காதல் கொண்டேனடி-28

காதல் கொண்டேனடி-28

ஷாலினி ரியாவிடம் கூறியது போல வேலை நேரங்கள் போக பெரும்பாலான நேரங்களில் அவந்திகா, அவளுடன் இருப்பது போலவே பார்த்து கொண்டாள். சில சமயம் மாலினியும் அவர்களோடு இணைந்து கொள்வாள். ஆனால் இதனால் அவந்திகாவும், செழியனும் சந்தித்துக்கொள்ளும் நேரம் முற்றிலுமாக குறைந்து போனது.

செழியன் அவந்திகாவுடன், ஷாலினி இருக்கும்போது அவர்களை பார்க்க செல்வதை தவிர்த்தான்.

என்னதான் அவந்திகா ஷாலினியுடன் நன்றாக பழகினாலும், ஷாலினி இன்றும் செழியனை அத்தான் என்று அழைத்து உரிமையோடு பேசுவது அவளுக்கு பிடிக்காது. இதை நன்றாக அறிந்து வைத்திருந்த செழியன், ஷாலினி இருக்கும்போது அவந்திகாவை சந்திப்பதை  தவிர்த்தான்.

இருவரும் இரவு நேரங்களில் சிறிது நேரம் போனில் பேசுவதே பெரிதாக இருந்தது.

அவர்கள் யூ எஸ் வந்து ஒரு மாதம் இருக்கும். அவந்திகா வீட்டு தோட்டத்தில் நின்று செழியனுடன் போனில் பேசிக்கொண்டிருந்தாள்.

அம்மு நீ ஜாப் விட்டுட்டா கூட உன்னை நல்லா பார்த்துகுற அளவுக்கு நான் சம்பாதிக்கிறேன். பிறகு எதற்கு உனக்கு இந்த ஓவர் டைம் ஜாப், என்று எரிச்சலுடன் கேட்டான் செழியன்.

 அவன் கூறியதை கேட்டு சிரித்த அவந்திகா, என்ன மாமா நீங்க உங்க ரிலேடிவ்னு தான் நான் இதை செய்றேன். நீங்க என்கிட்டே கோபப்படுறீங்க. வெரி பேட் என்றவள் தொடர்ந்து, ஷாலினி அப்படியே என்னோட ஜெராக்ஸ் மாதிரி, எனக்கும் அவளுக்கும் நிறைய விசயத்துல ஒரே மாதிரி  டேஸ்ட் இருக்கு தெரியுமா? என்றாள்,

செழியன் எதோ சொல்ல வருவதற்குள் வீட்டிற்குள் பூஜாவும் மாலினியும் சண்டையிடும் சத்தம் கேட்டு அவந்திகா அவசரமாக அப்புறம் பேசுவதாக கூறி போனை வைத்து விட்டாள்.

இங்கு வீட்டிற்குள் பூஜா அவந்திகாவுடன் தான் தூங்குவேன் என்று அடம்பிடிக்க, இன்று ஒருநாள் எங்களுடன் தூங்கு பூஜா என்று அவளுடன் போராடிக் கொண்டிருந்தாள் மாலினி. பூஜா பிடிவாதமாக இருக்க,

உங்க அத்தை ஊருக்கு போயிருந்த பொழுது எங்களோடு தானே தூங்கின, இப்போ மட்டும் எதற்கு அடம்பிடிக்கிற, என்று மாலினி கேட்க,

 நான் அத்தை கூட தான் தூங்கினால்  தான் எனக்கு சீக்கிரம் குட்டி தம்பி வருவான்னு அத்தை சொன்னாங்க, எனக்கு தம்பி வேணும் நான் அத்தை கூட தான் தூங்குவேன் என்று கூறிவிட்டு அவந்திகா அறைக்கு ஓடிவிட்டாள் பூஜா.

பூஜா சரியாக அதை கூறும்போது தான் அவந்திகா உள்ளே வந்தாள்.

அதே சமயம் சத்தம் கேட்டு அலுவலக அறையில் இருந்து வெளியில் வந்த ராஜை யாரும் கவனிக்கவில்லை.

