காதல் கொண்டேனடி-37

காதல் கொண்டேனடி-37

சூர்யா வீட்டில் வெற்றி தாமரையுடன் பேசிக்கொண்டிருந்த செழியனுக்கு, அவந்திகா நம்பரில் இருந்து கால் வந்தது. என்னமோ ஏதோ என்று போனை எடுத்தவன், அம்மு என்ன ஆச்சு என்று கேட்டான்.

அந்த புறமிருந்து வந்த குரல், சும்மா சொல்லக்கூடாது அத்தான் நீங்க அம்முனு கொஞ்சுறது கூட நல்ல தான் இருக்கு, ஆனால் அது என்னை கொஞ்சவில்லை  என்று நினைக்கும்போது தான் உங்க அம்முவை ஏதாவது பண்ணினால் என்ன என்று தோணுகிறது என்று ஷாலினி கூற, செழியன் அதிர்ந்து போனான்.

ஷாலினி அவந்திகா எங்க? என்று கேட்க,

அதை சொல்லதானே நான் கால் பண்ணினேன் எனக்கு உங்க கிட்ட பேசுவதற்கு நிறைய இருக்கு அத்தான், நீங்க என்ன பண்றீங்க உங்க மச்சானையும் உங்க புது தங்கையையும் உங்க பிரண்ட் சூர்யா வீட்டுலயே விட்டுவிட்டு நான் சொல்லும் அட்ரஸ்க்கு உடனே கிளம்பி  வர்றீங்க. கூடவே உங்க மூளையையும் அங்கேயே கழட்டி வச்சிட்டு வந்திடுங்கள். ஏதாவது, விவரமா யோசிக்கிறதா சொல்லி போலீஸ்க்கு போவது, இல்லை வேற யார்கிட்டயாவது ஹெல்ப் கேட்பதுன்னு ஏதாவது செய்தால் பிறகு உங்க அம்முக்கு நான் கேரண்ட்டி இல்லை என்று ஷாலினி கூற,

வருகிறேன் என்று மட்டும் கூறி போனை வைத்தான் செழியன்.

ஷாலினி பெயரை கேட்டதும் அவசரமாக அருகில் வந்த வெற்றி,தாமரை இருவரிடமும் அவந்திகா ஷாலினியிடம் இருப்பதாக கூறிவிட்டு தான் அங்கே செல்வதாக கூறினான்.

தானும் கூட வருவதாக கூறிய வெற்றியை தடுத்தவன் வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.

ஷாலினி கூறிய அட்ரஸிற்கு சென்ற செழியனை வீட்டு வாசலில் இரண்டு தடியர்கள் நிறுத்தி அவனிடமிருந்து செல்போனை வாங்கிக்கொண்டு அவனை உள்ளே அனுப்பினர். வீட்டை சுற்றி நான்கு ,ஐந்து தடியாட்கள் நின்று கொண்டிருந்தனர்.

உள்ளே சென்ற செழியனை அங்கிருந்த அடியாள் மேலே செல்லுமாறு வழிகாட்டினான். மேலே சென்றவன் அங்கு சோபவில் மயங்கி கிடந்தஅவந்திகாவை பார்த்ததும் வேகமாக அவந்தி என்று அவள் அருகில் செல்ல,அவர்கள் இருவருக்கும் இடையில் வந்து நின்றாள் ஷாலினி. ஷாலினியின் கையில் சைலென்சரோடு ஒரு துப்பாக்கி இருந்தது.

ஷாலினி என்னோடு தானே உனக்கு பிரச்சனை எதுவானாலும் பேசி தீர்த்துக்கலாம் முதலில் அவந்தியை  விடு என்று கூற,

அது எப்படி அத்தான் உங்ககிட்ட பிரச்சனைனு சொல்லிட்டீங்க உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை, என் பிரச்சனை எல்லாம் உங்க அவந்திகாவுடன் மட்டும் தான் என்று கூற,

அவளுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை என்று பல்லை கடித்துக்கொண்டு கேட்டான் செழியன். 

அதற்கு முதலில் இருந்து நான் கதையை சொல்கிறேன். எனக்கு தோற்று போவது சுத்தமா பிடிக்காது. என்னை பார்த்தாலே வழியும் ஆண்களின் மத்தியில் நீங்கள் என்னை திரும்பியே பார்க்கவில்லை. அப்படி என்றால் உங்ககிட்ட என் அழகு தோற்றுவிட்டது என்று தானே அர்த்தம். அது தான் எனக்கு உங்களை கவனிக்க வச்சது. எப்படியும் உங்களை கல்யாணம் பண்ணிடலாம்னு ஒரு உறுதியான நம்பிக்கையில் தான் இருந்தேன், இந்த அவந்திகா குறுக்கே வராமல் இருந்திருந்தா, தாத்தாகிட்ட சொல்லி எப்போதோ நம்ம கல்யாணத்தை உறுதி செய்திருப்பேன். நல்லா யோசித்து பாருங்கள், இந்த அவந்திகாவை நீங்க லவ் பண்ணாமல் இருந்திருந்தா இந்த ஆஃபரை நீங்க வேண்டாம்னு சொல்லி இருக்க மாட்டீங்க,  ஆனால் இவள் குறுக்கே வந்ததால் தான் அது நடக்கவில்லை எனவே இவளை எப்படி சும்மா விடுவது என்று ஷாலினி கேட்க,

செழியனுக்கோ அவளை கொல்லவேண்டும் போல் ஆத்திரமாக இருந்தது,

ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல்  இங்க பாரு ஷாலினி அவந்திகா வந்திருந்தாலும் வரவில்லை என்றாலும் உன்னை நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிருக்க மாட்டேன். உனக்கும் எனக்கும் செட்டே ஆகாது.

