காதல் கொண்டேனடி-10

காதல் கொண்டேனடி-10

தனி தனியே புளோரிடா சென்ற செழியனும், அவந்திகாவும் ஒன்றாக சியாட்டில் வந்து சேர்ந்தனர். ராஜ் வெளியூர் சென்றிருந்ததால் அவந்திகா அவளாகவே வீட்டிற்கு வந்துவிடுவதாக மாலினியிடம் சொல்லி இருந்தாள். செழியன் அவனது காரை ஏர்போர்ட்டில் விட்டுவிட்டு வந்திருந்தான்,எனவே அவந்திகா அவனுடனே வீட்டிற்கு கிளம்பினாள்.

பிளைடில் சிரித்து பேசிக்கொண்டு வந்தவள் காரில் அமைதியாக வருவதை பார்த்தவன், என்ன ஆச்சு அம்மு இவ்வளோ அமைதியா வர என்று கேட்டான்.

மாலினிகிட்ட எப்படி நம்ப விஷயத்தை சொல்றதுனு தெரியலை, என்ன பார்த்தாலே கண்டுபிடிச்சுடுவா என்று புலம்பினாள் அவந்திகா

என்ன அவந்தி உன்னோட உயிர் தோழிகிட்ட சொல்லவே இப்படி பயப்படுற நீ உன்னோட வீட்டுல எப்படி சொல்லுவ  என்று கேட்டான்

அதுக்கு இப்ப என்ன அவசரம் அத பத்தி பொறுமையா கவலைப்படலாம் என்று சொன்னவளை பார்த்து புன்னகைத்தவன் அதுவும் சரிதான் அதுக்குதான் இன்னும் டைம் இருக்கே என்றான்.சிறிதுநேரம் பொதுவாக பேசிக்கொண்டே மாலினி வீடு வந்து சேர்ந்தனர்.

அவந்திகாவின்  லக்கேஜ் எல்லாம் எடுக்க உதவியவன்  அவள் வீட்டிற்குள் செல்வதற்குமுன் அவள் கை பிடித்து நிறுத்தினான், அவள் என்னவென்று அவனை பார்க்க  அவள் கண்ணோடு கண் பார்த்து அம்மு இது ஒருவழி பாதை இனி திரும்பி போக முடியாது, என்னால உன்னதவிர இந்த வாழ்க்கையை வேற யார்கூடயும் வாழ முடியாது, இதை எப்பவும் மறந்துடாத என்றான்.

அவனையே இமைக்காமல் பார்த்தவள் மாமா மறக்கனுனு நானே நினைச்சாலும் என்னால அது முடியாது என்றாள்.

அவளது மாமா என்ற அழைப்பில் தன்னை மீறி அவளை அணைத்துக்கொண்டான் செழியன் , அவன் திடீரென அணைக்கவும் முதலில் அதிர்ந்த அவந்திகா, பின் அந்த அணைப்பு தந்த இதத்தில் அவன் மார்பில் முகம் புதைத்து கண்மூடிக்கொண்டாள்.

அந்த நிலை எவ்வளவு நேரம் நீண்டதோ சாலையில் போகும் வாகனத்தின் ஒலியில் இருவரும் உணர்வு பெற்று பிரந்துநின்றனர். அவன் முகம் பார்க்க முடியாமல் வெட்கம் தடுக்க தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று மறந்தாள் அவந்திகா. செழியனும் முகத்தில் நிறைந்த புன்னகையோடே கிளம்பினான்.

அப்பொழுதுதான் பூஜாவை தூங்கவைத்துவிட்டு அறையில் இருந்து வெளியில் வந்த மாலினி, அவந்திகா உள்ளே வருவதை பார்த்து மலர்ந்தாள், அவந்தி வா வா இப்பதான் உனக்கு போன் பண்ணலானு இருந்த இந்த பூஜா இன்னைக்கு என்ன படுத்திஎடுத்துட்டா இப்பதான் ஒருவழியா அவளை தூங்க வெச்சேன் என்று அவள்பேசிக்கொண்டிருந்தாள், சிறிதுநேரத்துக்கு பின்னே தன் தோழி எதுவும் பேசாமல் இருப்பது உரைக்க என்ன  ஆச்சு அவந்தி என்று அவளின் தோளை பற்றி உலுக்கினாள் மாலினி.

