காதல் கொண்டேனடி-22

காதல் கொண்டேனடி-22

மூவரும் சாமி கும்பிட்டுவிட்டு அருகிலிருந்த ஆற்றங்கரை படித்துறையில் வந்து அமர்ந்தனர். சரியாக அதே சமயம் செழியன் வெற்றிக்கு கால் செய்தான். செழியனின் எண்ணை பார்த்ததும் மாப்பிள்ளை தான் கூப்பிடுகிறார் என்று கூறிக்கொண்டே அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டான்.

ஹாய் வெற்றி நாங்க வீட்டுக்கு வந்துட்டோம், அவந்திக்கு கால் பண்ணினேன் மேடம் போன் எடுக்கலை என்றான்.

டாக்டர் சார் நானும் இங்க தான் இருக்கேன், கோவிலுக்கு வந்தோம் அதுதான் போன் எடுத்துட்டு வரலை என்றாள் அவந்திகா,

ஓ, அப்படியா சரி சரி,  அப்போ, நீ வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணு, என்றான் செழியன்.

சரி, என்றவள் மாமா அண்ணியும் எங்க கூட தான் இருக்காங்க அதாவது உங்க தங்கச்சி என்று அவந்திகா சொல்ல,

பேசாம நான் அங்கேயே இருந்திருக்கலாம் போலயே, மூணு பேரும் ஒண்ணா என்ஜாய் பண்றீங்க என்றான் செழியன்.  

அதுக்கு என்ன அண்ணா நாளைக்கே வந்துடுங்க நம்ம வீட்டுலயே தங்கிக்கலாம் என்றாள் தாமரை.

அதுக்கென்னம்மா நிச்சயத்துக்கு இரண்டு நாளைக்கு முன்னாடியே வந்துடறேன் என்றான் செழியன்.

அண்ணா உங்கள பத்தி மச்சான் என்கிட்டே சொன்னதுலருந்து,  உங்ககிட்ட பேசினா கண்டிப்பா கேட்கணும்னு நினச்சேன், எங்க ஊர் சண்டிராணியை எப்படிண்ணா கரெக்ட் பண்ணீங்க? என்றாள் தாமரை.

அதைக்கேட்டு செழியன் சிரிக்க,

என்ன மாமா, என்னை சண்டிராணின்னு சொல்றாங்க நீங்க சிரிக்குறீங்க என்றாள் அவந்திகா.

அது இல்ல அம்மு நீ எவ்வளவு அமைதி உன்னை போய் இப்படி சொல்றாங்களேனு அவங்க அறியாமையை நினைத்து சிரித்தேன் என்றான், அதை கேட்டு மூவரும் சிரிக்க,

வெற்றியோ என்ன மாப்பிள்ளை அன்னைக்கு நீங்க அடிச்ச அடியை பார்த்து நீங்க ரொம்போ தைரியசாலின்னு நினச்சேன் நீங்க என்னானா  இப்படி காலில் விழுந்துட்டீங்க, என்றான்.

நீங்க வேற வெற்றி அன்னைக்கு எதோ ஒரு வேகத்துல அடிச்சிட்டேன், அதுக்கே உங்க தங்கச்சி என்னை திரும்ப அடிக்காம விட்டது பெரிய விஷயம், என்று செழியன் கூற, வெற்றியும் தாமரையும் சிரிக்க தொடங்கினர்.

கிண்டலா பண்றீங்க உங்களை அப்புறம் கவனிச்சுக்கிறேன் என்றாள் அவந்திகா. நீங்க எப்படி வெற்றி ரொம்போ தைரியமா என்று செழியன் கேட்க,

அதை ஏன்  அண்ணா கேட்குறீங்க எப்போ பார்த்தாலும் ஜல்லிக்கட்டு காளை மாதிரி சிலிர்த்துக்கிட்டு நிற்பார் என்றாள் தாமரை.

அதெல்லாம் சும்மா அண்ணி, மச்சானு…….. ஒரு குரல் கொடுத்தாங்கனா சார் அப்படியே ஆப் ஆகிடுவார்,இந்த விரைப்பெல்லாம் வெளியில தான் என்றாள் அவந்திகா.

பின்ன இவங்க கிட்ட முறைச்சிகிட்டு நாம எங்க போறது மாப்பிள்ளை என்று வெற்றி கேட்க, அவன் கூறியதை ஆமோதித்தான் செழியன்.

பின் செழியன், அம்மு காலையிலேயே கேட்கணும்னு நினச்சேன் நீ மாலினி அனுப்பின ஆயின்மென்டை ஒழுங்கா கைக்கு போடுறியா இல்லையா என்றான்,

போடுறனே என்று வேகமாக பதில் அளித்தாள் அவந்திகா,

உண்மையை சொல்லு ஒழுங்கா போடுறியா என்றான் செழியன்,

போடறேன்…… என்று இழுத்தாள் அவந்திகா.                          

