காதல் கொண்டேனடி-36

காதல் கொண்டேனடி-36

அவந்திகா செழியன் கூறியதை யோசித்து கொண்டிருந்தாள், தன் எதிரில் இருக்கும் மூவரின் வாழ்க்கையும் தன் முடிவோடு பிணைக்கப்பட்டுள்ளது, என்பதை அவளும் உணர்ந்து தான் இருந்தாள். செழியனே கூறியது போல் அவளால் அவளது வாழ்க்கையில்  செழியன் இடத்தில் வேறு ஒருவரை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. தன்னால் முடியாததை அவனை மட்டும் செய்ய சொல்வதில் நியாயம் இல்லை என்று அவளுக்கு புரிந்தது. அதே சமயம் அத்தை எவ்வளவு எதிர்பார்ப்போடு இருப்பார்கள் இதை எப்படி நான் ஏற்றுக்கொள்வது என்று மிகவும் குழம்பி போனாள்.

இவர்களை முன்னாடி வைத்துக்கொண்டு நாம் எவ்வளவு யோசித்தாலும் அது இவர்களுக்கு சாதகமாக தான் யோசிக்கச்சொல்கிறது என்று உணர்ந்தவள்,

வெற்றியிடம் திரும்பி அண்ணா எனக்கு கொஞ்சம் யோசிக்கணும் தனியா யோசிக்கணும், உன் கார் சாவியை கொடு என்று கேட்க, அவன் முடியாது என்று மறுத்தான்.

அவந்திகாவோ நான் எங்கயும் போய்விடமாட்டேன் கண்டிப்பா சூசைடு பண்ணிக்க மாட்டேன். என் போனை எடுத்துக்கொண்டு தான் போகிறேன் கண்டிப்பாக ஸ்விட்ச் ஆப் பண்ண மாட்டேன். கொஞ்ச நேரம் எனக்கு தனியா இருக்கணும் உங்களை முன்னாடி வச்சிக்கிட்டு என்னால் சரியா யோசிக்க கூட முடியவில்லை. என்று கூற,

செழியனோ வெற்றியிடம் கார் சாவியை கொடுக்க சொல்லி கூறினான்.

வெற்றியிடம் இருந்து கார் சாவியை பெற்றுக்கொண்டவள் அங்கிருந்து கிளம்பும் முன் திரும்பி நான் உங்களை எங்க வந்து பார்ப்பது என்று கேட்டாள்,

செழியனோ நாங்க சூர்யா வீட்டில் இருக்கோம் நீ அங்க வந்துடு நான் உனக்கு அவனது அட்ரஸை வாட்ஸ் ஆப் செய்கிறேன் என்று கூறினான்.

சரி என்று ஒரு தலை அசைப்போடு அவந்திகா அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் கிளம்பியதும் தாமரையோ செழியனிடம் என்ன அண்ணா அவள் தான் கேட்டான்னு நீங்களும் சாவியை கொடுக்க சொல்லீட்டீங்க, அவள் வேற எங்கயாவது கிளம்பி போய்விட்டால் என்ன செய்வது என்று தாமரை பதற,

  செழியனோ இல்லை தாமரை அவள் எங்கையும் போக மாட்டாள் அவள் யோசிக்கட்டும்,  இந்த கொஞ்ச நாட்களில் அவள் நிறைய அதிர்ச்சிகளை பார்த்துவிட்டாள். கொஞ்சம் நேரம் யோசிக்கட்டும் என்று கூறியவன் அவர்களை அழைத்துக்கொண்டு சூர்யா வீட்டிற்கு கிளம்பினான்.

செழியன், தாமரை, வெற்றி மூவரும் சூர்யாவின் வீட்டை அடைந்தனர். வீடு பூட்டியிருப்பதை பார்த்து வெற்றி, உங்க பிரண்ட் வீட்டில் இல்லையா மாப்பிள்ளை என்று கேட்டார்.

இல்லை அவன் ஹாஸ்பிடல் போயிருக்கான், அவனும் என்னுடன் கோயிலுக்கு வருவதாக தான் சொன்னான். அவந்தி எப்படி எடுத்துப்பான்னு தெரியாததுனால நான் அவனை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று கூறிக்கொண்டே தன்னிடம் இருந்த சாவியை வைத்து வீட்டை திறந்தான்.

