என் வானவில்-14

என் வானவில்-14

மித்ரா அழைக்கும் வரை வால்பாறை செல்லக்கூடாது என்று நினைத்துக்கொண்டிருந்த சத்யா, மித்ரா அப்படி கேட்கவும் இந்த வாரம் வால்பாறை செல்வதென்று முடிவு எடுத்து, டிக்கெட் புக் செய்தான்.

 அடுத்தநாள் அலுவலகம் வந்தவன் அதை சுஜியிடம் கூறினான். 

ராம் ஏற்கனவே ஒருவாரம் விடுமுறையில் இருந்ததால் பிரகாஷ் மட்டுமே சுஜியுடன் அலுவலகத்தில் இருந்தான். 

வால்பாறை செல்லப்போவதாக கூறிய பிரகாஷை சுஜி குறுகுறுவென பார்த்தாள். 

ஹே, என்ன என்னை அப்படி பார்க்கிறாய்? 

இல்லை மூன்று மாதங்களாய் இல்லாமல் இப்போதென்ன திடீரென என்று கேட்டாள் சுஜி. 

மூன்று மாதங்கள் ஆயிற்று இல்லையா? அது தான் மித்ரா எப்படி படிக்கிறாள்? காலேஜ் எல்லாம் எப்படி போகுது, பாட்டி எப்படி இருக்கிறார் என்று பார்த்துவிட்டு வரலாம் என்று போகிறேன், என்றான் பிரகாஷ்.

சுஜி அவனை நம்பிக்கை இல்லாமல் பார்க்க, 

மித்ரா……….. வந்து மூன்று மாதங்கள் ஆயிற்றே, எப்போ பார்க்க வருகிறீர்கள் என்று கேட்டாள்,என்று பாதி உண்மையும், பாதி பொய்யுமாக கூறினான் பிரகாஷ். 

மேலும் சுஜி அவனையே அமைதியாக பார்க்க,

இப்போ உனக்கு என்ன கேட்கணுமோ கேளு, எதற்கு இப்படி குற்றவாளியை பார்க்கின்ற மாதிரி பார்க்கிறாய்? என்றான் பிரகாஷ்.

எனக்கெல்லாம் கேட்பதற்கு ஒன்றும் இல்லை. உனக்கு சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்றாள் சுஜி.

சுஜி நீ அந்த ராம் கூட சேர்ந்து ரொம்போ கெட்டு போயிட்ட, இப்போ எதற்கு என்னை  கிராஸ் வெரிஃபிகேஷன் செய்துகொண்டிருக்கிறாய்? என்றான் பிரகாஷ்.

 நீ ஏன் நாங்க கிராஸ் வெரிஃபிகேஷன் செய்யும் அளவிற்கு வைத்துக்கொள்கிறாய்? என்று நக்கலாக கேட்டாள் சுஜி.

மேலும் அவளே தொடர்ந்து ராமும் நானும் கேட்டால் இல்லை இல்லை, லவ் எல்லாம் இல்லை என்று சீன் போடுகிறாய். பிறகு மூன்று மாதங்களாய் மித்ரா கூப்பிடாமல் போகமாட்டேன் என்று இங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தாய். இப்போ கூப்பிட்டும் கூப்பிடாமலும் கிளம்பி ஓடுகிறாய். இதை நாங்கள் எந்த லிஸ்டில் தான் சேர்த்துவது என்றாள் சுஜி.

அவளையே ஒரு நிமிடம் அமைதியாக பார்த்த பிரகாஷ் சுஜி எனக்கு அவளை பிடிச்சிருக்கு அது உண்மை, ஆனா என்னைக்கும் எந்த நிலைமையிலும் அது அவளுக்கு தெரியக்கூடாது அதுனாலதான் நான் உங்ககிட்ட கூட அதைப்பற்றி பேசுறது இல்லை என்று ஆழ்ந்த குரலில் சொன்னான் பிரகாஷ்.

ஏன் ஏன் ஏன் அவளுக்கு தெரியக்கூடாது ?????

சுஜி உனக்கே இதுக்கு காரணம் தெரியும் அப்புறமும் இப்படி கேட்குற, என்று அவளையே திருப்பி கேட்டான் பிரகாஷ்.

