காதல் கொண்டேனடி-24

காதல் கொண்டேனடி-24

அங்கு தன் அம்மாவை தேடி மாடிக்கு சென்ற தாமரையை எதிர்பாராத நேரத்தில் தன் அறைக்குள் இழுத்துக்கொண்டான் வெற்றி.

அவனை அங்கு எதிர்பார்க்காத தாமரை மச்சான் நீங்களா என்றாள்.

 வேற யாரு தைரியமா உன் கையை பிடித்து இழுத்திடுவா என்றான் வெற்றி. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க என்று கதவை திறக்க போனவளை தடுத்து தன்னோடு சேர்த்தணைதான் வெற்றி.

தாமரைக்கு உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.

 விவரம் தெரிந்த நாள் முதல் இவன் தான் உனக்கு என்று சொல்லியே வளர்க்கப்பட்டவள். ஆனால் இத்தனை நாளில் வெற்றி அவளிடம் அதிகமாக ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை. தினமும் பேசினாலும் அன்றைக்கு என்ன நடந்தது, அவந்தி எப்படி இருக்கிறாள் என்ற அளவுக்கே அவர்கள் பேச்சு இருக்கும். ஆனால்  அவளை ஒரு வார்த்தை கேட்காமல் வெற்றி எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டான். இப்படி அவர்களுக்கென்று அவர்களே ஒரு எல்லை வகுத்து பழகி  வந்தனர். ஆனால் இன்று அந்த எல்லைகளை தகர்த்தான் வெற்றி.

அவன் அணைத்ததும்  கன்னங்களில் செம்மையுற, அதை அவனுக்கு தெரியாமல் மறைக்க அவன் மார்பிலே முகம் புதைத்தாள் தாமரை.

நான் இங்க இருக்கேன் நீ கீழ போய்  என்ன பண்ண போற மை  டியர் என்று கொஞ்சினான் வெற்றி.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் உங்களுக்கு இதெல்லாம் கூட தெரியுமா, என்றாள்.

தெரியாம என்ன சின்ன பொண்ணு மனசை  கெடுக்கவேண்டாம்னு அமைதியா இருந்தேன், இனி என்னோட பொண்டாட்டிய கொஞ்சலைனா தான் தப்பு என்று கூறி அவளை பார்த்து கண்ணாடிதான் வெற்றி.

 மச்சான் இன்னும் முழுசா பொண்டாட்டி ஆகலை என்றாள் தாமரை.

அவள் கண்ணுக்குள் ஆழமாக பார்த்தவன், நீ என் பொண்டாட்டி இல்லையா என்றான்.

அந்த பார்வை எதோ செய்ய, பார்வையை தழைத்தவள் நான் பிறக்கும்போதே உங்க பொண்டாட்டியா தானே பிறந்தேன் அப்புறம் என்ன கேள்வி என்றாள் தாமரை.

அந்த பதில் அவனுக்கு மயக்கத்தை ஏற்படுத்த அவள் முகத்தை நிமிர்த்தியவன், அவள் இதழோடு இதழ் சேர்த்தான்.

உறைந்து போன தாமரை பின் தானாக அவனை அணைத்துக்கொண்டாள்.

கீழே அவந்திகா அறையில் செழியன் அவள் மடியில் தலை வைத்து படுத்து கதை பேசி கொண்டிருந்தான்.

அம்மு இப்போ நீ எனக்கு பாதி பொண்டாட்டியாம் உன் சொந்தகார பாட்டி சொன்னாங்க, என்றான்.

இப்போ சம்மந்தமே இல்லாம இதை ஏன் சொல்றீங்க, என்றாள் அவந்திகா.

எழுந்து அமர்ந்தவன் இல்லை அம்மு என்காஜ்மெண்ட் நடந்திருக்கு நீ வேற  இப்போ  பாதி பொண்டாட்டி எனக்கு ஸ்பெஷலா எதுவும் இல்லையா, என்று ரகசிய குரலில் அவள் காதருகில் கேட்டான்.

அந்த குரலில் அவள் தன் வசமிழப்பதை உணர்ந்த அவந்திகா வேகமாக அவனை தள்ளிவிட்டு எழுந்து நின்றாள், அவள் உடல் நடுங்கியது.

அவளோடு எழுந்தவன், அவள் நிலை உணர்ந்து அவள் அருகில்  சென்று  ஆதரவாக அணைத்துக்கொண்டு ரிலாக்ஸ் அம்மு என்கிட்டே இந்த பீலிங்ஸ் வரலைனா தான் தப்பு என்று கூறினான்.

 எப்போதும் போல் அவன் அணைப்பின் இதத்தில் அவன் மார்பில் சாய்ந்து கண் மூடி கொண்டாள் அவந்திகா.

அதே நேரம் கனகவள்ளி வந்து கதவை தட்ட இருவரும் வேகமாக பிரிந்து நின்றனர்.

அவந்தி இரண்டு பேரும் சீக்கிரம் சாப்பிட வாங்க நான் போய் வெற்றியையும் பேரனையும் கூட்டிட்டு வரேன் என்று கூறி சென்றார்.  

 ஹப்பா தப்பிச்சோம்………..  வாங்க மாமா பாவம் அப்பத்தா உங்களை தேடிட்டு இருப்பாங்க என்று கூறி அவனோடு வெளியில் வந்தாள் அவந்திகா.

 அதற்குள் வெற்றியும் தாமரையும் கீழே வந்துவிட நால்வரும் சேர்ந்து சாப்பிட போக நகர, அவந்திகாவிற்கு வயிற்றில் சுளீர் என்று மின்னல் வெட்டியது போல் வலித்தது. வலி தாங்க முடியாமல் மாமா என்று அலறியவள் செழியனின் கையை பிடித்தாள்.

என்னவென்று செழியன் திரும்பி பார்க்க வலியில் கசங்கிய முகத்தோடு கண்ணெல்லாம் கலங்கி கைகளால் வயிற்றை பிடித்துக்கொண்டு நின்றாள்  அவந்திகா.

அம்மு என்ன ஆச்சு என்று செழியன் அவளை தாங்கி பிடிக்க, வெற்றியும்  தாமரையும் அவந்தி என்ன ஆச்சு என்று ஆளுக்கொருபுறம் கேட்க தாமரை, தண்ணீர் கொண்டு வருவதற்கு ஓடினாள்.

அதற்குள் அவந்திகா மயங்கி சரிய, செழியன் வேகமாக அவள் பல்ஸ் செக் செய்தான், உடனே வெற்றியிடம் வெற்றி கார் எடுங்க பல்ஸ் லோவா இருக்கு என்றான்.

என்னவென்று மற்றவர்களுக்கு தெரிவதற்கு முன்னர் வெற்றியும் செழியனும் அவந்தியோடு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அவந்திகாவிற்கு என்ன நேர்ந்தது அறிய வாசியுங்கள் ………..

                                                                                                                -நறுமுகை

No Responses

Write a response