காதல் கொண்டேனடி-(நிறைவு பகுதி)

காதல் கொண்டேனடி-(நிறைவு பகுதி)

அடுத்தநாள் என்ன பார்க்க வந்த வெற்றி கிட்ட நான் இதை எல்லாம் சொன்னப்ப தனக்கும் இதுயெல்லாம் நேற்றுதான் தெரியும் என்று கூறி, வெற்றியும், அப்பத்தாவும் சந்தேகப்பட்டு ஜோசியரை பார்த்தது, அதுக்கப்புறம் வெற்றி டிடெக்ட்டிவ் மூலம் நம்மள சுற்றி என்ன நடந்ததுனு விசாரிக்க சொன்னதை பற்றி எல்லாம் சொன்னாரு, அவர் சொன்ன விஷயங்களும், ரியா சொன்னதும் ஒத்துப்போச்சு.

ஷாலினியோட ஒரே நோக்கம் நம்ப காதலை உடைச்சு, இந்த கல்யாணத்தை நிறுத்துறதுதானு புரிஞ்சுது, கூடவே நீ கல்யாணத்தை நிறுத்துனதுக்கு காரணமும் எனக்கு தெரிஞ்சுடுச்சு. ஷாலினியோட திட்டத்தையெல்லாம் உடைக்கணுனா அதுக்கு ஒரே வழி நம்ப கல்யாணம் தான், அதுனாலதான் வெற்றிகூட சேர்ந்து நம்ப கல்யாணத்தை ஏற்பாடு செஞ்ச.

உன்கிட்ட, வீட்டுல இருக்கவங்க கிட்டயெல்லாம் பேசி சரி பண்ணி கல்யாணம் செய்றதுக்குள்ள ஷாலினி எந்த அளவுக்கும் போவணுதான் அந்த டைம்மே அவளுக்கு குடுக்காம நம்ப கல்யாணத்தை முடிச்ச. ஆனா அவ உன்ன கடத்திட்டு போய், என்ன வரவெச்சு, துப்பாக்கி முனையிலே மிரட்டி இதெல்லாம் நடக்குனு நான் எதிர்பார்கலை.

ஏற்கனவே எனக்காகனு நீ ஒருதரவை உயிரை விட பார்த்த, இப்ப என்னால உன்னோட உயிருக்கு ஆபத்துனு எனக்கு ரொம்போ குற்றஉணர்ச்சிய இருந்துச்சு, உன்ன விட்டு விலகிடனுனு நினைச்சேன். ஆனா  கண் முழிச்சதும் நீ என்னதான் தேடுன, உன்னோட வலி மீறி எனக்கு எதுவுமாகலைனு தெரிஞ்சுக்க நினைச்ச, உன்ன விட்டுட்டு எப்படி என்னால இருக்க முடியும்.

இப்படி எனக்குள்ளயே நான் குழம்பி போய் இருந்தப்பத்தான் ரெண்டு நாள் கழிச்சு ஷாலினியை பார்க்க வந்த ரியா எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை குடுத்தா, அதுக்கப்புறம் என்னால உன்ன நேர பார்த்து பேசக்கூட கஷ்டமா இருந்துச்சு என்று கூறி ஒருநிமிடம் அமைதியாக கண்மூடி அமர்ந்திருந்தான்.

அவன் அருகில் வந்தவள், மாமா இவ்வளோ கஷ்டப்பட்டு நீங்க அதை சொல்லவேண்டாம் என்றாள், அவளை நிமிர்ந்து பார்த்தவன், இதை நீ தெரிஞ்சுக்கனும் அவந்தி. நான் உன்னை விட்டுட்டு வந்ததுக்கு இதுதான் காரணம். இந்த விஷயம் என்னை தவிர யாருக்கும் தெரியாது, வெற்றி ஏற்பாடு செஞ்ச டிடெக்டிவ் கூட இதை கண்டுபிடிக்கலை என்று ஆழ மூச்செடுத்தவன் உனக்கு யூட்ரஸ்ல பிராப்ளம் வந்தது இயற்கையா இல்லை, யு.எஸ்ல உன்னோட ஆபீஸ்ல நீ டெய்லி குடுக்குற காபி பவுடர்ல கெமிக்கல்ஸ் கலந்து உனக்கு குழந்தை பிறக்காத மாதிரி செஞ்சது ஷாலினிதான் என்று தலைகுனிந்தபடி சொன்னான் செழியன்.

