காதல் கொண்டேனடி 13

காதல் கொண்டேனடி 13

அதன் பின் இரு தினங்களில் பூஜாவை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்தனர். குறைந்தது 6 மாதத்திற்கு பூஜாவை வீட்டில் வைத்து பார்த்துக்கொள்வது நல்லது என்று டாக்டர் சொல்லிவிட, மாலினியும் அவந்திகாவும், சேர்ந்து வீட்டை அதற்கேற்ப மாற்றினார். பூஜாவிற்கு பிடித்தவற்றைக் கொண்டு அவள் ரூமை அலங்கரித்தனர். பூஜா வழக்கம் போல் அவந்திகாவுடன் விளையாடிக்கொண்டு, கதை பேசிக்கொண்டு, பொழுதை கழித்தாள். அவந்திகா மீண்டும் முழுநேரம் அலுவலகம் செல்ல தொடங்கினாள்.

பூஜா ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனது முதல் அவந்திகாவும், செழியனும் வெளியில் சென்று சந்திப்பது நின்று போனது . அதுவும் அன்று மாலினியுடன் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு செழியன் அவந்திகாவுடன் பெரிதாக பேசவில்லை .அவனிடம் இன்று கண்டிப்பாக சந்தித்து பேச வேண்டும் என்று நினைத்தவள் அவனுக்கு போன் செய்து எப்போதும் மீட் பண்ணும் காபி ஷாப்புக்கு வர சொன்னாள் .

காபி ஷாப்புக்கு வந்து 20 நிமிடமாக எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் செழியன்.

என்ன ஆச்சு உங்களுக்கு, நீங்க ஒழுங்கா என்கிட்டே பேசி எத்தனை  நாள் ஆகுது தெரியுமா என்று குறைப்பட்டாள் அவந்திகா. நான் பேசாதது உன்னை பாதிக்க போகுதா என்ன, என்று ஒரு மாதிரி குரலில் கேட்டான் செழியன் .

இந்த கேள்விக்கு என்ன அர்த்தம் செழியன், என்று அவந்திகா கேட்க ,

நான் உனக்கு யாரு அவந்திகா, ரயில் சிநேகம் மாதிரியா, சந்தோஷமான விஷயம் மட்டும் தான் என்கிட்டே பேசுவியா, உனக்கு ஒரு பிரச்சனைனா  என்னை நீ தேட மாட்டியா என்று பொரிந்தான் .

உங்க கேள்வி உங்களுக்கே சிரிப்பா இல்லை, எனக்கு என்ன ஆனாலும் உன்கிட்ட தானே சொல்லுவேன் .

அப்படியா அதுதான் மாலினி கூட சண்டை வந்தப்ப எனக்கு போன் பண்ணாமா  சர்ச்சுக்கு போனியா என்று கேட்டான் அர்ஜுன் .

அது சரி உங்க வீட்டைச் சுத்தி செக்யூரிட்டி கேமரா வச்சிருக்கீங்களே அதை எப்பயாவது செக் பண்ற பழக்கமிருக்கா, இருந்திருந்தா இந்த நேரத்துக்கு நான் அன்னைக்கு நைட் உங்க வீட்டுக்கு வந்து கால் மணிநேரமா வீட்டு வாசல்ல உட்கார்ந்திருந்தது தெரிஞ்சிருக்கும்  என்று சொன்னவள் தேங்க்ஸ் பார் காபி என்று கூறி எழுந்து சென்று விட்டாள்.

தனக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் அவள் தன்னை தேட வில்லை என்ற கோபத்தில் அவளிடம் பேசாமலிருந்தவன், அவள் தன்னை தேடி வீட்டிற்கு வந்திருக்கிறாள், அது தெரியாமல் அவளை காயபடுத்திவிட்டோம் என்று அறிந்து வருந்தினான்.

வேகமாக அவள் பின்னால் சென்றவன் கார் பார்க்கிங்கில் அவளை நிறுத்தினான்,சாரி அம்மு நீ எனக்கு போன் கூட பண்ணலன்னு ரொம்போ வருத்தமா இருந்துச்சு. உன்னை காணாம தேடி அலைஞ்சு சர்ச்சுல உன்னை பார்த்ததும், இங்க வந்து தனியா உக்கார்ந்து இருக்கானு கோபம் வந்துடுச்சு. சோ சாரி நீ வீட்டுக்கு போயிருப்பனு  நான் யோசிக்கவே இல்லை என்று தன்பக்க விளக்கம் கொடுத்தான்.

