்கொண்டு கோபத்தை காட்டமுடியாமல், பேசுங்க என்று மட்டும் சொன்னாள் அவந்திகா. இங்க வேண்டாம் அந்த பார்க்குல உட்கார்ந்து பேசலாம் என்று அவளை அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த பார்குக்கு அழைத்து சென்றான் செழியன்.

செழியன் அவந்திகாவுடன் பேச தொடங்கியதும் வெற்றியும், தாமரையும் சற்று தள்ளி சென்று நின்றுகொண்டனர், இப்போது அவர்கள் இருவரும் பார்க் நோக்கி செல்வதை பார்த்தவர்கள், இனி மாப்பிள்ளை ஆச்சு அவந்தி ஆச்சு நீ வா என்று கூறி வெற்றி தாமரையை அழைத்து கொண்டு நடக்க தொடங்கினான்.

பார்க்கிருக்கு சென்று அமர்ந்து சிறிது நேரம் அமைதியாக இருந்த செழியன், அம்மு உனக்கு நான் முதல்ல இருந்து நடந்தது எல்லாம் சொல்ற அப்புறம் உன்னோட முடிவை சொல்லு, ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு கேள்வி இருக்கு, ஷாலினி ஏன் உன்ன கடத்துனா, என்னதான் நடந்துச்சுனு நீ வெற்றிகிட்ட கேட்கலையா என்று கேட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், எனக்கு அடிபட்டு நீங்க டெல்லிவர வரைக்கு என்கூடத்தான் இருந்தீங்க நீங்க ஏன் என்கிட்ட என்ன நடந்துச்சுனு சொல்லாம இருந்தீங்க? நீங்க சொல்லாததை நான் ஏன் அண்ணாகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும் என்று அவனிடமே திரும்ப கேட்டாள்.

அவள் கூறியதை கேட்டவனுக்கு இவள் இல்லாத வாழ்வை வாழ்வது தன்னால் இயலாது என்று தோன்றியது, அதே சமயம் இவளிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு அவள் என்ன முடிவெடுக்கிறாளோ அதை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் அவர்கள் வாழ்க்கையில் ஷாலினி விளையாடி விளையாட்டை சொல்ல தொடங்கினான்.

அம்மு, விவேகானந்தர் தாத்தா என்ன கூப்பிட்டு எனக்கும் ஷாலினிக்கும், கல்யாணம் பேசுன விஷயம் ஷாலினிக்கு தெரியாம நடந்தது இல்லை, அவ சொல்லித்தான் அவங்க அந்த விஷயத்தை என்கிட்ட பேசியிருக்காங்க. அவ அதை பேச சொல்லும்போதே அவளுக்கு நம்ப லவ் விஷயம் தெரியும். நான் அதுக்கு முடியாதுனு சொல்லுவனு கூட அவளுக்கு தெரியும், ஆனாலும் அவ அவங்களை கேட்க சொன்னதுக்கு காரணம், அந்த விஷயம் அவளுக்கு தெரியாது, நான் அவளை கல்யாணம் செஞ்சுக்க முடியாதுனு சொன்னதை கூட அவ சாதாரணம எடுத்துகிட்டான்னு என்ன நம்பவைக்கத்தான் அதை செஞ்சிருக்க.

அதுக்கப்புறம் வெற்றிக்கு நம்ப லவ் பற்றி தப்பா தகவல் சொன்னது, அன்னைக்கு நீ ஊருக்கு கிளம்பும் போது நான் ஏர்போர்ட் டைம்கு  ரீச் ஆக கூடாதுனு ஒரு  drug அடிக்ட்க்கு பணம் கொடுத்து ஆக்ஸி டென்ட் செய்யவெச்சது ஷாலினி தான். ஆனா அவளே எதிர்பார்க்காதது நான் உடனே இந்திய கிளம்புனது.

நான் கிளம்புனதும் அவளும் அவ பிரென்ட் ரியா கூட இந்திய வந்துட்டா, அங்க வந்து நம்ப ரெண்டு பேரையும் கண்கானிக்க ஆள் வெச்சு, ஜோசியருக்கு பணம் கொடுத்து உன்னோட ஜாதகத்துல பிரச்சனைன்னு சொல்ல சொன்னது எல்லாம் அவதான்.

அவந்திகா, உடனே கேள்வியாக என்னோட ஜாதகத்துலயா என்று கேட்க, ஆமா ஜோசியர் பதட்டத்துல தெரியாம தாமரை பேர் சொல்லிட்டாரு என்றான் செழியன், ஒஹ்ஹஹ் என்று கேட்டுக்கொண்டாள் அவந்திகா.