அவந்திகாவால் தன் காதுகளில் விழுந்ததை நம்ப முடியவில்லை ஒரு பெண்ணால் இப்படி எல்லாம் யோசிக்க முடியுமா என்று எண்ணி அயர்ந்து போனாள். சிறிது நேரம் அங்க கனத்த மௌனம் நிலவியது.

ஒருவழியாக தன்னை நிலைப்படுத்திக்கொண்ட அவந்திகா இதுக்கும் நீங்க என்னை விட்டுட்டு இங்க வந்ததுக்கும் என்ன சம்மந்தம் என்று செழியனிடம் கேட்டாள்,

அவந்தி உன்னோட வாழ்க்கையில் என்னால என்னமாதிரி விபரிதம் நடந்திருக்கு, மனசு முழுக்க உன்மேல இருந்த காதலை விட இப்ப குற்றவுணர்ச்சி அதிகமா இருக்கு, உன் முகம் பார்த்து என்னால இயல்பா பேசக்கூட முடியலை அதுனாலதான் உன்னைவிட்டு விலகி வந்தேன் என்று கூறும்போது அவன் கண்கள் கலங்கியது.

வெரிகுட் சோ கடைசியா ஷாலினி நினைத்தது நடந்துடுச்சு, நம்ப பிரியனுனு அவ நினைச்ச அது நடந்திடுச்சு. நம்ப கல்யாணம் நடக்கும் போது என்னோட பிரச்சனைக்கு காரணம் ஷாலினினு உங்களுக்கு தெரியாது, என்னோட பிரச்சனை உங்களுக்கு ஒரு விஷயமே இல்லை, அதுக்கு நீங்க சொன்ன காரணம் என்னோட இடத்தை உங்க வாழ்க்கையில யாராலையும் நிரப்ப முடியாது.

எனக்கும் அப்படிதானு உங்களுக்கு புரியலை போல. ஷாலினி செஞ்ச எதுக்கு நீங்க பொறுப்பில்லை, எப்ப உங்களுக்கு சின்னதா சந்தேகம் வந்துச்சோ அப்பவே நீங்க அவ என்கிட்ட நெருங்காத மாதிரி தடுத்துடீங்க, வாழ்க்கையில பிரச்சனை வரும் அதுக்கு தோள் கொடுக்கத்தான உறவு. என்ன பொறுத்தவரைக்கும் ஷாலினி நம்ப வாழ்க்கையில வந்த பிரச்சனை, இப்ப அந்த பிரச்சனையை நம்ப கடந்து வந்துட்டோம். ஆனா நீங்க இன்னும் அந்த பிரச்சனையை விடாம கூடவே சுமத்துகிட்டு இருக்கீங்க. என்மேல இருக்க காதலை உங்க குற்றவுணர்ச்சி மறைச்சிடுச்சுனு நீங்க நினைச்ச யாருக்கும் தெரியாம நீங்க கட்டுன இந்த தாலியை நம்ப குடும்பத்துக்கு முன்னாடி நீங்களே கழட்டிடுங்க அதுக்கப்புறம் உங்க வாழ்க்கையில அவந்திகா வரமாட்டா என்று சொன்னவள் வேகமாக வீடு நோக்கி சென்று விட்டாள்.

செழியன் செல்லும் அவளை தடுக்க தோணாமல் அங்கேயே அமர்ந்துவிட்டான். அவள் சொன்னதை தன்னால் எப்போது செய்ய முடியாது என்று அவனுக்கு நன்றாக புரிந்தது, அவ என்னோட அம்மு அவளே சொன்ன மாதிரி எனக்கு அவமேல இருக்க காதலை எதுனாலயும் மாற்ற முடியாது, நடந்த எதுக்கு நான் காரணம் இல்லை, அவந்திக்கு எனக்கும் இப்ப கல்யாணம் ஆயிடுச்சு, அவ என்னோட பொறுப்பு அவளை நான்தான் பார்த்துக்கனும், இப்படி நானே அவளுக்கு முழுசா உடம்பு சரியாகாத நேரத்துல விட்டுட்டு வந்து அவளை இங்க வரைக்கும் அலைய வெச்சிருக்கேன். இப்ப நாங்க பிரிஞ்சுட்டா ஷாலினி நினைச்சது நடந்தததானே அர்த்தம் நான் எப்படி இதை எதையும் யோசிக்காம போனேன் என்று தன்னையே நொந்து கொண்டவன் ஒரு முடிவோடு வீடு நோக்கி சென்றான்.அனைவரும் உறங்க சென்றிருந்தனர் எனவே காலையில பேசிக்கொள்ளலாம் என்று அவனும் படுக்க சென்றான்.

