காதல் கொண்டேனடி-35

காதல் கொண்டேனடி-35

அதன் பின் ஒரு வாரம் அமைதியாக சென்றது. அன்று அவந்திகாவின் பிறந்தநாள் காலை எழுந்தவுடன், போன வருடம் இதே நாள் செழியன் தனக்காக பார்த்து பார்த்து ஏற்பாடு செய்து கொண்டாடிய பிறந்தநாள் நினைவுக்கு வந்தது. இன்று அவனுடன் பேச கூடிய நிலையில் கூட தான் இல்லை என்று அறிந்து அவளுக்கு கண்ணீர் வந்தது.சிறிது நேரம் மனம் விட்டு அழுதவள்,பின்னர் குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் நின்று சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தாள்.

வீட்டில் இருந்த அனைவருக்கும் அவளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்றிருந்தாலும் அவள் கல்யாணத்தை நிறுத்திய கோபத்தில்  யாரும் அவளிடம் வந்து பேசவில்லை.

உண்மை வெற்றிக்கு மட்டும் தெரியும் என்பதால் தங்கைக்கு வாழ்த்து சொல்லி ஒரு புடவையை பரிசளித்தான். கூடவே கோயிலுக்கு போயிட்டு வரலாமா அவந்திகா என்று கேட்டான்.

சரி என்று தலை ஆட்டினாள், வீட்டில் சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினார்கள். வழியில் தாமரையையும் அழைத்துக்கொண்டார்கள்.

வீட்டில் மீனாட்சியோ கனகவள்ளியிடம்  அத்தை, நம்மை விட வெற்றி தான் அவந்திகா மீது அதிகம் கோபமா இருந்தான், இப்போ என்னவென்றால் அவனே அவளிடம் சகஜமாக பேசிக்கொண்டு இருக்கிறான். இவங்க மனசுல என்ன தான் இருக்குனு நமக்கு புரிய மாட்டேங்குதே என்று புலம்ப,

கனகவள்ளியோ நீ ஒன்னும் வருத்தப்படாத மீனாட்சி எது நடந்தாலும் அது நல்லதுக்கே நடக்கும் நீ மனசை போட்டு குழப்பிக்காத, நிம்மதியா இரு என்று கூறினார்.  

கோயிலுக்கு போகலாம் என்று கிளம்பியவர்களின் கார் ஊர் எல்லையை தாண்டி போனதும் அவந்திகா வெற்றியிடம், எங்க அண்ணா போகிறோம் என்று கேட்டாள்.

வெற்றியோ இன்று உன்னுடைய பிறந்தநாள் வீட்டில் எப்படியும் யாரும் உன்னுடன் பேசப்போவது இல்லை. வீட்டிலேயே இருந்தால் உனக்கு ஒரு மாதிரி இருக்கும் , மதுரைக்கு போய் சாமி கும்பிட்டுவிட்டு அப்படியே அங்க சுத்திட்டு மாலையில் வீட்டிற்கு போகலாம் என்றான்.

அவந்திகாவிற்குமே தன் வீட்டில் உள்ளவர்கள் தனக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லையே என்பது வருத்தமாக இருந்தது. அண்ணன் சொல்வது போல் சிறிது நேரம் வெளியில் இருந்து விட்டு  வந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று நினைத்து அமைதியாக இருந்தாள்.

கோயிலுக்கு சென்றவர்கள் கோயிலின் உள்ளே நுழையும்போது, அவந்தி நல்லா மனதார வேண்டிக்கொள் உன் பிரச்சனை எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும் என்றாள் தாமரை.

இந்த பிரச்சனையெல்லாம் முடியுனு எனக்கு நம்பிக்கையே இல்லை அண்ணி, என்னைக்கு செழியனை விட்டு பிரியனுனு முடிவு பண்ணனோ அன்னைக்கே இனி என்னோட வாழ்க்கையில் சந்தோசம் இருக்காதுனு எனக்கு நல்லா தெரியும். இப்ப என்னோட ஒரே வேண்டுதல் உங்க கல்யாணம் நல்லபடியா நடக்கனும் என்று மனதோடு நினைத்தவள், வெளியில் எதுவும் கூறாமல் தலையை மட்டும் அசைத்தாள் அவந்திகா.

