காதல் கொண்டேனடி-12

காதல் கொண்டேனடி-12

மாலினி அவந்திகாவை தேடி முன்பக்க தோட்டத்திற்கு சென்றாள், அவளை அங்கு பார்த்த அவந்திகா என்ன ஆச்சு மாலு நீ இங்க வந்திருக்க, அண்ணா வீட்டுல இருந்து வந்துட்டாரா என்றாள்.

இல்லை நான்தான் உங்கிட்ட கொஞ்சம் பேசலானு இங்க வந்த பூஜாவ நர்ஸ்கிட்ட பாத்துக்கு சொல்லிட்டு வந்திருக்கேன் என்றாள் மாலினி,

என்கிட்ட பேசனுமா என்ன விஷயம் மாலு என்று அவந்திகா கேட்க,

அதை நீதான் சொல்லனும் அவந்திகா என்கிட்ட நீ மறைக்குற விஷயம் என்ன என்றாள் மாலினி,

மாலினியின் அவந்திகா என்ற அழைப்பு, அவந்திகாவிற்கு விஷயம் ஏதோ பெரிதென்று சொல்லியது,

என்னனு நீ சொன்னதானே தெரியும் என்ற அவந்திகாவை முறைத்து பார்த்த மாலினி டாக்டர் செழியன் யாரு என்று நேரடியாக கேட்டாள்,

மாலினிக்கு எப்படி தெரிஞ்சிது என்று ஒரு நிமிடம் யோசித்த அவந்திகா இனி மறைத்து பயனில்லை என்று நினைத்து அவளிடம் செழியனை முதல் நாள் பார்த்தது முதல் அனைத்தையும் சொன்னாள்.

இவ்வளோ நடந்திருக்கு என்கிட்ட சொல்லனுனு உனக்கு தோணவே இல்லல என்ற மாலினி இனி என்கிட்ட பேசாத என் மூஞ்சுலயே முழிக்காத என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவந்திகாவால் தன் காதுகளில் விழுந்த வார்த்தைகளை நம்பவே முடியவில்லை, சிறுவயது முதல் உடன் வளர்ந்த தோழி, சுகம், துக்கம் அனைத்திலும் கூட இருந்தவள் இன்று தன் பக்க விளக்கத்தை கூட கேட்காமல் சென்றது அவளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவளை மீறி கண்களில் வழிந்த நீரை துடைத்தவள் அங்கயே அமர்ந்துவிட்டாள்.

மாலினியும், அவந்திகாவும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு பார்கிங்கில் இருந்து அவர்களை நோக்கி வந்த ராஜ், மாலினி கூறிய கடைசி வார்த்தைகளை கேட்டு அங்கையே நின்றுவிட்டான். மாலினி வேகமாக சென்றுவிட அவந்திகாவிடம் தான் பேசுவதை விட மாலினியை அழைத்து வந்து பேசுவதுதான் சரி என்று நினைத்து அவன் மாலினி பின்னாடியே ரூமிற்கு சென்றான்.

அங்கு மாலினி கோவம் அடங்காமல் அமர்ந்திருக்க, ராஜ் அவளிடம் எப்ப அவந்திகா வீட்டை விட்டு போக போற என்று கேட்டான். என்ன உளறீங்க அவ எதுக்கு வீட்டை விட்டு போகனும் என்றாள் மாலினி, உன்கூட பேச கூடாது, உன்னோட மூஞ்சுலயே முழிக்க கூடாதுன்னு நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம், ஒரே வீட்டுல இருந்துகிட்டு எப்படி பாக்காம பேசாம இருக்க  முடியும் என்றான்.

சத்தியமா நான் அந்த அர்த்தத்துல சொல்லலீங்க, அவ, அவ எப்படிங்க என்கிட்ட மறைச்ச இது வரைக்கும் நான் அவகிட்ட எதாவது மறச்சிருக்கனா, அவ்வளோ ஏன் நான் கன்சீவ் ஆனது கூட முதல்ல அவகிட்டத்தானே சொன்ன, என்கிட்ட எப்படிங்க அவளுக்கு மறைக்கனுனு தோனுச்சு, யாரோ ரெண்டு பேரு பேசுறதை ஒட்டுக்கேட்டு தெரிஞ்சுக்கிட்ட எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா, அவ லவ்வுக்கு நான் சப்போர்ட் பண்ண மாட்டனா, எப்படி அவளுக்கு என்கிட்ட பொய் சொல்ல முடிஞ்சுது என்று கேட்டு அழுத மனைவியை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான் ராஜ்.