அடுத்த நாள் காலை அனைவரிடமும்,  நான் இருந்த மனநிலையில எதையும் சரியா யோசிக்காம நல்லது செய்றத நினைச்சு எல்லாரையும் கஷ்டப்படுத்திட்ட, தாத்தா என்னால அவந்தி இல்லாம இருக்க முடியாது, நான் செஞ்சது தப்புதான் என்ன மன்னிச்சுடுங்க என்று கூறினான் செழியன்.

தாமரை அவந்திகா காதில், உன்ன விட்டுட்டு அண்ணாவால இருக்கமுடியாதுனு தான் இங்க எல்லாருக்கும் தெரியுமே என்று கூற, அது உங்க அண்ணனுக்கு இப்பதான் புரிஞ்சிருக்கு என்று அவந்திகா கடுப்புடன் சொன்னாள்.

அதற்குள் வீரபாண்டி செழியனிடம் அப்ப உங்க ரெண்டு கல்யாணத்துக்கும் ஏற்பாடு செஞ்சுடலாம் தானே என்று கேட்டார், ரெண்டா ஒண்ணுதானே எங்களுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சே என்று செழியன் கூற,

கனகவள்ளியோ அது சரி எங்க ஒரே பேத்தி கல்யாணத்தை நாங்க பார்க்க வேண்டாமா, ஊரை கூட்டி ஜாம் ஜாம்னு கல்யாணத்தை நடத்தனும் என்று கூறினார். அங்கிருந்த அனைவரும் அதை ஆமோதிக்க, செழியனும் சரி என்று ஒற்றுக்கொண்டான்.

செழியனால் உடனே கிளம்ப முடியாது என்பதால், அவன் இருவாரங்களில் வந்துவிடுவதாக கூற, மற்ற அனைவரும் மறுதினம் கிளம்புவதாக முடிவானது.

அன்று இரவு செழியன் அவந்திகாவுடன் பேசவேண்டும் என்று அவளை பார்க்கிற்கு அழைத்துக்கொண்டு வந்தான், உடன் வந்தவள் அவனுடன் எதுவும் பேசாமல் இருக்க என்மேல இன்னும் கோவமாதான் இருக்கியா அம்மு என்று கேட்டான் செழியன்,

இல்லை மாமா, நானுதான் யாரையும் கேட்காம கல்யாணத்தை நிறுத்துன அப்ப எனக்கு நான் செஞ்சதுதான் கரெக்ட்னு தோணுச்சு, அதுமாதிரி தான் நீங்களும் நினைச்சு இருக்கீங்க உங்களை எப்படி தப்பு சொல்ல முடியும் என்றாள்,

ஏய்!! அப்புறம் எதுக்கு என்கிட்ட பேசாம இப்படி மூஞ்ச தூக்கிட்டு இருக்க என்று செழியன் கேட்க, ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள் குழந்தை விஷயம் என்று இழுத்தாள், நொடியில் செழியன் அவள் மனநிலையை புரிந்து கொண்டான்.

அவள் தன்மேல் கோவமாக இருக்கிறாள் என்று எண்ணி அவள் முகம் பார்த்து பேச அவள் எதிரில் அமர்ந்திருந்தவன், அவள் கூறியதை கேட்டு எழுந்து சென்று அவள் அருகில் அமர்ந்து அவளை தன் தோள் சாய்த்து கொண்டான். வெகுசில நாட்களுக்கு பிறகு அவன் தோள்சாய்ந்தவளுக்கு மனதுக்கு இதமாக இருந்தது.

அம்மு, அதை பற்றி கொஞ்ச நாளைக்கு நம்ம எதுவும் பேசிக்க வேண்டாம், இன்னும் கொஞ்சநாள்ல நமக்கு கல்யாணம் இதுக்காக எவ்வளவு போராட்டம், வலிகள் நம்ப கடந்து வந்திருப்போம், இப்போதைக்கு நம்ம இந்த சந்தோசத்தை முழுசா என்ஜாய் பண்ணலாம் குழந்தை விஷயத்தை அப்புறம் பார்த்துக்கலாம், நம்ப சேர்ந்து இருக்கறதை விட எனக்கு வேற எதுவும் பெருசில்லை என்று கூறியவன் அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.

