காதல் கொண்டேனடி-31

காதல் கொண்டேனடி-31


திருமணத்திற்கு முன் தன் நண்பர்களை ஒருமுறை சென்று பார்த்து வருவதாக வீட்டில் இருப்பவர்களிடமும், தாமரையிடமும் சொல்லிவிட்டு சென்னைக்கு கிளம்பினான் வெற்றி.


அங்கு அவனுடன் படித்த சுரேஷ் அவனை மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்றான்.
வாடா மச்சான், பார்த்து எத்தனை நாட்கள் ஆச்சு எப்படி இருக்க என்றான் சுரேஷ்.


நல்லா இருக்கேன்டா நீ எப்படி இருக்க , வீட்டில் உன் வைப் இல்லையா என்றான் வெற்றி.


இல்லடா, அவளோட அக்காவிற்கு குழந்தை பிறந்திருக்குனு அவள் சிங்கப்பூர் போயிருக்கிறாள். இன்னும் ஆறு மதத்திற்கு நான் பேச்சுலர் தான் என்று கூறிவிட்டு சிரித்தான் சுரேஷ்.


அதன் பின் தோழர்கள் இருவரும் சிறிது நேரம் கல்லூரி கதைகள் பேசிக்கொண்டிருந்தனர்.
பின் வெற்றி தான் வந்த விஷயத்தை கூறினான்.அந்த ரவடிகள் யார் என்று கண்டுபிடிக்கவேண்டும்,அப்போது தான் அவந்திகாவின் வாழ்க்கையில் நடக்கும் இந்த பிரச்சனைகளுக்கு யார் காரணம் என்று தெரியும் என்று கூறினான்.


மச்சான் சென்னையில, முகம் தெரியாத பெயர் தெரியாத ரௌடிகளை கண்டுபிடிக்கிறது அவ்வளவு சாதாரமனா விஷயம் இல்லை. அப்படியே கண்டுபிடித்தால் கூட அவங்க நம்ம கிட்ட உண்மையை சொல்லுவாங்களாங்கிறது சந்தேகம் தான். இதுக்கு பதிலா என்கிட்டே வேற ஒரு யோசனை இருக்கு, என்று கூறினான் சுரேஷ்.


என்ன யோசனை என்று வெற்றி கேட்க, எனக்கு தெரிஞ்ச பிரண்ட் ஒருத்தர் டிடெக்ட்டிவா இருக்கார் ரொம்போ திறமையான ஆள் அவர்கிட்ட நாம் இந்த பிரச்சனையை சொல்லுவோம், அவர் யார் என்ன என்று விசாரித்து நமக்கு தகவல் சொல்லட்டும் அதன் பிறகு நாம என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம் என்று கூறினான் சுரேஷ்,


வெற்றிக்கும் அவன் சொல்வது சரியாக தோன்ற, சரியென்றான்
சுரேஷ் அவனது நண்பனை போனில் அழைத்தான். ஆனால் வெற்றியின் கெட்ட நேரமோ என்னவோ, அவர் ஊரில் இல்லை என்றும் வேறு கேஸ் விஷயமாக வெளி மாநிலத்திற்கு சென்றிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.


சுரேஷோ நீ ஒன்றும் கவலை படாத மச்சான், நீ நிம்மதியா ஊருக்கு போய் கல்யாண வேலையை பாரு. நான் அவர் வந்ததும் அவருக்கு என்னென்ன தகவல் வேண்டும் என்று கேட்டு அந்த தகவலை எல்லாம் அவருக்கு சொல்லிடறேன். என்று கூறினான் சுரேஷ்.


தற்போது தனக்கும் வேறு வழி இல்லை என்று உணர்ந்த வெற்றி நண்பனின் யோசனைக்கு சரியென்று கூறி, அன்று ஒரு நாள் தன் தோழனோடு இருந்து விட்டு ஊருக்கு கிளம்பினான்.


அதன் பின் நாட்கள் எந்த மாறுதல்களும் இல்லாமல் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. திருமணத்திற்கு ஒரு மாதமே இருந்த நிலையில் அவந்திகா யூ எஸ் இல் இருந்து ஊருக்கு திரும்பும் நாள் நெருங்கிக்கொண்டிருந்தது.


செழியன் இந்தியா வந்ததில் இருந்து, தினமும் அவனோடு போனில் பேசிக்கொண்டிருந்த அவந்திகா கடைசி ஒருவாரமாக அவனுடன் போனில் பேசுவதை தவிர்த்தாள். அவனும் அவள் கிளம்பும் டென்ஷனில் இருப்பதாக நினைத்துக்கொண்டு அவளை பெரிதாக தொந்தரவு செய்யவில்லை.
சென்னை ஏர்போர்ட்டில் வந்து பிக்கப் செய்து கொள்கிறேன் என்று கூறிய செழியனிடம் வேண்டாம் என்று கூறிவிட்டு தான் நேராக மதுரை செல்வதாக கூறினாள். சரி என்று கூறியவன், அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை.


