காதல் கொண்டேனடி-4

காதல் கொண்டேனடி-4

ஏர்போர்ட்டில் இருந்து வெளியில் வந்த அவந்திகா பொறுமையாக நின்று சியாட்டில் சீதோஷண நிலையை ரசித்தாள், அது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதிக வெயில் அதிக குளிர் இல்லாது தோன்றும் போதெல்லாம் இதமாய் மனம் நனைக்கும் மழையை அவள் மிகவும் விரும்பி ரசிப்பாள்.  

நிதானமாக ரசித்து முடித்து ஏர்போர்ட்டில் இருந்து வீடு வந்த அவந்திகாவை, மாலினியும் அவளது 4 வயது மகள் பூஜாவும் உற்சாகத்தோடு வரவேற்றனர். அவந்திகா அம்மா மாலினிகாக கொடுத்துவிட்டவற்றை மாலினிடம் கொடுத்துவிட்டு ஊர் விஷயங்களை பேச தொடங்கினர் தோழிகள். மாலினியின் கணவன் ராஜசேகர் பிஸினெஸ் விஷயமாக வெளியே சென்றிந்ததால் அவர்கள் அரட்டை கச்சேரி தடையின்றி தொடர்ந்தது.

 அரட்டைக்கிடையே தன் வீட்டினரிடம் நல்லபடியாக வந்து சேர்ந்துவிட்டதாக தகவல் சொன்னாள் அவந்திகா, மாலினி, பூஜா என அனைவரும் அவந்திகா குடும்பத்தினரிடம் பேசிவிட்டு வைத்தனர். மாலினியிடம் பேசிக்கொண்டே தன் லக்கேஜ்யை எடுத்து வைத்து கொண்டிருந்த அவந்திகா அதில் இருந்த பொன்னியின் செல்வன் புக்கை பார்த்தவள் செழியனின் நினைவில் புன்னகைத்தாள்.

 பேசிக்கொண்டிருந்தவள் திடீரென அமைதியாகிவிட மாலினி அவளை பார்த்தாள், அங்கு புக்கை கையில் பிடித்துக்கொண்டு புன்னகையோடு நிற்பவளை பார்த்து, ஓய்… என்ன புக்கை பார்த்து சிரிச்சுக்கிட்டு இருக்க, என்றவளிடம் வேகமாக அருகில் வந்து அமர்ந்து மாலு பிலைட்ல ஒரு டாக்டர்ர பார்த்த என்று சொல்லி செழியன் பற்றி சொல்ல தொடங்கினாள். அவனது பிளைட் சைடு ரோமியோ விளக்கத்தை கேட்டு மாலினி சிரிக்க, அவந்திகாவும் அவளோடு இணைந்து சிரித்தாள்.

ஒருவழியாக கதை பேசிமுடித்து தோழிகள் தூங்க செல்ல, அவந்திகா ஜெட்லேக்கின் காரணமாக தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தாள், நேத்து பிலைட்டில் செழியன் அருகில் அமர்ந்து நிம்மதியாக உறங்கியது நினைவில் வந்தது. கூடவே அவனோடு பேசியது புன்னகையோடு அவன் தான் செய்த கிண்டல்களை ரசித்தது என அவள் எண்ணம் செழியனை சுற்றி வந்தது, அந்த நினைவுகளோடே உறங்கிப்போனாள் அவந்திகா.

இரண்டு மாத விடுமுறைக்கு பிறகு மீண்டும் அலுவலகம் செல்ல தொடங்கினாள் அவந்திகா, இரண்டு மாத விடுமுறைக்கும் சேர்த்து அவளுக்கு வேலை கழுத்தை நெரித்தது, ஒரு வாரம் பிசினெஸ் டிரிப் முடித்து வந்த ராஜசேகர் அவந்திகாவை வீட்டில் பார்க்க முடியாமல் போன் செய்து பேசினான். மூன்று வார தொடர் வேலைக்கு பிறகு அந்த வார இறுதியில் ரிலாக்ஸாக வீட்டில் இருந்தாள் அவந்திகா.

நீ என்கிட்ட பேசாத டார்லிங் நான் ரொம்போ கோவமா இருக்க…          

என்னோட பூஜா குட்டிக்கு என்  மேல என்ன கோவம்….

3 வீக்ஸ் ஆச்சு ஐஸ் கிரீம் போகல, ஸ்விமிங் போகல, பிலே ஏரியா போகல, நைட் டிரைவ் போகல எங்கயும் போகல பூஜா கோவம் யார்கிட்டயும் பேச மாட்ட என்று கையை கட்டிக்கொண்டு முகத்தை திருப்பி கோவப்படும் அவளை கட்டியணைத்து தூக்கி சுற்றினாள் அவந்திகா.அவள் சுற்றிய உடன் கோவமெல்லாம் மறந்து ஜாலி அத்தை ஒன்னொரு ரவுண்டு சுத்துங்க என்று கைதட்டி ஆர்பரித்தாள் பூஜா.

அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டே இருவருக்கும் பாலை ஆற்றி கொடுத்தாள் மாலினி. சமாதானம் ஆன பூஜாவிடம் இன்னைக்கு எங்கெல்லாம் போலாம் சொல்லுங்க பூஜா எங்க சொன்னாலும் போலாம் என்று அன்று ஊர் சுற்ற பிளான் போட தொடங்கினர். அப்பொழுது அங்கு வந்த ராஜசேகர் அத்தையும், மருமகளும் இன்னைக்கு எனக்கு கொஞ்சம் அப்பாயின்மெண்ட் கொடுங்க உங்க பிளான்னை நாளைக்கு வெச்சுக்கோங்க என்றான்.

 என்ன அண்ணா விஷயம் அப்பாயின்மெண்ட் எல்லாம் கேக்குறீங்க என்றாள் அவந்திகா. நம்ப பிஸினெஸ் நண்பர் ஒருத்தருக்கு இன்னைக்கு நாற்பதாவது வெட்டிங் ஆனிவெர்சரி எல்லாரையும் இன்வைட் பண்ணி இருக்காங்க என்றான். நீங்க மாலு பூஜா போய்ட்டுவாங்க அண்ணா நான் எதுக்கு என்றவளை உனக்கு அவங்கள தெரியுமா, நம்ப விவேகாந்தன் அங்கிள் தான் உன்னையும் சேர்த்துதான் இன்வைட் பண்ணி இருக்காங்க என்றான் ராஜசேகர்.

ஓ ! வாவ்  அவங்கள, கண்டிப்பா போகலாம் அண்ணா என்றவள், பூஜாவிடம் நாளை கண்டிப்பாக வெளியில் போகலாம் என்று சொல்லி மாலினிக்கு சமையலில் உதவ எழுந்து சென்றாள். விவேகானந்தன், மேகலா தம்பதியினரை அவந்திகாவிற்கு மிகவும் பிடிக்கும், ராஜசேகரை சந்திக்க வரும்போது, கோவிலில், சில வீட்டு விசேஷங்களில் அவர்களை பார்த்திருக்கிறாள், எங்கு பார்த்தாலும் அன்போடு பேசி நலன் விசாரிக்கும் அவர்கள் அவளுக்கு அவளுடைய தாத்தா,பாட்டியை பார்ப்பதுபோல இருக்கும்.

 விவேகானந்தன் அவருடைய இளம் வயதிலேயே அமெரிக்கா வந்துவிட்டார் கிட்டத்தட்ட 45 வருடங்களாக இங்குதான் இருக்கிறார். அவருக்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் ஹோட்டல்கள் இருக்கின்றனர். ராஜசேகர் 10 வருடங்களுக்கு முன்பு இங்கு தனது இம்போர்ட் எஸ்போர்ட் பிசினெஸ்ஸை தொடங்கும்போது பெரிதும் உதவியவர் இவர்தான், அதனால் ராஜசேகருக்கு அவர் குருவை போன்றவர்.

அன்று மாலை ராஜசேகர் குடும்பம் விழாவிற்கு சென்றனர். மாலினி ராஜசேகர் பூஜாவுடன் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர், இன்னும் பல உயரங்களை அடையவேண்டும் என்று விவேகானந்தரும், தீர்க்கசுமங்கலியா இரும்மா என்று மேகலாவும் இளையவர்களை வாழ்த்தினர். அவர்களை தொடர்ந்து அவந்திகாவும் அவர்கள் காலில் விழ இருவரும்,சீக்கிரம மனசுக்கு பிடிச்சவன கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசம இருக்கனும் என்று ஒரே குரலில் வாழ்த்தினர். எனக்கு மட்டும் ஒரு பேரன் இருந்து இருந்த உன்ன அவனுக்கே கல்யாணம் செஞ்சு வெச்சிருப்ப என்றார் மேகலா, சிறிது நேரம் அவர்களிடம் பேசிவிட்டு உணவருந்த சென்றனர்.

ராஜசேகர் அவர் நண்பர்களோடு பேச சென்று விட தெரிந்த ஒரு சிலரிடம் பேசிவிட்டு மாலினி, அவந்திகா பூஜாவோடு சற்று தள்ளி சென்று அமர்ந்தனர். அவர்கள் வீட்டு தோட்டமும், நீச்சல் குளமும் மிகவும் அழகாக இருக்கும் என்று மாலினி சொல்லி கேட்டிருக்கிறாள் அவந்திகா, எனவே மாலினியிடம் சொல்லிவிட்டு அதை காண பின்புறம் சென்றாள் .  அந்த நீச்சல் குளத்தை சுற்றி விளக்குகள் ஒளிர அதற்கு செல்லும் பாதையில் இருபுறமும் ரோஜாக்கள் பூத்துகுலுங்கியது, அந்த வழியே நடந்து சென்றவள், நீச்சல் குளத்தின் அருகே அமைத்திருந்த கல் மேடையில் அமர்ந்து ஒளிரும் விளக்கில் நீச்சல் குளத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.

என்ஜினீயர் மேடம் இங்க என்ன பண்றீங்க என்ற குரல் கேட்டு திரும்பியபவள், புன்னகையோடு நின்றிருந்த செழியனை அங்கு நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.

எதிர்பாராதது நடப்பதுதானே வாழ்க்கை, இவர்கள் வாழ்க்கையில் அப்படி என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள்………

-நறுமுகை

No Responses

Write a response