காதல் கொண்டேனடி – 14

காதல் கொண்டேனடி – 14

அன்று மாலை மாலினி வீட்டில் இருந்து, நேராக விவேகானந்தர் வீட்டிற்கு சென்றான் செழியன். அவனை வரவேற்ற மேகலா என்ன செழியா எங்களை எல்லாம் மறந்துட்டியா ….. என்று கேட்க, அப்படி எல்லாம் இல்ல பாட்டி நீங்க தான் கனடா போயிட்டு அமெரிக்காவை மறந்துட்டிங்க, என்றான் செழியன்.

அப்போது அங்கு வந்த விவேகானந்தர், செழியனிடம் நலம் விசாரித்துவிட்டு பூஜாவைப் பற்றி கேட்டார்.

நீதான் ரொம்போ உதவினதாக ராஜ் சொன்னார் கனடாவில் இருந்ததால் என்னால் பார்க்க வர முடியலை. இந்த வாரத்துல தான் போய் பார்க்கனும் என்றார் விவேகானந்தர். சிறிது நேரம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தனர். பின் செழியன்,ஏதாவது முக்கியமான விஷயமா தாத்தா கனடாவுல இருந்து வந்தவுடனே வர சொல்லி இருக்கீங்க என்றான்.

ஆமா செழியா, முக்கியமான விஷயம் தான் இன்னும் சொல்ல போனா சந்தோஷமான விஷயம் கூட என்றார் விவேகானந்தர்.

அவர் அப்படி கூறவும் அவரை கேள்வியாக பார்த்தான் செழியன், உனக்கும் ஷாலினிக்கும்  கல்யாணம் பேசலாம்னு நாங்க விருப்பப்படறோம். உங்க அம்மாகிட்ட கூட  பேசிட்டோம் உன்னோட விருப்பம் தான் அவங்க விருப்பமுனு சொல்லிட்டாங்க,  அதான் உன்னோட விருப்பத்தை கேட்கலாம்னு கூப்பிட்டேன் என்றார் விவேகானந்தர்.

அவர் கூறியதை கேட்டு அதிர்ந்து போனான் செழியன், அம்மா வரைக்கும் பேசியிருக்காங்க அது கூட தெரியாம இருந்திருக்கோம் என்று எண்ணியவன், பெரியவர்கள் பதிலுக்காக காத்திருப்பது புரிந்து.

அவர்களுக்கு பதில் சொல்ல தயாரானான், தாத்தா தப்ப நினைக்காதீங்க எனக்கு எப்போதும் ஷாலினி மீது அப்படி ஒரு எண்ணம் வந்ததில்லை. இனி வரவும் வராது இந்த கல்யாண ஏற்பாட்டுல எனக்கு விருப்பமில்லை என்று பொறுமையாக கூறினான்.

அவன் கூறியதைக் கேட்டு இருவருக்கும் வருத்தமாக இருந்தது. நிச்சயம் ஒத்துக்கொள்வான் என்று அவர்கள் நினைத்திருக்க, அவனோ அந்த எண்ணமே இல்லை, இனி வரவும் வராது என்று கூறிவிட்டான்.

அனைவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். விவேகானந்தர் அந்த அமைதியை  கலைத்தார். பரவாயில்லை செழியா, நடந்தா நல்லா இருக்கும்னு நாங்க நினைச்சோம் உனக்கு விருப்பம் இல்லைனு சொல்லிட்ட, கல்யாணம்னு வந்துட்டா கட்டிக்கபோறவங்க ரெண்டுபேரு விருப்பமும் முக்கியம். நீ ஒன்னும் இதுக்காக வருத்தப்பட்டுட்டு இங்க வராம இருந்துடாத என்று இதமாக பேசினார்.

