என் வானவில்-5

என் வானவில்-5

காலையில் எழுந்த ஜெயலட்சுமி வாசலில் கோலம் போடும் மித்ராவை காணாமல் கவலையில் இருந்தார். என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு இந்த மூன்று மாதங்களில் ஒரு நாள் கூட காலையில் எழுந்து கோலம் போடாமல் இருந்தது இல்லை. உடம்பிற்கு ஏதும் சரியில்லையோ என்று நினைத்தார். சரி இன்னும் சிறிது நேரம் பொறுத்து பார்ப்போம் என்று நினைத்து தன் வேலைகளை தொடர்ந்தார்.

இங்கோ மாத்திரை போட்டதில் உறங்கிக்கொண்டிருந்த மித்ரா வழக்கத்திற்கும் மாறாக லேட்டாக எழுந்துவிட்டாள்.

வெகுநேரமாகியும் மித்ராவைக் காணாமல் ஜெயலட்சுமி என்னவென்று பார்க்க மித்ராவின் வீட்டிற்கு செல்ல, மித்ராவின் அப்பா வேலைக்கு சென்றுவிட்ட தைரியத்தில் புவனாவோ மித்ராவை கண்டபடி திட்டிக்கொண்டிருந்தார்.

சனியனே, ஒரு பொண்ணு காலையில் இவ்வளவு நேரம் ஆகியும் தூங்கிக்கொண்டிருந்தால்  வீடு விளங்குமா? நாளைக்கு கல்யாணம்  செய்து போகும்  இடத்தில் உன் சித்தி உன்னை வளர்த்திருக்கிறாள் பாரு என்று எனக்கு பெயர் வாங்கி கொடுக்க தான் நீ இப்படி செய்து கொண்டு திரிகிறாயா,  நீ உருப்படியாக பண்ணுவதே காலையில் எழுந்து காபி போடுகின்ற வேலை தான் அதை கூட உன்னால் ஒழுங்கா பண்ண முடியாதா எனக்கென்று வந்து வாய்த்திருக்க பாரு, சனியனே சனியனே என்று காலையிலேயே வசை பாடிக்கொண்டிருந்தார்.

பெண் பிள்ளை காலையில் இவ்வளவு நேரத்திற்கெல்லாம் எழுந்துவிட வேண்டும் என்று வக்கணையாக பேசும் புவனாவின் தவப்புதல்வியோ நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவளுக்கு அதெல்லாம் கண்ணில் படவே இல்லை. உள்ளே நிலைமை சரி இல்லை இப்போது நாம் உள்ளே சென்றால் மேலும் மித்ராவிற்கு தான் திட்டு விழும் என்று நினைத்த ஜெயலட்சுமி, பேசாமல் தன் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டாள்.

இரவு வெகுநேரம் விழித்திருந்துவிட்டு உறங்கியபின்னும் கனவு பாதி உறக்கம் பாதியாக இருந்த பிரகாஷ், சிவந்த கண்களோடு எழுந்து வந்தான், தாய் யோசனையோடு வருவதை பார்த்த பிரகாஷ்

என்ன ஆச்சுமா காலையிலேயே இவ்வளவு டல்லா இருக்கீங்க என்று கேட்டான்.

அது ஒன்றும் இல்லைடா காலையில் கோலம் போட மித்ராவை காணவில்லை என்று அவளை பார்க்க அவள் வீட்டிற்கு சென்றேன், காலையிலேயே அந்த லேடி அந்த பொண்ணை போட்டு பாடாய் படுத்திக்கொண்டிருக்கின்றாள் என்று கூறிவிட்டு, சரிடா நீ போய் முகம் கழுவிக்கொண்டு வா நான் போய் உனக்கு காபி போட்டு எடுத்து வருகிறேன் என்று கூறி சென்றுவிட்டார்.

எதையோ நினைத்துக்கொண்டிருந்த பிரகாஷ், அம்மா நான் பாட்டி வீட்டிற்கு போய்விட்டு அப்படியே அக்காவையும் போய் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று கூறினான்.

என்னடா பத்து நாட்கள் கழித்து போவதாக கூறினாய் இப்போ என்னவென்றால் இப்போதே போகிறேன் என்று கூறுகிறாய் என்று கேட்க,

இல்லைம்மா என்னமோ போகணும் போல தோன்றுகிறது, போய்விட்டு பத்து நாட்களில் வந்துவிடுகிறேன் என்றான் பிரகாஷ். சரி தான் எப்போ கிளம்புகிறாய் என்று கேட்க, இன்று இரவே கிளப்புகிறேன் அம்மா என்று கூறினான்.

அப்பாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கொள் என்று கூறிவிட்டு தன் வேலையை பார்க்க சென்றுவிட்டார் ஜெயலட்சுமி. சரி என்றவன் இன்று இரவு கோயம்பத்தூருக்கு டிக்கெட் இருக்கிறதா என்று ஆராயத்தொடங்கினான்.

டிக்கெட் புக் செய்ததும் தன் பாட்டிக்கு போன் செய்து தான் அடுத்தநாள் ஊருக்கு வருவதாக கூறினான். பின் தன் அக்கா ஸ்வாதிக்கு போன் செய்தான்.

