காதல் கொண்டேனடி-25

காதல் கொண்டேனடி-25

தாமரை வேகமாக சென்று வீட்டு பெரியவர்களிடம் சொல்ல, அனைவரும் பதறிப்போய் ஹாஸ்பிடலுக்கு கிளம்பினர். நெருங்கிய உறவினரிடம் வந்திருப்பவர்களை நல்லமுறையில் கவனித்து அனுப்ப சொல்லி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கிளம்பினர்.

அன்னபூரணி தாமரை குடும்பத்தோடு வர, அவந்திகா குடும்பம் ஒரு காரில் சென்றது.

இந்த பொண்ணுக்கு மாற்றி மாற்றி ஏதாவது வந்துகிட்டேயிருக்கு நல்ல நாள் அதுவுமா இப்படி ஆயிடுச்சே என்று மீனாட்சி புலம்ப,

 சும்மா இரு மீனாட்சி அவளுக்கு ஏதும் ஆகாது. ரெண்டு ஜோடியும் கண்ணுக்கு அம்சமா இருக்கறப்போவே நினைத்தேன், முதலில் அவர்களுக்கு சுற்றி போடணும்னு , எல்லாம் கண் திருஷ்டி தான் நீ மனசை போட்டு குழப்பிக்காத  என்று மருமகளுக்கு ஆறுதல் சொன்னாள் கனகவள்ளி.

அவர்கள் மருத்துவமனையை அடைந்த போது அவந்திகா ஐ சி யூ வில் இருந்தாள். வெற்றியும் செழியனும் வெளியில் நின்றிருந்தனர். அவர்களிடம் சென்றவர்கள் என்ன ஆச்சு என்று கேட்க, டாக்டர் இன்னும் ஏதும் சொல்லவில்லை என்று இருவரும் கூறினர்.

முழுதாக ஐந்து மணி நேரம் கழித்து செழியனின் நண்பரன் டாக்டர்  சூர்யா அவனை அழைத்து தனியாக பேசினான். சூர்யாவிடம் பேசிவிட்டு வெளியில் வந்த செழியன் அனைவரையும் பார்த்து புன்னகைத்தான்.

என்ன ஆச்சு மாப்பிள்ளை, அவந்திக்கு  ஒண்ணுமில்லயே என்று அனைவரும் அவனை கேட்க,

அவன் வெற்றியை பார்த்து, வெற்றி உங்க தங்கச்சிக்கு ரோட் சைடு கடைல ஏதாவது வாங்கி கொடுத்தீங்களா என்று கேட்டான்.

ஆமா, ரெண்டு நாட்களுக்கு முன்பு….. என்று இழுத்தான் வெற்றி,

ஹ்ம்ம் அதுதான் புட் பாய்சன் ஆயிடுச்சு வேற ஒண்ணுமில்லை. என்னனு கண்டுபிடிக்க தான் இவ்வளவு நேரம் என்றான் செழியன்.

அவளுக்கு அதெல்லாம் வாங்கி தராதன்னு சொன்னா கேட்க மாட்டியா டா என்று மீனாட்சி பொரிய, ராஜபாண்டி அவரை சமாதானப்படுத்தினார்.  

அடுத்த நாள் வீட்டிற்கு கூட்டி சென்றுவிடலாம் என்று சூர்யா கூறிவிட்டதால், செழியன் அனைவரையும் வீட்டிற்கு போக சொல்லிவிட்டான். காலை வரை ஐ சி யூ விலேயே இருக்கட்டும் என்று சூர்யா சொல்லியிருந்ததால் அங்கு இருந்து ஒன்றும் செய்ய போவதில்லை என்று உணர்ந்து  பெரியவர்கள் கிளம்பினர்.

செழியன், அம்மா நீங்க என்று இழுக்க,

அது என்னப்பா சந்தேகமா இழுக்குற, ஒண்ணுக்கு ரெண்டு வீடு இருக்கு அண்ணியை நாங்க பார்த்துப்போம் என்றார் பார்வதி.