அவர்கள் மனதை கஷ்டப்படுத்திவிட்டோம் என்று செழியனுக்கு புரிந்தது.  ஆனால் அவனுக்கும் வேறு  வழியில்லை. மேலும் அங்கிருக்க சங்கடமாக இருக்கவே விரைவாகவே கிளம்பிவிட்டான்.

வெளியில் வந்தவுடன் அவந்திகாவுக்கு போன் செய்தவன் அவளுடன்  பேச வேண்டும் என்றும், அவனே வந்து கூட்டி  செல்வதாகவும் கூறினான்.

காரில் ஏறி பத்து  நிமிடமாக அமைதியாகவே வந்தவனை, யோசனையாக பார்த்தவள், தானே பேச்சை ஆரம்பித்தாள். என்னஆச்சு மாமா ஏதாவது பிரச்சனையா  என்றாள்.

அருகில் இருந்த கடைக்கு முன் வண்டியை நிறுத்தியவன், அவளிடம் அம்மு நாம சீக்கிரம் கல்யாணம் செஞ்சிக்கணும்  என்றான்.

அவனை  புரியாமல் பார்த்தவள்  கல்யாணம்னா சந்தோசமான விஷயம் தான் அதை ஏன்  இவ்வளவு சீரியசா சொல்றீங்க என்று கேட்டாள்  அவந்திகா , அவன் அன்று மாலை நடந்ததை அவளிடம் சொன்னான்.

அதைக்கேட்டு புன்னகைத்தவள் டாக்டர் சாருக்கு செம டிமாண்டு போலயே, எனக்கு முதல் நாளே டவுட்டு தான் அத்தான் , பொத்தானு அந்த ஷாலினி உங்ககிட்ட கொஞ்சினப்பவே எனக்கு தெரியும் இப்படி ஏதாவது வரும்னு என்று கூறினாள் அவந்திகா.

அம்மு நான் சீரியசா பேசிட்டுருக்கேன் நீ கிண்டல் பன்ற என்றான் செழியன் . என்ன மாமா இது கல்யாணமாகாத பொண்ணு, பையன், இருந்தா நாலு பேரு கேட்க தான் செய்வாங்க  எங்க வீட்டுக்கு டெய்லி நாலு இப்படி தான் வருது , அதுக்கெல்லாம் டென்சன் ஆனா எப்படி என்றவள்,அவன் முகத்தை கையில் ஏந்தி அப்படியெல்லாம் உங்கள யாரும் என்கிட்டே இருந்து தட்டி பறிச்சிட முடியாது என்றாள்.

அவள் கைகளை தன் கன்னத்தோடு சேர்த்து அழுத்தியவன், ஏதோ தப்பா நடக்கபோகுதுனு ஒருமாதிரி படபடப்பா இருந்துச்சி அதான் உன்னை நேரா பார்க்க வந்தேன் என்றவன், அம்மு ரொம்போ நாள் கல்யாணத்தை தள்ளி போட வேண்டாம் என்றான்.

சம்மதமாய் தலை அசைத்தவள் அவன் தோள் சாய்ந்து மாமா, வரவர உங்களைவிட நான் ஆறு ஏழு மாசத்துக்கு முன்னாடி பிளைட்ல பார்த்த பிளைட் சைடு ரோமியோவை தான் எனக்கு ரொம்போ பிடிச்சிருக்கு. அந்த ரோமியோ நல்லா சிரிக்க சிரிக்க பேசுவான், என்று அவந்திகா சிரிக்காமல் கூறினாள்.

அவள் காதை பிடித்து திருகியவன் வர வர உனக்கு வாய் அதிகமாயிடுச்சி சந்தடி சாக்குல அவன், இவனு சொல்ற என்றான்.

விடுங்க டாக்டர் காது வலிக்குது என்றவள் காதை தேய்த்து கொண்டாள். இருங்க இருங்க என்னோட ரோமியோ கிட்டயே சொல்றேன் என்று விரல் நீட்டி அவனை மிரட்டினாள்.

