காதல் கொண்டேனடி -17

காதல் கொண்டேனடி -17

 அண்ணா அவர்கிட்டயிருந்து கால் வந்துச்சா எனக்கு இன்னும் பிளைட்டுக்கு ஒன் ஹவர் தான் இருக்கு என்றாள்  அவந்திகா.

 நான் திரும்ப ட்ரை பண்றமா என்று ராஜ் அங்கிருந்து நகர,

அண்ணா வந்திடுவார் கவலைப்படாத அவந்தி என்று அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தாள் மாலினி

 கேபினில் இருந்து வந்த பிறகு நாட்கள் எப்போதும்  போல சென்றுகொண்டிருந்தது. அவந்திகா எப்படியாவது தன் அண்ணன் வெற்றியிடம் தன் காதலை பற்றி சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அது அவள் நினைத்த அளவுக்கு எளிதாக இல்லை. இப்போ சொல்லிவிடலாம் அப்போ சொல்லிடலாம் என்று மூன்று மாதங்களுக்கு மேல் ஓடிவிட்டன. அன்று அவள் அலுவலகம் கிளம்பி கொண்டிருக்கும்போதே வெற்றி போன் செய்து அப்பத்தாவிற்கு உடம்பு சரியில்லை என்று கூறி அவளை உடனே கிளம்பி வர சொன்னான். அவந்திகாவிற்கு ஒரு நிமிடம் உலகமே நின்று போனது. அவளுக்கு அவள் அம்மாவை விட அப்பத்தாவை தான் ரொம்போ பிடிக்கும். சிறு வயதில் இருந்து அவள் அவரிடம் தான் வளர்ந்தாள். அப்பத்தாவிற்கு எதுவும் ஆகி விட கூடாது என்று வேண்டிக்கொண்டவள் மாலினி, ராஜிடம் விஷயத்தை சொன்னாள்.

ராஜ் உடனடியாக அவளுக்கு பிளைட் டிக்கெட் ஏற்பாடு செய்ய அடுத்த ஒருமணி நேரத்தில் அவர்கள் ஏர்போர்ட் புறப்பட்டனர். அன்று செழியனுக்கு முக்கியமான சர்ஜரி இருக்கு என்று அவந்திகாவிற்கு தெரியும். இருந்தாலும் அவனை பார்க்காமல் கிளம்பிவிட கூடாது என்று தொடர்ந்து முயற்சித்தாள். ஏர்போர்ட்டுக்கு வந்து ராஜ், செழியனின் ஹாஸ்பிடலுக்கு போன் செய்தான். சர்ஜரி முடிந்தவுடன் செழியனை அழைக்க சொல்வதாக கூறிவிட்டனர்.

சர்ஜரி முடிந்து வெளியில் வந்த செழியனை எதிர்கொண்ட போன் ஆபரேட்டர் அவனுக்கு அவசர மெசேஜ் என்று கூற தன் போனை ஆன் செய்ய நினைத்தான். ஆனால் அது சார்ஜ் இல்லாமல் ஆப் ஆகி இருந்தது. தனது அறைக்கு சென்று அவன் தன் டெக்ஸ் போனிற்கு வந்த வாய்ஸ் மெசேஜை செக் செய்தான். அவந்திகாவின் மெசேஜை கேட்டதும் அவசரமாக மணியை பார்த்தவன் இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு என்று உணர்ந்து வேகமாக ஹாஸ்பிடல் முன்னிருந்த டாக்சியில் ஏர்போர்ட்டுக்கு புறப்பட்டான். தான் இருக்கும் மன நிலையில் தன்னால் டிரைவ் பண்ண முடியாது என்று அவனுக்கு நன்றாக தெரியும் போன் செய்து தான் வந்து கொண்டிருப்பது சொல்ல கூட முடியாமல் போன் ஸ்விச் ஆப் ஆகியிருந்தது.

அவன் போன் சார்ஜ் இல்லாமல் போனதற்கு காரணம், அவன் முந்தைய நாள் இரவு வெகு நேரம் அவந்திகாவிடம் பேசிவிட்டு அப்படியே உறங்கி போனான்.  அந்த போனை பார்க்கும்போது அவர்கள் பேசிக்கொண்டது அவனுக்கு ஞாபகம் வந்தது.

என்ன அம்மு வாய்ஸ் ரொம்போ டல்லா இருக்கு, ஒர்க் அதிகமா,

ஆமா, மாமா போட்டு படுத்துறானுங்க மேரேஜ்க்கு பிறகு ஒரு மூணு மாதம் ஜாலியா ரெஸ்ட் எடுக்கணும். பிறகு தான் திரும்ப ஒர்க்குக்கு போவேன் என்றாள் அவந்திகா

அதன் பிறகு உன்னை யாரும் போக விட மாட்டாங்க வீட்டில் இருந்து உன் உடம்பை பார்த்துக்க சொல்லுவாங்க என்றான் செழியன்

சும்மா வீட்டில் இருந்து எதுக்கு உடம்பை பார்த்துக்கணும் என்று அவந்திகா கேட்க

அவந்திகா புரியாமல் கேட்கவும் செழியனுக்கு சிரிப்பு வந்தது. அதுவா அம்மு அப்போ நீ சும்மா இருக்க மாட்ட கன்ஸீவா இருப்ப, என்று சிரிப்பை அடக்கி கொண்டு சொன்னான். அவன் சொன்னதை கேட்டு அவந்திகாவின் முகம் குப்பென்று சிவந்து போனது. என்ன அம்மு சரி தானே என்று ரகசிய குரலில் கேட்க, அவந்திகாவிற்கு அவன் நிஜமாகவே தன் காதோரத்தில் கேட்பது போல குறு குறுப்பை ஏற்படுத்தியது.