ஆனால் அவன் மனதில் அவந்திகா இதை மறைத்ததற்கு கண்டிப்பாக கரணம் இருக்கும் என்று தோன்றியது, அவர்கள் காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து அவனுக்கு அவந்திகாவை தெரியும், அவந்திகாவிற்கும், மாலினிக்கு இருக்கும் நட்பு தெரியும் கண்டிப்பாக அவள் மாலினியிடம் தான் முதலில் சொல்லவேண்டும் என்று நினைப்பாள், அதை மீறி அவந்திகா மறைத்திருக்கிறாள் என்றாள் அதற்கு வலுவான காரணம் இருக்கவேண்டும் என்று நினைத்தான்.

அப்போது அங்கு வந்த செழியன், அவந்திகா உங்ககிட்ட மறைச்சதுக்கு என்கிட்ட காரணம் இருக்கு கேக்குறீங்களா என்றான். அந்த நேரத்தில் அவர்கள் செழியனை அங்கு எதிர் பாக்கவே இல்லை, மாலினி அமைதியாக இருக்க, என்ன காரணம் ஏன் அவந்திகா எங்ககிட்ட மறைச்ச என்று ராஜ் கேட்க,

 அதை நான் சொல்றதை விட அவந்திகா சொன்ன இன்னும் பெட்டர்ரா இருக்கும் என்றவன் போனில் ஒரு ஆடியோவை பிலே பண்ணினான். அது செழியனும், அவந்திகாவும் போனில் பேசிக்கொண்ட உரையாடல்,

 மேடம் இன்னைக்கு நீங்க ஒத்திகை பார்க்கலயா என்றான் செழியன்,

என்ன டாக்டர் கிண்டலா நானே அவகிட்ட போய் மாலு நான் ஒருத்தர லவ் பண்றனு எப்படி சொல்றதுனு மண்டைய பிச்சிகிட்டு இருக்க நீங்க என்ன கிண்டலா பண்றீங்க என்றாள் அவந்திகா,

வாய்  விட்டு சிரித்த செழியன் எல்லாரும் ப்ரண்ட் கிட்டதான்  ஈசியா சொல்லுவாங்க நீ அதுக்கே இப்படி யோசிக்குற உன்னோட வீட்டுல எப்படி சொல்ல போறியோ என்றான்.

அவ ப்ரண்ட்டா மட்டும் இருந்திருந்தா எப்பவோ சொல்லி இருப்ப மாமா, அவ பேமிலி நான் யூ எஸ் வரனுனு கேட்டப்ப எங்க தாத்தா இங்க யாரெல்லாம் இருக்காங்கனு விசாரிச்சாரு நான் மாலு இங்க இருக்குறத சொன்னவுடனே அவரு வேற கேள்வியே கேட்கலை, அவ இருக்குற ஊருல  வேலை கிடைச்ச போனு சொல்லிட்டாரு, அதுக்கப்புறம் 6 மாதம் வெயிட் பண்ணி ராஜ் அண்ணா நிறைய இடத்துல ட்ரை பண்ணி எனக்கு இங்க வேலை கிடைச்சுது.

மாலினியை எங்க வீட்டுல இருக்க எல்லாருக்கும் சின்ன வயசுல இருந்து தெரியும், நான் ஊருல இருந்து வரப்ப எனக்குவிட அவளுக்குத்தான் அதிகமா பொருள் குடுத்துவிட்டாங்க எங்க அம்மா, இப்பவும் நான் எனக்கு எதாவது வேணுன்னு கேட்டு பார்சல் அனுப்புனா அதுல மாலினிக்கு பூஜாவுக்கு டிரஸ் இல்லாம எங்கவீட்டுல அனுப்பமாட்டாங்க.

