என் வானவில்-29

என் வானவில்-29

மித்ராவிற்கு நடந்தவை எல்லாம் கனவு போல இருந்தது.  இன்று காலை வரை தன் வாழ்வில் நடந்தவைகள் வேறு, இன்று காலையில் இருந்து தன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் வேறு என்று அவளால் நம்பவே முடியவில்லை. எங்கேயோ இருந்து இங்கு வந்து சேர்ந்தவள் யாரோ சொல்லி இது தான் உன் இடம், இது தான் உன் அடையாளம் என்று கேட்கும்பொழுது அவளுக்கு இதை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்று கூட தெரியவில்லை.

தன்னை காணாமல் தன் அப்பா வருந்துவார் என்று இவள் நினைத்துக் கொண்டிருக்க அவர் தான் உன்னை இங்கு அனுப்பிவைத்தார் என்று பிரகாஷ் சொல்லி கேட்டவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. தன்னை சுற்றி இவ்வளவு நடந்திருக்கிறது எப்படி இதை எதையுமே தான் உணராமல் இருந்தோம் என்று மித்ராவிற்கு மலைப்பாக இருந்தது. எதையெதையோ யோசித்து யோசித்து தலை வலி வந்தது தான் மிச்சம். தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவளின் அருகில் வந்து அமர்ந்தான் பிரகாஷ்.

மித்ரா என் மீது கோபமா இருக்கியா? என்ற அவனது குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள்

 உங்க மேல எனக்கு என்ன கோபம் சத்யா?

இல்ல நீ யார்? உன்னை எதற்காக இங்கு கூட்டிக்கொண்டு வந்தோம்? இப்படி உன்னை பற்றி எல்லா விஷயத்தையும் உன்னிடம் இருந்து நான் மறைத்துள்ளேன், அதனால் என் மீது கோபமாக இருக்கிறாயா என்று கேட்டேன் என்றான்.

எனக்கு உங்கள் மீது கோபம் இல்லை சத்யா. நீங்கள் கூறியது போல அன்று இருந்த அந்த பயந்து நடுங்கிய மித்ராவிற்கு நீங்கள் செய்ததுதான் சரி.

இப்போதும்  எனக்கு என்ன செய்றது என்று தெரியவில்லை. என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது? நீங்கள் சொன்னது உண்மையா? என்று எனக்கு தெரியவில்லை என்று மித்ரா அவள் மனதில் உள்ளதை அவனிடம் புலம்ப,

மித்ரா, நாங்கள் கூறியது அனைத்தும் உண்மை, உனக்கு வேண்டும் என்றால் பாட்டிக்கும் உனக்கும் டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்து பார்ப்போம் உன் சந்தேகத்தை போக்கிவிடலாம் என்றான்.

இல்லை …… அப்படி எல்லாம் நான் சொல்லவில்லை, எப்படி வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் வேண்டாம் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியில் சென்று திருமணம் செய்து கொண்ட என் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ஒரு வருடத்தில் என்ன நடந்திருக்கும்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்று சொல்ல,

பிரகாஷோ, அது கண்டிப்பா யோசிக்க வேண்டிய விஷயம் தான் ஆனால் அதெல்லாம் இப்போதே யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை.

நீ எங்கள் மீது கோபமாக இருக்கிறாயோ என்று பாட்டி கீழே வருத்தமாக அமர்ந்திருக்கிறார். இவ்வளவு நாள் உன் பாதுகாப்பிற்காக என்று நீ சொந்த பேத்தியாக இருந்தால் கூட அதை வெளியில் சொல்ல முடியாமல் ரொம்போ கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். இப்போது நீ தான் சொந்த பேத்தி என்று உனக்கு தெரிந்த பிறகும் உன்னிடம் உரிமையாக பேச முடியாமல் கஷ்டத்தில் இருக்கிறார்கள், நீ கீழ் இறங்கி வந்து அவர்களிடம் பேசு என்று அவன் கேட்க