மாலினி அருகில் வந்த அவந்திகா என் செல்லக்குட்டி கூட என்னடி  சண்டை போட்டுட்டு இருக்குற, என்று கேட்க,

ஏண்டி லூசு அவ கிட்ட என்னடி சொல்லிவச்ச என்று கேட்டாள் மாலினி,

எதை கேட்குற, குட்டி தம்பி விஷயத்தையா என்று கூலாக கேட்டாள் அவந்திகா, அவளுக்கும் பூஜா கூறியது உள்ளே வரும்பொழுது காதில் விழுந்தது.

அவந்திகா தலையில் கொட்டிய மாலினி, அவ கிட்ட பேசுற பேச்சாடி இதெல்லாம், இவ இப்படி இதை யார்கிட்ட எல்லாம் சொல்லி மானத்தை வாங்க போறாளோ, என்று மாலினி புலம்ப,

அவளை பார்த்து சிரித்தாள் அவந்திகா.

 உனக்கு சிரிப்ப்பா இருக்கா  என்று மாலினி அவள் மீது பாய,

சும்மா கத்தாதே பூஜாவுக்கு மட்டுமா உனக்கும் தான் அந்த ஆசை இருக்கு, என்னமோ அவ மட்டும் கேட்குற மாதிரி பேசுற, என்று தோழியை திருப்பி கேட்டாள் அவந்திகா,

ஹ்ம்ம்ம் …… நான் என்ன செய்ய அவந்தி உங்க அண்ணன் 24 மணிநேரமும் உழைக்கிறார். என்ன தான் கல்யாணத்திற்கு எங்க வீட்டில் சம்மதித்தாலும், எங்க அண்ணனும் அப்பாவும், வசதி இல்லாம வாழ்வது கஷ்டம், எப்போ வேண்டுமானாலும் எங்ககிட்ட பணம் கேளுங்க என்று இவரோட ஈகோவை தூண்டி விட்டுட்டாங்க, அவங்க முன்னாடி என்னை ராணி மாதிரி வாழ வைக்கணும்னு இப்படி ஓடுறார். இதில்  இன்னும் ஒரு குழந்தை எல்லாம் கஷ்டம், என்று தன்  மனதில் இருப்பதை தோழியிடம் பகிர்ந்தாள் மாலினி.

அவந்திகாவிற்கு அவர்களது திருமணத்தின்போது நடந்ததெல்லாம் தெரியும். அதற்கு முன் சிறு வியாபாரமாக இருந்தது இப்பொழுது பெரிய தொழிலாக மாறியதற்கு அது தான் முக்கிய காரணம். ராஜ் மாலினியை மிகவும் நேசிக்கிறார் என்று அவந்திகாவிற்கு தெரியும். மாலினியும் அப்படிதான் ஆனால் சிறிது காலமாக இருவரும் முகம் பார்த்து பேசுவது கூட குறைந்து போனது என்பதே அவந்திகாவின் கவலை.

யோசித்து கொண்டிருக்கும் அவந்திகாவை உலுக்கிய மாலினி ரொம்போ யோசிக்காத எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை, என்று புன்னகைத்த தோழியை அணைத்து கொண்டாள் அவந்திகா.

அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை முழுவதும் கேட்ட ராஜ், வந்த தடம் தெரியாமல் அறைக்குள் சென்று மறைந்தான்.

அங்கு அவந்திகா போனை வைத்ததில் இருந்து யோசனையில் இருந்தான் செழியன், அவன் அறிந்தவரை ஷாலினி எந்த விதத்திலும் அவந்திகா மாதிரி கிடையாது. அப்படி இருக்க அவந்திகா இருவரும் ஒன்று போல் என்று சொல்ல காரணம் என்ன என்று யோசித்தவனுக்கு ஷாலினி மீது சந்தேகம் எழுந்தது.

செழியனின் சந்தேகம் அவனது காதலை காப்பாற்றுமா? அறிய தொடர்ந்து வாசியுங்கள்……………..

– நறுமுகை

No Responses

Write a response