காதல் கொண்டேனடி-11

காதல் கொண்டேனடி-11

இந்த பாகத்தில் ஹாஸ்பிடலில் நடக்கும் ஆங்கில உரையாடல்கள் உங்களுக்காக தமிழில்

அதன்பின் வந்த நாட்கள் பூஜாவிற்கு நிறைய பரிசோதனைகள் எடுக்கப்பட்டு அவளுக்கு சர்ஜெரி  செய்தாகவேண்டும் என்று மருத்துவர் குழு முடிவு செய்தது. அவந்திகா பெரும்பாலும் மருத்துவமனையில் இருந்தே வேலை செய்தாள், மாலினி பூஜாவை விட்டு எங்கும் நகரவில்லை எனவே அவர்கள் அங்க இருந்த நாட்கள் எல்லாம் அவர்களுக்கான உணவை செழியனே கொண்டுவந்தான். அவந்திகா மூலம் பூஜா செழியனோடு இயல்பாக பேசி பழகினாள், அவன் உடன் இருந்தால் எந்த பரிசோதனைக்கு சரி என்று சொல்லுமளவுக்கு பூஜாவும் செழியனும் ப்ரண்ட் ஆகிருந்தனர்.

பூஜாவிற்கு சர்ஜெரி தேதி முடிவு செய்த பின்னர் மாலினி மிகவும் பயந்து போனாள், செழியனும் அவந்திகாவும் அவளை சமாதான படுத்தினர். விடிந்தால் பூஜாவிற்கு சர்ஜெரி, மாலினி ராஜிடம் புலம்பிக்கொண்டே இருந்தாள். அவர்களை தொந்தரவு செய்யாமல் அவந்திகா ஹாஸ்பிடல் முன்னாடி இருக்கும் தோட்டத்தில் வந்து அமர்ந்தாள், அவளுக்கும் உள்ளுக்குள் பயமாகத்தான் இருந்தது . மாலினி டெலிவரிக்கு இந்தியா வந்திருந்தாள் எனவே பூஜா பிறந்தது முதல் அவந்திகாவிற்கு அவளை தெரியும். பூஜாவின் 2வது வயதில் அவந்திகா மாலினி வீட்டிற்கு வந்தால் அது முதல் பூஜாவும் அவந்திகாவும் அதிகப்படியான நேரம் ஒன்றாகத்தான் இருந்தனர்.

தன் முன்னால் சிரித்து பேசி விளையாடி வளர்ந்த குழந்தை இன்று இப்படி படுத்திருப்பது அவளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது, பூஜாவை பற்றி நினைத்து கொண்டிருந்த அவந்திகாவிற்கு அவளை மீறி கண்களில் கண்ணீர் வடிந்தது, அவள் அதை கூட உணராமல் அமர்ந்திருக்க ஒரு கரம் நீண்டு அவளது கண்ணீரை துடைத்தது. தன் கன்னத்தில் பட்ட  ஸ்பரிசத்தில் திடுக்கிட்டு பார்த்தவள் தன் முன் நின்றிருந்த செழியனை கண்டு அவசரமாக கண்ணீரை துடைத்தாள்.

இங்க என்ன பண்ணிட்டிருக்க அம்மு என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் அமர்ந்தான்.

அவன் கைபிடித்து அவன் தோள் சாய்ந்தாள், அவள் வேதனை புரிய அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டான்.

அம்மு நீயே இப்படி மனசொடிஞ்சு போன மாலினிக்கு யாரு தைரியம் சொல்றது என்றான் செழியன்,

நான் அவ முன்னாடி காட்டிக்க கூடாதுனுதான் இங்க வந்து உக்காந்திருக்க என்றாள்,

அப்ப எனக்காவது போன் பண்ண வேண்டியதுதானே இப்படி தனியா உக்காந்து அழுதுட்டு இருக்க என்று குரலில் சிறு கண்டிப்புடன் சொன்னான் செழியன்,

உங்களுக்கு நாளைக்கு சர்ஜெரி இருக்கு உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டான்னு நினச்சேன் என்றாள்.

என்ன பேச்சிது நீ எனக்கு தொந்தரவா, நான் எப்பாவது அப்படி சொல்லி இருக்கனா, என்றான்.

இல்லை என்பதாக தலையை அசைத்தவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள், அப்போது அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.  மாமா, நாளைக்கு பூஜாவுக்கு எதுவும் என்று சொல்லமுடியாமல் நிறுத்தினாள், அவள் முகத்தை கையில் ஏந்தியவன் அவந்தி நம்ப பூஜாவுக்கு எதுவும் ஆகாது, இந்த சர்ஜெரி எல்லாம் இங்க ஒரு விஷயமே இல்லை, என்ன நீ நம்புறது உண்மைனா இனி நீ அழுகவே கூடாது என்று சற்று அழுத்தமாக சொன்னான்.

அவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தவள், நான் இனி அழ மாட்ட நீங்க கிளம்புங்க என்றாள். அவளுடன் அறைவரை சென்று ராஜ், மாலினி இருவரிடமும் பேசி விட்டு சென்றான் செழியன்.

