காதல் கொண்டேனடி-16

காதல் கொண்டேனடி-16

முதல் இரண்டு நாட்களுக்கு அருகில் இருந்த இடங்களுக்கு சென்று சுற்றி திரிந்தனர். அவந்திகாவிற்கு ஹரிணியை மிகவும் பிடித்திருந்தது. இருவரும் பல நாள் தோழிகள் போல் பேசி சிரித்துக்கொண்டனர். மூன்றாவது நாள் இரவு அவர்கள் தங்கி இருந்த கேபினுக்கு முன்னால் இருந்த இடத்தில் கேம்ப்  பையர் போட்டனர். அனைவரும் அங்கேயே சுற்றி அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருந்தனர்.

(ஆங்கில உரையாடல்கள் கதை சுவாரசியத்திற்காக தமிழில்….)

அப்போது சங்கர், சிஸ்டர் செழியன் போன் பண்ணி ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு சொன்ன உடனே நான் என்னை கிள்ளி பார்துக்கிட்டேன். எங்க கனவு காண்றமோன்னு எனக்கு சந்தேகம், என்றான்.

ஏன் அப்படி சொல்றீங்கனு அவந்திகா கேட்க,

அந்த அளவுக்கு சார் காலேஜ் டேஸ்ல சாமியாரா இருந்தார். லவ் பன்றேன்னு ஏதாவது பொண்ணு வந்து சொல்லிட்டா, அந்த பொண்ணு நான் துறவியா போய்டுறேன்னு  சொல்ற அளவுக்கு இவன் அட்வைஸ் பண்ணி டார்ச்சர் பண்ணிடுவானு சுரேஷ் கூற,  அனைவரும் சிரித்தனர். 

டேய் காலேஜ்க்கு படிக்க போனோமா இல்ல லவ் பண்ண போனோமா என்று செழியன் கேட்க, நான் சொல்லல இவன் இப்படி தான் கருத்து பேசுவானு என்று சுரேஷ் அவனை கிண்டல் செய்தான்.

இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் கிண்டல் செய்து சிரித்து கொண்டனர். அப்போது ஹரிணி செழியா, நான் கிட்டார் எடுத்துட்டு வந்திருக்கேன் நீ ஒரு பாட்டு பாடேன் கேட்டு ரொம்ப நாள் ஆகுது என்று கூற, அனைவரும் ஆமோதித்தனர். அன்வர், கிட்டாரை எடுத்து வந்து கொடுக்க, செழியன் வாங்கி அதன் கம்பிகளை மீட்டி அவந்திகாவை பார்த்து பாட தொடங்கினான்……..

வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்

உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்

தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்

காதலே காதலே  வா

வாழ்வின் வாசமே வாசமே

நீ தானே

காதலே காதலே  வா

எந்தன் சுவாசமே சுவாசமே

நீ உயிரே வா

தாரமே என்று வரும் இடங்களில் காதலே என்று மாற்றி பாடினான்.
மேலும் கீழும் ஆடும் உந்தன்
மாய கண்ணாலே
மாறுவேடம் போடுது என் நாட்கள்
தன்னாலே
செழியனின் பார்வை அவந்திகாவின் முகத்தைவிட்டு அகலவே இல்லை, அவந்திகாவும் அவளது பார்வையை விலக்கி கொள்ளவில்லை.
ஆயுள் ரேகை முழுவதுமாய்
தேயும் முன்னாலே
ஆளும் வரை வாழ்ந்திடலாம்
காதலின் உள்ளே

இந்த உலகம் தூளாய்
உடைந்து போனாலும்
அதன் ஒரு துகளில்
உன்னை கரை சேர்ப்பேன்

காதலே காதலே  வா

வாழ்வின் வாசமே வாசமே

நீ தானே காதலே காதலே வா

எந்தன் சுவாசமே சுவாசமே

நீ உயிரே வா


நீ நடக்கும் பொழுது
நிழல் தரையில் படாது
உன் நிழலை எனது உடல்
நழுவ விடாது

பேரழகின் மேலே ஒரு
துரும்பும் தொடாது
பிஞ்சு முகம் ஒரு நொடியும்
வாடக்கூடாது
அவந்திகா முகத்தில் புன்னகை தோன்றியது, அவன் தன்னை அப்படித்தான் பார்த்துக்கொள்கிறான் என்று அவளுக்கு தோன்றியது.
உன்னை பார்த்திருப்பேன்
விழிகள் மூடாது
உன்னை தாண்டி
எதுவும் தெரியகூடாது

காதலே காதலே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே காதலே காதலே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா

அவன் பாடி முடித்த பின்  அங்கு கனத்த அமைதி அனைவரும் அந்த பாட்டில் லயித்து போய் இருந்தனர். அவந்திகாவால் செழியனை விட்டு பார்வையை விலக்கி கொள்ள முடியவில்லை. அந்த பாட்டும் அவன் பாடிய விதமும் அவளை என்னவோ செய்தது. செழியனும் அவந்திகாவை தான் பார்த்துக்கொண்டிருந்தான். இவர்களை தொல்லை செய்யாமல் தோழர்கள் எழுந்து உள்ளே சென்றனர். அவர்கள் சென்றதும்  செழியன் அவந்திகாவின் அருகில் வந்து அமர்ந்தான். அவளோடு கை கோர்த்து அவள் தோள்  சாய்ந்து கொண்டாள்  அவந்திகா, இருவரும் சிறிது நேரம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

அம்மு, பாட்டு எப்படி இருந்ததுன்னு எதுவும் சொல்லலையே என்று செழியன் கேட்க

இப்படி பாடுனா என்னனு சொல்றது

உன் மனசுக்கு என்ன தோணுதோ அதை சொல்லு,

ஹ்ம்ம்ம், எனக்கு…எனக்கு…….உங்களை ஹக் பண்ணி கிஸ் பண்ணனும்னு தோணுது, என்றாள்,

வாவ், அம்மு தோணுதுன்னு சும்மாவே இருந்தா எப்படி, என்று கேட்டு அவள் முகத்தை நிமிர்த்த, உதை விழும் என்று அவள் விரல் நீட்டி அவனை மிரட்டினாள். நீ கொடுக்காட்டி போ என்றவன், அவள் நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக்கொண்டான்.

அந்த இரவின் அமைதியில் அவந்திகாவிற்கு அந்த அணைப்பு மிக இதமாக இருந்தது. அங்கேயே அமர்ந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தனர். யதேச்சையாக மணியை பார்த்தவன் அம்மு ரொம்போ லேட் ஆயிடுச்சி வா உள்ளே போகலாம் என்றான்.

இருவரும் கேம்ப் பையர்  நெருப்பை முழுவதும் அணைத்துவிட்டு உள்ளே வந்தனர். கதவின் அருகில் வந்ததும் அம்மு நீ உள்ளே போ நான் வந்துடறேன், என்றான் காரில் ஏதாவது எடுக்க போவான் என்று நினைத்து அவந்திகா உள்ளே செல்ல, கேபின் முழுக்க இருட்டாக இருந்தது, அவந்திகாவிற்கு இருட்டு பழக சில நொடிகள் பிடித்தது. அவளுக்கு லைட்  ஸ்விச் எங்கே இருக்கு என்று தெரியவில்லை சரி மொபைலில் லைட்  ஆன் செய்யலாம் என்றால் போனை அறையிலேயே விட்டிருந்தாள்.

ஹரிணி, மாமா,  அன்வர், யாராவது லைட் ஆன் பண்ணுங்க என்று அவள் குரல் கொடுக்க, அவள் காதருகில் விஸ் யூ வெரி ஹாப்பி பர்த்டே அம்மு என்று செழியன் கூற, கேபின் விளக்குகள் ஒளிர தொடங்கினர்.

சங்கர், ஹரிணி, அன்வர், அமர், நால்வரும் ஹாப்பி பர்த் டே என்று கோரஸாக கூறினார். ஹால் முழுவதும் டெக்கரேட் செய்யப்பட்டு நடுவில் கேக் காண்டிலோடு இருந்தது அதை பார்த்து அவந்திகா பேச்சற்று நிற்க, பார்த்துட்டே இருந்தா எப்படி சீக்கிரம் கேக் கட் பண்ணுங்க எவ்வளவு நேரம் வெய்ட் பண்றது என்றான் அன்வர். அதன் பின் கேக் கட்  செய்து அனைவரும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டு படுக்க சென்றனர். அவந்திகாவிற்கு  அனைத்தும் கனவு போல் இருந்தது. அனைவரும் அவரவர் அறைக்கு செல்ல அவந்திகா மட்டும் செழியனை தேடி சென்றாள்.

செழியனும் சங்கரும் ஒரு அறையில் இருந்தனர், அவந்திகாவை பார்த்த உடன், நான் இப்போ வந்துடறேன் என்று சங்கர் வெளியே சென்று விட அவந்திகா கதவை க்ளோஸ் செய்துவிட்டு செழியன் அருகில் வந்தாள். என்ன அம்மு என்று  செழியன் கேட்க,

மாமா இதை யார்கிட்டயும் சொல்ல கூடாது ஏன் நீங்களே கூட திரும்ப இதைப்பற்றி என்கிட்ட  பேச கூடாது ஓகே வா என்று கேட்டவள் எதை என்று அவன் யோசிக்கும் முன்பே அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக ஓடிவிட்டாள். ஒரு நிமிடம் என்ன என்று புரியாமல் முழித்தவன் பின் தன் கன்னத்தை தடவி சிரித்துக்கொண்டான்.

 அடுத்த நாள் காலை மீண்டும் அனைவரும் அவளுக்கு வாழ்த்து கூறி தங்களது பரிசினை கொடுத்தனர். சார் உங்க கிப்ட் என்ன என்று ஹரிணி கேட்க, நானே கிப்ட் தான் என்றான் செழியன். இதோடா,  இந்த கதை எல்லாம் இங்க வேண்டாம், அவந்திகா இதுக்கெல்லாம் ஏமாந்துடாத, என்றாள்  ஹரிணி.