மாலினியை நம்பித்தான் அவங்க அங்க நிம்மதியா இருக்காங்க,இப்ப போய் நான் மாலினிகிட்ட நம்ப விஷயம் சொன்ன அவ கண்டிப்பா எனக்குத்தான் சப்போர்ட் பண்ணுவ, அதுவே நாளைக்கு அவளை என்னோட வீட்டு ஆளுங்க முன்னாடி துரோகிய காட்டிடும், அவளுக்கு துரோகி பட்டம் வாங்கிக்குடுக்குறதுக்கு பதிலா நான் அவகிட்டயும் உண்மையை மறச்சிட்டா எல்லாரும் என்னையே திட்டிட்டு போகட்டும்.

என்ன மாலினி தெரிஞ்சதும் சண்டை போடுவா அப்புறம் அவளே உங்ககூட சேந்துக்கிட்டு என்ன நல்ல ஓட்டுவ நானும் ராஜ் அண்ணாவும் அவளை இப்ப ஓட்டுற மாதிரி என்று கூறி சிரித்தாள் அவந்திகா. அதோடு அந்த ஆடியோ முடிந்திருந்தது.

ராஜ்க்கு அதை கேட்டு கண் கலங்கியது, இப்படி அவசரப்பட்டு அவந்திகாவை காயப்படுத்திட்டோமே என்று தன்னையே நொந்துகொண்டாள் மாலினி.

ஹாஸ்பிடல்ல என்னோட சீனியர் டாக்டர் கிட்ட நான்தான் சொன்ன, உங்ககிட்ட மற்ற டாக்டர்ஸ் வந்து சொல்லி நீங்க பயப்படுறத விட நான் சொன்ன பெட்டர்ரா இருக்குனு அவந்திகா பீல் பண்ண, அதோட நம்ப ஊர் ஆள் ஒருத்தர் இருக்காரு அப்படினு உங்களுக்கும் கொஞ்சம் நிம்மதிய இருக்குனு தான் ஸ்பெஷல் பெர்மிசன் வாங்கி எல்லா செஞ்ச, நான் அவந்திகாவ பார்க்கத்தான் வந்தேன் நீங்க பேசுறத கேட்டதும் என்னாலதான் பிரச்சனைனு புரிஞ்சது சாரி, என்றவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

செழியன் சென்றதும் அவன் கண்டிப்பாக அவந்திகாவை பார்க்கத்தான் செல்வான் என்று நினைத்து மாலினியும், ராஜும் அவன் பின்னாடியே சென்றனர். ஆனால் அவந்திகா எப்போதும் அமர்ந்திருக்கும் இடத்தில் அவள் இல்லை, செழியன் அவளுக்கு போன் செய்ய அது சுவிட்ச் ஆப் என்று சொன்னது, அதற்குள் மாலினியும், ராஜும் அங்கு வர செழியன் அவர்களிடம் அவந்திகா எங்கே என்று கேட்டான்.

தான் அறைக்கு செல்லும்போது அவந்திகா இங்குதான் அமர்ந்திருந்தாள் என்று ராஜ் சொல்ல, செழியனிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, மூவரும் ஆளுக்கொரு பக்கமாக ஹாஸ்பிடல் முழுவதும் தேடினர், எங்கு தேடியும் அவள் இல்லை, மாலினியை ஹாஸ்பிடலில் விட்டுவிட்டு ராஜும், செழியனும் ராஜ் வீட்டிற்கு சென்று பார்த்தனர் அவள் அங்கேயும் இல்லை, போனில் ராஜ் சொன்னதைக்கேட்டு மாலினி உடைந்து அழ தொடங்கினாள் தன்னால் தான் இது நேர்ந்தது என்று அவள் மிகவும் நொந்துபோனாள்.