அவளுக்கும் அவன் சொல்வது சரியென்று தோன்ற, அவனை அணைத்துக்கொண்டாள். தன்னை அணைத்துக்கொண்டவளிடம் காதில் ரகசியமாக அம்மு, நமக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சில்ல அப்புறம் உன்ன என்கூட இங்க விட்டுட போகாம எதுக்கு ஊருக்கு கூட்டிட்டு போறாங்க என்று கேட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்து பொய்யாக முறைத்தவள், விட்டுட்டு ஓடிவந்ததுக்கு உங்களுக்கு இவ்வளவு கருணை காட்டுறதே பெருசு, பேராசை படக்கூடாது டாக்டர் சார் என்றவள், அவனிடம் இருந்து விலகி வீட்டுக்கு போகலாம் மாமா என்று கூறினாள்.

இன்னும் எத்தனைநாளைக்கு என்கிட்ட இருந்து தப்பிக்குறனு பார்க்குற அம்மு என்று போலியாக மிரட்டியவன், அவளுடன் வீட்டை நோக்கி நடந்தான்.

மூன்று மாதங்களுக்கு பிறகு,

செழியன் அவந்திகா, வெற்றி தாமரை திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. இரண்டு திருமணத்தையும் ஊரே பார்த்து வியக்கும்படி வெகு விமர்சியாக நடத்தினார் வீரபாண்டி.திருமணம் முடிந்து, மறுவீடு தேனிலவு எல்லாம் முடித்து இரண்டு ஜோடிகளும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர். அவந்திகா செழியனிடம் சொன்னதுபோல் சிறிதுகாலம் கழித்து வேளைக்கு செல்ல தொடங்குவதாக கூறி வீட்டில் இருந்தாள், செழியன் கோயம்பத்தூர் மருத்துவமனையிலையே மீண்டும் வேலையை  தொடர்ந்தான். ஆனால் அவந்திகாவிற்கு அவர்கள் பண்ணை வீடுதான் மிகவும் பிடித்திருந்ததால், கோயம்பத்தூர் வீட்டில் தங்காமல் பண்ணை வீட்டில் தங்கியிருந்தனர்.

பகல் முழுக்க அன்னப்பூரணியுடன் வயலில் சுத்துவது, புதிதாக எதாவது சமைப்பது, மாலை செழியன் வந்தபிறகு அவனுடன் சேர்ந்து காலரா நடந்துவிட்டு வருவது என்று அவந்திகாவிற்கு நாட்கள் இனிமையாக கழிந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை, அவந்திகா குடும்பம் ஊர் திருவிழாவுக்கு செழியன் அவந்திகா அன்னப்பூரணியை முறைப்படி அழைக்க வருவதாக கூறி இருந்தனர். நமக்குள்ள என்ன இருக்கு இதுக்காகனு நீங்க வரணுமா என்று அன்னப்பூரணி கேட்க, உங்க எல்லாரையும் பார்த்த மாதிரி இருக்குமில்ல என்று கனகவள்ளி சொல்ல அன்னப்பூரணி அதன் பின் எதுவும் சொல்லவில்லை.

பகல் பதினோரு மணிபோல் அனைவரும் வந்திவிட அவந்திகா அவள் பாட்டியிடமும், அம்மாவிடமும் செல்லம் கொஞ்சினாள், அனைவரும் வீட்டின்முன் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வெற்றியும் செழியனும் இளநி கொண்டுவர தென்னந் தோப்பிற்கு செல்ல அவந்திகாவும் தாமரையும், அவர்கள் பின் இடைவெளி விட்டு பேசிக்கொண்டே சென்றனர்.

அவந்தி மாலினிகிட்ட பேசுனயா, ஊருக்கு பத்திரமா போய்ட்டாங்களா என்று கேட்டாள் தாமரை. டெய்லி பேசுற அண்ணி, அதெல்லாம் பத்திரமா போய்ட்டாங்க பூஜாவைத்தான் நான் இல்லாம சமாளிக்க முடியலைன்னு புலம்பிகிட்டு இருந்தாள் என்று கூறினாள் அவந்திகா.

ஹம்ம்ம், அவளுக்கு நீதான் செல்லம் என்று கூறி சிரித்த தாமரை, மாலினியும் இங்கயே வந்திடலாம் கல்யாணம் முடிச்சு ஊருக்கு கிளம்ப அவளுக்கு மனசே இல்லை என்று தாமரை கூற அவந்திகா அவள் கூறியதை ஆமோதிதாள்.