 அது எப்படி செட்டாகாது, எனக்கு ஒரு டவுட் ,என்னை விட இவள் உங்களுக்கு எந்த விதத்தில் பெட்டரா தெரியுறா அழகு கூட என் அளவுக்கு இல்லையே இவளை எப்படி அத்தான் லவ் பண்ணுனீங்க என்று கேட்ட ஷாலினியை முடிந்தவரை முறைத்த செழியன்,

ஷாலினி அழகு என்பது மனசு சம்பந்தப்பட்ட விஷயம்,அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது என்றான்.

ஓ ….. எனக்கு புரியாதா என்று அவள் இழுக்க………..

பொருமை இழந்த செழியன், ஷாலினி தேவை இல்லாமல் பேசாத இப்போ எதற்கு அவந்திகாவை இங்க கடத்திட்டு வந்து வச்சிருக்க, என்று கோவத்தோடு கேட்டான்,

கரெக்ட் நான் பாய்ண்ட்டுக்கு வரேன். இங்க பாருங்க அத்தான் எனக்கு தோற்று போக கூடாது அதுவும் இவளிடம் எல்லாம், வாய்ப்பே கிடையாது. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தது உங்க நாலு பேருக்கு மட்டும் தானே தெரியும். அது நடக்கவே இல்லைனு வைத்துக்கொள்வோம். இப்போ நீங்க என்ன பண்றீங்க இவளை எப்படி கோயிலில் வைத்து கல்யாணம் பணிக்கிடீங்களோ அதே மாதிரி என்னை இந்த வீட்டில் வைத்து கல்யாணம் பணிக்கிறீங்க. இவள் கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றிவிட்டு இவளை இவளது அண்ணனுக்கு தங்கையாகவே ஊருக்கு அனுப்பி வைத்துவிடுவோம். இவளை நான் ஒன்று செய்யமாட்டேன், உங்களுக்கு உங்கள் அம்மு சேஃப்பா இருப்பாள், என்று கூற செழியானால் அவள் கூறியதை சகித்துக்கொள்ள முடியவில்லை.

அவள் கையில் இருந்த துப்பாக்கி அவந்திகாவை நோக்கி இருந்ததால் அவளை ஏதும் செய்ய முடியாமல் நின்று கொண்டிருந்தான்.

ஷாலினி உனக்கு கல்யாணம் அவ்வளவு விளையாட்டா போய்டுச்சா, நீ சொல்றது கனவுலயும் நடக்காது  என்றான் செழியன்.

என்ன அத்தான் நீங்க, யு.எஸ்ல படிச்சு வேலை பார்த்த ஆள் மாதிரி  பேசுங்க, வருஷம் ஒரு கல்யாணம் பண்ற கல்ச்சர்ல இருந்துட்டு, கல்யாணம்னா என்னனு தெரியுமானு கிளாஸ் எடுத்துக்கிட்டு என்று சிரித்தாள் ஷாலினி.

நீ பிறந்த நாட்டுல வேணுனா அப்படி இருக்கலாம், நான் பிறந்து வளர்ந்த தமிழ் மண்ணுல கல்யாணம் ரொம்போ பெரிய விஷயம் என்றான் செழியன்.

ஓ…..அப்படி சொல்ரீங்க, ஆனா அதே உங்க தமிழ் கல்ச்சர்ல வைப் இறந்துட்டா, செகண்ட் மேரேஜ் பண்ணிக்குறது சாதாரணம் தானே, அப்ப உங்க பர்ஸ்ட் வெய்ப்பை கொன்னுட்டா, நம்ப மேரேஜ்க்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறி கொண்டே பிஸ்டல் லாக்கை ரிலீஸ் செய்தாள் ஷாலினி.

ஷாலினி முட்டாள்தனம்  செய்யாத அவந்திகா மேல ஒரு கீரல் விழுந்தா கூட உன்னை நான் சும்மா விடமாட்டேன் என்று விரல் நீட்டி எச்சரித்தான் செழியன்,

அவ மேல அவ்வளவு காதல், அவ செத்தாலும் நீங்க என்ன கல்யாணம் செஞ்சுக்க மாட்டீங்க அப்ப நீங்க செத்துடுங்க, அட்லீஸ்ட் நீங்க அவளுக்கும் இல்லாம போய்டுவீங்கல்ல என்று பிஸ்டலை செழியன் பக்கம் நீட்டினாள் ஷாலினி.

அடுத்து நடக்கப்போவதை அறிய தொடர்ந்து வாசியுங்கள்………..

-நறுமுகை  

No Responses

Write a response