அது அது ஒன்னு இல்ல தூக்கம் வருது நான் போய் தூங்குற என்று கூறிவிட்டு தன அறைக்கு சென்றாள், சாப்பிட ஏதாவது வேணுமா என்று மாலினி கேட்க, வேண்டாம் பிளைட்ல சாப்பிட்டுட என்றவள் அறைக்குள் சென்று மறைந்தாள்.

என்ன ஆச்சு இவளுக்கு பேய் அறைஞ்ச மாதிரி இருக்க, சரி காலைல பேசிப்போம் என்று தனக்குள் பேசிக்கொண்டாள் மாலினி.

அறைக்குள் சென்ற அவந்திகாவிற்கு தன்னை நிலைப்படுத்திக்கொள்ள சிறிதுநேரம் ஆனது பின் அவள் குளித்துமுடித்து படுக்கவரவும், வீட்டிற்கு சென்று விட்டதாக செழியனிடம் இருந்து மெசேஜ் வரவும் சரியாக இருந்தது, அவனுக்கு குட் நைட் மெசேஜ் அனுப்பிவிட்டு உறங்கிப்போனாள்.

அவர்கள் பிளோரிடாவில் இருந்து வந்து சில வாரங்கள் இருக்கும் வாரம் இருமுறை வெளியில் சந்தித்தனர், போன் பேச்சுக்கள், அவ்வப்போது மெசேஜ் என்று அவர்கள் காதல் வளர்ந்து கொண்டிருந்தது. எப்படி மாலினியிடம் சொல்வது என்று அவந்திகா தினம் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தாள், ஒருநாள் மாலினியே தெரிஞ்சுக்கிட்டு உங்கிட்ட கேட்கப்போறாங்க இரு என்று செழியன் அவளை அவ்வப்போது கிண்டல் செய்வான்.

ஒருநாள் அவந்திகா ஆபீஸில் முக்கியமான மீட்டிங்கில் இருந்தாள்,அப்போது அவளுக்கு மாலினியிடம் இருந்து போன் வந்தது, சும்மா கூப்பிடுகிறாள் என்று எண்ணி அதை கட் செய்தாள், மீண்டும் கால் வரவும் என்னவா இருக்கும் என்று எண்ணி அவந்திகா மீட்டிங் பாதியில் வெளியில் வந்து போன் அட்டென்ட் செய்தாள் .

மாலினி கூறிய விஷயம் கேட்டு அவளுக்கு ஒருநிமிடம் எதுவுமே புரியவில்லை, என்ன சொல்ற மாலினி என்று திரும்ப கேட்டாள், அவந்தி பூஜா ஸ்கூல்ல மயக்கம் போட்டு விழுந்துடலாம் அவளை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்களாம் நீ கொஞ்சம் சீக்கிரம் வா என்று மாலினி அழதொடங்கினாள்.

மாலினியை சமாதானம் செய்து தான் உடனே வருவதாக கூறி, ஆஃபீஸ்ல் தகவல் சொல்லிவிட்டு கிளம்பினாள் அவந்திகா.  மாலினி வீட்டிற்கு வெளியிலேயே காத்திருக்க அவளோடு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். மாலினி வழி சொன்னதால் அங்கு போய் சேர்ந்த பின்தான் அவந்திகாவிற்கு அது செழியன் வேலைசெய்யும் மருத்துவமனை என்று தெரிந்தது. பூஜாவின் நிலையை தெரிந்து கொண்டு அவனுக்கு தகவல் சொல்லிக்கொள்ளலாம் என்று எண்ணி மாலினியோடு உள்ளே சென்றாள்.

பூஜாவை  எமெர்ஜென்சியில் அட்மிட் செய்திருந்தனர், அங்கிருந்த பூஜாவின் கிளாஸ் டீச்சர் அவள் விளையாடிக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்துவிட்டாள் என்றும் அவள் மூக்கில் ரத்தம் வருவதை பார்த்து அவளை உடனடியாக இங்கு கொண்டுவந்து விட்டதாகவும் கூறினார். அதைக்கேட்டு மாலினி அதிகமாக அழதொடங்கினாள்.