அப்போது அத்தை  ஹாப்பி பர்த்டே என்று கூறிக்கொண்டே உள்ளே வந்தாள் பூஜா. பூஜா நீ எப்படி இங்கே என்று அவந்திகா ஆச்சர்யமாக கேட்க, எங்க அண்ணாவை என்னனு நெனச்ச என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தனர்  மாலினியும், ராஜும்,

 மாலு என்று அவந்திகா தோழியை அணைத்துக்கொண்டாள். பூஜா நானும் என்று அத்தைக்கும் அம்மாவுக்கும் இடையில் புகுந்துகொள்ள அனைவரும் சிரித்தனர். அன்று நாள் முழுவதும் அனைவருக்கும் கலகலப்பாக சென்றது. அவந்திகாவிற்கு வீட்டில் இருந்து அனைவரும் போன் செய்து வாழ்த்து கூறினர். அவந்திகா மிகுந்த சந்தோஷத்தில் இருந்தாள். அன்று மாலை தோழர்கள் பிரியாவிடை பெற்றனர். மாலினி ராஜ் , பூஜா ஒரு காரிலும் அவந்திகா, செழியன் ஒரு காரிலும் ஊருக்கு கிளம்பினார்.

காரில் அவந்திகா அமைதியாக வர என்ன அம்மு அமைதியா இருக்க, என்றான் செழியன். நகர்ந்து அவன் தோள்  சாய்ந்தவள்  மாமா நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும் என்றாள்.

  ஹப்பா  இப்போவது உனக்கு தோணுச்சே என்றான். கிண்டல் பண்ணாதீங்க சீரியஸா  சொல்றேன். வீட்டில் சொல்லிடலாம் என்றாள். அம்மு நான் எப்பவும் அதுக்கு ரெடி தான். தொடர்ந்து அதுவும் அந்த கிஸ்ஸுக்கு பிறகு வேண்டாம்னு சொல்ல நான் என்ன லூசா என்றவனை  அடிக்க தொடங்கினாள் அவந்திகா. உங்களை அதை பற்றி பேச கூடாதுனு சொன்னேன் தானே என்றவளை பார்த்து வாய் விட்டு சிரித்தவன், அம்மு, என்ன இந்த அடி அடிக்கிற கல்யாணத்துக்கு பிறகு நான் என்ன செய்யப்போறேனோ, என்று அவளை கிண்டலடித்தான். சரி அப்போ, அடிக்காத வேற நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க என்றாள்  அவந்திகா.

ஒரு கையால் காரை ஓட்டிக்கொண்டு  மறு கையால் அவள் கையை பிடித்தவன் அடி வாங்கினாலும் எனக்கு இந்த கையில் தான் வாங்கனும் என்றான். அவன் கையேடு கை கோர்த்தவள் என்னோட பெஸ்ட் பர்த்டே இது, நீங்க இவ்வளவு பிளான் பண்ணிருப்பீங்கனு நினைக்கவே இல்லை. ஐ எம் சோ ஹாப்பி என்றாள். இப்படியாக பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். காரை டிரைவ் வேவில் நிறுத்தியவன் இறங்க போன அவந்திகாவை தடுத்தான். என்ன என்பது போல் பார்த்தவளிடம், உன்னோட பர்த்டே கிப்ட் வேண்டாமா ?

 கிப்டா என்று இழுத்தவளிடம், ஒரு அழகிய மோதிரத்தை நீட்டியவன்,

அவந்திகா உன்னோடு உன் கைபிடித்து நமக்கு பிடிச்சது பிடிக்காதது,நம் சுக துக்கம், அனைத்தையும் பகிர்ந்து, செல்ல சண்டைகள்   கொஞ்சம் கோபம் நிறைந்த காதலோடு ஒரு வாழ்க்கை வாழனும், உனக்கு சம்மதமா என்றான்.

ஒரு நிமிடம் அவனையே இமைக்காமல் பார்த்தவள் அவன் முன் தன் கையை நீட்டினாள். இந்த கையை பிடிச்சு நீங்க எங்க கூட்டிட்டு போனாலும், நான் வருவேன் என்றாள். நீட்டிய கையை பிடித்து மோதிரத்தை போட்டவன், அந்த கையை விடாமல் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். இதை சற்று தள்ளி நிறுத்தியிருந்த காரில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தாள் ஷாலினி. இன்னும் இந்த சந்தோசம் எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் அவந்திகா, அதன்பிறகு உனக்கு நிரந்தர நரகத்தை காட்டுகிறேன் என்று மனதினுள் கருவினாள்

அவந்திகா செழியன் காதல் கை கூடுமா அறிய தொடர்ந்து படியுங்கள்

                                                                                                                                         -நறுமுகை… 

No Responses

Write a response