காதல் கொண்டேனடி-38

காதல் கொண்டேனடி-38

அப்போ நீங்க செத்துடுங்க என்று செழியனை நோக்கி துப்பாக்கியை திரும்பியவள், இலக்கே இல்லாமல் சுட தொடங்கினாள்.

 அவளிடம் இருந்து தப்பிப்பதற்காக செழியன் ஹாலின் உட்புறம் குதித்து விழ அப்போது தான் மயக்கத்தில் இருந்து எழுந்த அவந்திகா, ஷாலினி செழியனை சுடுவதை பார்த்தவள்,

ஷாலினியை தடுப்பதற்கு அவள் மீது பாய்ந்தாள். அவள் பாய்ந்த வேகத்தில் இருவரும் தடுமாறி விழ, அவர்கள் படிக்கட்டில் உருள தொடங்கினர்.

செழியன் எழுந்து அவர்கள் பின் ஓடும்போதே மீண்டும் துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. செழியன் ஒரு நிமிடம் உறைந்து போய் நின்றான். ஷாலினியும் அவந்திகாவும் ரத்த வெள்ளத்தில் கடைசி படிக்கட்டில் உருண்டு விழுந்தனர். வேகவேகமாக அவர்கள் அருகில் ஓடியவன் அவந்திகாவின் வயிற்றில் குண்டு அடிபட்டு இருப்பதை பார்த்து சர்வமும் நடுங்கி போனான்.

உடனடியாக ஆம்புலனசுக்கும், போலீசுக்கும் போன் செய்தவன் ஆம்புலன்ஸ் வந்தவுடன் அவர்கள் இருவரையும் கொண்டு போய்  மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வெற்றிக்கு தகவல் கூறினான்.

அதற்குள் கோவிலில் இவர்கள் கல்யாணத்தை பார்த்த ஒருவர் அவந்திகா வீட்டில் விஷயத்தை சொல்லி இருக்க, அவர்கள் ஏற்கனவே மதுரைக்கு தான் வந்துகொண்டிருந்தனர்.

அதுமட்டுமின்றி அவந்திகா கல்யாணத்தை நிறுத்தி விட்டதாகவும் இனி அந்த கல்யாணம் நடக்க போவதில்லை என்றும் ஷாலினி அன்னப்பூரணியிடம் சொல்லியிருக்க, அது என்ன ஏது என்று விசாரிக்க அவந்திகா வீட்டிற்கு வந்திருந்த அன்னபூரணிக்கும்  அவர்களது கல்யாண விஷயம் அதிர்ச்சியை தந்தது.

மதுரைக்கு வந்துகொண்டிருந்தவர்களுக்கு வெற்றியிடம் இருந்து விஷயம் போக அனைவரும் பதறி போய்  மருத்துவமனைக்கு சென்றனர்.

தற்போது

நாம் முதல் அத்தியாயத்தில் பார்த்த மருத்துவமனை, அங்கு சிலர் செழியனை திட்டிக்கொண்டிருந்தனர், இன்னும் சிலர் ஒன்னு ஆகாதுடா மச்சான் கவலைபடாத என்று ஆறுதல் சொல்லி கொண்டிருந்தார்கள். இது எதுவும் அவன் காதில் விழவில்லை, அவன் எண்ணம் முழுவதும் ஐ சி யூவில் இருந்த அவந்திகாவை சுற்றித்தான் இருந்தது.

அவனை திட்டிக்கொண்டிருந்தது அவந்திகாவின் அம்மாவும், அன்னபூரணியும்  தான்.  அவள் தான் திருமணம் வேண்டாம் என்று சொன்னாலே எதற்காக இப்படி ஒரு திருமணத்தை செய்ய வேண்டும் என்று அவர்கள் ஒரு புறம் புலம்ப, கனகவல்லியோ தன் செல்ல பேத்தியின் நிலை பார்த்து அரை மயக்கத்தில் இருந்தார்.

சூர்யாவும், வெற்றியும் செழியனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். என்ன நடந்தது, ஏன் இவர்கள் அவசர கல்யாணம் செய்தார்கள் என்று விளக்கும் நிலையில் செழியன் இல்லை.

