காதல் கொண்டேனடி-33

காதல் கொண்டேனடி-33

 என்று அவந்திகா திருமணத்தை நிறுத்தினாளோ அன்றிலிருந்து வெற்றி அவளிடம் பேசுவதை முற்றிலும் நிறுத்தியிருந்தான். அவளிடம் பேசாமலேயே இருந்தவன் அவனாகவே அவந்திகாவின் அறைக்கு சென்று கோயிலுக்கு போகலாமா என்று அவளை அழைத்தான். அதையும் அவளது முகம் பார்க்காமல் சுவற்றை பார்த்து கூறினான்.

தன் முகத்தை கூட பார்க்க பிடிக்காமல் முகம் திருப்பி நிற்பவன் எதற்காக தன்னை கோயிலுக்கு அழைக்கிறான் என்று அவந்திகா யோசித்துக்கொண்டிருக்க,

தாமரை உன்னை பார்க்க வேண்டும் என்று சொன்னாள் என்று கூறினான்  வெற்றி.

அவந்திகாவிற்குமே எங்கேயாவது சென்று வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, தன் அண்ணனுடன் கிளம்பி கோயிலுக்கு சென்றாள்.

வழியில் அவர்கள் தாமரையை அழைத்துக்கொண்டனர். மூவரும் ஒருவருடன் ஒருவர் பேசாமல் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்து அருகில் இருந்த ஆற்றங்கரைக்கு சென்றனர்.

நிச்சயமாக அவர்கள் தன்னிடம் ஏதோ பேசுவதற்காக தான் தன்னை அழைத்து வந்திருக்கிறார்கள் என்று அவந்திகாவிற்கு புரிந்தது. அது என்ன என்று அவளை அதிகம் யோசிக்க விடாமல் தாமரை பேச தொடங்கினாள்.

இங்க பாரு அவந்திகா உன் கல்யாணத்தை நீ நிறுத்தினதற்கு யார்கிட்ட காரணம் சொல்கிறாயோ இல்லையோ நீ என்கிட்டே காரணம் சொல்லி தான் ஆகணும், ஏனெனில் உன் கல்யாணத்தை நிறுத்தினதால் உன் வாழ்க்கை மட்டும் அல்ல என் வாழ்க்கையும் சேர்ந்து பாதிச்சிருக்கு. அதனால் நீ எனக்கு காரணம் சொல்லி தான் ஆகணும் என்று கோபத்தோடு கேட்டாள் தாமரை.

அண்ணி நான் தான் உங்க கல்யாணத்தை நடத்த சொன்னேனே நீங்க ஏன் கல்யாணத்தை நிறுத்துனீங்க என்று அவளிடமே திருப்பி கேட்டாள் அவந்திகா.

ரொம்ப நல்லா இருக்கு நீ கல்யாணத்தை நடத்த சொல்லிட்டா உங்க அண்ணன் கல்யாணத்திற்கு சம்மதிக்கணுமே. எங்க, உன் கல்யாணம் நடக்காமல் உங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்லு பார்ப்போம் என்று கூற,

வெற்றி கண்டிப்பாக அதற்கு ஒற்றுக்கொள்ள மாட்டான் என்று உணர்ந்திருந்த அவந்திகா  இயலாமையோடு தாமரையை பார்த்தாள்.

எனக்கு இப்போ காரணம் தெரிஞ்சே ஆகனும், உன்னோடு சேர்த்து என் வாழ்க்கையோடும் நீ விளையாடுவதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரிஞ்சே ஆகனும் என்று கோபத்தில் கத்தினாள் தாமரை.

அவந்திகாவோ, அண்ணி உங்க கல்யாணத்தை நடத்துறதற்கு எல்லார்கிட்டயும் நான் பேசி சமாதானப்படுத்துகிறேன் ஆனால் காரணம் மட்டும் என்கிட்டே கேட்காதீங்க, என்று கூற,

 அவளை முடிந்த வரை முறைத்தாள் தாமரை. இங்க பாரு அவந்திகா உன் கல்யாணம் நடக்காம உங்க அண்ணன் எங்க கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டார்.வீட்டில் நீ இருக்கும்பொழுது நான் எப்படி அந்த வீட்டுக்கு கல்யாணம் செய்துகொண்டு வந்து சந்தோசமா இருக்கிறது என்று தாமரை கேட்க,

அவளை அதிர்ந்து போய் பார்த்தாள் அவந்திகா.

