காதல் கொண்டேனடி-3

காதல் கொண்டேனடி-3

அறிமுகத்திற்கு பின் இருவரும் சகஜமாக பேச தொடங்கினர், அவந்திகா செழியனின் வேலையை பற்றி கேட்க அவன் சியாட்டிலில் உள்ள பிரபல மருத்துவமனையில் டாக்டராக இருப்பதாக கூறினான். நீங்க டாக்டர்? என்று கேள்வியாக இழுத்தவளை பார்த்து புன்னகைத்தவன் இதையும் நம்பமுடியலைய எல்லா என்னோட நேரம் இனி எங்க போனாலும் செர்டிபிகேட் எல்லா கூட கொண்டுபோகணும் போல என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டான். நான் என்ன சார் பண்றது நீங்க சொல்ற எதுவும் நம்புற மாதிரி இல்லையே என்று சொன்னவள், நீங்க இவ்வளவு வருத்தபடுறனால நீங்க டாக்டர்னு ஒதுக்குற என்றவளை சுவாரசியமாக பார்த்தான் செழியன்.

அடுத்து உணவு வர இருவரும் உலக விஷயம் பேசியப்படி சாப்பிட்டனர், பின் சிறிது நேரத்தில் அவந்திகா உறங்க தொடங்கினாள். விமானத்தில் ஏறக்குறைய அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர், அப்பொழுது ஒரு குழந்தை அழத்தொடங்கி கிட்டத்தட்ட அனைவரையும் எழுப்பி விட்டது, அவந்திகாவும் எழுந்து பார்த்தாள், 10 நிமிடத்திற்கு மேல் ஆகியும் அந்த குழந்தை அழுகையை நிறுத்தவில்லை, பயணிகள் தங்கள் தூக்கம் கேட்ட எரிச்சலின் அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அந்த தாயிடம் சென்ற அவந்திகா ( ஆங்கிலத்தில் பேசிய உரையாடல் தமிழில்) கொஞ்சநேரம் நான் குழந்தையை வைத்திருக்கட்டும என்று கேட்டாள், அவளை பார்த்த அந்த பெண்மணி சரி என்று குழந்தையை அவளிடம் கொடுத்தாள், குழந்தையை வாங்கி தோலில் போட்டு தட்டிக்கொண்டே அங்கும் இங்கும் நடக்க தொடங்கினாள் அவந்திகா, முதலில் முரண்டு பிடித்த குழந்தை சிறிதுநேரத்தில் அமைதியாகி அழுகை குறைந்து தூங்க தொடங்கியது.

பின் குழந்தையை தாயிடம் கொடுத்துவிட்டு வந்து அமர்ந்தாள் அவந்திகா, செழியன் அவளிடம் வாவ் எப்படி குழந்தையை தூங்க வெச்சீங்க என்றான், நான் தூங்க வைக்கலை ஒரே இடத்துல, ஒருத்தங்க கிட்டயே ரொம்போ நேரம் இருந்த குழந்தைக்கு வேற கை மாற்றி கொஞ்சம் இங்கயும் அங்கயும் வேடிக்கை காட்டவும் அமைதியாகி தூங்கிடுச்சு என்றாள், உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கும்போல என்று கேட்டவனை பார்த்தவள் ஆமா எனக்கு ஒரு குழந்தை இருக்கு என்றாள்.நீங்க , உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்றவனை பார்த்தவள் கல்யாண ஆகாம எப்படி சார் குழந்தை இருக்கும் என்று கேட்டுவிட்டு விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள்.

ஏனோ அவள் திருமணம் ஆனவள் என்ற விஷயம் செழியனுக்கு வருத்தத்தை கொடுத்தது, இன்னும் ஒருபுறம் இவள் நம்மிடம் விளையாடுகிறாளோ என்று தோன்றியது. தோன்றியதை அவளிடம் கேட்கமுடியாமல் தன் கையில் இருக்கும் புத்தகத்தில் முழ்கினான். தூங்கி எழுந்த அவந்திகா மீண்டும் செழியனிடம் பேச தொடங்கினாள், முன்பு போல உற்சாகமாக பேசாவிட்டாலும் செழியனும் அவளுடன் பேசினான். இருவரும் தங்கள் வேலைகளை பற்றி பேசிக்கொள்ள, செழியன் ஒரு இருதய அறுவைச்சிகிச்சை மருத்துவர் என்ற விஷயம் அவந்திகாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இந்த முறை அவள் அவனை கிண்டல் செய்யவில்லை, கிண்டல் செய்தவரை போதும் என்று நினைத்துவிட்டுவிட்டாள்.

இப்படியாக விமானம் சியாட்டில் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது, செழியனிடன் விடைபெற்று அவந்திகா தனது பெட்டிகளை எடுக்க சென்றாள், அப்பொழுது அவளுக்கு போன் வர எடுத்தவள், டார்லிங் நோ டென்ஷன் இன்னும் கொஞ்சநேரத்துல  உன்கிட்ட வந்துடுவ…………………

நீ என்னக்கேட்டாலும் கிடைக்கும் ஓகேவா, ………………………………..

லவ் யு, சி யு சூன் என்று சொல்லி போனை வைத்தாள், அவள் பின் நின்று கொண்டிருந்த செழியன் காதில் இவள் பேசியது நன்றாக விழுந்தது, அவந்திகா தன் கணவனிடம் தான் பேசியதாக நினைத்துக்கொண்டவன் அதன்பின் அங்கிருந்து வேகமாக வெளியேறிவிட்டான்.

போனில் பேசிய டார்லிங் யாரு, அவந்திகா செழியனின் அடுத்த சந்திப்பு எப்போது அறிய தொடர்ந்து வாசியுங்கள்…….

-நறுமுகை

No Responses

Write a response