உங்களுக்கு கோபம் வந்தது பிரச்னை இல்லை. அதை ஏன் அப்பவே என்கிட்டே கேட்கலை என்றாள் அவந்திகா.

கோபத்துல உன்னை காயப்படுத்திட கூடாதுனு நினைச்சுத்தான் அமைதிய இருந்த, அப்படி இருந்து இன்னைக்கு உன்கிட்ட கோவமா பேசிட்ட சாரி அம்மு. இனி எப்பவும் இப்படி நடக்காது என்னானாலும் உங்கிட்ட உடனே சொல்லிடற என்று அவள் முகம் பார்த்து கூறினான்.

தான் அவனை தேடவில்லை என்று நினைத்து வந்த கோவம், அவனை தான் முதலில் தேடினேன் என்று சொன்னவுடன் கோவம் போன இடம் தெரியவில்லை என்று நினைத்துக்கொண்டாள் அவந்திகா.

அவனை பார்த்து முறுவலித்தவள் சரி மன்னிச்சுடுறேன், ஆனா தண்டனை உண்டு என்று கூறினாள். தண்டனையா என்று அவன் அலற, ஆமா என்னை கஷ்டப்படுத்தினத்துக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு என்னை பார்க்க வரக்கூடாது , பேசக்கூடாது என்று கூறினாள் . நெக்ஸ்ட் வீக் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். இந்த அளவுக்கு சமாதானம் ஆனாளே என்று நினைத்தவன் அங்கிருந்து கிளம்பினான்.

அன்று ஞாயிற்று கிழமை பொறுமையாக எழுந்து குளித்து கிளம்பி கீழே வந்தனர், அவந்திகாவும், பூஜாவும். மாலினி காலையிலேயே சமையலில் பிசியாக இருந்தாள்.

என்ன மாலு மார்னிங்கே சமையல் தூள் பறக்குது என்று கேட்டாள் அவந்திகா. இன்னைக்கு வீட்டுக்கு ஒரு விருந்தாளி வராங்க என்றாள் மாலினி. கெஸ்டா என்று கோரஸாக கேட்டனர் அவந்திகாவும், பூஜாவும்.  அப்போது தான் அவர்களை திரும்பி பார்த்த மாலினி, இருவரும் வெளியே கிளம்ப ரெடியாக வந்திருப்பதை கவனித்தாள்.

இரண்டு பேரும் எங்க கிளம்பிட்டிங்க என்றாள், இன்னைக்கு சண்டே சோ டிரைவ் போக போறோம் என்றாள் பூஜா .

இன்னைக்கு யாரும் எங்கயும் போகல, நீயும் உன்னோட அத்தையும் வீட்லையே விளையாடுங்க என்றவள் வேலையை பார்க்க தொடங்கினாள். கெஸ்ட் வந்துட்டு போற வரைக்கும் என்னை கூப்பிடாத மாலு, கூப்பிட்ட, பிச்சிபுடுவேன் பிச்சி என்று அவந்திகா கூற , அவளைப்  போலவே தன்  அன்னையை பார்த்து பிச்சிபுடுவேன் பிச்சி என்று விரல் நீட்டி மிரட்டிவிட்டு ஓடினாள் பூஜா.

பூஜாவும் அவந்திகாவும் சிறிது நேரம் படம் வரைந்தனர், பூஜாவுக்கு அது போர் அடிக்கவே இருவரும் பிசினஸ் கேம் விளையாட தொடங்கினர் . ஒரு மணிநேரம் முடிந்திருந்த நிலையில் இருவரும் பிசினெஸ் கேமில் எல்லா பணத்தையும் செலவு செய்துவிட்டு இப்போ என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

பூஜாவோ அத்தை நம்ம பேங்க் தானே நாம கொஞ்சம் பணம் எடுத்துட்டு அப்புறம் திருப்பி வச்சிடலாம் என்றாள், பூஜா குட்டி நம்ம பேங்க்கா இருந்தாலும் அப்படி பணமெல்லாம் எடுக்கக்கூடாது என்று அவந்திகா சொல்லிக்கொண்டிருக்க யாரோ தொண்டையை கனைக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தனர். ரூம் கதவில் சாய்ந்து நின்று இவர்களை பார்த்து புன்னகைத்தான் செழியன்.