அவர்கள் அனைவரும் கிளம்பிய பிறகு, செழியனும், வெற்றியும் ஐ சி யூ வாசலில் இருந்த சேரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஒரு வாரமாக நிச்சய வேலையாக அலைந்தது இன்று காலை நேரமாகவே எழுந்தது என்று எல்லாம் சேர்ந்து வெற்றி விரைவிலேயே கண் அயர்ந்தான்.

அவன் உறங்கியதும் ஐசியூ நர்ஸிடம் அனுமதி வாங்கி கொண்டு அவந்திகாவை பார்க்க சென்றான் செழியன். செழியன் சூர்யாவின் தோழன், அவரும் ஒரு மருத்துவர் என்று அறிந்திருந்த நர்ஸ் பெரிதாக எதுவும் சொல்லவில்லை.

உள்ளே சென்ற செழியன் வாடிய மலராக இருந்த அவந்திகாவை பார்த்து வருந்தினான். அவள் அருகில் கட்டிலில் அமர்ந்தவன், அவள் முகத்தை வருடி அம்மு உனக்கு ஒண்ணுமில்லை எல்லாம் சரி ஆய்டும் என்று கூறினான்.

பின் மெதுவாக அவள் நெற்றியில் இதழ் பதிக்க அவன் கண்களிலிருந்து கண்ணீர் அவள் முகத்தில் பட்டு தெரித்து.

அந்த ஸ்பரிசத்தில் கண் விழித்தவள், முதலில் பார்த்தது அவனது கலங்கிய கண்களை தான். சிரமப்பட்டு பேசியவள்  என்ன மாமா பெரிய டாக்டர் நீங்க இதுக்கெல்லாம் கண் கலங்கிட்டு என்றாள்.

 பிடிச்சவங்களுக்கு ஏதாவதுனா முதலில் மனசு தான் வேலை செய்யும் அம்மு.நீ தூங்கு உனக்கு தேவை ரெஸ்ட் தான் என்றவன், அவள் முடி கோதினான்.  அந்த இதத்தில் தூங்கி போனாள் அவந்திகா.

அடுத்த நாள் மாலை வரை இருந்துவிட்டு மாலை தான் அவந்திகாவை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

அடுத்த நாளே ஜோசியரை வரவைத்து மீண்டும் அவந்திகா ஜாதகத்தை பார்க்க செய்தனர். அவர் குல தெய்வத்துக்கு பொங்கல் வைக்க சொன்னார். கூடவே சிறிது காலம் அவந்திகா வீட்டில் இருந்து தள்ளி இருப்பது நல்லது என்றார்.

நிச்சயம் ஆன பிள்ளையை எங்க அனுப்புறது என்று கனகவள்ளிஅங்கலாய்க்க,

செழியன் அனைவரையும் பார்த்து பொதுவாக பேசினான், நானும் அவந்தியும், அவசரத்துல வேலையை பாதியில அப்படியே விட்டுட்டு வந்துட்டோம், இப்போ ஜோசியர் இப்படி சொல்றதுனால எனக்கும் ஒரு யோசனை, நாங்க ரெண்டு பேரும் திரும்ப யூ எஸ் போயிட்டு இருக்குற வேலையை முடிச்சிட்டு கல்யாணத்துக்கு முன்னாடி மொத்தமாகவே இங்க மாற்றிட்டு வந்துடறோம், அவந்தியும் இங்க இருக்க தான் ஆசை படுகிறாள் என்று கூறினான். 

அவன் கூறியதுஅனைவருக்கும் சரி என்று தோன்ற அவர்கள் பயணத்திற்கு இரு குடும்பமும் சம்மதம் தெரிவித்தனர். அவர்கள் யூ எஸ் போகும் செய்தி கேட்டு அவர்களை விட அதிக சந்தோசம் ஷாலினிக்கு தான்.

எதற்காக அந்த சந்தோசம்? அறிய தொடர்ந்து வாசியுங்கள்….

                                                                         -நறுமுகை

No Responses

Write a response