மாலினி நீ அழுறத நிறுத்து நீயே பூஜாவ பயமுறுத்திருவ போல, இந்த போன் முதல்ல அண்ணனுக்கு போன் பண்ணி வரச்சொல்லு அவர்கிட்ட அழுகாம பேசு நான் டாக்டர் கிட்ட பேசுற என்று கூறி அவந்திகா அவள் பூஜா இருக்கும்  அறைக்குள் செல்லவும் அதே அறைக்குள் செல்ல செழியன் அங்கே வரவும் சரியாக இருந்தது.

அவந்திகாவை அங்கு எதிர்பார்க்காத செழியன் குழப்பமாய்  அவளை பார்க்க, அவந்திகா அவனை பயமாக பார்த்தாள். அவன் எதற்காக பூஜா அறைக்குள் செல்கிறான் பூஜாவிற்கு உடம்புக்கு என்ன என்று அவளுக்கு பயம் ஏற்பட்டது. செழியன் நீ இங்க என்ன பண்ற என்று கேட்டான், அறை பக்கம் கை காட்டி பூஜா என்றாள், அதை கேட்டு செழியன் ஒருநிமிடம் அதிர்ந்தான்.

எமெர்ஜென்சியில் ஒரு சிறு பெண் அட்மிட் ஆகியிருக்கு, பல்ஸ் குறைவாக இருக்கு , மயங்கி விழுந்து மூக்கில் ரத்தம் வந்திருக்கு என்று ரிப்போர்ட் செய்து ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் மற்றும் நியூரோ ஸ்பெசலிஸ்டை வர சொல்லி இருந்தனர். அது மாலினி பொண்ணு பூஜாவாக இருக்கும் என்று செழியன் எதிர்பார்க்கவேயில்லை. அவன் அவந்திகாவிடம் நின்று பேசாமல் அறைக்குள் சென்று விட்டான்.

மாலினிக்கு தைரியம் சொல்லிக்கொண்டிருந்த அவந்திகா, செழியனை பார்த்ததும் பயந்து போனாள் இறைவா பூஜாக்கு எதுவும் இருக்கக்கூடாது என்று வேண்டினாள், ராஜிடம் பேசிவிட்டு வந்த மாலினி டாக்டர் என்ன சொன்னார்கள் என்று கேட்க இன்னும் எதுவும் சொல்லவில்லை என்று மட்டும் கூறினாள். அதற்குள் ராஜ் அவந்திகாவிற்கு போன் செய்து தான் இரவுக்குள் வந்துவிடுவதாக கூறி மாலினியை பார்த்துக்கொள்ளுமாறு கூறினான்.

2 மணிநேரம் கழித்து அவர்களிடம் பேச வந்தான் செழியன், அங்கிருந்த ஒரு அறைக்குள் அவர்களை அழைத்து சென்றவன் சிறிதுநேரம் அமைதியாக இருந்துவிட்டு, மாலினியிடம் பேச தொடங்கினான், சிஸ்டர் இங்க பாருங்க நான் சொல்ல போறது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் ஆனா பயப்பட ஒன்னும் இல்லை, பூஜாவுக்கு ஹார்ட்ல ஒரு சின்ன பிரச்சனை, அவளுக்கு ASD (Atrial septal defect), உங்களுக்கு புரியற மாதிரி சொல்லணுனா அவளுக்கு ஹார்ட்ல ஹோல் இருக்கு என்றான்.

அவந்திகா, மாலினி இருவரும் அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்து போயினர், மாலினி அவந்திகாவை கட்டிக்கொண்டு அழ தொடங்கினாள், அவந்திகாவிற்கு என்ன சொல்லி அவளை சமாதானம் செய்வது என்று புரியவில்லை, அவளை மீறி அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. அழும் அவந்திகாவை சமாதானம் செய்யமுடியாத தன் நிலையை நினைத்து தன்னயே நொந்துகொண்டான் செழியன். மாலினி சிறிது அழுகை குறைந்து என்னோட பூஜா எனக்கு திரும்ப கிடைக்க மாட்டாளா என்று செழியனிடம் கேட்டாள்.