சாரி சத்யா, நான் இருந்த மன நிலையில் நான் உங்கள் யாரை பற்றியும் யோசிக்காம இருந்துட்டேன். கண்டிப்பா எனக்கு உங்க யார் மீதும் எந்த கோபமும் இல்லை. நீங்க யாரும் எனக்கு எந்த கெடுதலும் செய்யலையே. என் சித்தியிடம் மாட்டி அவஸ்தை படாமல், அந்த பன்னீர்செல்வத்தை திருமணம் செய்யாமல் என்ன காப்பாற்றி தானே கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள் எனக்கு ஏன் உங்கள் மீது கோபம்? நான் இப்பொழுதே கீழ் இறங்கி வந்து பாட்டியிடம் பேசுகிறேன் என்று சொன்னவள் பிரகாஷுடன் கீழ் இறங்கி பாட்டியை காண சென்றாள்.

அங்கு தெய்வநாயகியோ எங்கு நாம் அனைத்து உண்மைகளையும் மறைத்ததற்கு தன் பேத்தி தன்னை வெறுத்துவிடுவாளோ என்ற கவலையில் அமர்ந்திருக்க,

அவர் அருகில் சென்று அமர்ந்தவள் பாட்டி, நீங்கள் ஏன் இப்பொழுது இவ்வளவு கவலையாக இருக்கிறீர்கள்? எனக்கு திடீரென இந்த விஷயங்கள் அனைத்தும் தெரிந்ததால் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு தானே தவிர எனக்கு யார் மீதும் எந்த கோபமும் இல்லை. இப்படி ஒரு பாட்டி கிடைத்ததற்காக யாராவது வருத்தப்படுவார்களா? எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. ஜஸ்ட் எனக்கு இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு வாழ கொஞ்சம் டைம் ஆகும் அவ்வளவு தான். ஒரே நாளில் என் வாழ்க்கையில் அனைத்தும் மாறிவிட்டது எனபதை என்னால் நம்ப முடியவில்லை.அந்த குழப்பத்தில் தான் இருக்கின்றேனே தவிர எனக்கு உங்கள் மீது எந்த வருத்தமும் இல்லை என்று சொல்ல,

தெய்வநாயகி மித்ராவை அணைத்துக்கொண்டார். நீ வந்ததில் இருந்து எத்தனை முறை உன்னிடம் இந்த விஷயத்தை பற்றி பேசவேண்டும் என்று நினைத்தேன் தெரியுமா? எங்கு அது உனக்கே ஆபத்தாக முடிந்துவிடுமோ என்று தான் ஒவ்வொரு முறையும் மறைத்தேன். உன்னை பார்க்கும்பொழுதெல்லாம் உன் அம்மாவை பார்ப்பது போல இருக்கும் நான் அதிகாமாக எஸ்டேட்டை விட்டு வெளியில் போகதே  இங்கேயே நட, என்று சொன்னதற்கு கூட கரணம் இது தான். இங்கிருக்கும் நிறைய பேருக்கு உன் அம்மாவை நன்றாகவே அடையாளம் தெரியும். நீ பார்ப்பதற்கு அவளை போலவே இருக்கிறாய். இன்னும் சொல்ல போனால் நீ வீட்டிற்கு வருகிறாய் என்பதால் தான் நம் வீட்டில் வைத்திருந்த ஒரே ஒரு போட்டவை கூட எடுத்து உள்ளே வைத்துவிட்டோம். இங்கு வள்ளி மற்றவர்கள் எல்லாம் கூட, “ஏன்மா போட்டோவில் இருந்த காயத்ரி அம்மா மாதிரியே மித்ரா பாப்பா இருக்கிறது இல்லையா? அப்படி கூறியபொழுது கூட, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, நீ உன் இஷ்டத்திற்கு கற்பனை செய்துகொள்ளாதே என்று கூறி அவர்களது வாயை அடைத்துவிட்டேன். இப்போ உனக்கு அணைத்து விஷயங்களும் தெரிந்த பிறகு தான் எனக்கு பாரம் இறங்கியது போல இருக்கிறது. இந்த வீட்டில் நீ யாரோ போல யிருக்க வேண்டாம் பாரு, இது உன் வீடு மித்ரா, நீ எப்பொழுது இங்கு வருவாய் என்று நான் இத்தனை வருடங்களாக காத்துக்கொண்டிருந்தேன் தெரியுமா? என்று கூறி தன் பேத்தியின் நெற்றியில் பாசத்துடன் முத்தம் இட்டார். மித்ராவும் தெய்வநாயகியை மிகுந்த பாசத்துடன் அணைத்துக்கொண்டாள்.

