காதல் கொண்டேனடி-20

காதல் கொண்டேனடி-20

வெற்றி தாமரையிடம் போனில் செழியன் பற்றி சொல்லி கொண்டிருந்தான். கூடவே செழியன் தன்னிடம் கோபத்தை மறைத்து பேசியதும் சொன்னான்.

அதை கேட்ட தாமரை இதுக்கு தான் மச்சான் எப்பவும் நிதானமா இருக்கனும்னு சொல்றது. இப்போ பாருங்க அவந்திக்கு கல்யாணம், நீங்க இப்படி அவ கூட பேச முடியாம இருக்கீங்க, என்று கூறியவள் நான் வேணும்னா அவகிட்ட பேசட்டுமா என்றாள்.
இல்லை தாமரை நானே தான் இதை சரி செய்யணும், என்றவன், மாப்பிள்ளை  வெள்ளிக்கிழமை வரது அவந்திக்கு தெரியாது. நீ சொல்லிடாத என்றான் பின், சிறிது நேரம் அவளிடம்  பேசிவிட்டு  போனை வைத்தான்.

அடுத்த நாள் அவந்திகா அவள் ரூமிலிருந்து வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு சென்ற வெற்றி அறையை மூடி தாழிட்டான். யாரென்று நிமிர்ந்து பார்த்தவள் வெற்றியை பார்த்ததும், அங்கு அவன் இல்லாததுபோல் அவள் வேலையை தொடர்ந்தாள்.

வேகமாக அவள் லாப்டப்பை மூடியவன், அவந்தி நான் செய்தது தப்பு தான் யாரோ முகம் தெரியாதவங்க என்னோட தங்கச்சி பற்றி என்கிட்டயே சொல்றப்போ எனக்கு எப்படி இருக்கும்னு நீயே யோசித்து பார் ?

 என் தங்கச்சி எனக்கு தெரியாம எதுவும் செய்ய மாட்டான்னு நான் நினைச்சிட்டு இருக்குறப்போ அந்த விஷயம் எனக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சி தெரியுமா? அந்த கோபத்துல தெரியாம ஒரு வார்த்தை சொல்லிட்டேன் அதுக்காக நான் உன் அண்ணன் இல்லைனு ஆகிடுமா, இன்னும் எவ்வளவு நாள் என்கிட்டே இப்படி பேசாமலே இருக்க போற என்று ஆதங்கத்தோடு கேட்டான்.

அவன் பேச தொடங்கியதும் அவந்திகாவுக்கு அழுகை வந்து விட்டது. அன்று மாலினி சொன்ன அதே காரணம், வேற ஒருத்தர் சொல்லி எனக்கு தெரியனுமா,? அவந்திகாவிற்கு வெற்றியின் கோபத்திற்கான காரணம் புரிந்தது. அதோடு இந்த இரண்டு மாதமாய் பெரிதாக யாரோடும் பேசாமல் அவள் அறையிலேயே அடைந்து கிடந்தாள். கனகவல்லி மட்டும் அவள் அறைக்கு சென்று வருவார். அவந்திகாவிற்கும் தன், அண்ணனிடம் அமர்ந்து பழைய மாதிரி கதை பேச வேண்டும் என்று இருந்தது. ஆனாலும் கோபத்தை இழுத்து பிடித்துக்கொண்டிருந்தாள்.

ஆனால் இன்று வெற்றியின் விளக்கம் அவளது கோபத்தை முழுவதும் விரட்டிவிட, சாரி அண்ணா உன் கிட்ட மறைக்கணும்னு நினைக்கலை, உன்கிட்ட நேர்ல சொல்லணும்னு நினச்சேன், ஆனால் அதற்குள் இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைக்கலை அண்ணா, என்று தன் அண்ணனை கட்டிக்கொண்டு அழுதாள்.

தங்கை தன்னிடம் பேசியதில் மகிழ்ந்துபோனான் வெற்றி. அழும் அவளை சமாதானம் செய்தான். இருவரும் சமாதானமாகி சாதாரணமாக பேச தொடங்கினர். வெற்றி பழைய கதைகளை சொல்லி அவந்திகாவை சிரிக்க வைத்தான். அவள் அறையில் இருந்து சிரிப்பு சத்தம் வரவும் கனகவள்ளியும், மீனாட்சியும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

மீனாட்சி, அதுதானே இதுங்க ரெண்டுமாவது பேசாமலிருப்பதாவது, என்று கூறிக்கொண்டே, தன் வேலையை பார்க்க சென்றார். செழியன் வரப்போவதை யாரும் அவந்திகாவிடம் சொல்லவில்லை.

மீனாட்சியும் கனகவள்ளியும் சமையலில் பிசியாக இருக்க, தன் அண்ணனிடம் என்ன அண்ணா வீட்டுக்கு யாரும் வராங்களா, சமயல் தூள் பறக்குது என்று கேட்டாள் அவந்திகா. அப்படியும்  இருக்கலாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து நழுவினான்  வெற்றி.

என்ன ஆச்சு இவனுக்கு, இப்படி சொல்லிட்டு போறான். என்று நினைத்து கொண்டே தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.