கண்டிப்பா உங்க பூஜா உங்களுக்கு பழைய மாதிரி கிடைப்ப, இதுக்கு ரெண்டு விதமா டிரீட்மென்ட இருக்கு, ஒன்னு சர்ஜெரி, அடுத்தது சர்ஜெரி இல்லாமலே அந்த ஹோல்ல அடைக்குறது இதுல பூஜாவுக்கு எது சரி அவ ஹெல்த் கண்டிஷன் எதுக்கு சப்போர்ட் பண்ணும்னு பாக்கணும். அதுவரைக்கும் நீங்கதான் பூஜாவுக்கு தைரியம் சொல்லணும் எந்த டிரீட்மென்டனாலும் பூஜாவோட மனநிலை ஸ்டராங்க இருக்குறது முக்கியம் என்றான். மேலும் சில விளக்கங்கள் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான், வெளியே போகுமுன் அவந்திகாவை பார்த்து கண்களால் சமாதானம் சொல்லிவிட்டு சென்றான்.

செழியன் தன் சுப்பீரியரிடம் அவந்திகா தனது வருங்கால மனைவி என்றும் அவளது நெருங்கிய தோழியின் மகள் தான் பூஜா என்றும் கூறினான், அவனது சுப்பீரியர் ஜேசன்  அவனிடம் ஒன்னு வருத்தப்படாத எங் மேன் அந்த லிட்டில் ஏஞ்சலுக்கு எதுவும் ஆகாது நீ அவங்கள கூட இருந்து பார்த்துக்கோ என்று கூறி அவனுக்கு தைரியம் சொல்லி அனுப்பினார்.

பூஜா பல்ஸ் ஸ்டேபில் ஆனதுக்கு பின் அவள் அன்று இரவு அறைக்கு மாற்றப்பட்டாள், அதற்குள் ராஜ் வந்துவிட மாலினி அவனை கட்டிக்கொண்டு அழுதாள், எதற்கும் அசையாத ராஜ் தனது செல்ல மகள் இருக்கும் நிலை பார்த்து கலங்கிப்போனான். அவந்திகா அவர்கள் இருவரையும் சமாதானம் செய்தாள். பின் ராஜ் செழியனை பார்த்து விவரங்கள் கேட்டறிந்தான். செழியன் அவர்களுக்கு தைரியம் சொல்லிவிட்டு வெளியில் வர அவனோடே வெளியில் வந்தாள் அவந்திகா.

செழியன் அவளை தன்னுடைய ரூமிற்கு அழைத்து சென்றான், அறைக்குள் சென்றதும் அவந்திகா அவனை கட்டிக்கொண்டு அழ தொடங்கினாள். காலையில் இருந்து மாலினி முன்னால் தானும் அழுதாள் அவள் மேலும் பயந்துபோவாள் என்று அழுகையை மறைத்துக்கொண்டிருந்தவள் இப்பொழுது தடையின்றி அழுதாள்.

சிறிதுநேரம் அவளை அழ விட்டு ஆதரவாக அணைத்துக்கொண்டு நின்றவன், போதும் அம்மு நீ இப்படி அழுறத பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கு என்றான், அதை சொல்லும்போதே அவன் குரல் கரகரத்தது.

சிறிது நேரத்தில் தன்னை சமாதானம் செய்து கொண்டவள் அவனை நேராக பார்த்து மாமா என்கிட்ட உண்மைய சொல்லுங்க பூஜாக்கு சரி ஆகிடும்தான அவ என்கூட பழைய மாதிரி விளையாடுவதான என்று கேட்டாள்.

அம்மு உனக்கு என்மேல நம்பிக்கை இருக்குல்ல பூஜாவுக்கு எதுவும் ஆகாது அவஉன்கூட பழைய மாதிரி விளையாடுவ, சண்டைபோடுவ, அவளை பழைய பூஜாவ உன்கிட்ட திருப்பி தருவ போதுமா என்றான்.

சரி என்று தலை அசைத்தவள் அவன் தோளிலையே சாய்ந்துகொண்டாள்.

செழியன் பூஜாவை காப்பாற்றி கொடுப்பானா அறிய தொடர்ந்து வாசியுங்கள்.

நறுமுகை

No Responses

Write a response