ஹ்ம்ம், சரிப்பா ஒரு உதாரணத்திற்கே நான் சொல்கிறேன் நீ எதுவும் சொல்ல வேண்டாம் எதுவும் நினைக்கவும் வேண்டாம், ஆனால் நீ இவ்வளவு செய்வதில் உன் மீது அட்ராக்ட் ஆகி மித்ராவிற்கே காதல் வந்து விடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போ நீ, இல்லை இல்லை நான் அப்படி எல்லாம் நினைக்கவில்லை என்று கூறி அவளை ஏமாற்ற போகிறாயா? லவ் என்றால் அதற்கு ஏற்றார் போல பழகு, இல்லையா அவளை விட்டு தள்ளி இரு, அதற்காக தான் நான் கூறுகிறேன் என்றாள் சுஜி.

அவள் அப்படி, மித்ராவிற்கு காதல் வந்தால் என்று கூறியதிலேயே உழன்று கொண்டிருந்த பிரகாஷ் அவளுக்கு என் மீது காதல் வருமா என்று சுஜியிடம் திருப்பி கேட்டான்.

அவனை முறைத்தவள் டேய், உனக்கே இது கொஞ்சம் ஓவராக தெரியவில்லை? என்று கேட்க, 

இல்லை சுஜி ஒரு வேளை நான் அவளை காதலித்து அவளுக்கு என் மேல் காதல் வரவில்லை என்றால் ?

ஹ்ம்ம் …..போகின்ற போக்கை பார்த்தல் நீ பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு தான் காதலிப்பாய் போல என்று கேட்டாள் சுஜி.

அவளை பார்த்து புன்னகைத்தவன் இங்க பாரு சுஜி இப்போதைக்கு, அவளை பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும், அவளுக்கு எந்த பிரச்சனையும்  வரக்கூடாது, அவளை நன்றாக படிக்க வைக்கவேண்டும் அவ்வளவுதான் என்றான் பிரகாஷ்.

ஹ்ம்ம்ம் சரி மித்ராவை பார்த்துவிட்டு மறக்காமல் வீடியோ கால் பண்ணு. நானும் அவளை பார்த்து மூன்று மாதங்கள் ஆகிறது என்று கூறினாள். 

கண்டிப்பாக கண்டிப்பாக என்று வேகமாக தலை ஆட்டினான் பிரகாஷ். 

நீ போயிட்டு வா, நீ வருவதற்குள் ராம் வந்துவிடுவான், இதே கேள்வி பதில் செக்ஷனை அவன் நடத்துவான். அவனுக்கும் பதில் சொல்லு என்று சுஜி கூற,

அவனிடம் நான் திருச்சிக்கு சென்றிருக்கிறேன் என்று கூறு, வால்பாறைக்கு போயிருக்கிறேன் என்று சொல்லிவிடாதே அவ்வளவு தான் என்று கூறி இருவரும் சிரித்தனர். 

அதன் பின் அந்தவாரம் வால்பாறை சென்று இறங்கினான். 

தான் வருவதை மித்ராவிடம் சொல்லவேண்டாம் என்று பாட்டியிடம் கூறியிருந்தான் பிரகாஷ். 

எனவே பாட்டியும் மித்ராவிடம் எதுவும் கூறவில்லை. 

மித்ரா எப்பொழுதும் போல வெள்ளிக்கிழமை இரவு காலேஜில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தாள். பிரகாஷ் இரவு பயணம் செய்து விடியற்காலையில் வால்பாறை வந்து இறங்கினான். 

வந்தவன் சிறிது நேரம் தூங்கி எழுவதாக கூறி தூங்க சென்றுவிட்டான். 

வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்கு வந்த மித்ரா அன்று  இரவு வள்ளியுடன் சேர்ந்து புதுப்படம் ஒன்றை பார்த்துவிட்டு லேட்டாக உறங்கியதால், காலை நேரம் கழித்தே எழுந்தாள். 

எழுந்தவள் வழக்கம் போல தோட்டத்திற்கு சென்று அங்கு தோட்டக்காரராக இருக்கும் மாரிமுத்துவுடன் சேர்ந்து அவள் வைத்த பூச்செடி, கொய்யா மரம் அனைத்தும் எப்படி இருக்கின்றது என்று ஒரு சுற்று பார்த்துவிட்டு வீட்டிற்குள் வந்தாள். 

வந்தவளை காபியுடன் எதிர்கொண்ட வள்ளி, எங்க மித்ரா பாப்பா போய்விட்டாய் காலையில் இருந்து உன்னை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று கேட்டாள். 