மதுரை ஏர்போர்ட்டிற்கு பிக்கப் செய்ய வருவதாக கூறிய வெற்றியையும் வேண்டாம் என்று கூறியவள் ட்ரைவரை அனுப்ப சொன்னாள். இவளுக்கு என்ன ஆயிற்று என்று வெற்றி யோசித்து கொண்டிருக்க,
அங்கு செழியனோ மூன்று மாதங்களாக, அவளை நேரில் பார்க்காதது எப்படியோ இருக்க, மதுரை சென்று பார்த்து வருவதாக தன் அன்னையிடம் கூறி தன் அன்னையின் துணைக்கு தன் பெரியம்மாவை அழைத்து வந்து விட்டுவிட்டு மதுரை கிளம்பினான்.


வீட்டிற்கு வந்த அவந்திகா யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சியை அனைவருக்கும் கொடுத்தாள்.


வீட்டிற்கு வந்ததும் வராததுமாக அனைவரிடமும் பேச வேண்டும் என்று கூறினாள் அவந்திகா.
இப்பதான அவந்தி வந்த நீ ரெஸ்ட் எடு நாளைக்கு பேசலாம் என்றான் வெற்றி, இல்லை அண்ணா இப்பவே பேசனும் என்று பிடிவாதமாக நின்றவளை அனைவரும் அப்படி என்ன விஷயம் என்பதுபோல பார்த்தனர்.


தாத்தா, அப்பா இப்ப நான் சொல்லபோறது உங்களுக்கு கண்டிப்பா சந்தோசமா இருக்காது, ஆனா எனக்கு வேற வழி தெரியலை என்று கூறி ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள், பின் உறுதியான குரலில் இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க தாத்தா என்றாள்.


அப்போதுதான் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்த செழியன் அதிர்ந்துபோய் நின்றான். வெளியில் இருந்து எந்த பிரச்சனையும் வந்துட கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்த வெற்றியும், கனகவள்ளியும் அவந்திகா இப்படி சொல்லுவாள் என்று எதிர்பார்க்காத அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.


அவந்திகாவை நெருங்கி அவள் கன்னத்தில் ஓங்கி அடித்தார் மீனாட்சி, அப்போதுதான் அனைவரும் தங்கள் நிலைக்கு வந்தனர். அவர் அடித்தததிற்கு கொஞ்சமும் அசையாமல் நின்ற அவந்திகா, இன்னும் எவ்வளவு அடிக்கனுமோ அடிச்சுக்கோங்க, என்ன நீங்க வெறுத்தாலும் பரவாயில்லை ஆனா இந்த கல்யாணம் மட்டும் வேண்டாம் என்ற மகளை மீண்டும் அடிக்க சென்ற மீனாட்சியின் கையை பிடித்து தடுத்தான் செழியன்.


அந்த நேரம் யாரும் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை, தன்னை பார்க்கத்தான் வந்திருக்கிறான் என்று உணர்ந்த அவந்திகாவிற்கு தன் தாய் அடித்தபோது வராத அழுகை செழியனை பார்த்து வந்தது.
ஆனால் அதை பிறருக்கு காட்டாமல் மறைத்தவள், என் அம்மா என்ன அடிக்குறாங்க நீங்க யார் குறுக்க வரதுக்கு என்று ஒட்டாத குரலில் கேட்டாள்.


அவள் கூறிய செய்தி, இப்படி யாரோபோல் பேசுவதெல்லாம் அவனை நோகடித்தது, அவளிடம் எதுவும் பேசாமல், அத்தை பிடிவாதமா இருக்கவங்கள அடிச்ச மட்டும் எல்லாம் சரி ஆகிடுமா எதுனாலும் அடிக்காம கேளுங்க என்று கூறினான் செழியன்.


யாரு உங்களுக்கு அத்தை என்று சண்டைக்கு தயாரானவளை, வீரபாண்டியின் குரல் தடுத்தது,
அவளிடம் வந்தவர் அவந்திகா என்ன நேரா பார்த்து பதில் சொல்லு இப்ப வேண்டானு சொல்லிட்டா இனி எப்பவும் நீ உன் கல்யாணவிஷயத்துல முடிவெடுக்க முடியாது என்று கறாராக கூறினார்.
தாத்தா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் அதுக்காக நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்குறேன் என்று கூறினாள் அவந்திகா.


அவள் கூறியதை கேட்டு வேதனையுடன் கண் மூடிகொண்டான் செழியன், இனியும் தன்னால் இங்கு இருக்க முடியாது என்று உணர்ந்தவன் அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.


அவன் பின்னோடு வந்த வெற்றி, உங்ககிட்ட நான் எதுவும் பேசமாட்ட டிரைவரா கூட வர என்று கூறிய வெற்றி செழியன் அமர கார் கதவை திறந்து விட்டான் . செழியன் எதுவும் சொல்லாமல் காரில் ஏறி அமர வெற்றி அவனுடன் புறப்பட்டான். சீட்டில் தலை சாய்த்து கண்மூடியிருந்த செழியனை பார்க்க வெற்றிக்கு வேதனையாக இருந்தது.


இங்கு அவந்திகாவோ அவனை தன்னைவைத்தே நோகடிக்கச்செய்த கடவுளிடம், இது நியாயமா இப்படி என் வாழ்க்கையோட விளையாடிட்டயே என்று மனதோடு புலம்பி கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள்.


அவந்திகா கல்யாணத்தை நிறுத்த காரணம் என்ன? இனி செழியனின் முடிவு என்ன? அறிய தொடர்ந்து வாசியுங்கள்……

-நறுமுகை

No Responses

Write a response