என்னடா பேச்சையே காணோம்,,…..

நீங்க ரொம்போ மோசம் மாமா. இப்படி பேசினா நான் என்ன சொல்றது.

உனக்கு எத்தனை குழந்தை வேணுன்னு சொல்லு என்றான் செழியன். சொல்லவா…..

ம்ம்ம்ம்ம் சொல்லு …..

உங்களை மாதிரி இரண்டு வாலு பசங்க வேணும் என்றாள்.

யாரு நான் வாலா, என் அம்மா கிட்ட கேட்டு பாரு நான் ரொம்போ சமர்த்து பையன்னு சொல்லுவாங்க என்றான். இப்படியே அவர்களது பேச்சு அடுத்த சில மணி நேரம் தொடர்ந்தது. இப்போது அதெல்லாம் அவனுக்கு நினைவு வந்தது.

சிறிது நேரமாக கார் ஒரே இடத்தில் நிற்க என்னவென்று கேட்டான் செழியன், ஆக்சிடென்ட் சார் க்ளியர் ஆக கொஞ்சம் நேரம் ஆகும் என்று டிரைவர் சொல்ல அவந்திகாவை அவன் பார்க்கப்போவதில்லை என்று அவனுக்கு புரிந்தது.

ட்ராபிக் க்ளியர் ஆனதும்  அவன் ஏர்போர்ட் சென்று அங்கிருந்து போனில் ராஜை அழைத்தான். அவர்கள் பார்க்கிங்கில் இருப்பதாக கூறி அவனை வர சொன்னார்கள்.

அங்கு சென்ற அவனுக்கு அவந்திகா விட்டு சென்ற கடிதம் தான் மாலினியிடம் இருந்தது. அதை வாங்கி வேகமாக பார்வையை அதில் ஓட்டினான்.

மாமா, உங்களை பார்க்காமலே கிளம்புறது எனக்குள்ள எதோ பயமா இருக்கு. ஏன் அப்படின்னு தெரியல. என்ன நடந்தாலும் உங்களுக்காக மட்டும் தான் நான்.

அன்புடன் அம்மு….

படித்துவிட்டு செழியன், ராஜிடம் திரும்பி அண்ணா நாளைக்கு பர்ஸ்ட் பிளைட்டுக்கு எனக்கு டிக்கெட் போடுங்க நானும் இந்தியா போறேன் என்று ஒரு முடிவுடன் கூறினான். அவந்திகா இந்தியாவில் தரை இறங்குவதற்கு முன் செழியன் சியாடலில் பிளைட் ஏறி இருந்தான்.

மதுரை ஏர்போர்ட்டில் இருந்து வீட்டிற்கு சென்ற அவந்திகாவிற்கு அங்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

காரிலிருந்து இறங்கி வேகமாக வீட்டிற்குள் சென்றவளை மொத்த  குடும்பமும் வீட்டு முற்றத்தில் எதிர்கொண்டது. அப்பத்தாவை பார்த்ததும்  ஓடிச்சென்றவள் அப்பத்தா உங்களுக்கு ஒண்ணுமில்லயே, நான் ரொம்போ பயந்துட்டேன் என்று கண்ணீர்  விட்டாள்.

பின்னர் கண்ணீரைத் துடைத்து கொண்டு தன் அண்ணனிடம் சென்றவள் எதுக்கு அண்ணா பொய் சொன்ன நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா, என்று கேட்டவளை கோபமாக பார்த்த வெற்றி, என்ன பொய் சொன்னேன், உன்னை மாதிரியா மாலினி வீட்டில் இருக்கேனு பொய் சொல்லிட்டு வேற ஒருத்தன் கூட கல்யாணம் ஆகாம குடும்பம் நடத்திட்டு இருக்கியே அப்படியா நான் பொய் சொன்னேன் என்றான். ஒரு நிமிடம் தன் அண்ணனை அதிர்ந்து போய் பார்த்தவள், அவனிடம் பேசாமல் திரும்பி தாத்தாவையும் அப்பாவையும் பார்த்து நான் ஒருத்தரை காதலிக்கிறேன், ஆனால் இதுவரை அவர் வீட்டுக்குக் கூட நான் போனது கிடையாது. 

காதல் மனசு சம்பந்தப்பட்ட விஷயம் அது என் பேச்சை கேட்காது. அதே காதலன் வீட்டுக்கு போறது, அவன் கூட பழகுறதும் என்னோட வளர்ப்பு சம்பந்தப்பட்ட விஷயம், அந்த வளர்ப்புக்கு நான் எந்த துரோகமும் செய்யவில்லை என்றவள் அவள் அறையை நோக்கி சென்றாள்.

நாளை காலை உன்னை பெண் பார்க்க வராங்க தயாரா இரு என்றார் அவந்திகாவின் தாத்தா. எதுவும் சொல்லாமல், தன் அறைக்கு சென்றவள் சுவிட்ச் ஆப் செய்திருந்த தன் போனை ஆன் செய்யாமல் ஒரு முடிவோடு அடுத்த நாளை எதிர்நோக்க காத்திருந்தாள்.

அவந்திகா என்ன செய்ய போகிறாள்? அவளது குடும்பம் அவள் காதலை ஏற்குமா?

-நறுமுகை

No Responses

Write a response