பிரகாஷிற்கு இதை பார்க்க நிம்மதியாக இருந்தது.

ஆனால் அதே நேரம் இங்கிருந்து வெளியில் சென்ற ரோஹித் எஸ்டேட்டை தாண்டி சிறிது தூரம் சென்றபிறகு காரை  ஓரமாக நிறுத்திவிட்டு தன் தந்தைக்கு போன் செய்தான். அப்பா நாம் நினைத்து வந்தது எல்லாம் வீணாக போயிற்று. எதிர்பாரத நேரத்தில் அந்த பிரகாஷ் வந்து சேர்ந்துவிட்டான் என்று சொல்ல,

விஸ்வநாதனோ அவன் தான் லண்டனில் இருக்கிறானே அவன் எப்படி இங்கு வந்தான்? என்று கேட்க

அது எப்படியோ எனக்கு தெரியவில்லை. வந்தவன் மித்ராவிடம் என்னை பேசவே விடவில்லை. இன்னும் சொல்லப்போனால் மித்ராவே நான் கூறுவதை கேட்க தயாராக இல்லை. எப்படியோ அவள் நினைப்பது போல யாரோ திருச்சியை சேர்ந்தவரின் பொண்ணு இல்லை இந்த எஸ்டேட் ஓனர் அந்த தெய்வநாயகி அம்மாவின் பேத்தி  என்று சொல்லிவிட்டேன். ஆனால் நாம் என்ன சொன்னாலும் அவள் காது கொடுத்து கேட்க போவது இல்லை.அந்த தெய்வநாயகி அம்மாவும் அந்த மித்ராவை நம்முடன் அனுப்ப போவது இல்லை. இதற்கு என்ன தான் வழி என்று ரோஹித் புலம்ப,

விஸ்வநாதனோ, ரோஹித் என்னதான் நீயோ நானோ அவளுக்கு உறவாக இருந்தாலும் அவளை அவள் பாட்டியிடம் இருந்து கூட்டிக்கொண்டு வரும் அளவிற்கு நம் உறவு கிடையாது.

அதை செய்யக்கூடிய ஒரே ஆள் உன் தாத்தா மட்டும் தான் அவள் மீது அந்த தெய்வநாயகி அம்மாவிற்கு இருக்கும் அதே உரிமை உன் தாத்தாவிற்கு மட்டும் தான் இருக்கிறது. அவரிடம் அவரது பேத்தி உயிருடன் இருக்கிறாள் என்னும் செய்தியை கூறி, அவரின் உடல் நிலை கொஞ்சம் தேரிய பிறகு அவரை கூட்டி கொண்டு போய்  அங்கு நிறுத்துவோம். அவர் கேட்டால் அவர்கள் எப்படி தராமல் போகிறார்கள் என்று பார்ப்போம்  எப்படி என்றாலும் சரி மித்ராவை நாம் இங்கு கூட்டிக்கொண்டு வந்தே ஆகவேண்டும். அவளை வைத்த தான் நமக்கு நிறைய திட்டங்கள் இருக்கிறது என்று விஸ்வநாதன் கூற,

ரோஹித்தோ நீங்கள் கூறுவது தான் அப்பா சரி நான் உடனே கிளம்பி வருகிறேன்.

ரோஹித்தும் விஸ்வநாதனும் எதற்காக மித்ராவை தெய்வநாயகியிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்? மித்ராவை வைத்து அவர்களது திட்டம் என்ன என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்”

-நறுமுகை

4

No Responses

Write a response