காதல் கொண்டேனடி-23

காதல் கொண்டேனடி-23

 நிச்சய நாள் வெகு அழகாக விடிந்தது,அவந்திகாவின் வீடே களை கட்டியிருந்தது. உறவினர்கள் ஊரார்கள் என ஜே ஜே என்று இருந்தது. செழியன் குடும்பமும் தாமரை குடும்பமும் வந்தவுடன் குடும்ப சபை கூடியது.

தாமரையும் அவந்திகாவும் உள்  அறையில் தயாராகி கொண்டிருந்தனர். பூஜாவுக்கு பிளைட் ட்ராவல்  கூடாது என்று செழியன் கூறியதால் மாலினியால் நிச்சயத்திற்கு வர முடியவில்லை, எனவே மாலினி போன் செய்து பேசிக்கொண்டிருந்தாள்.

 ரொம்போ மிஸ் பண்றேன் அவந்தி, உன்னோட என்கேஜ்மென்ட்ல எவ்வளவு கலாட்டா பண்ணனும்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா? என்று புலம்பி கொண்டிருந்தாள் மாலினி.

 அதுக்கென்ன மாலு மேரேஜ் டைம்ல கலக்கிடலாம் என்றாள்  தாமரை.

 சரி தான் அண்ணி நல்லவேளை மேரேஜ் இப்போ இல்லை இல்லைனா அதையும் நான் மிஸ் பண்ணியிருப்பேன் என்றாள் மாலினி.

அதற்குள் அவந்திகா தாமரை, இருவரையும் அழைக்க, உறவுக்கார பெண்கள் புடைசூழ முன் அறைக்கு வந்தனர். இருவரும் ஒன்றுபோல் பேபி பிங்க் கலர் புடவையில் அளவான அலங்காரத்தோடு இருந்தனர்.

அவர்களை பார்த்த வெற்றிக்கும் செழியனுக்கும், அவர் அவர் வருங்கால மனைவியை விட்டு கண்ணை அகற்ற முடியவில்லை. இருவருக்கும் நலங்கு வைத்து நிச்சய புடவை கொடுத்து மாற்றி வர சொன்னனர்.

அவந்திக்காவிற்கு செழியனும், தாமரைக்கு வெற்றியும் நிச்சய புடவையை தேர்வு செய்திருந்தனர். தாங்கள் தேர்வு செய்த புடவையில் கோயில் சிலையென ஜோலிக்கும் தங்கள் ஜோடியை தங்கு தடையின்றி இருவரும் சைட் அடித்து கொண்டிருந்தனர்.

 அட பேராண்டிங்களா……….. இப்படியே பார்த்துட்டு இருந்தா எப்படி வந்து சட்டுபுட்டுனு மோதிரத்தை மாற்றி பரிசத்தை போடுங்க, என்று அங்கிருந்த உறவுக்கார பாட்டி அழைக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்த வண்ணம் வந்து தங்கள் இணையுடன் மோதிரம் மாற்றி பெரியவரிடம் ஆசீர்வாதம் வாங்கினர்.

 நிச்சயம் முடிந்து உறவினர்களுக்கு விருந்து தொடங்கியது. நிச்சய புடவையை மாற்ற வேண்டாம் என்று கனகவள்ளி கூற, அவந்திகாவும், தாமரையும் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

ரொம்போ மோசம் அவந்தி இப்படி வச்ச கண்ண எடுக்காம பார்த்தா நாம  எப்படி நிமிர்ந்து பார்க்குறது, என்னமோ உங்க அண்ணன் இப்ப தான் என்னை முதல் முறை  பார்க்குற மாதிரி, என்று தாமரை பொரிய,

 அச்சோ  என் ஸ்வீட் அண்ணி நீங்க இப்படி சாரீல ஏஞ்சல் மாதிரி இருந்தா என் அண்ணன் என்ன செய்வான் பாவம், என்றாள் அவந்திகா.

போடி சும்மா கிண்டல் பண்ணிக்கிட்டு என்று கூறும்போதே தாமரைக்கு கன்னத்தில் செம்மை கூடியது,

அதை கண்டு சிரித்த அவந்திகா, அண்ணி 15 வருசமா சாதாரணமா பார்த்து  பேசி பழகிட்டதால் உங்களுக்கு ரொமேன்ஸ் ஹார்மோன் ரொம்போ வீக்காயிடுச்சி எங்க அண்ணன்  பாவம் என்ன செய்ய போறான்னோ, என்று கிண்டல் செய்தாள்.

 இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்க, வெளியில் வெற்றியும், செழியனும் இவர்களோடு தனியாக பேச சந்தர்ப்பம் கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர், ஆனால் அதற்கு வாய்ப்பு மிக குறைவு என்று உணர்ந்து,

செழியன் வெற்றியிடம் மச்சான் நீங்க தப்பா நினைக்கலைனா உங்க தங்கச்சிக்கிட்ட தனியா பேச ஏதாவது வழி  இருந்தா சொல்லுங்களேன் என்றான்.

அதற்கு உங்க தங்கச்சியை வெளியே அனுப்புறது தான் ஒரே வழி என்றான் வெற்றி. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தத்தோடு புன்னகைத்தனர்.

 அவந்திகா அறைக்கு சென்று கதவை தட்டினான் செழியன், அவந்திகா கதவை திறக்க அவளிடம் பேசாமல், உள்ளே தாமரையை பார்த்து  அம்மா உன்னை ரொம்போ நேரமா தேடிட்டு இருகாங்க, எதோ நகையை எந்த பெட்டியில் வச்சன்னு தெரியாம தேடிட்டு இருக்காங்க உன்னை மேல வர சொன்னாங்க என்றான்.

எந்த நகை என்று புரியாமல் சரி அண்ணா நான் போய் பார்க்குறேன் என்றாள். சரி என்று செழியன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

எதோ சரி இல்லையே டாக்டர் சார் என் முகத்தை கூட பார்க்காமல் ஓடுறார், என்று அவந்திகா நினைத்துக்கொண்டிருக்க,

தாமரை அவள் அம்மாவை தேடி மேலே சென்றாள். அவள் சென்ற மறு  நிமிடம் செழியன் அவந்திகாவின் அறைக்கு வந்து கதவை தாழிட்டான்.

அதுக்குள்ள வந்துட்டீங்களா அண்ணி என்று கேட்டுக்கொண்டே நிமிர்ந்த அவந்திகா, செழியனை பார்த்ததும் பிராடு அப்பவே எனக்கு தெரியும் இப்படி ஏதாவது செய்வீங்கன்னு, என்று கூற

சிரித்துக்கொண்டே அவளை தன்னருகில் இழுத்துக்கொண்டவன், நாட் பேட் அம்மு உன் மாமாவை நல்லாவே புரிஞ்சு வச்சிருக்க என்றான்.

 அவன் தோளில்  வாகாக சாய்ந்தவள், மேல போன அண்ணி அவங்கள யாரும் கூப்பிடலைனு இப்போ கீழ வரப்போறாங்க அப்போ டாக்டர் சார் என்ன பண்ணுவீங்க என்றாள் அவந்திகா,

உங்க அண்ணி கீழே வராத மாதிரி என் மச்சான் பார்த்துக்குவார் அதை பத்தி நீ கவலை பட வேண்டாம், என்றான்.

 அட பாவிகளா, ரெண்டு பேரும் கூட்டு களவாணிகளா? உங்களை என்ன தான் செய்யுறது, என்று தலையில் அடித்து கொண்டாள்  அவந்திகா.

வாய் விட்டு சிரித்தவன், அவள் முகத்தை கைகளில் ஏந்தி இன்னைக்கு செம அழகாயிருக்க, தேவையில்லாம கல்யாணத்தை தள்ளி போட்டுட்டேன்னு பீல் பண்றேன், அட்லீஸ்ட் கொஞ்சம் நேரம் பேசலாம்னு வந்தா ரொம்போ பண்ற, போ நான் கிளம்புறேன் என்று கூறி அவன் கதவை நோக்கி நடக்க அவனை பின்னால் இருந்து அணைத்து கொண்டாள், அவந்திகா.

சுவாரசியமான திருப்பங்களோடு அடுத்த பகுதியில் சந்திபோம். தொடர்ந்து வாசியுங்கள் ………..

நறுமுகை 

                                                                                                                       

No Responses

Write a response