காதல் கொண்டேனடி-1

காதல் கொண்டேனடி-1

நந்தவனம் நாவலுக்கு நீங்கள் குடுத்த ஆதரவுக்கு நன்றி, அதேபோல் எனது அடுத்த நாவலான காதல் கொண்டேனடிக்கும் உங்கள் ஆதரவு கிடைக்குமென நம்புகிறேன். உங்களுக்காக காதல் கொண்டேனடி மீண்டும் முதலில் இருந்து……

மதுரையில் பிரபல தனியார் மருத்துவமனை, மருத்துவமனைகளுக்கே உரிய பரபரப்போடு இயங்கி கொண்டிருந்தது. அத்தனை பரபரப்புக்கிடையில் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அமர்ந்திருந்தான் செழியன், அங்கு சிலர் செழியனை திட்டிக்கொண்டிருந்தனர், இன்னும் சிலர் ஒன்னு ஆகாதுடா மச்சான் கவலைபடாத என்று ஆறுதல் சொல்லி கொண்டிருந்தார்கள். இது எதுவும் அவன் காதில் விழவில்லை, அவன் எண்ணம் முழுவதும் ஐ சி யூவில் இருந்த அவந்திகாவை சுற்றித்தான் இருந்தது. ஐ சி யூவில் டாக்டர்ஸ் அவந்திகாவிற்கு டீரீட்மென்ட் குடுத்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள் வந்து அவந்திகா எப்படி இருக்கிறாள் என்று சொல்வதற்குள் செழியன் யாரு அவந்திகா யாரு, அங்கு செழியனை திட்டுபவர்கள் யாரு என்று நாம் தெரிந்துகொள்வோம்.

3 வருடங்களுக்கு முன்

அவந்திகா சீக்கிரம்  பொறிக்க தோட்டக்காரன் வந்துட போறான், டேய் என்ன பேர்சொல்லி கூப்பிடாதனு எத்தனை முறை சொல்றது, நான் அவந்தி அக்கானு சொன்ன அது உனக்கு அவந்திகானு கேட்டிருக்கு, உனக்கு வர வர வாய் ரொம்போ அதிகமாயிடுச்சுடா இரு இரு உன்ன பேசிக்குற. என்கிட்ட எப்ப வேணுனா பேசல நீ முதல்ல மாங்காவ பொறி இருடா எட்டமாட்டேங்குது, இதுக்குதான் வரப்ப ஏணி கொண்டுவந்திருக்கனும், ஆமா திருட வரப்ப ஏணி, பெஞ்ச் எல்லா எடுத்துட்டு வருவாங்க விடுங்க,அக்கா அவன் தொழிலுக்கு புதுசு அப்படித்தான் இருப்பான். இப்படியாக அவந்திகா ஒரு குட்டி பட்டாளத்தோடு பக்கத்து தோட்டத்தில் மாங்காய் திருடிக்கொண்டிருந்தாள், வந்துட வந்துட போறான்னு சொல்லிட்டே இருந்த தோட்டக்காரன் வந்து அவனிடம் இவர்கள் மாட்டிக்கிட்டார்கள்.

இன்னைக்கு  என்ன ஆனாலும் சரி உங்கள உங்க வீட்டுல சொல்லாம விடுறது இல்லனு சொல்லி, அவர்களை அவந்திகா தாத்தாவிடம் மாட்டிவிட்டு விட்டார் தோட்டக்காரர். அவந்திகா தாத்தா வீரபாண்டி அந்த ஊரில் பெரிய மனுஷன்,அந்த ஊரில் அவர் வைத்ததுதான் சட்டம், அவரோட பேத்திதான் சின்ன வாண்டுகளை சேர்த்துக்கொண்டு பக்கத்து தோட்டத்தில் மாங்காய் திருடியது. ஒன்னுமே தெரியாதது போல கையைக்கட்டி கொண்டு நிற்கும் அவந்திகாவை மற்றவர் முன் எதுவும் சொல்ல பிடிக்காமல் அந்த தோட்டக்காரனுக்கு பணத்தை கொடுத்து அனுப்பி விட்டார் வீர பாண்டி.

விஷயம் கேள்வி பட்டு  வந்த அவந்திகா அப்பா ராஜபாண்டியும், அவளது அண்ணன் வெற்றிவேலும் அவளுக்கு பக்கம் பக்கமாக அறிவுரை கூறினர். வெற்றி அங்கிருந்த பசங்களை பார்த்து டேய் இனிமேல் இவ கூட உங்கள பார்த்தேன் தொலைச்சிடுவேன் ஒடுங்கடா, இப்ப எதுக்குன்ன என்னோட ப்ரண்ட்ஸ் தொரத்துற, யாரு இந்த அரை டிரௌசர் முக்க டிரௌசர் போட்ட பசங்கள உனக்கு ப்ரண்ட்ஸ், நீ அமெரிக்கால ப்ராஜெக்ட் மேனேஜர்ர இருக்கனு சொன்ன எவனது நம்புவான, ப்ராஜெக்ட் மேனேஜர் மாங்க சாப்பிட கூடாத, நம்ப தோட்டத்துல இல்லாத மாங்காய, திருட்டு மாங்கதான் டேஸ்ட்டா இருக்கும் அதெல்ல உனக்கு சொன்ன புரியாது அண்ணா. எனக்கு புரியறது இருக்கட்டும்,வீட்டுக்கு வந்து அம்மாக்கு, பாட்டிக்கு புரியுதானு பாரு என்று சொல்லி அவளை வீட்டுக்கு அழைத்து சென்றான்.  

அச்சோ அவங்க கிட்ட வேற யாரு திட்டுவாங்குறது எதாவது யோசி அவந்திகா என்று மனத்துக்குள்ளயே பேசிக்கொண்டு வந்தவள் , வீட்டுக்குள் நுழைந்து அவள் அம்மா மீனாக்ஷியையும், பாட்டி கனகவல்லியையும் பார்த்தவுடன் பாருங்க அப்பத்தா நானே இன்னும் ஒருவாரத்துல ஊருக்கு போக போறன் ஆல் ஆளுக்கு திட்டுறாங்க என்று வராத கண்ணீரை துடைத்து கொண்டாள், அவளை திட்டவேண்டும் என்று காத்திருந்தவர்கள் அவளது கண்ணீரை கண்டவுடன், ஏன்டா ரெண்டு மாங்காய்க்கு கூட காசு குடுக்க முடியாம என்னடா சம்பாதிக்குறீங்க சும்மா குழந்தைய திட்டிகிட்டு நீ வா கண்ணு அவனுக்கு என்ன வேலை என்று பேரனை திட்டிவிட்டு அவந்திகாவை கூட்டி சென்றுவிட்டார் கனகவல்லி. ஒரு நிமிடம் வெற்றி, இப்ப என்ன எதுக்கு திட்டுறாங்க என்று குழம்பியவன் அவன் தங்கச்சி அவனை பார்த்து பழிப்பு காட்டவும் அடப்பாவி என்னமா நடிக்குற இவகிட்ட மாட்டிகிட்டு எவன் கஷ்டப்படபோறனோ என்று எண்ணிக்கொண்டே தன் வேலையை பார்க்க சென்றான்.

அவந்திகாவிடம் மாட்டபோகும் நம் கதையின் கதாநாயகனை பற்றி தெரிந்துக்கொள்ள காத்திருங்கள்.

-நறுமுகை

No Responses

Write a response