காதல் கொண்டேனடி-26

காதல் கொண்டேனடி-26

செழியன் அவந்திகாவிற்கு முன் யூஎஸ் சென்றுவிட வேண்டும்  என்று, அன்றே பயண ஏற்பாட்டை தொடங்கினாள் ஷாலினி. அடுத்த நாள் கிளம்பவேண்டும் என்று அவள் ரியாவிடம் சொல்ல, ரியா அவளை பிடித்து நிறுத்தினாள்.

ஷாலினி நீ என்ன தான் நினைச்சிட்டு இதெல்லாம் செய்ற, காதலை பிரிக்குறேன்னு சொல்லி நிச்சயத்தை நின்னு வேடிக்கை பார்க்குற, இப்போ இங்கயே இருந்தாலாவது, குடும்பத்தோடு இருப்பதனால் அவர்கள் இருவராலும் அடிக்கடி பார்த்துக்க முடியாது. ஆனால் நீ ஜோசியர் மூலமா அவந்திகா அவள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கணும்னு சொல்லி அவர்கள் இருவரையும் ஒன்றாக யூஎஸ் அனுப்பி வைக்குற உன்னோட பிளான் தான் என்ன என்று ரியா பொரிந்தாள்.

அவளை பார்த்து புன்னகைத்த ஷாலினி, செம குழப்பமா இருக்குல்ல, எனக்கு ஜாலியா இருக்கு, அவர்களோட லைப் என்னோட இஷ்டப்படி தான் நடக்குது. அது அவங்களுக்கு தெரியாது ஆனால் வேடிக்கை பார்க்குற எனக்கு இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு. நான் அவர்களை யூ எஸ் அனுப்புறது அவர்கள் ஜாலியா இருக்குறதுக்கு இல்லை.

நான் அடிக்கடி அவந்தியை மீட் பண்றேன் அப்போ தான் கல்யாணத்தை நிறுத்துற அவந்திகா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி அத்தான் கிட்ட சொல்லுவாள்.

ஐ  எம் வெயிட்டிங் பார் தட் மூமென்ட் என்றவள் பயணத்துக்கு தயாராகும்படி ரியாவிடம் சொல்லிவிட்டு சென்றாள்.

ரியா அங்கேயே தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள். அவளுக்கு ஷாலினி செய்வதில் உடன்பாடில்லை ஆனாலும் வெளியில் சொல்லிவிட முடியாது. ரியாவின் அம்மா சில வருடங்களுக்கு முன் உடம்பு முடியாமல் ஹாஸ்பிடலில் இருந்தபோது,கணக்கில்லாமல் பண உதவி செய்தது ஷாலினி தான்.  ரியா அப்பா சிறுவயதிலேயே அவர்களை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணோடு சென்று விட்டார். அன்றிலிருந்து ரியாவுக்கு அம்மா தான் எல்லாம், அந்த அம்மா இன்று உயிரோடு இருப்பதற்கு காரணம் ஷாலினி தான். எனவே அவள் செய்யும் எதற்கும் ரியாவால் மறுப்பு சொல்ல முடியாது.

கர்த்தரே இந்த பாவத்திற்கு எனக்கு மன்னிப்பு இருக்கானு தெரியல, என்னை நீங்க மன்னிக்கலைனாலும் பரவாயில்லை ஆனால் அவந்திகா செழியனின் காதல் பிரியாமல் பார்த்துக்கோங்க என்று மனதோடு வேண்டியவள், அடுத்த நாள் பயணத்திற்கு தயாராக சென்றாள்.

ஷாலினி யூ எஸ் சென்று ஒரு வாரம் கழித்து அவந்தியும் செழியனும் யூ எஸ் சென்றனர்.