பிரகாரத்தில் கண்மூடி தன்னை மறந்து கடவுளோடு பேசிக்கொண்டிருந்த அவந்திகா, ஏதோ உறுத்த கண்திறந்தாள்

வெற்றியும் தாமரையும் ஆசீர்வாதம் செய்ய செழியன் அவந்திகாவிற்கு தாலி கட்டிக்கொண்டிருந்தான்.

நடப்பதை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தவள், தாலி கட்டிமுடித்ததும் அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.

அவள் பின்னால் சென்ற தாமரை அவள் கைகளை பிடித்து வலுக்கட்டாயமாக  கோயில் மண்டபத்திற்கு அழைத்து வந்தாள்.

அங்கு வந்ததும் அவந்திகா அனைவரையும் பார்த்து பொரிய தொடங்கினாள். என்ன செய்து வச்சிருக்கீங்க நான் அவ்வளவு சொல்லியும் இப்படி ஒரு காரியம் பண்ணிருக்கீங்க, அண்ணா நீ இவ்வளவு ஒரு சுயநலவாதியா? உன் தங்கச்சி வாழ்க்கைகாக என்ன வேண்டுமானாலும் செய்வியா? என்று அவள் பொரிய,

செழியனோ அனைத்திற்கும்  ஏற்பாடு செய்தது நான் தான். உனக்கு என்ன கேட்கணும்னாலும் என்னை கேளு எதற்கு வெற்றிகிட்ட பாயுற என்று குறுக்கே வந்தான்.

அவனை கோபமாக முறைத்தவள் நான் தான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னேனே அதன் பிறகும் இப்படி செய்தால் என்ன அர்த்தம், என்று கேட்டாள்.

நீ பைத்தியம் மாதிரி எதாவது சொல்லுவ அதையெல்லாம் நான் கேட்கணுமா என்று அவனும் அவளுக்கு குறையாத கோபத்தோடு கேட்டான்.

உங்களுக்கு என்ன பெருசா தியாகம் பண்றதா எண்ணமா என்றவளை, கோவத்தோடு முறைத்தவன் ஒரு நிமிடம் கண்மூடி நிதானித்தான், இப்பொது அவளோடு சேர்ந்து தானும் கோவப்படுவதில் லாபம் இல்லை என்று உணர்ந்தவன் கண்களை திறந்து அவளை தீர்க்கமாக பார்த்தான்.

அவந்தி குழந்தை இல்லைனா, அதுக்கு ஆயிரம் வழி இருக்கு. ஆனா என்னோட வாழ்க்கையில உன்னோட இடத்தை என்னால எந்த வழியிலும் நிரப்ப முடியாது. கல்யாணம் வேண்டானு சொல்லிட்டு நீ மட்டும் என்ன சந்தோசமாவா இருக்க, இதோ என் தங்கச்சி கல்யாணம் நடந்தாதான் என்னோட கல்யாணம்னு வெற்றியும், வெற்றியே சரினு சொன்னாலும் அவந்தி இப்படி இருக்கப்ப எங்களுக்கு எதுக்கு கல்யாணம்னு தாமரையும் அவங்க வாழ்கையை தொலைச்சுகிட்டு இருக்காங்க. இதுக்கெல்லாம் ஒரே வழி நம்ப கல்யாணம்தான்னு தோனுச்சு அதனாலதான் இப்படி இந்த முடிவெடுத்த, எனக்கு நான் செஞ்சதுதான் சரி என்று நிதானமாக ஆனால் அழுத்தமாக சொல்லி முடித்தான் செழியன்.

அவந்திகா அவன் கூறியதை யோசிக்க தொடங்கினாள். அவந்திகா கல்யாணத்தை ஏற்றுக்கொள்வாளா? விஷயம் அறிந்தாள் ஷாலினியின் நிலை என்ன? அறிய தொடந்து வாசியுங்கள்……..

-நறுமுகை

No Responses

Write a response