காதல் கொண்டேனடி-2

காதல் கொண்டேனடி-2

ஒருவழியாக ஒருவாரம் வீட்டில் அனைவரிடமும் செல்லம் கொஞ்சிவிட்டு அமெரிக்கா புறப்பட தயாரானாள் அவந்திகா. அவள் வீட்டில் யாருக்கும் அவள் அமெரிக்கா சென்று வேலை செய்வது பிடிக்கவில்லை, படித்து முடித்தவுடன் மாப்பிள்ளை பார்க்க கையில் ஜாதகத்தை எடுத்தனர் அவந்திகா பெற்றோர். அவளுக்கு தற்போது கல்யாண யோகம் இல்லையென்றும், அவள் குடும்பத்தோடு இருப்பது அவளது உயிருக்கே ஆபத்தென்றும் ஜோதிடர் சொல்ல, என்ன செய்வதென்று குடும்பம் குழம்பிப்போனது.

 அப்பொழுது அவந்திகா சிறிதுகாலம் அமெரிக்கா சென்று வேலை செய்வதாக கேட்க அனைவரும் மறுத்தனர், அவளது தாத்தா வீரபாண்டி மட்டும் பேத்தி சொல்வதுதான் சரியென்று சொல்லி அனைவரையும் சம்மதிக்க வைத்தார். அவர் அதற்கு சம்மதிக்க ஒரு முக்கிய காரணம் சியாட்டில் நகரில் இருக்கும் அவந்திகாவின் தோழி மாலினி. இருவரும் சிறு வயது முதல் கல்லுரி முடியும் வரை ஒன்றாக படித்தனர், பி.இ இன்ஜினியரிங் முடித்தவுடன் தனது மாமன் மகனையே காதலித்து திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறிவிட்டாள் மாலினி. மாலினி காதல், திருமணத்தில் முடிய ஒரு முக்கிய காரணம் அவந்திகாதான் என்பது தனிக்கதை.

அவந்திகா M.E முடித்திருந்தாள், இவ்வளவு படித்துவிட்டு இங்கையே இருந்து என்ன செய்யப்போறாள் சிறிதுகாலம் அவள் விருப்பம்போல் வேலை செய்யட்டும் என்று சொல்லிவிட்டார் வீரபாண்டி. அதன்பின் அவள் மாலினி உடன் அவள் வீட்டிலையே தங்குவது என்று முடிவானது. அம்மா பாட்டி ஆயிரம் அறிவுரையோடு அவளை அனுப்பிவைத்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது. விடுமுறைக்காக இருமாதம் வந்தவள் இப்பொழுதுதான் கிளம்புகிறாள். அதுதான் இரண்டு வருடம் உன் இஷ்டம் போல வேலை செய்தாயிற்று இங்கயே இருந்துவிடு என்று அவள் பாட்டியும், அம்மாவும் சொல்லாத நாள் இல்லை, அவளோ நான் முடித்து குடுக்க வேண்டிய வேலை இருக்கிறது என்று கூறி கிளம்பிவிட்டாள். அவர்களும் அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை, அவர்களும் ஒருவருடமாக அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் எதுவும் சரியாக அமையவில்லை, திருமணம் வரை வேலை செய்யட்டும் என்று விட்டுவிட்டனர்.

இப்படி நடந்தவைகளை நினைத்துக்கொண்டே துபாய் வந்து சேர்ந்துவிட்டாள் அவந்திகா. ஏர்போர்ட்டில் இறங்கியவுடன் தன் அண்ணனுக்கு தகவல் சொல்லிவிட்டு சியாட்டில் செல்லும் விமானத்திற்கான கேட் அருகே சென்று அமர்ந்தாள். இறைவ 14 மணிநேரம் ட்ராவல் பண்ணனும் கூட உட்கார ஆள் நல்ல ஆள்ள இருக்கனும் என்று வேண்டிக்கொண்டாள். ஒருவழியாக காத்திருப்பு நேரம் முடிந்து போர்டிங் ஆரம்பித்தது. உள்ளே சென்று தன் இருக்கை தேடி அமர்ந்தவள் தன் அருகில் யாரும் வராதது கண்டாள்,அது இருவர் அமரக்கூடிய இருக்கை, அவந்திகாவிற்கு விண்டோ சீட். அருகில் இருக்கும் சீட்டிற்கு யாரும் வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாள்.

கிட்டத்தட்ட அனைவரும் அவர்கள் சீட்டிற்கு சென்றுவிட்டனர் இனி தன் அருகில் யாரும் வரப்போவது இல்லைஎன்று எண்ணி நிம்மதியடைந்தாள், ஆனால் அவள் நிம்மதிக்கு ஆயுள் சில நொடிகளே, விமானப்  பணிப்பெண் ஒரு இளைஞனை கூட்டிவந்து அவள் அருகில் இருக்கும் சீட்டில் அமரவைத்துவிட்டு சென்றாள்.  அந்த இளைஞன் நீங்க நினைக்குற மாதிரி நம்ப ஹீரோ செழியன்  தான்.

