காதல் கொண்டேனடி-18

காதல் கொண்டேனடி-18

அடுத்தநாள் காலை அவந்திகா அவள் அம்மா கொடுத்த புடவையை எதுவும் சொல்லாமல் கட்டிக்கொண்டு தயாரானாள். அவர்கள் வீடு பழைய காலத்து வீடு, உள்ளுக்குள் அறைகளை மட்டும் நவீனமயமாக்கிருந்தனர். ஆனால் வீட்டின் அமைப்பை மாற்றவில்லை.

முன் அறை சோபாக்கள் போட்டு வரவேற்பறையாக இருந்தது. அதை தாண்டி வீட்டின் உள் முற்றம் இருந்தது. அதன் இருபக்கமும் அறைகள் இருந்தது. அதில் ஒரு அறை பூஜை அறையாக இருந்தது. நெருங்கிய உறவுகள் மட்டும் வரவேற்பறையை தாண்டி முற்றத்திற்கு வர முடியும்.

அவந்திகா குடும்பம் முழுவதும் மாப்பிள்ளை வீட்டை வரவேற்க வாசலுக்கு சென்றுவிட, தன் அறையில் இருந்து வெளியில் வந்தவள், பூஜையறையில் சென்று நின்றாள்.

 இறைவா நான் செய்றது தப்பு தான் நீ கொடுத்த உயிரை நான் எடுக்க கூடாது. ஆனால் எனக்கு வேற வழி தெரியலை. என்னால் என் மாமாவை தவிர வேறு யார் முன்னிலையிலும் மணப்பெண் கோலத்தில் நிற்க முடியாது. என்னை மன்னித்துவிடு, என்று வேண்டியவள், தன புடவை முந்தானையை அங்கு ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்கின் மீது போட்டுவிட்டு கண் மோடி நின்றாள்.

 மாப்பிள்ளை வீட்டார் வரவேற்பறைக்கு வரவும், வீட்டு வேலை செய்யும் ராசாத்தி அய்யயோ சின்னம்மா புடவையில் நெருப்பு என்று கத்தவும், சரியாக இருந்தது. அவந்திகா குடும்பம் மொத்தமும் உள்ளே ஓடி வர, மாப்பிள்ளை வீட்டினருடன் வந்தவர் எட்டி பார்த்துவிட்டு மாப்பிள்ளை வீட்டுக்கு விஷயம் சொல்ல அவர்கள் அப்படியே புறப்பட்டனர்.

சரியாக அதே சமயம் செழியன் காரில் இருந்து இறங்கினான். சத்தம் கேட்டு அவன் உள்ளே ஓடினான். வெற்றி, அவந்திகா அப்பா இருவரும் நெருப்பை அணைக்க முயற்சி செய்துகொண்டிருக்க, அவந்திகாவின் அம்மாவும் அப்பத்தாவும், டேய் பிள்ளையோட கையெல்லாம் நெருப்பு பிடிச்சுடுச்சி, அதை அனைங்கடா, என்று அழுதுகொண்டிருந்தனர், அவந்திகாவின் தாத்தா  உறைந்து போய் நின்றிருந்தார்.

 உள்ளே ஓடிவந்த செழியன் அவந்திகாவை அந்த நிலையில் பார்த்து தவித்துப்போனான். அம்மு என்று ஓடியவன், தான் போட்டிருந்த ஜாக்கெட்டை கழட்டி நெருப்பின் மீது போட்டு மூட, அதற்குள் ராசாத்தி கொண்டுவந்த தண்ணியை அதன் மீது ஊற்றி மொத்த நெருப்பையும் அணைத்தான் வெற்றி. அரை மயக்கத்தில் இருந்த அவந்திகா செழியனை பார்த்து மாமா என்றவள் அவன் கையிலே மயங்கி சரிந்தாள்.

செழியன் அவந்திகாவை தூக்கிக்கொண்டு காருக்கு சென்றான். வெற்றி அவனோடு காரில் கிளம்ப, அவந்திகாவின் அப்பா மற்ற குடும்பத்தினரோடு அந்த  காரை தொடர்ந்து தன் காரில் சென்றார்.

செழியன் மதுரையில் இருந்த தனியார் மருத்துவமனையில் வேலை செய்யும் நண்பனிடம் தகவல் கூறி தயாராக இருக்க சொல்லி இருந்தான். எனவே அங்கு சென்றதும் அவந்திகாவிற்கு சிகிச்சை தொடங்கினர். அங்கு யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. வெற்றி செழியனை வினோதமாக பார்த்து கொண்டு நின்றான்.

 சிகிச்சை முடிந்து வெளியில் வந்த செழியனின் நண்பன் சூர்யா, வொரி பண்ண ஒண்ணுமில்லை செழியா பர்ஸ்ட் டிகிரி பர்ன்ஸ் தான், த்ரீ வீக்ஸ்ல சரி ஆய்டும். ஆனால் தழும்பு இருக்கும். உனக்கு தெரியாததா யூஎஸ்ல இருந்து ஆயின்மென்ட் ஆர்டர் பண்ணி கொடு என்றான்.செழியன் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு கண்ணாடி வழியே அவந்திகாவை பார்த்தான். துவண்டு போய்  படுத்திருந்த அவள் நிலை அவனுக்கு கண்ணீரை வரவழைத்தது.