மாமா, என்று அவனிடம் ஓடிச்சென்றாள் பூஜா, அவளை தூக்கி அனைத்துக் கொஞ்சியவன் பூஜா நீ இப்படி ஓடி வரக்கூடாது என்றான். ஓகே என்று தலை ஆட்டி கேட்டுக்கொண்டாள் பூஜா .

அவந்திகா, இவர்தான் மாலினி சொன்ன கெஸ்டா என்று நினைத்து கொண்டுஇருக்க, மாலினி கீழிருந்து பூஜாவை அழைத்தாள், மெதுவாக செல்லுமாறு கூறி பூஜாவை அனுப்பினான் செழியன். பின் அவந்திகாவிடம் சென்றவன் என்னை பார்த்து பூஜா குடுத்த ரியாக்ஷன்ல பாதியாவது உன்கிட்ட இருந்து எதிர் பார்த்தேன் என்றான்.

அவள் அவனை அணைத்து மார்பில் முகம் புதைத்து மிஸ் யூ மாமா என்றாள். அவளை தன்னோடு சேர்த்து அனைத்தவன் மிஸ் யூ டூ அம்மு இனிமேல் இந்த மாதிரி பனிஷ்மென்ட் எல்லாம் கொடுக்காதே என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் நீங்களும் இனி இப்படி செய்யாதீங்க என்றாள், கண்டிப்பா மாட்டேன் என்றவன், கெஸ்ட் வந்தா கீழே கூப்பிட கூடாதுன்னு சொன்னியாமே இப்போ எப்படி மேடம், என்கூட கீழே வருவீங்களா  என்று கேலி குரலில் கேட்டு அவளிடம் இருந்து இரண்டு அடிகளை பெற்று கொண்டான்.

பின் கீழே சென்றவர்கள் மாலினியுடனும் ராஜ்யுடனும் பேசிக்கொண்டே சாப்பிட தொடங்கினர்.

சிஸ்டர்  புட் எல்லாம் சூப்பர் , உங்க பிரெண்டுக்கு கொஞ்சம் சமையல் கத்து கொடுங்க என்று செழியன் சொல்ல, மாலினியோ ,நீங்க தான் கத்துக்கணும் அண்ணா, மேடம்க்கு கிச்சனாலே அலர்ஜி என்று கூறினாள்.

ஒன்னும் பிரச்னை இல்லை இப்போ ஒருத்தருக்கு புட் வாங்குறேன் இனி இரண்டு பேருக்கு வாங்க வேண்டியது தான் என்று கூற அனைவரும் சிரித்தனர். நல்ல ஐடியா உங்களுக்கு சமைச்சி கொடுக்கறவங்க சூப்பரா சமைக்குறாங்க எனக்கு ஓகே என்றாள் , அவந்திகா .

நம்ம எதிர்காலம் பிரகாசமா இருக்கும் அம்மு, என்று செழியன் கூற அங்கு சிரிப்பலை கிளம்பியது. ஒருவழியாக பேச்சுக்கிடையே சாப்பிட்டு முடித்து அனைவரும் அமர்ந்து அவந்திகாவும்,பூஜாவும் விளையாடிக்கொண்டிருந்த பிசினெஸ் கேம்மை விளையாட தொடங்கினர்.

பேச்சும் கேலியும் கிண்டலுமாக விளையாடி கொண்டிருந்தவர்களை செழியன் போன் பாடி கலைத்தது. யாரு இந்த நேரத்தில் என்று நினைத்து கொண்டு போனை எடுத்தவன் , விவேகானந்தர் எண்ணை  பார்த்ததும் அட்டென்ட் செய்து பேசினான் . அவர் அவனை அன்று மாலை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். பொதுவாக அவர் காரணமில்லாமல் அழைக்கமாட்டார் என்பதால் அவனும் வருவதாக கூறி போனை வைத்தான்.

அங்கு செழியனுக்கு காத்துக்கொண்டிருப்பது என்ன?  அறிய தொடர்ந்து படியுங்கள் ………..

-நறுமுகை

No Responses

Write a response