அம்மு என்று செழியன் அழுத்தமாக அழைக்க, சாரி, டெய்லி போடுறது இல்லை, என்றாள் அவந்திகா.

 பாருங்க வெற்றி இப்படி பண்ணினா என்ன அர்த்தம் என்று செழியன் ஆதங்கத்தோடு கேட்க,

சாரி மாமா இனி டெய்லி போடுறேன் என்றாள் அவந்திகா. பார்க்கலாம் என்று செழியன் சொல்லி கொண்டிருக்க அந்தப்புரம் அன்னபூரணி அவனை அழைக்கும் குரல் கேட்டது.

பிறகு பேசுவதாக கூறி போனை வைத்தான் செழியன்.

போனை வைத்தவுடன் பாருங்க மச்சான், இதே நாம கேட்டிருந்தா என்ன கோபம் வந்திருக்கும், அண்ணண் கேட்கவும் மேடம் சத்தமே இல்லை என்று கேலி செய்தாள் தாமரை.

வெற்றியோ நான் தான் சொன்னேனே சத்தமெல்லாம் நம்மகிட்ட தான், மாப்பிள்ளைக்கு இவ கோவப்படுவானே தெரியாது என்று மேலும் தங்கையை கிண்டல் செய்தான்,

போதும் போதும் ரெண்டு பெரும் என்னை வம்பிழுத்தது  என்றாள் அவந்திகா. அதன் பின் கிளம்பி தாமரையை வீட்டில் விட்டுவிட்டு அவந்திகாவும் வெற்றியும் வீடு வந்து சேர்ந்தனர். 

சிவகுமாரும் பார்வதியும் கோயம்பத்தூர் சென்று நிச்சயத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே வந்து தங்கள் வீட்டில் தங்கி கொள்ளுமாறு அன்னபூரணியையும், செழியனையும், முறைப்படி அழைத்தனர். அன்னபூரணி உறவினர்களுடன் வருவதாகவும், செழியனை அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.

 இரு தினம் முன் வந்த செழியன் மாப்பிள்ளை என்ற பந்தா இல்லாமல் சிவகுமாரோடு இணைந்து எல்லா வேலைகளையும் செய்தான்.

அவந்திகாவிற்கு போன் செய்து தாமரை அதை சொல்லிக்கொண்டிருந்தாள். அண்ணன்  எப்படி எல்லாம் வேலையை இழுத்து போட்டுக்கிட்டு செய்றார் தெரியுமா? அப்பாக்கு பயங்கர சந்தோசம் என்று சொல்லியவள், அப்படியே உங்க அண்ணன் மாதிரி தான் என்றாள் தாமரை.

அண்ணி எனக்கு செழியனை பிடிச்சதுக்கு முதல் காரணமே அவர் நிறைய விசயத்துல அண்ணன் மாதிரி இருப்பார். அதுதான் என்னை அட்ராக்ட் பண்ணினது என்றாள் அவந்திகா.

அந்த பக்கம் எதோ வேலையாக வந்த வெற்றியின் காதுகளில் அது விழுந்தது, அவ இப்போதும் உங்க தங்கச்சி தான் என்று செழியன் கூறியது அவனுக்கு நினைவுக்கு வந்தது மகிழ்ச்சியோடு வேலைகளை கவனிக்க சென்றான்.

அங்கு சென்னையில் ஹோட்டல் அறையில் அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்  ஷாலினி,

அவள் முன் வந்து நின்றாள் ரியா, நீ என்ன நினைச்சிட்டு இருக்க, அங்க நிச்சயம் நடக்க போகுது நீ ஹாயா உட்கார்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு இருக்க, என்று பொரிந்தாள்.

அவளை பார்த்து புன்னகைத்த ஷாலினி, நிச்சயம் நடக்கும் ஆனால் கல்யாணம் நடக்காது, அவந்திகாவே கல்யாணத்தை நிறுத்துவாள் என்று கூறினாள்.

அதுதான் எப்படினு கேட்கிறேன், ஜோசியர் தான் அவந்திகா ஜாதகத்துல பிரச்சனைன்னு சொல்லாம தாமரை ஜாதகத்துல பிரச்சனைன்னு சொல்லிட்டாரே, என்று கேட்டாள் ரியா.

 ரியா எனக்கு ஆறு மாதம் கல்யாணம் தள்ளி போகணும் அவ்ளோ தான் அது நடந்துடுச்சி, இப்போ தள்ளி போன கல்யாணம் எப்போதும் நடக்காது. நீ கவலை படாதே என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள் ஷாலினி. இவ என்ன தான் செஞ்சு வச்சிருக்கானு தெரியலையே என்று  குழம்பிப்போயி நின்றாள் ரியா.

ஷாலினியின் சதித்திட்டம் என்ன? அறிய தொடர்ந்து வாசியுங்கள்……                                                                             

                                                                                              -நறுமுகை

No Responses

Write a response