அடுத்த நாள் அவள் கண் விழிக்கும் வரை செழியன் பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் அறை  வாயிலிலே அமர்ந்திருந்தான். அதன் பிறகு சூர்யா வந்து செக் செய்துவிட்டு வீட்டுக்கு கூட்டி செல்லலாம் என்று கூறினான். அவந்திகா குடும்பம் அவளை அழைத்து செல்ல செழியன் அவன் காரில் பின்னால் சென்றான். அவர்கள் பின்னால் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்தவனை அவர்கள் கேள்வியோடு பார்த்தனர். அவந்திகாவை பார்த்துட்டு போய்டுறேன் என்றான்.

அவந்திகாவின் தாத்தாவும் அப்பாவும் அமைதியாக இருக்க வீட்டு பெண்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவந்திகாவின் அருகில் சென்றவன் ஹவ் ஆர் யூ பீலிங் நவ் ? என்று கேட்டான். இப்போ பரவாயில்லை  என்று அவள் சொல்லி முடிக்கவும், செழியனின் கை இடியென அவள் கன்னத்தில் இறங்கியது, அடி விழுந்த வேகத்தில் அவந்திகா அருகில் இருந்த சேரில் விழுந்தாள்.

வெற்றி கோபத்தில், டேய் என்று கத்தி கொண்டு செழியனின் சட்டையை கொத்தாக பிடித்தான். வெற்றியை அவனுக்கு சற்றும் குறையாத கோபத்தில் பார்த்தவன், என்ன சார் கோபம் வருதா, நியாயமா நான்  அடிச்ச அடியை நீங்க அடிச்சிருக்கணும், குட்டிம்மானு இன்னும் செல்லம் கொஞ்சிட்டே இருங்க உங்க தங்கச்சி  இன்னும் வேற எதாவது செஞ்சிக்கட்டும் என்றான். வெற்றி பிடித்திருந்த சட்டையை விட்டுவிட்டான்.

 மீனாட்சி புடவை தலைப்பால் வாயை அடைத்துக்கொண்டு அழுக கனகவல்லியும் அமைதியாக நிற்கும் தன் கணவரை பார்த்தாள் .  பேத்தி காதலிப்பவன் எப்படிப்பட்டவன் என்று அவர் மனதில் எடை போட்டுக்கொண்டிருப்பது  அவருக்கு புரிந்தது.

செழியன் கூறியதை கேட்டு எழுந்து நின்ற அவந்திகாவை பார்த்தவன்,

படிச்சவ தான நீ, பிரச்சனைனா அதை எதிர்த்து நின்னு போராடணும் அதைவிட்டுட்டு இதெல்லாம் ஒரு வழியா என்று கோபம் குறையாமல் கேட்டான்.

  என்ன செஞ்சிருக்கணும் அந்த மாப்பிள்ளை முன்னாடி போய் நின்னுருக்கணுமா? நீங்க என்னை பார்க்குற மாதிரி அந்த மாப்பிள்ளையும் என்னை அவன் பொண்டாட்டியா நினச்சு பார்ப்பான் பரவாயில்லையா?என்னால் அது முடியாது. வேற ஒருத்தர் என்னை அப்படி பார்க்குறது என்னால் ஏத்துக்கவே முடியாது. எனக்கு நான் செய்தது தான் சரி. என்று கூறிவிட்டு அவள் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள் அவந்திகா.

இப்படி சொல்பவளிடம் என்ன சொல்ல என்று தெரியாமல் சக்தி எல்லாம் வடிந்து போய் திரும்பியவன் அவந்திகா தாத்தாவிடம் சென்று மன்னிச்சிடுங்க சார், எங்க காதல் இவளை இப்படி கோழையாக மாற்றும்ன்னு நான் நினைக்கவே இல்லை. உங்களை மீறி நாங்க எதுவும் செய்ய மாட்டோம் காயம் ஆற ஆற ரொம்போ எரிச்சல் எடுக்கும் வேப்பிலை வச்சி விசிறிவிட்டா கொஞ்சம் நல்லா இருக்கும். கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோங்க சார் என்று கூறியவன் வெற்றியிடம் சென்று, உங்க கண் முன்னாடி உங்க தங்கச்சியை அடிச்சதுக்கு சாரி என்று கூறியவன் அங்கிருந்து வெளியேறினான். அன்று இரவு யாரும் யாருடனும் பேசாமல் அவர் அவர் அறையில் அடைந்துகொண்டனர்.

அவந்திகா செழியனின் காதலின் நிலை என்ன அறிய தொடர்ந்து வாசியுங்கள்.

-நறுமுகை

No Responses

Write a response