அப்போது அவர்கள் வீட்டிற்கு முன் ஒரு கார் வந்து நின்றது, அவந்திகா தாமரை நின்ற இடத்தில இருந்து கார் வருவது நன்றாக தெரிந்தது. யாரோ வீட்டுக்கு வராங்க மாமா என்று செழியனிடம் திரும்பி கூறியவள் வீட்டை நோக்கி நடந்தாள்.

யாருமே அந்த நேரத்தில் விவேகானந்தரையும், மேகலாவையும் அங்கு எதிர் பார்க்கவே இல்லை. செழியன் இப்ப இங்க எதுக்கு வந்தீங்க என்று கேட்க, அவனை தடுத்த அவந்திகா வாங்க ஆன்ட்டி, வாங்க அங்கிள் என்று வரவேற்றாள். அனைவரும் அவர்களை விரோதமாக பார்த்துக்கொண்டு நின்றனர்.

அவந்திகா என்ன விஷயம் அங்கிள் இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க என்று கேட்டாள்.

அனைவரையும் பொதுவாக பார்த்து, எங்க பேத்தி செஞ்சதை யாராலயும் மன்னிக்க முடியாதுனு தெரியும் ஆனா அவ எனக்கு பேத்தி எப்படியோ போகட்டுனு என்னால விடமுடியாது. ஷாலினி இன்னும் கோமாவுல தான் இருக்க, இங்க விட யு.எஸ் கொண்டு போய் டீரீட்மென்ட் குடுத்த சீக்கிரம் சரியாக வாய்ப்பிருக்குனு நினைக்குறோம், ஆனா செழியன் கம்பளைண்ட் குடுத்திருக்கனால ஷாலினி பாஸ்போர்ட் பிளாக் பண்ணி வெச்சிருக்காங்க அதான் கேஸ் வாபஸ் வாங்குன என்று அவர் கூறி கொண்டிருக்கும் போதே செழியன் அது நடக்கவே நடக்காது என்றான்.

மேகலாவோ செழிய கொஞ்சம் எங்களுக்காக என்று கெஞ்ச செழியன் ஏதோ சொல்வதற்குள், நாங்க கேஸ் வாபஸ் வாங்கிக்குறோம் ஆன்ட்டி நீங்க கவலைபடாதீங்க என்றாள் அவந்திகா.

வெற்றியோ  அவந்தி நீ என்ன லூசா என்று கோவத்தோடு கேட்க, அவனுக்கு பதில் சொல்லாமல் செழியனை நேராக பார்த்தவள் மாமா கேஸ் வாபஸ் வாங்குங்க என்றாள், செழியன் எதுவும் சொல்லாமல் சரி என்று தலை அசைத்தான்.

விவேகானந்தரும், மேகலாவும் அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு, மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றனர். யாருக்கும் அவந்திகா சொன்னதில் உடன்பாடு இல்லை என்றாலும், செழியனே அமைதியாக இருப்பதால் யாரும் எதுவும் சொல்லவில்லை. அதன்பின் அவந்திகா குடும்பம் மதுரை கிளம்பி சென்றது.

அன்று இரவு தாமரை வெற்றியிடம், சும்மா சொல்ல கூடாது மச்சான் அவந்தி ஒரு வார்த்தை சொன்னதும் அண்ணா வாயில இருந்து மறுத்து ஒரு வார்த்தை வரலையே, என்ன எதுக்குனு கூட கேட்கலை, அண்ணா இப்படி இருக்கானாலதான் அவந்தியும் அண்ணன் என்ன சொன்னாலும் கேட்குற என்று கூறி கொண்டிருந்தாள். வெற்றி அவள் கூறியதை ஆமோதித்தான். தொடர்ந்து தாமரை அனாலும் இவ்வளவு செஞ்ச ஷாலினிய எப்படித்தான் மன்னிக்க முடிஞ்சுதோ என்று கூறிக்கொண்டிருக்க, தாமரையை தன் கைகுள் இழுத்துக்கொண்டவன், உன்னோட நாத்தனார் பெருமையை அப்புறம் பேசலாம், முதல்ல உன்னோட மச்சானை கவனி என்றான் வெற்றி. அவன் கூறியதில் முகம் சிவக்க, அதுதான் தினம் வேலையா இருக்கே அப்புறம் என்ன என்று ரகசிய குரலில் கேட்டவள் அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டாள்.

இங்கு செழியனோ அப்படி ஒரு விஷயமே நடக்காத மாதிரி எப்போதும்போல இயல்பாக இருந்தான், சாப்பிட்டுவிட்டுஅறைக்கும் வந்ததும், என்மேல கோவமில்லையா மாமா என்று கேட்டாள் அவந்திகா.