வெற்றியையும் அதை பற்றி தற்போது பேச வேண்டாம் என்று செழியன் தடுத்து விட்டான்.

 உள்ளே அவந்திகா ஷாலினி இருவருக்கும் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. செழியனின் எண்ணம் முழுவதும் அவந்திகாவை சுற்றியே இருந்தது. இது அனைத்தும்  தன்னால் தான் இவளுக்கு நேர்ந்தது என்று நினைத்தவன், அவள் நல்லபடியாக தேறியதும் முழுவதுமாக அவள் வாழ்க்கையை விட்டு விலகிவிட வேண்டு என்று அவசர முடிவை எடுத்தான்.

அப்போது வெளியில் வந்த டாக்டர்ஸ் ஷாலினி தலையில் அடிபட்டதால் கோமாவிற்கு சென்றுவிட்டதாகவும். அவந்திகாவிற்கு கொடுத்திருக்கும் சிகிச்சைக்கு அவள் காலைக்குள் கண் விழிக்கவில்லை என்றால் அவளும் கோமாவில் விழுந்துவிடுவாள் என்றும் சொல்லி சென்றனர்.

டாக்டர் கூறியதை கேட்ட அனைவரும் மிகவும் பயந்துபோயினர். மீனாட்சியோ பிறந்தநாள் அதுவுமா நல்ல இரும்மான்னு அவளுக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லலை, இனி சொல்லமுடியாமயே போயிடும்போலயே என்று அழுதார்.

அவர்கூறியதை கேட்டு அவரிடம் வந்த செழியன், அவந்தி பிழைச்சு வருவான்னு உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா தயவுசெஞ்சு வீட்டுக்கு போய்டுங்க, அவளை வெற்றி எப்படி வீட்டுல இருந்து கூட்டிட்டு வந்தாரோ நான் அப்படியே திரும்ப அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வர. இங்க இருந்து என்னோட நம்பிக்கையை உடைக்காதீங்க என்று அழுத்தமாக கூறிவிட்டு அவந்திகாவை பார்க்க டாக்டரிடம் பெர்மிஷன் வாங்கிக்கொண்டு ஐ சி யூக்குள் சென்றான்.

அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு அவனுக்கு போன் செய்த ஷாலினியின் தாத்தா, தாங்கள் வந்துகொண்டிருப்பதாகவும் அதுவரை ஷாலினியை பார்த்துக்கொள்வதாகவும் கூறினார். அவரிடம் எதுவும் சொல்லாமல் சரி என்று போனை வைத்தான்.

அவந்திகா அருகில் சென்று அமர்ந்தவன் அவள் கையை பிடித்துக்கொண்டு அம்மு, நான் பேசுவது உனக்கு கேட்கும்ன்னு எனக்கு தெரியும். என்னால் தான் இதெல்லாம், நான் உன் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் உனக்கு இத்தனை பிரச்னை வந்திருக்காது. நான் உன்னை உண்மையா நேசித்தேன். இப்போதும் உன்னை உண்மையாய் நேசிக்கிறேன். நம் காதல் உண்மை, நீ திரும்பி என்கிட்ட வந்துடுவனு நான் நம்புறேன் என்றவன், சிறிதுநேரம்  அவள் கையை பிடித்துக்கொண்டு அவளது முகத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

பின் நர்ஸ் வந்து ரொம்போ நேரம் ஐ சி யூ வில் இருக்க வேண்டாம் என்று சொன்னதால் வெளியேறினான். அதன் பின்னும் மேலும் சில மணி நேரங்கள் அனைவரையும் சோதித்து விட்டு தான் அவந்திகா மெதுவாக கண்களை திறந்தாள்.

அவள் கண்களை திறந்ததும் முதலில் தேடியது செழியனை தான்.

ஷாலினியின் நிலை என்ன, தன் நிலைக்கு காரணம் ஷாலினி தான் என்று தெரிந்தாள் அவந்திகாவின் முடிவு என்ன? அறிய தொடர்ந்து வாசியுங்கள்…….

-நறுமுகை.

No Responses

Write a response