நீ கல்யாணம் பண்னிக்கொண்டு அந்த வீட்டை விட்டு போனால் மட்டுமே நான் அந்த வீட்டுக்கு வர முடியும் என்று தாமரை அழுத்தமாக கூற,

தான் கரணம் சொல்லாமல் இந்த பிரச்சனை தீராது என்று உணர்ந்தாள் அவந்திகா.

தன்னிடம் சத்தமாக கூட பேசிறாத தன் அண்ணி இன்று தன்னால் அவள் நிம்மதி கெடுகிறது, வாழ்க்கை கெடுகிறது என்று கூறி கேட்க, அவந்திகாவிற்கு மிகவும் வேதனையாக இருந்தது. ஒரு வேளை  தான் கல்யாணத்தை நிறுத்தியதற்கான காரணம் தெரிந்தால் தன் அண்ணன் அவன் கல்யாணத்திற்கு சம்மதிப்பானோ என்னவோ என்று நினைத்த அவந்திகா

தன்  அண்ணனிடம் திரும்பி, நான் காரணத்தை சொன்னால் நீ அண்ணியை கல்யாணம் பண்ணிக்கணும், அதன் பிறகும் நீங்க என் கல்யாண விஷயத்தை  பற்றி என்கிட்டே பேசக்கூடாது என்று கூறினாள் அவந்திகா.

வெற்றி அதற்கு சரி என்றோ, இல்லை என்றோ பதில் கூறாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

தாமரையோ நீ முதலில் காரணத்தை சொல்லு பிறகு நடப்பதை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று கூற,

மிகவும் தயங்கியவள் கல்யாணம் பண்ணிகக்கூடாதுனு இல்லை, என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று கூற அவளை குழப்பமாக பார்த்தாள் தாமரை,

அண்ணி நம்ம நிச்சயத்தின்போது உடம்பு முடியாமல் மயங்கி விழுந்தேனே அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா, என்றாள்

சிறிது யோசித்த தாமரை உனக்கு எதோ புட் பாய்சன்னு அண்ணன் சொன்னாரே என்று கேட்டாள், தாமரை

எனக்கு புட் பாய்சன் எல்லாம் ஒன்றும் இல்லை. எனக்கு யூட்ரஸ்ல ஏதோ பிரச்சனை அதுனாலதான் அன்னைக்கு எனக்கு முடியாமபோச்சு என்று கூறி நிறுத்தினாள்.

அதுக்கும் நீ கல்யாணத்தை நிறுத்துனதுக்கும் என்ன சம்மந்தம் என்றால் தாமரை,

அண்ணி அந்த பிரச்சனைனால என்னால இனி ஒரு குழந்தைக்கு அம்மா ஆக முடியாது, அப்படி இருக்கப்ப என்னால எப்படி செழியன் வாழ்க்கையை கெடுக்க முடியும் என்று கூறி தன் கைகளில் முகம் புதைத்து அழ தொடங்கினாள்.

அவள் கூறியதை கேட்டு மூவரும் அதிர்ந்து போயினர். ஆம் மூவர் தான், தாமரை இப்படி பேசினால்தான் அவந்திகா மனதில் இருப்பதை சொல்லுவாள் என்று கூறி அவளை இப்படி பேசசொல்லியது செழியன் தான், அவந்திகா என்னதான் சொல்கிறாள் என்று கேட்க அவனை போனில் லைனில் வைத்திருந்தான் செழியன்.

அவந்திகா கூறியதை கேட்டு வெற்றியும், தாமரையும் உறைந்துபோய் நிற்க, இவளுக்கு இந்த விஷயம் எப்படி தெரிந்தது என்று குழம்பி போனான் செழியன்.

அழும் தங்கையை பார்க்க முடியமால் வெற்றி வேறுபுறம் திரும்பி நிற்க, தாமரை அவந்திகா அருகில் சென்று அவளை அணைத்து கொண்டாள்.

இனி செழியன் என்ன செய்ய போகிறான், அவர்கள் திருமணம் நடக்குமா? அறிய தொடர்ந்து வாசியுங்கள்…..

-நறுமுகை

No Responses

Write a response