சிறிதுநேரம் என்ன  செய்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தனர், அப்போது செழியனிற்கு, அவந்திகா தனக்கு மிகவும் வேலை ஸ்ட்ரெஸ் இருந்தால் தான் செல்லும் ஒரு இடம் பற்றி கூறியது நியாபகம் வந்தது, அது ஒரு சர்ச் அருகில் இருக்கும் சிறு குளம் அதை சுற்றி அழகான பூ செடிகளும் வருவோர் அமர்வதற்கு சில பெஞ்சிகளும் போட்டிருக்கும். அந்த இடமே எப்போதும் மிகவும் அமைதியாக இருக்கும்.

செழியன் அந்த இடத்தை பற்றி சொன்னதும், ராஜிற்கு எந்த இடம் என்று புரிந்துவிட்டது மூவரும் உடனே அங்கு புறப்பட்டு சென்றனர், செழியன் நினைத்ததைப்போல அவள் அங்குதான் இருந்தாள், வேகமாக அவள் அருகில் போன மாலினி அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள், என்னடி நினைச்சுகிட்டு இருக்க மனசுல நான்தான் கோவத்துல ஏதோ சொல்லிட்ட உடனே நீ யார்கிட்டயும் சொல்லாம இங்க வந்திருவியா, 2 மணிநேரமா எல்லாரும் உன்ன தேடுறோம் என்று பொரிந்து தள்ளினாள்.

உனக்குத்தான் என்கிட்ட பேச என்ன பார்க்க பிடிக்கலையே அப்புறம் எதுக்கு என்ன தேடுனா என்றாள் அவந்திகா, அப்படியே இன்னொன்னு போட்டன பாரு உன்ன பத்தி ஒரு விஷயம் யாரு பேசி அதுமூலம எனக்கு தெரிஞ்ச எனக்கு கோவம் வராத, அந்த கோவத்துல ஏதோ சொல்லிட்ட நீ திரும்ப என்கிட்ட வந்து சண்டைபோட வேண்டியதுதானே என்றாள் மாலினி,

நான் இந்த விஷயம் உனக்கு தெரியவே கூடாதுனு நினைத்தேன் என்றாள்  அவந்திகா, ஹ்ம்ம் தெரியும் நீ என்கிட்ட எதுக்கு மறைச்சனு காரணம் தெரியும் என்றவள், அவந்தி எனக்கு நீதான் முக்கியம் உனக்கு சப்போர்ட் பண்ணாம எல்லார்கிட்டயும் நல்ல பேர் வாங்கி நான் என்ன செய்யப்போற என்ற மாலினியை அணைத்துக்கொண்டாள் அவந்திகா.

ஒருவழியாக தோழிகள் பேசி சமாதானம் ஆக அப்பொழுதுதான் செழியனை பார்த்தாள் அவந்திகா நீங்க எங்க இங்க என்று கேட்க, பரவலையே என்ன கூட உனக்கு கண்ணு தெரியுது என்றான் செழியன்,

கோவமா, சாரி என்றவளை முறைத்தவன் உன்ன பார்த்தவுடனே அறையனுனு நினைச்ச எனக்குபதிலா சிஸ்டர் அடிச்சிட்டாங்க என்றான்,

என்ன அடிக்க தான் 2 மணிநேரமா தேடுறீங்களா அப்ப நான் உங்க கூட வரலை என்றவளை பார்த்து செழியன் முறைக்க சரி சரி மீதி சண்டையை ஹாஸ்பிடலில் போய் போடலாம் பூஜா தனியா இருக்க என்று கூறி அவர்களை அங்கிருந்து அழைத்து சென்றான் ராஜ்.

இவர்கள் அங்கிருந்து செல்ல அதுவரை அவர்களை மறைவில் இருந்து கவனித்து கொண்டிருந்த உருவம் வெளியில் வந்தது. நீங்க நெனைக்குறது நடக்காது செழியன் உங்க ரெண்டு பேரையும் நான் பிரிக்கிறேன் என்று தனக்குள் கருவிக்கொண்ட அந்த உருவம் வேற யாரும் இல்லை விவேகானந்தன், மேகலா தம்பதியினரின் பேத்தி ஷாலினி.

ஷாலினியால் அவந்திகா செழியன் வாழ்க்கையில் வரப்போகும் திருப்பங்கள் என்ன? அறிய தொடர்ந்து வாசியுங்கள்…

-நறுமுகை

No Responses

Write a response