அதுக்கப்புறம் நீ வீட்டை விட்டு தள்ளி இருக்கனுனு சொல்லி நம்பளை திரும்ப யு.எஸ் போகவெச்சதும் ஷாலினி தான். அப்பதான் அவ உன்கூட பழகி நீயும் அவளும் ஒரே மாதிரினு உன்ன நம்ப வைக்க முடியும். அங்கயும் அவ நினைக்காதது நடந்துச்சு, அது நான் உன்னை அவளோட போக கூடாதுனு தடுத்தது. நீ, நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரினு சொன்னபோது எனக்கு சந்தேகம் வந்துச்சு, நீயும் அவளும் கண்டிப்பா ஒரே மாதிரி கிடையாது. ஏதோ தப்பா இருக்குனு தோனுச்சு அதுனாலதான் நீ அவகூட போறதை தடுத்தேன்.

ஆனா என்னோட சந்தேகத்தை நான் யோசிச்சு பார்க்குற நேரம் கூட எனக்கு குடுக்காம, அம்மாக்கு ஆக்ஸிடெண்ட்  செஞ்சு என்ன இந்தியா வர வெச்சுட்டா என்று செழியன் கூற, அதிர்ந்து போன அவந்திகா, என்னது அத்தைக்கு நடந்த ஆக்ஸிடெண்ட், ஷாலினி செஞ்ச ஏற்படா என்று அதிர்ச்சி குறையாமல் கேட்டாள். செழியன் ஆமா என்று தலை அசைக்க, எதாவது தப்பா நடந்திருந்தா என்று கேட்கும்போதே கண்கள் கலங்கியது அவந்திகாவிற்கு,

அவளை அணைத்துக்கொள்ள வேண்டும்போல் இருந்தது செழியனுக்கு, ஆனால் அதை மறைத்து பேச்சை தொடர்ந்தான். அதுக்கப்புறம் என்னோட வீட்டுல உன்னோட மெடிக்கல் ரிப்போர்ட்டை வெச்சதும் அவதான் , நீயும் அதை பார்த்துட்டு கல்யாணத்தை நிறுத்திட்ட.

நான் ரொம்போ உடைஞ்சு போய்ட்டா, அதுவும் கல்யாணத்தை நிறுத்த நீ என்னவேணாலும் செய்வனு தாத்தாகிட்ட சொன்னப்ப ரொம்போ வலிச்சுது. எதையும் யோசிக்காம ஹாஸ்பிடல்லே கதின்னு இருக்க ஆரம்பிச்ச. என்ன நடந்திருந்தாலும் என்கிட்ட பேசணுன்னு கூட உனக்கு தோணலைனு எனக்கு கோவம் அதனால நானும் உன்கிட்ட பேச முயற்சி செய்யலை.

அப்பதான் நீ அம்மாகிட்ட டெய்லி பேசுறேன்னு தெரிஞ்சுது, நமக்கு தெரியாம  ஏதோ நடக்குதுன்னு தோணுச்சு, வெற்றிக்கு போன் பண்ணி தாமரையை உன்கிட்ட கோவமா பேசி விஷயத்தை கேட்க சொன்ன, ஆனா சத்தியமா குழந்தை விஷயம் உனக்கு தெரிஞ்சிருக்குனு நான் எதிர்பார்க்கவே இல்லை. அம்மு உனக்கு தெரிய கூடாதுனு நான் நினைக்குற ஒரு விஷயத்துக்கு கூடவே சாட்சிவெச்சுக்கிட்டு இருப்பன, உன்னோட ரிப்போர்ட்ஸ் நான் என்கூட எடுத்துட்டு வரலைன்னு எனக்கு 100% உறுதியா தெரியும்.

எங்க தப்பு நடந்துச்சுனு யோசிச்சப்பதான் எனக்கு ஷாலினி நியாபகம் வந்துச்சு, திடீர்னு ஷாலினி நம்ப லைப்குள்ள வந்த மாதிரி இருந்துச்சு, அவளுக்கு இருக்க வசதிக்கு வேர்ல்ட்ல இருக்க டாப் மோஸ்ட் டிசைனர்ஸ் வெச்சு ஒர்க் பண்ணமுடியும், எதுக்கு உன்கூட சுத்தனும், அந்த சந்தேகம் எனக்கு நிறைய கேள்விகளுக்கு பதில் கொடுத்துச்சு. எப்ப சந்தேகம் வந்துச்சோ உடனே ஷாலினி பிரென்ட் ரியாவை பேஸ்புக் மூலமா காண்டாக்ட் பண்ண, ஷாலினி செய்றதை தடுக்கவும் முடியாம, உடந்தையா இருக்கவும் முடியாம தவிச்சுக்கிட்டு இருந்த ரியா, நான் கால் பண்ணி கேட்டதும் நம்ப லைப்ல ஷாலினி செஞ்ச அனைத்தையும் எனக்கு சொன்ன.

காத்திருக்க தேவையில்லை, உங்களுக்காக நிறைவு பகுதியும் இன்றே பதிவிடப்பட்டுள்ளது…….

No Responses

Write a response