அடுத்தநாள் 5 மணிநேர சர்ஜெரி அவர்களுக்கு 5 யுகமாக கழிந்தது. பூஜா சர்ஜெரிக்கு செல்வதற்குமுன் அவந்திகாவிடம் அத்தை நான் டாக்டர் மாமா சொல்றதெல்லாம் கேட்குறதானே அப்ப நான் குட் கேர்ள் தான என்றாள்.

ஆமாடா நீ ரொம்போ குட் கேர்ள் என்றால் அவந்திகா, அப்ப எனக்கு இந்த தடவை ஹாலோவீன்க்கு நான் கேட்ட பிரின்செஸ் டிரஸ் வாங்கித்தறீங்களா என்றாள், அவளது நெற்றியில் முத்தமிட்ட அவந்திகா கண்டிப்பா வாங்கித்தர என்று சொல்ல குழந்தை சிரிப்புடனே சர்ஜெரிக்கு சென்றாள். அதை நினைத்து கொண்டிருந்த அவந்திகாவிற்கு அவள் அதே சிரிப்போடு தங்களிடம் திரும்பிவிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டள்.

அனைவரின் வேண்டுதலுக்கு பதிலாக சர்ஜெரி சக்ஸஸ் இனி கவலைப்பட ஒன்றும் இல்லை என்று அவர்களிடம் சொன்னான் செழியன். ராஜும், மாலினியும் அவனுக்கு நன்றி சொல்ல செழியன் எனக்கு எதுக்கு நன்றி எல்லாம் நான் எதுவும் தனியா செய்யலை என்றவன், இனி நீங்க அழுறதுக்கு அனுமதி கிடையாது சிஸ்டர் என்று மாலினியிடம் கூறினான். இனி அழுக மாட்ட அதுதான் நீங்க எங்க பூஜாவை காப்பாற்றி குடுத்துடீங்களே என்றால் மாலினி. அவந்திகா எதுவும் சொல்லாமல் செழியனையே பார்த்து கொண்டிருந்தாள் அவளுக்கு அவனை அணைத்துக்கொள்ளவேண்டும் போல் இருந்தது. மாலினி மற்றும் ராஜிடம் பேசிக்கொண்டே செழியனும் அவ்வப்போது அவந்திகாவை பார்த்துக்கொண்டுதான் இருந்தான். இருவருமே இருக்கும் இடம் கருதி எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

பூஜா அன்று முழுவதும் ஐ சி யுவில் இருக்கவேண்டும் என்று கூறிய செழியன் அவர்கள் பூஜாவை கண்ணாடி வழியே பார்க்க ஏற்பாடு செய்தான். மறுநாள் காலை அறைக்கு மாற்றப்பட்ட பூஜா கண்திறந்து பார்த்த பின்னே அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது. இன்னும் ஒரு வாரம் பூஜா ஹாஸ்பிடலில் இருக்கவேண்டும் என்று செழியன் கூறியதால், மாலினி பூஜாவை அவந்திகாவிடம் விட்டுவிட்டு பூஜாவிற்கு சமைத்து எடுத்து வர வீட்டிற்கு சென்றாள்.

 அவந்திகா பூஜாவோடு பேசிக்கொண்டே அலுவலக வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள், அப்போது பூஜா அத்தை அந்த டாக்டர் மாமா உங்க ப்ரண்ட்ட என்று கேட்டாள், அந்தசமயம் பூஜாவை பார்க்க வந்த செழியன் அவளது கேள்வியை கேட்டு அறைவாசலிலே நின்று விட்டான்.

அதற்குள் அவந்திகா ஏன்டா குட்டி கேக்குற என்றாள்,

இல்லை உங்க ப்ரண்ட் இல்லைனா நம்ப ப்ரண்ட் ஆகிக்கலாமா என்றாள் பூஜா,

அப்படியா சொல்ற நான் கூட உன்ன ஹாஸ்பிடல்ல இருக்கவெச்சுட்டாரு உனக்கு பிடிக்காதுனு நினைச்ச என்றாள்.

அவளை பார்த்து சிரித்த பூஜா, அத்தை அவரை ப்ரண்ட்ட வெச்சுகிட்டு எனக்கு இன்ஜெக்ஷன் போட மாட்டாரு, பில்ஸ் சாப்பிட சொல்ல மாட்டாரு ஜாலி தான என்றாள்,

அவள் கூறியதை கேட்டு சிரித்த அவந்திகா அப்ப சரி வரட்டும் நம்ப ப்ரண்டு புடிச்சிடுவோம் என்று சொல்லிக்கொண்டிருக்க உள்ளே வந்தான் செழியன்.

