காதல் கொண்டேனடி-27

காதல் கொண்டேனடி-27

அவந்திகா இந்தியாவில் இருந்து வேலை செய்து கொண்டிருந்ததால் மீண்டும் வேலையில் சேர்வது சிரமமாக இல்லை. செழியன் சுப்பீரியர் ஜேஸனிடம் அனைத்தும் சொல்லியிருந்ததால் அவனது லீவ் சமாச்சாரங்களை அவர் பார்த்துக்கொண்டார்.

 அந்த வார இறுதி பார்ட்டிக்கு ராஜும் மாலினியும், அவர்களது நண்பர்கள், தொழில் வட்டார நண்பர்கள், அவந்திகாவின் அலுவலக நண்பர்கள், செழியனின் மருத்துவமனை நண்பர்கள், என அனைவரையும் அழைத்திருந்தனர். மாலினி அவந்திகாவுக்கும் செழியனுக்கும் புது லெகங்காவும், கோட் சூட்டும், வாங்கி வைத்திருந்தாள்.

பார்ட்டி அன்று மாலை அடர் சிவப்பு நிறத்தில் தங்க பூக்கள் போட்ட லெகங்காவில் மெர்மைடு ஹேர்ஸ்டைல் போட்டு அதற்கேற்ப பெரிய காதணியும் கழுத்தை ஒட்டிய ஒற்றை நெக்லசும் அணிந்து தேவதை போல் ஒளிர்ந்தாள் அவந்திகா.

அவளுக்கு இணையாக சிவப்பு கருப்பு காமினேஷனில் கோட் சூட்டில் கம்பீரத்தோடு இருந்தான் செழியன்.

வந்திருந்தோர் அனைவரும் அவர்களை பார்த்து மேட் பார் ஈச்அதர் என்று புகழ்ந்தனர்.

அப்போது விவேகானந்தர் குடும்பம் பார்ட்டிக்கு வந்தனர்.  அவர்களுடன் ஷாலினியும் இருந்தாள் என்பதை சொல்லவும் வேண்டுமா?

அவந்திகாவும் செழியனும் விவேகானந்தர் கோகிலா தம்பதியிடம் ஆசீர்வாதம் பெற்றனர். நான் அன்று ஆசீர்வாதம் செய்தது போலவே உன் மனசு போல கல்யாணம் அமைஞ்சிருச்சு பார்த்தியா என்று கோகிலா சிரிக்க, அவந்திகா அவரை பார்த்து புன்னகைத்தாள்.

அத்தான் உங்க டேபிளில் இருந்த போட்டோவில் பார்த்ததை விட நேரில் செம அழகா இருக்காங்க உங்க செலக்ஸன் சூப்பர் என்றாள்.

செழியன் அவளை பார்த்து சிரிக்க ஷாலினி  தன்னை அவந்திகாவிடம் அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

 அன்று தன்னை அலட்சியப்படுத்திய பெண்ணா இது என்று அவந்திகாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்தோடு அவளோடு பேசினாள்.

வந்திருந்தவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் கூறி அவர்களோடு சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

அதன் பின் அனைவரும் குழுக்களாக பிரிந்து சாப்பிட தொடங்கினர்.

மாலினி பூஜாவிற்கு ஊட்டிக்கொண்டிருந்தாள். அவந்திகா அவள் அருகில் அமர்ந்து பூஜாவோடு விளையாடிக்கொண்டிருந்தாள். செழியன் அவன் தோழர்களோடு பேசிக்கொண்டிருந்தான்.

அப்போது மாலினி, அவந்திகாவின் அருகில் வந்து அமர்ந்த ஷாலினி பார்ட்டி டெக்கரேஷன்ஸ் எல்லாம் சூப்பர், அதைவிட உங்க வீட்டு இன்டீரியர் இன்னும் சூப்பரா இருக்கு என்றாள்.

அவளை பார்த்து நட்போடு புன்னகைத்த மாலினி, அந்த கிரெடிட் எல்லாம் அவந்திகாக்கு தான். அவளுக்கு இதுல ரொம்போ இன்ட்ரெஸ்ட். இன்டீரியர் கோர்ஸ் கூட பண்ணியிருக்கா என்று வெகுளியாக தோழியை பாராட்டினாள்.

ஷாலினிக்கு அந்த விஷயம் தெரியும் வேண்டுமென்றே அவள் மாலினியை பேச வைத்தாள்.

அவள் மனதிற்குள் சிரித்த வண்ணம் வாவ் சூப்பர் , அவந்திகா நீங்க தப்ப நினைக்கலைனா, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா தாத்தா,  யூ எஸ் ல இருக்குற பிசினஸ் எல்லாம் என்னை பார்த்துக்க சொல்லியிருக்கார், அதற்காக நான் என்னோட ஆபீஸ் செட் பண்ணிட்டு இருக்கேன், நீங்க கொஞ்சம் இன்டீரியர் பண்ணித்தர முடியுமா என்று கேட்டாள்.

நானா? நீங்க யாராவது ப்ரோபஸ்னல் கிட்ட கேட்கலாமே, என்றாள் அவந்திகா. 