ஸ்வாதி, பிரகாஷின் சொந்த பெரியப்பா மகள் ஆனால் இருவரும் கூட பிறந்தவர்கள் போல பழகிக்கொள்வார்கள். ஸ்வாதி ஒரே பெண் என்பதால் அவளுக்கு பிரகாஷ் மீது தனி பாசம் உண்டு. தனக்கு மாப்பிள்ளை பார்த்தபோது கூட, பிரகாஷ் சரி என்று சொன்ன பிறகு தான் ஒத்துக்கொள்வேன் என்று கூறியவள் ஸ்வாதி.

பிரகாஷும் அதற்கேற்ப ஸ்வாதி மீது உயிராய் இருப்பான். ஸ்வாதியை திருமணம் செய்துகொண்ட சங்கரும் இவர்கள் இடையே இருந்த பாசத்தை புரிந்துகொண்டு பிரகாஷிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்வான்.

கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த தம்பி வீட்டில் சில வாரங்கள் தங்கி இருந்துவிட்டு வருவதாக கூறி இருக்க, இன்று திடீரென போன் பண்ணவும், ஆரவாரமாக போனை அட்டென்ட் செய்தாள் ஸ்வாதி.

என்னடா பிரகாஷ் ஊருக்கு போயிட்டு என்னை எல்லாம் மறந்துவிட்டாய் போல ஒரு வாரமாக ஒரு போன் கால் கூட இல்லை என்று கேட்க,,

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லைக்கா வந்து ரெஸ்ட் எடுத்தேன், அம்மா கையினால் நல்லா சாப்பிட்டேன்.  கோயிலுக்கு சென்றேன், பிறகு போர் அடித்தது. சரி அதுதான் ஊருக்கு வரலாம் என்று உனக்கு போன் செய்தேன்.

அப்படியா எப்போ வர வா வா , என்று சொல்ல ,

இல்லை அக்கா முதலில் போய் நான் பாட்டியை பார்த்துவிட்டு மூன்று நாள் கழித்து  வருகிறேன் என்று கூறினான் .

ஓஹ் அப்படியா சரி, சரி, எப்போது  வருகிறாய் என்று முன்னாடியே சொல்லிவிடு நான் மாமாவை லீவ் போட சொல்லிவிடுகிறேன். என்று கூறினாள் ஸ்வாதி.

அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அவர் ஈவினிங் வீட்டிற்கு வரும்போதே பார்த்துக்கொள்கிறேன். அவரை ஏன் கஷ்ட படுத்துகிறாய் என்று கூறிவிட்டு சிறிது நேரம் தன் அக்காவிடம் பேசிவிட்டு போனை வைத்தான். அவன் உள்ளே செல்லலாம் என்று நினைக்க,

ஹாய் நீங்க ஜெயலட்சுமி ஆன்ட்டியின் சன்னா? நீங்க என்ஜினீயரிங் காலேஜில் படித்தீர்கள் என்று கேள்விப்பட்டேன், என்று ஒரு குரல் கேட்டு திரும்பி பார்த்தான்.

அந்த வேளையில் அவ்வளவு மேக்கப்புடன் நின்று கொண்டிருந்த பெண்ணை பார்த்ததும், அந்த பொண்ணு எதாவது நாடகத்தில் நடிக்க போகிறதா?    என்ற எண்ணம் தான் பிரகாஷ் மனதில் தோன்றியது. ஆனால் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல்

அவள் கேட்டதற்கு ஆமாம் என்பது போல தலை அசைக்க,

ஹ்ம்ம் வாவ், என் பெயர் ஹேமா மிஸ்ஸஸ் புவனாவின் டாட்டர், இப்போ என்ஜினீயரிங் பர்ஸ்ட் இயர் பண்றேன் என்று கூற,  

அவள் வாயை குவித்து பேசிய விதமும் கண்களை படபடவென அடித்துக்கொண்டு விதமும் பிரகாஷிற்கு ஏனோ எரிச்சலாக இருந்தது எனவே ஒஹ் அப்படியா என்று கூறிவிட்டு அங்கு அப்படி ஒரு ஜீவன் இல்லாதது போல பாவனை செய்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டான் பிரகாஷ்.

அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தவள் ஆள் பார்க்க ஜம்மென்று இருக்கிறானே, இவனை மட்டும் நம்ப ஆளுனு நம்ப ப்ரண்ட்ஸ்க்கு இன்ட்ரோ பண்ண நம்ப ரேஞ்சே மாறிடும், பேசி பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டாள்.

அப்போது அங்கு வந்த அவளது தம்பி அருண் இங்கு என்ன செய்கிறாய் உள்ளே அம்மா உன்னை தேடுகிறார் என்று கூறினான்.

அவளோ வருகிறேன் போ என்று கூறிவிட்டு அவனிடம் ஆமாம் இந்த பக்கத்து வீட்டில் ஒரு பையன் இருக்கிறானே அவனைப்பற்றி உனக்கு எதாவது தெரியுமா? என்று தம்பியிடம் கேட்க,

தன்னை விட வயதில் குறைந்தவனிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்கின்றோமே என்ற எண்ணம் இல்லாமல் இருக்கும் தன் தமக்கையை எரிச்சலோடு பார்த்தவன் தெரியாது என்று கூறி வேகமாக நகர்ந்தான்.

ஹேமா வலையில் சிக்குவானா பிரகாஷ்? அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்”.

-நறுமுகை

2

No Responses

Write a response