காதல் கொண்டேனடி-34

காதல் கொண்டேனடி-34

அழுதுகொண்டிருந்த அவந்திகாவை தாமரை தன் தோளோடு அணைத்து சமாதானப்படுத்தினாள். அவந்தி உன்னை கஷ்டப்படுத்தனும்னு நான் அப்படி பேசவில்லை. அப்படி பேசினாலாவது நீ உன் மனதில் என்ன  இருக்குனு சொல்லுவனு தான் நான் அப்படி பேசினேன், என்னை மன்னித்துவிடு என்று தாமரை அவளிடம் கூற,

அண்ணி நீங்க ஏன்  மன்னிப்பு கேட்குறீங்க, நீங்க சொன்னது உண்மை தானே என்னோடு சேர்த்து நான் உங்க எல்லோரையும் கஷ்டப்படுத்துகிறேன் என்று கூறி தாமரையை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள்.

அழும் அவள் குரலை கேட்க செழியனுக்கு வேதனையாக இருந்தது. எந்த விஷயம் அவளுக்கு தெரியவே கூடாது என்று நினைத்தானோ அது அவளுக்கு எப்படி தெரிந்தது என்று அவனுக்கு புரியவேயில்லை.

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை  நீ முதலில் அழாம இரு என்று தாமரை அவளை சமாதானம் படுத்த,

அவளிடம் திரும்பிய வெற்றி இந்த விஷயம் மாப்பிள்ளைக்கு தெரியுமா என்று கேட்டான்.

அவந்திகாவோ அவருக்கு தெரியும் ஆனால் நம்ம யாருக்கும் தெரிய கூடாதுனு அவர் பிரண்ட் கிட்ட சொல்லி புட் பாய்சணு மாத்தி சொல்ல சொல்லிட்டார், என்றாள் அவந்திகா.

அவளை யோசனையோடு பார்த்த வெற்றி அவர் உன்கிட்ட சொல்ல கூடாது என்று மறைத்த விஷயம் உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டான்.

அவந்திகாவோ, யூ எஸ்ஸில் செழியனின் வீட்டில் அவனது பொருட்களை எடுத்து வைக்கும்போது அவனது அறையில் இருந்து தனது மெடிக்கல் ரிப்போர்ட் கிடைத்ததாக கூறினாள்.

அதை கேட்ட உடன் மறுபுறம் செழியன் போனை கட் செய்து விட்டான். அவனுக்கு தெரிந்த வரை அவன் அவந்திகாவின் மெடிக்கல்  ரிப்போர்ட்டை அங்கு எடுத்து செல்லவில்லை, பிறகு எப்படி அது அங்கு சென்றது என்று யோசித்து கொண்டிருந்தான்.

இங்கு வெற்றியும் தாமரையும் இதை பற்றி இப்போது யாரிடமும் கூற வேண்டாம் என்று சொல்லி அவந்திகாவை சமாதானம் படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

அவந்திகாவை வீட்டில் விட்டுவிட்டு வெளியில் வந்த வெற்றி உடனடியாக செழியனுக்கு போன் செய்தான்.

போனை எடுத்த செழியன், உங்க போனுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் என்று கூறினான்.

வெற்றி அவனிடம், நான் உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று கூறினான்.

நான் வரவா என்று கேட்டான் செழியன்.

இல்லை நானே உங்களை பார்க்க நாளை கோயாம்பத்தூர் வருகிறேன் என்று கூறிவிட்டு போனை வைத்தான்.

அடுத்த நாள் இருவரும்  கோயம்பத்தூரில் சந்தித்துக்கொண்டனர்.

செழியனின் அம்மா அவர்களது கோயம்பத்தூர் வீட்டில் இருப்பதால் செழியன் வெற்றியை அவர்களது தோட்டத்து வீட்டிற்கு அழைத்து சென்றான். அங்கு செல்லும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

அங்கு சென்றவுடன் வெற்றி செழியனிடம் எங்ககிட்ட ஏன் இந்த விஷயத்தை மறைத்தீர்கள் என்று கேட்டான்.