அவள் விரலை பிடித்து முத்தமிட்டவன் சொல்றப்போ இதையும் சேர்த்து சொல்லு என்றான். இருவரும் இணைந்து நகைத்தனர்.

அதனை சற்று தள்ளி இருந்த காரிலிருந்து ஷாலினி பார்த்துக் கொண்டிருந்தாள், அவளுக்குள் வன்மம் எழுந்தது. அங்கிருந்து நேராக தோழி வீட்டிற்கு சென்றவள், கோபம் அடங்காமல் தோழியிடம் பொரிந்துகொண்டிருந்தாள்.

அதை கேட்ட அவள் தோழி ரியா, ஷாலினி உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு எத்தனையோ மில்லினியர் எல்லாம் உன்னை  கல்யாணம் பண்ணிக்க கியூல நிற்ககுறாங்க,  நீ என்னனா இந்த டாக்டர் பின்னாடி சுத்திட்டுருக்க, என்று தோழியை திட்டினாள்.

உனக்கு புரியாது ரியா எனக்கு சின்ன வயசுல இருந்து செழியனை  தெரியும் எல்லா பசங்களும் என்கிட்டே இருக்குற விலையுர்ந்த  பொம்மைக்காக விளையாட வருவாங்க ஆனால், செழியன் மட்டும் ஒதுங்கியே இருப்பார். அப்போ எல்லாம் நான் அதை பெருசா எடுத்துக்கல மூணு வருசத்துக்கு முன்னாடி தாத்தா என்னை பார்க்க கனடா வந்தப்ப செழியன் கூட வந்திருந்தார்.

சும்மா இல்லை அமெரிக்கால இருக்குற மேஜர் சிட்டில ஹார்ட் ஸ்பெசலிஸ்ட், இங்கே இருக்குற மில்லினியர்ஸ்கிட்ட,  இல்லாத நம்ம நாட்டு ஆண்களுக்கே உரிய மேன்லினஸ்ஸோட இருந்தாரு. எப்போதும் என்னோட அழகுக்கும், பணத்துக்கும் என்னை சுற்றி வர  கூட்டத்தை பார்த்து பழகின எனக்கு, கண்ணு முன்னாடி கல்யாணம் பண்ணிக்கிற முறையோட இருந்த என்னை சலனமே இல்லாம பார்த்த செழியனை ரொம்போ பிடிச்சிருந்தது.

நானா தேடி போய்  பேசினா கூட அளவா  இரண்டு வார்த்தை தான், அதுவும் நேரா கண்ணை பார்த்து தான் பேசுவார். எனக்கு அந்த நிமிர்வும், திமிரும் பிடிச்சிருந்தது. ஏன் நீயே கூட அவரை பார்த்து உனக்கு பெஸ்ட் மேட்ச்னு சொல்லியிருக்க, நீ மட்டும் இல்லை எங்களை சேர்த்து பார்த்த நிறைய பேரு  சொல்லியிருக்காங்க.  எனக்கு செழியன் வேணும் அவரை எதுக்காகவும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

அவர் தான் வேற பெண்ணை லவ் பன்றாரே என்று ரியா கேட்க,

ஹ்ம்ம் என்னோட அடுத்த வேலையே அந்த லவ்வை இல்லாம பண்றது தான். கூடவே அவர் லவ்வுக்கு நான் தான் ரொம்போ சப்போர்ட் பன்றேன்னு செழியனுக்கு ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்த போறேன். இனி செழியனோட வாழ்க்கையில் நடக்குறது எல்லாம் என்னோட விருப்பபடி தான் நடக்கும், என்று  உறுதியாக கூறிய தோழியை பயமாக பார்த்தாள்  ரியா……….

ஷாலினியின் உண்மை முகத்தை அறிந்துகொள்வானா செழியன்…. அறிய தொடர்ந்து வாசியுங்கள்.

-நறுமுகை

No Responses

Write a response