ஹ்ம்ம் போச்சா தனியா ஜாலிய உக்காந்துட்டு போலன்னு நினைச்ச இப்படி சொதப்பிட்டயே கடவுளே என்று மனதினுள் பேசிகொண்டவள் மறந்தும் அவன் புறம் திரும்பவில்லை. விமானம் கிளம்பி சிறிது நேரத்திற்கெல்லாம் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்க தொடங்கினாள் அவந்திகா, எத்தனை முறை படித்தாலும் அவளுக்கு இந்த புத்தகம் ஒரு ஒரு முறையும் புதிதாக படிக்கும் அனுபவத்தை கொடுக்கும்.

செழியனிற்கு புத்தகம் படிக்க ரொம்போ பிடிக்கும், அதிலும் கல்கி எழுத்திற்கு அவன் கிட்டத்தட்ட அடிமை என்றே சொல்லலாம். அவசர பயணம் எதையும் சரிவர எடுத்துக்கொண்டு வரவில்லை, இவர்களிடம் கேட்டு அடுத்த பாகம் இருந்தால் ஏன் வாங்கி படிக்க கூடாது என்று நினைத்தான். ஹாய், உங்ககிட்ட இந்த புக் உடைய வேற பாகம் இருக்க, இருந்த அதை கொஞ்சம் படிக்க குடுக்குறீங்களா, என்று கேட்டவனை முறைத்தாள். ஓ, எந்த பாகம் குடுத்தாலும் படிப்பீங்களா,என்று நக்கலாக கேட்டாள், முன்னாடியே படிச்சு இருக்க இப்ப உங்ககிட்ட இருந்த திரும்ப படிக்கலானு கேட்ட,  ஆல்ரெடி நீங்க இந்த புத்தகம் படிச்சு இருக்கீங்கன்னு நான் எப்படி நம்புறது என்றாள்.

என்ன பார்த்த உங்களுக்கு பிளைட் சைடு ரோமியோ மாதிரி தெரியுதா என்று கேட்டான், பிளைட் சைடு ரோமியோ அப்படினா என்று முழித்தாள், அதாங்க ரோடு சைடு ரோமியோ மாதிரி பிளைட்ல இருக்கனால பிளைட் சைடு ரோமியோனு சொன்ன, அப்ப முடியல உங்களுக்கு என்ன புக் தான வேணும் இந்தாங்க என்று எடுத்துக்கொடுத்தாள். அவன் புக்கை வாங்கிக்கொண்டு அதில் முழ்கிப்போனான்.  செழியன் அவன் சீட்டை விட்டு எழுந்து செல்ல, அப்பொழுது ஒரு அம்மா அவனை தேடி வந்தார், அவந்திகாவிடம் அந்த தம்பி எங்கம்மா என்று கேட்க தெரியலை அந்தப்பக்கம் எழுந்து போனாரு என்றாள். சரி என்று நகர போனவரிடம் எதுக்கு அவரை தேடுறீங்க என்று கேட்டாள்.

அந்த பெண்மணி தான் எகானமி கிளாசில் டிக்கெட் புக் செய்திருந்ததாகவும், ஆனால் தன்னுடைய மூட்டு வலியால் அவரால் அந்த இருக்கையில் அமரமுடியாமல் கஷ்டப்படவும், செழியன்தான் தன்னுடைய பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டில் அவரை பயணம் செய்ய சொல்லிவிட்டு இங்குவந்து அமர்ந்து கொண்டதாகவும் சொன்னார். அதற்குள் அங்கு செழியன் வர அந்த பெண்மணி அவனிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு சென்றார். அவந்திகா அவனிடம் சாரி என்றாள், தீடிரென சாரி என்றவளை திரும்பி பார்த்தவன் எதுக்கு என்று கேட்டான். நீங்க சொன்ன மாதிரி நான் உங்களை பிளைட் சைடு ரோமியனு தான் நினைத்தேன், என்கிட்ட பேசத்தான் புக் கேக்குறீங்கன்னு சாரி என்றாள்.அவன் அவளையே பார்க்க தன் இருபக்க காதை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவதுபோல மன்னிப்புகேட்டவளை பார்த்து சிரித்தான். உடன் சிரித்தவள் ஐ ஆம் அவந்திகா என்று அவனிடம் கையை நீட்டினாள், நீட்டிய கையை பிடிக்காமல் கைகூப்பி நான் செழியன் என்றான்.

இந்த அறிமுகம் அவர்கள் வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்களை கொண்டுவர போகிறது என்பதை அறிய தொடர்ந்து வாசியுங்கள்….

-நறுமுகை

No Responses

Write a response