செழியனோ நான் அப்போ சொல்லி இருந்தா இப்போ  நிறுத்தின கல்யாணத்தை உங்க தங்கச்சி அப்போதே நிறுத்தியிருப்பாள் என்று கூறினான்.

இருந்தாலும் இந்த விஷயத்தை என்கிட்டே சொல்லியிருக்கனும் இல்லையா என்று வெற்றி கேட்க,

தெரிந்து  நீங்க என்ன பண்ணபோறீங்க வெற்றி,அதை பற்றி தெரிஞ்சிக்க வேண்டியது நான் தான், எனக்கு இதுல எந்த பிரச்சனையும் இல்லை. அதன்பிறகு நான் ஏன் உங்ககிட்ட சொல்லனும் என்று கேட்க,

வெற்றிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் அவந்திகா சொல்றது சரி தானே, தெரிந்தும்  அவள் எப்படி உங்க வாழ்க்கையை கெடுக்க நினைப்பாள் என்று இறங்கிய குரலில் கூற,

அவளை மாதிரியே நீங்களும் பேசாதீங்க வெற்றி இது எப்படி என் வாழ்க்கையை கெடுக்கிற மாதிரி ஆகும், குழந்தை மட்டும் தான் வாழ்க்கையா உங்க தங்கச்சிக்கு தான் இது புரிய மாட்டேங்குது  உங்களுக்குமா புரியவில்லை? என்று கோபத்தோடு கத்தினான்.

வெற்றியோ இருந்தாலும் நீங்க உங்க அம்மாவிற்கு ஒரே மகன் அவர்களுக்கென்று எதிர்பார்ப்புகள் இருக்கும் இல்லையா, என்று கேட்டான்.

வெற்றி நீங்களும் காதலிச்சிக்கிட்டு இருக்கிறவர், இதுவே தாமரைக்கு நடந்திருந்தால், நீங்க உங்கள்  குடும்பத்திற்கென்று சில எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்று தாமரையை கை விட்டிருப்பீர்களா? என்று கேட்க,

வெற்றிக்கு இந்த கேள்வி வரும் என்று முன்னரே தெரியும் எந்த நிலையிலும் செழியன்  தன் தங்கையை கை விட மாட்டான் என்றும் அவனுக்கு தெரியும். இருந்தாலும் தன் தங்கை வாழ்விற்காக சுயநலமாக யோசிக்க வெற்றியால் முடியவில்லை.

செழியனின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் அமைதியாக இருந்த வெற்றி, திடீரென எதோ தோன்றியவனாக அவந்திகாவிற்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்று நீங்கள் நினைத்திருந்தால்   அவளோட மெடிக்கல் ரிப்போர்ட்டை கண்டிப்பாக உங்களோடு எடுத்து சென்றிருக்க மாட்டீர்கள், அது எப்படி அவளது கைகளுக்கு கிடைத்தது என்று கேட்டான் வெற்றி.

இப்போ அது தான் நமது முக்கியமான பிரச்சனை, இப்போ அதை பற்றி தான் நாம பேசனும் என்று கூறியவன், வெகு நேரம் வெற்றியோடு பேசிக்கொண்டிருந்தான்.

அவனிடம் பேசி முடித்த வெற்றியோ மிகுந்த யோசனையில் இருந்தான். சிறிது நேர அமைதிக்கு பிறகு நீங்கள் சொல்வது போலவே செய்துவிடலாம். ஏற்பாடு எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் எதுவும் கவலை படவேண்டாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

செழியன் வெற்றியிடம் கூறியது என்ன , வெற்றி செய்யப்போகும் ஏற்பாடுகள் என்ன அறிய தொடர்ந்து வாசியுங்கள்.

                                                                                                                                                         – நறுமுகை

No Responses

Write a response