தன் அறையில் வேலை விஷயமாக யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள், அங்கு செழியன் நின்று கொண்டிருந்தான். ஒரு நிமிடம் கனவோ என்று நினைத்தவள், அம்மு என்ற அழைப்பை கேட்டதும் ஓடிச்சென்று அவனை கட்டிக்கொண்டாள். செழியனும் அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொள்ள இருவரும் சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

அவந்திகாவின் கண்ணீரை தன் சட்டையில் உணர்ந்தவன், அம்மு இங்க என்னை பாரு, இப்போ எதுக்கு அழற என்று அவள் முகத்தை நிமிர்த்தியவன். அவள் கண்ணீரை துடைத்துவிட்டான்.

அம்மு இனி நீ அழறதுக்கு எந்த அவசியமும் இல்லை. ஏன்னா நான் பொண்ணு பார்க்க வந்திருக்கிறேன்……என்றான் செழியன்.

பொண்ணா யாரை என்று அவந்திகா புரியாமல் கேட்க,

ம்ம்ம்ம்…….. அப்பத்தாவை, இந்த வீட்டிலேயே அவங்க தான் பியூட்டி என்று செழியன் கூற, அவனை பொய்யாக முறைத்த அவந்திகா, சொல்லுங்க மாமா என்ன நடந்துச்சு நீங்க எப்படி இங்க வந்திங்க என்று கேட்டாள் அவந்திகா.

அவளை அமர வைத்து அவனும் அருகில் அமர்ந்தவன், அவந்திகா குடும்பம் அவர்கள் வீட்டிற்கு வந்தது, பேசியது, தற்போது அவன் அம்மாவுடன் அவந்திகாவை பார்க்க வந்திருப்பது வரை கூறினான்.

அவந்திகாவிற்கு அவன் கூறியதை நம்பவே முடியவில்லை. நிஜமாவா மாமா என்று அவனையே திரும்பி கேட்க, இப்படியே உட்கார்ந்து முழிச்சு, முழிச்சு பார்க்க போறியா? இல்லை வெளியில வந்து அம்மாவ பார்க்குற ஐடியா இருக்கா என்று அவளை கேலி செய்தான் செழியன்.

அட ஆமா அத்தை வந்திருக்காங்க இல்லை, நீங்க போங்க நான் இப்போ வந்துடறேன், என்று அவனை அனுப்பி வைத்தவள், முகம் கழுவி வேக வேகமாக தலை வாரி கொண்டு வெளியில் வந்தாள்.

அங்கு கனகவள்ளி, மீனாட்சியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் அன்னபூரணி, அவந்திகாவை வாடா, ஏன்  அங்கேயே நின்னுட்ட என்று கூறி தன் அருகில் அமர வைத்துக்கொண்டார். முதல் முறை பார்ப்பது போல் இல்லாமல் வெகு இயல்பாக அவளோடு உரையாடினார் அன்னபூரணி. அந்த இயல்பு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே உள்ளே வந்தனர், தாமரையின் அப்பா சிவக்குமாரும், அம்மா பார்வதியும்.

அவர்கள் வருவதை பார்த்ததும் வாங்க மாமா, வாங்க அத்தை என்று வரவேற்றான் வெற்றி.

உள்ளூர்ல இருக்கீங்கன்னு தான் பேரு ஆனா பார்த்து எத்தனை  நாள் இருக்கும் என்று அங்கலாய்த்தாள் கனகவள்ளி. அதன் பின் நலம் விசாரிப்பு அறிமுக படலம் எல்லாம் முடிந்தது. அனைவரும் அமர்ந்தனர், வீரபாண்டி தன் மகனிடம் ராஜா ஜோசியரை வர சொல்லியிருந்தேன், எங்க இருக்கார்னு போன் பண்ணி கேளு என்றார்.

பின் குடும்பத்தாரை பார்த்து வெற்றிக்கு தான் தாமரைனு எப்போதோ  முடிவு பண்ணினது ஆனால் வெற்றி தங்கை திருமணம் முடிந்து தான் தன்னோட திருமணம்னு சொல்லி இவ்வளவு நாள் தள்ளி போட்டாச்சு. அதனால் அவந்திகா திருமணத்தோடு சேர்த்து, வெற்றி தாமரையின் திருமணமும் நடத்திடலாம்னு இருக்கேன் நீங்க எல்லாம் என்ன சொல்றீங்க என்று கேட்டார்,

சூப்பர்  தாத்தா எனக்கு டபுள் ஓகே என்றாள் அவந்திகா.

வீரபாண்டி வெற்றியை பார்க்க அவனும் சம்மதமாக தலை அசைத்தான்.

அனைவர்க்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்தடுத்து நடந்த விஷயங்களால், யார் வெற்றிக்கு அவர்கள் காதலை பற்றி கூறியது என்று அவந்திகாவும் செழியனும் யோசிக்க தவறிவிட்டனர். அதை யோசித்திருந்தால் பின்னர் ஏற்படப்போகும் பல மன கஷ்டங்களை தடுத்திருக்கலாம்.

                                                                                                             -நறுமுகை

No Responses

Write a response