அவன் எதுவும் தெரியாத மாதிரி பூஜாவை செக் செய்ய பூஜாவோ, அவந்திகாவிற்கு ஜாடை கட்டி செழியனிடம் பேச சொன்னாள், அவர்கள் ரகசியமாக பேசிக்கொள்வதை பார்த்து உள்ளுக்குள் சிரித்து கொண்ட செழியன் என்ன பூஜா உங்க அத்தை என்ன சொல்ராங்க என்று கேட்டான். அவன் அப்படிக்கேட்கவும் பூஜா அவனிடம் மாமா, அத்தைக்கு உங்ககூட  ப்ரண்டு ஆகணுமா என்று மாற்றி சொன்னாள், என்னது நான் கேட்டன என்று அவந்திகா ஷாக் ஆக,செழியனோ இன்னுமா உங்க அத்தை என்கூட ப்ரண்டு ஆகலை என்று கேட்டான்.

பூஜாகூட யாரெல்லாம் ப்ரண்டோ அவங்க எல்லாம் எனக்கும் ப்ரண்டு என்று கூறி பூஜாவிடம் விடைபெற்ற செழியன் அவந்திகாவை பார்த்து புன்னகைத்து விட்டு சென்றான் இந்த சிரிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று மனதுக்குள் அவனுக்கு பழிப்பு காட்டினாள் அவந்திகா. சிறிதுநேரம் கழித்து அவளுக்கு அவனிடம் இருந்து மெசேஜ் வந்தது வேற எதுக்கும் குறைச்சல் இல்லை மேடம் என்று, ஒரு நிமிடம் குழம்பியவள் பின் அது தான் மனதில் நினைத்துக்கான பதில் என்று புரிந்து சிரித்துக்கொண்டாள்.

அன்று இரவு பூஜா உறங்கியபின் வழக்கம் போல அவந்திகா ஹாஸ்பிடல் தோட்டத்தில் நடக்க சென்று விட மாலினி மட்டும் அறையில் தனியாக இருந்தாள், ராஜ் வீடு வரை சென்றிருந்தான். மாலினியும், ராஜும் அவந்திகாவை வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்க சொல்லியும் அவள் பூஜாவுடன் தான் இருப்பேன் என்று கூறிவிட்டாள். அவந்திகா வருவதற்கு காத்திருந்த மாலினி அறையில் தண்ணீர் இல்லாததை பார்த்து தண்ணீர் எடுக்க வெளியில் சென்றாள், அப்போது அங்கு இரண்டு நர்ஸ் பேசிக்கொள்வதை எதர்ச்சியாக கேட்கநேர்ந்தது.

செழியன் சார் மேரேஜ் பண்ணிக்கப்போற பொண்ணு ரொம்போ அழகு ரெண்டு பேரும் சூப்பர் ஜோடி என்றார் ஒரு நர்ஸ், கூட இருந்த நர்ஸ் யாரை சொல்ற அந்த பூஜா கூட இருக்காங்களே அவங்கள என்று கேட்க, மாலினி அதிர்ந்து போய் அந்த உரையாடலை கவனித்தாள். ஆமா உனக்கு தெரியாத செழியன் சார் டாக்டர் ஜேசன் கிட்ட சொல்லி இருக்காரு அதுனாலதான் 3 வீக்ஸ்ஸ அவரு எல்லா நாளும் ஹாஸ்பிடல் வராரு என்றார் . எனக்கு சந்தேகம் இருந்துச்சு, நல்ல மேட்ச் ரெண்டு பேருக்கும் என்று சொன்ன நர்ஸ் பின் வேற விஷயம் பேச தொடங்கினர்.

மாலினியால் இதை நம்பவே முடியவில்லை,ஆனால் நடந்தவைகளையெல்லாம் யோசித்து பார்த்தால் அது உண்மை என்று புரிந்தது. செழியன் தவிர வேறு டாக்டர்ஸ் அவர்களிடம் எந்த விஷயமும் சொல்ல மாட்டார்கள், 2 வாரம் அவர்களுக்கு அவன்தான் உணவு கொண்டுவந்து கொடுத்தான், அவந்திகாவால் தான்  பூஜா செழியனோடு நன்றாக பேசி பழகினாள், செழியன் எப்பொழுதும் மாலினியை சிஸ்டர் என்றுதான் அழைப்பான், இப்படி பலதையும் யோசித்த மாலினிக்கு புரிந்தது ஒன்றுதான் அவந்திகாவிற்கும், செழியனுக்கும் நல்ல பழக்கம் உண்டு. இது காதலா? காதலாக இருந்தால் ஏன் அவந்திகா இதை தன்னிடம் மறைத்தாள் என்று மாலினி குழம்பிப்போனாள்.

மாலினி இதை பற்றி அவந்திகாவிடம் பேச காத்துக்கொண்டிருந்தாள், மாலினி தவிர மற்றொருவருக்கு செழியன் அவந்திகா விஷயம் தெரியவந்தது, யார் அந்த நபர்? மாலினி அவந்திகா காதலை ஆதரிப்பாள,அந்த மற்றொரு நபரால் அவந்திகா செழியன் வாழ்க்கையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன அறிய தொடர்ந்து வாசியுங்கள்…….

No Responses

Write a response