பண்ணலாம்…… எனக்கு உங்க டேஸ்ட் பிடிச்சிருக்கு அதான் கேட்டேன், தட்ஸ் ஓகே நான் வேற அரேஞ்சுமென்ட்ஸ் பண்ணிக்கிறேன் என்றாள் போலி வருத்தத்தோடு.

அவளை ஹர்ட் பண்ணிவிட்டோமோ என்று நினைத்த அவந்திகா, உங்களுக்கு பிடிச்சிருக்குனா நானே பண்ணி தரேன் ஒன்னும் ப்ராப்ளம் இல்லை  என்று கூறி தன்  வாழ்வில் அவளே ப்ராபிளத்தை இழுத்து கொண்டாள் அவந்திகா.

தான் நினைத்து வந்தது நடந்துவிட்ட சந்தோஷத்தில் அவந்திகாவை பார்த்து சிரித்தாள் ஷாலினி.

பின் அனைவரும் கிளம்ப பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தனர், ராஜும் செழியனும்.  அவந்திகா உடை மாற்றி வருவதாக கூறி தன் அறைக்கு சென்றாள் .

அவள் தலை அலங்காரத்தை கலைத்து முடியை கோதிக் கொண்டிருக்கும்போது  அறை  கதவு தட்டப்பட்டது. மாலினியாக இருக்கும் என்று நினைத்து கதவை திறந்தவள் அங்கு செழியனை கண்டதும் மாமா இங்க என்ன பண்றீங்க, என்றாள் .

அவளை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவன் கதவை தாளிட்டான். மாமா என்ன வேலை இது, முதலில் கிளம்புங்க என்ற அவளது பேச்சு காதிலே விழாதது போல் நிதானமாக அவளை ரசித்து கொண்டிருந்தான்.

ஏற்கனவே அந்த உடையில் தேவதை  போல் இருந்தவள் தற்போது கூந்தலை வேறு விரித்து விட்டிருந்தாள். செழியனுக்கு அவள் முடியை விரித்து விட்டிருந்தால் மிகவும் பிடிக்கும், ஆனால் வெகு சில நேரங்களில் மட்டுமே அவள் கூந்தலை விரித்து விடுவாள், எனவே செழியன் அதை ரசித்து கொண்டிருந்தான். அடர்த்தியாக இடுப்பை தாண்டி வளர்ந்திருக்கும் கூந்தல் அவனுக்கு மயிலை நினைவு படுத்தியது.

தான் சொல்வதை கேட்காமல் நிற்கும் அவனை பார்த்தவள் அவன் பார்வையில் கன்னம் சிவந்தாள்.

என்ன பார்வை இது என்று அவள் கேட்க.

அவன் அவளை நோக்கி நடந்துகொண்டே ஏன் பார்க்க கூடாதா? என்றான்.

தன்னிச்சையாக பின்னால் நகர்ந்த அவந்திகா அப்படி சொல்ல்லை…. என்று இழுத்தாள்.

ஓ…. அப்படி கூட சொல்லுவியா நீ என்றான்.

அதிகாரம் தூள் பறக்குது என்றாள் அவந்திகா.

உரிமை இருக்கு அதிகாரம் பண்றேன் என்று கூறி செழியன் சிரிக்க,

எதற்கு சிரிக்கிறான் என்று அவந்திகா நினைக்கும்போதே பின்னால் சுவரில் மோதி நின்றாள்.

அவளது இருபுறமும் கைகளை ஊன்றி அவளை சிறை பிடித்தான் செழியன்.

என்ன மாமா இது வழி விடுங்க மாலினி தேடுவாள் என்று சிணுங்கினாள்.

ரொம்போ மோசம் அம்மு அன்னைக்கு என்கேஜ்மென்ட்லயும் எந்த ஸ்பெஷல்  கிப்ட்டும் குடுக்கலை, இப்போதும் என்னை ஏமாற்றலாம்னு பார்க்குறியா?என்றான் செழியன்.

அவன் பார்வையில் வெட்கம் கொண்டவள்  அவன் மார்பில் முகத்தை புதைத்து, அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் நானே தான் கிப்ட் கொடுக்கணுமா நீங்க கூட தான் கொடுக்கலாம் என்றாள்.

அவள் கூறியதை கேட்டு தாபத்தோடு அவளை அணைத்தவன் இதை சொல்ல உனக்கு இவ்வளவு நேரமா அம்மு என்று அவள் காதில் ரகசியம் பேசினான்.

அவள் அவனை அணைத்துக்கொள்ள, அவள் முகத்தை நிமிர்த்தியவன் மெதுவாக நெற்றி, கண்கள், என்று பரிசுகளை வழங்கியவன் இறுதியாக இதழ்களில் வந்து முடித்தான்.

பல நிமிடங்கள் கழித்து, அவளது இதழ்களை விடுவித்தவன், அவளை தன்னோடு அணைத்துக்கொண்டான்.

இவர்கள் இங்கு கவலை மறந்து இருக்க, அங்கு ஷாலினி  இவர்களது திருமணத்தை நிறுத்த தெளிவான திட்டத்தோடு  வேலை செய்து கொண்டிருந்தாள்.

ஷாலினியின் சூழ்ச்சியை அறிவார்களா இருவரும்?…….. அறிய தொடந்து வாசியுங்கள் ………….

                                                                                          -நறுமுகை

No Responses

Write a response