எனக்கு எதுக்கு உன்மேல கோவம் அம்மு, நீ கேஸ் வாபஸ் வாங்குறதுதான் சரினு நினைச்ச நான் கண்டிப்பா அதுக்கு சப்போர்ட் பண்ணுவேன்  என்று கூறினான்.

அவனை நெருங்கி அமர்ந்து தோள் சாய்ந்தவள், ஷாலினி செஞ்ச தப்புக்கு அவங்க மொத்த குடும்பமும் கஷ்டப்படுறதுல எனக்கு விருப்பம் இல்லை மாமா, அதுபோக ஷாலினி ஏற்கனவே தண்டனை அனுபவிச்சுக்கிட்டுதான் இருக்க வாழவேண்டிய  வயசுல இப்படி கோமாவுல படுத்திருக்குறது தண்டனை தானே, அதுனாலதான் கேஸ் வாபஸ் வாங்க சொன்ன.

அதுமட்டுமில்லாம அவ எவ்வளோ முயற்சி செஞ்சும்  அவனால நம்ம காதலை ஒன்னும் செய்ய முடியலையே நம்ப சேர்ந்து சந்தோஷமதானே இருக்கோம், அதுக்கப்புறம் இந்த கேஸ் எல்லாம் எதுக்கு என்றால் அவந்திகா.

நீ சொல்றது சரிதான் அவசெஞ்ச தப்புக்கு அவ குடும்பம் எதுக்கு கஷ்டப்படனும் என்று கூறியவன், நீ செஞ்சது சரிதான் அம்மு என்றான்.

அவனை குறும்பாக பார்த்தவள் ஏன் மாமா, ஷாலினி ஒருவகையில உங்களுக்கு முறைப்பொண்ணுதான, அவளும் பார்க்க செமயா இருப்ப எப்படி மாமா அவ உங்களை இப்படி காதலிச்சும் நீங்க அவளை வேண்டான்னு சொன்னீங்க என்று கேட்டாள்,

அவளை முறைத்தவன் அம்மு முதல்ல அவளுக்கு என்மேல இருந்ததுக்கு பேர் லவ் இல்லை, வெறி அவ என்னை அவ அழகுக்கும், அந்தஸ்துக்கும் கிடைக்கும் ஒரு ட்ரோபியாதான் பார்த்த. அப்புறம் என்ன சொன்ன செமயா இருப்பாளா, ஹ்ம்ம் அது உண்மைதான் என்று கூறி அவந்திகாவிடம் சில பல அடிகளை பெற்றுக்கொண்டான். அவள் முகத்தை திருப்பிக்கொள்ளவும், அவள் முகம் பிடித்து திரும்பியவன், அம்மு முழுசா சொல்றதை கேளு, அழகு ஆபத்தானதுனு நீ கேள்விபட்டது இல்லையா அவ அழகு அந்த மாதிரி தான்.

அம்மு உன்ன முதல் முறை பிளைட்ல பார்த்தப்ப வந்த மாதிரி ஒரு பீல் எனக்கு யார்மேலயும் வந்தது இல்லை, உன்ன விட்டு கண்ணை நகர்த்த முடியாம கஷ்டப்பட்ட, என்ன உன்கிட்ட ஈர்த்தது உன்னோட அழகு இல்லை, அதைத்தாண்டி ஏதோ ஒரு பீல், அந்த பீல்க்கு முன்னாடி வேற எதுவும் நிற்கக்கூட முடியாது. நீ என் வாழ்க்கையோட காதல்டி என்னால உன்ன மட்டுந்தான் காதலிக்க முடியும் என்று கூறியவனை நெருங்கி முத்தமிட்டாள் அவந்திகா.

வாவ் அம்மு அன்னைக்கு கேபின்ல்ல கிஸ் குடுத்ததுக்கப்புறம், இவ்வளோ வருஷம் கழிச்சு இப்பதான் நீயா ஒரு கிஸ் குடுத்திருக்க இதை ஸ்பெஷலா செலிப்ரேட்  பண்ணனும் என்று கூறி அந்திவானமாய் சிவந்திருந்த மனைவியின் முகம் நோக்கி குனிந்தான்.

செழியன் அவந்திகா காதல் இன்று போல் என்றும் தொடர அவர்களை வாழ்த்தி விடைபெறுவோம்.

நலம் வாழ்க

நறுமுகை

No Responses

Write a response