போர்டிங் முடித்து பிளைட் ஏறி  அவர்கள் இடத்தில் அமர்ந்த உடன் முக்கிய வேலை இருப்பதாக கூறி லேப்டாப்புடன் அமர்ந்துவிட்டான் செழியன். தாங்கள் போர்டிங் முடித்துவிட்ட செய்தியை வெற்றிக்கும் மாலினிக்கு மெஸேஜ் செய்த அவந்திகா ஒரு புக்கை எடுத்து வாசிக்க தொடங்கினாள். பிளைட் கிளம்பி ஒரு மணி நேரம் இருக்கும் அவந்திகா கையில் இருந்த புக்கில் மூழ்கியிருந்தாள். அப்போது அவள் காதருகில் இந்த புக்கோடா அடுத்த பாகம் இருக்க மேடம் என்றான் செழியன்.

அவன் கேட்ட விதத்தில் அவந்திகாவிற்கு அவர்களது முதல் சந்திப்பு ஞாபகம் வர போலியாக அவனை முறைத்தவள் நெக்ஸ்ட் பார்ட் இனி தான் எழுதணும் என்றாள்.

அப்போ நீங்க படிச்சிட்டு இருக்குற புக்கை குடுங்க என்று கேட்டான்  செழியன்.

என்ன சார் கிண்டலா என்றாள் அவந்திகா.

இல்லை இல்லை நக்கல் பண்றேன். பின்ன என்ன உங்களை  சைட் அடிக்க முடியாமல் நீங்க புக்கை வைத்து மறைச்சிகிட்டா நான் என்ன செய்ய, என்றான் செழியன்.

அவன் கூறியதை கேட்டு சிரித்த அவந்திகா, ஐயோ மாமா எப்போதும் என்னையே சைட் அடிக்குறீங்களே உங்களுக்கு போர் அடிக்கலயா என்றாள்.

அவள் கையை பிடித்து விரல்களோடு விளையாடிக் கொண்டே அம்மு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இதே பிளைட்ல ஒரு பெண்ணை பார்த்தேன் அப்போ விழுந்தவன் தான் இப்போ கனவுல நிஜத்துலன்னு எனக்கு ஞாபகம் இருக்குறது எல்லாம் அந்த ஒரு முகம் தான் என்றான் செழியன்.

எப்போதும் போல் அவனது அதீத காதலில் மயங்கியவள் அவன் தோள் சாய்ந்து கொண்டாள். மலரும் நினைவுகள், எதிர்கால கனவுகள் என்று பலதும் பேசியபடி இனிமையாக கழிந்தது அந்த பயணம்.

சியாட்டில் சென்று இறங்கியவர்களை மாலினியின் குடும்பம் மகிழ்வோடு வரவேற்றது. அத்தை என்று ஓடிவந்த பூஜாவை அவளுக்கும் குறையாத ஆனந்தத்தோடு அணைத்துக்கொண்டாள் அவந்திகா. பின் தோழிகள் இருவரும் கட்டித்தழுவி கொண்டனர்.

காதல் வெற்றிபெற்றதற்கு வாழ்த்து சொன்ன ராஜ், செழியனை ஆர தழுவிக்கொண்டான்.

ஒரு வழியாக நலன்  விசாரிப்பெல்லாம் முடிந்து அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

ராஜும் செழியனும் செழியன், வீட்டை விற்பது பற்றி பேசிக்கொண்டிருக்க, தோழிகள் இருவரும் இந்தியாவில் நடந்த நிகழ்வுகளை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். பின் சாப்பிட்டுவிட்டு செழியன் வீட்டிற்கு கிளம்பும் சமயம்,

ராஜ்  செழியனிடம், உங்க என்கேஜ்மென்ட்  பார்ட்டி இந்த வீக் என்ட்ல அரேஞ்சு பண்ணியிருக்கோம் என்றான்.

இப்போ எதுக்குண்ணா என்று தயங்கிய அவந்திகாவிடம் என் தங்கைக்கு நான் செய்கிறேன் என்று கூறி வாயடைத்துவிட்டான். 

முதல் பயணம் அவர்களுக்கு காதலை கொடுத்தது. இந்த பயணம் என்ன விளைவை ஏற்படுத்தப்போகிறது என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள்……..

                                                                                                               -நறுமுகை

No Responses

Write a response