வீட்டிற்குள் சென்ற மூவரும் ஒருவரிடம் ஒருவர் பேசாமல் அவரவர் யோசனையில் இருந்தனர்.

சிறிது நேரம் கழித்து செழியனை பார்த்த தாமரைக்கு வருத்தமாக இருந்தது. நிச்சயமான நாள் முதல் நால்வரும் அடிக்கடி ஒன்றாக போனில் பேசிக்கொள்வார்கள், அதே போல் அண்ணபூரணியை  பார்க்க செல்லும்போதும் செழியன் தாமரையிடம் கலகலப்பாக தான் பேசுவான் இப்படி எப்போதும் கலகலப்பாக பார்த்த  அவனை இப்படி வேதனையோடு பார்க்க தாமரைக்கு வருத்தமாக இருந்தது.

அவனிடம் பேச தொடங்கினாள், அண்ணா நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க அவந்திகா யோசித்து நல்ல முடிவா எடுப்பாள். அவளுக்கு உங்களை பிடிக்கும், உங்கள் வழக்கை வீணாகி விடக்கூடாது என்றுதான் உளறிட்டு இருக்கா, அவள் சீக்கிரமே புரிந்து கொள்வாள் என்று கூற அவளை பார்த்து, சிறுமுறுவலோடு

நான் இப்போ அதைப்பற்றி கவலை படவில்லை தாமரை. எப்படியும் அவந்திகா என்னை புரிந்துகொள்வாள். என் கவலையே வேற, அவளோட இந்த நிலைக்கு நான் தான் காரணம் என்று தெரிந்தால் அவள் என்ன செய்வாள் அதை எப்படி எடுத்துக்கொள்வாள் என்று எனக்கு தெரியவில்லை என்று கூற,

வெற்றியோ வேகமாக அந்த ஷாலினி செய்ததற்கு நீங்க என்ன பண்ணுவீங்க மாப்பிள்ளை, இதற்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, என்று கூற

செழியனோ எனக்கு ஆச்சர்யமாக இருக்கு வெற்றி இந்த விஷயம் தெரிந்த பிறகு நீங்க தான் என்கிட்டே சண்டை போடுவீங்கன்னு நினைத்தேன். ஆனால் நீங்க எனக்கு சப்போர்ட் பண்றீங்க , அது எப்படி இந்த பிரச்சனைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லாமல் போகும். ஷாலினிக்கு அவந்திகா மேல எந்த ஒரு தனிப்பட்ட விரோதமும் இல்லையே . அவந்திகா வாழ்க்கையில் நான் வந்ததால் தானே ஷாலினியும் வந்தாள்.

அண்ணா இதையே எத்தனை முறை சொல்லுவீங்க அந்த ஷாலினி செய்ததற்கு நீங்க எப்படி பொறுப்பாக முடியும், நீங்க எதும் மனதை போட்டு குழப்பிக்காதீங்க என்று தாமரையும் வெற்றியும், செழியனை சமாதானம் செய்தனர்.

செழியனோ இல்லை வெற்றி இரண்டு வருடங்களுக்கு முன் அவந்தியை பிளைட்ல பார்த்த போது துறுதுறுனு கேட்பதற்கெல்லாம் வெடுக்கென்று பதில் சொல்லிக்கொண்டு ஒரு பட்டாம்பூச்சி மாதிரி இருந்தாள். இப்போ அவள் இருக்கும் நிலைக்கு காரணம் நான் தான். அது எனக்கு ரொம்போ வேதனையா இருக்கு என்று சொன்னவனை ஆறுதலாக அணைத்துக்கொண்டான் வெற்றி.

இவர்கள் இப்படி இங்கு பேசிக்கொண்டிருக்க, அங்கு ஷாலினியோ யோசிக்க வேண்டி தனியாக சென்ற அவந்திகாவை ஆட்கள் வைத்து கடத்தினாள்.

செழியன், வெற்றி, தாமரைக்கு, ஷாலினி பற்றி எப்படி தெரிந்தது, கடத்தி சென்ற அவந்திகாவை செழியனும் வெற்றியும் மீட்பார்களா,அறிய தொடர்ந்து வாசியுங்கள் ………………

                                                                                 -நறுமுகை

No Responses

Write a response