வள்ளி, நான் கொய்யா மரம் பார்க்க போனேன், பூ விட்டு விட்டது இன்னும் கொஞ்சம் நாளில் காய் வந்துவிடும் என்று தாத்தா சொன்னார். என்று கண்களை விரித்து மித்ரா கூறிக்கொண்டிருக்க, 

தெய்வநாயகி அங்கு வந்தார், அவரை பார்த்ததும் பாட்டி, கொய்யா மரம் பார்த்தீங்களா! பூ விட்டுவிட்டது என்று சொல்ல, 

நான் அன்றே ஒரு நாள் பார்த்துவிட்டேன் மித்ரா, நீ வந்ததும் காட்டவேண்டும் என்று மாரிமுத்து சொல்லிக்கொண்டே இருந்தான் கூட்டிக்கொண்டு போய் காலையிலேயே காட்டிவிட்டானா என்றார்.

ஆமாம் என்பதாக தலை ஆட்டிக்கொண்டே அவருடைய மருந்து டப்பாவை எடுத்துக்கொண்டு அருகில் அமர்ந்தாள் மித்ரா.

 ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே வந்தவள் பாட்டி இந்தவாரம் இரண்டு நாள் நீங்க மருந்து சாப்பிடாமல் ஏமாற்றிவிட்டீர்கள், உங்களிடம் எத்தனை முறை கூறுவது இப்படி செய்யாதீர்கள் என்று, என கேட்க, 

அதெல்லாம் சரியாக தான் சாப்பிட்டேன் மித்ரா, என்று தெய்வநாயகி எதோ பள்ளி சிறுமி போல் அவளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தார். 

அப்போது தான் அதை கேட்டுக்கொண்டே கீழே இறங்கிவந்தான் பிரகாஷ். மித்ரா பேசுவதை கேட்டுக்கொண்டு அவர்களிடம் செல்லாமல் கடைசி படியிலேயே நின்னு அவர்களை வேடிக்கை பார்த்தான்.

பாட்டி பொய் சொல்லாதீர்கள் எனக்கு தெரியும் நான் அனைத்து மருந்துகளையும் கணக்கு எழுதி வைத்திருக்கிறேன் நீங்கள் ஏமாற்றியிருக்கிறீர்கள். இதற்கு உங்களுக்கு கண்டிப்பாக பனிஸ்மென்ட் உண்டு என கூற, 

பனிஷ்மெண்ட்டா ? என்று வள்ளி கேட்க,

ஆமாம் ஆமாம்  இனி இரண்டு ரவுண்ட் அதிகமாக பாட்டி நடக்க வேண்டும்.

ஐ ஜாலி என்றாள் வள்ளி,

அடிக்கழுதை,போ போய் கிச்சனில் காலை டிஃபன் வேலையை பாரு என்று அவளை துரத்தி விட்ட தெய்வநாயகி,

சரி மித்ரா வாக்கிங் தானே கண்டிப்பாக உன்னுடன் வருகிறேன் வாரம் வாரம் கூட எஸ்ட்ராவாக வருகிறேன் இந்த மாத்திரை மட்டும் வேண்டாமே என்று சொல்ல,

அதெல்லாம் முடியாது சொன்னால் சொன்னது தான் இல்லை என்றால் நான் டாக்டர் அங்கிள்கிட்ட போன் பண்ணி சொல்லிவிடுவேன் என்று அவள் மிரட்ட,

சரி சரி நான் சாப்பிடுகிறேன் மா, இன்னும் நீ அவனிடம் வேறு சொல்லிவிடாதே, என்று குடும்ப மருத்துவரிடம் கூற வேண்டாம் என்று கூறிக்கொண்டிருந்தார்.

அதை கேட்டுக்கொண்டே அங்கு வந்த பிரகாஷ், என்ன பாட்டி எல்லோரையும் நீங்கள் மிரட்டிக்கொண்டு இருந்தீர்கள் உங்களை மிரட்ட ஆள் வந்தாச்சு போல, என்று கேட்டுக்கொண்டே அவர் அருகில் அமர்ந்தான்.

அவனை அங்கு எதிர்பார்க்காத மித்ரா ஆச்சர்யத்தில் விழி விரிய அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.

என்ன மித்ரா, என்னை அடையாளமே தெரியவில்லையா? உனக்கு என்று பிரகாஷ் கேட்க,

பாருங்க பாட்டி, எப்போ பார் என்னை கிண்டல் செய்துகொண்டே, என்று சிணுங்கினாள் மித்ரா.

அவன் கேட்பதுபோல நீயும் தான் அவனை யார் என்று தெரியாதது போல பார்த்தால், என்ன அர்த்தம் மித்ரா? என்று கேட்ட தெய்வநாயகியும் மித்ராவை கேலி செய்ய, 

ஹ்ம்ம் பேரன் வந்துவிட்டால் உடனே நீங்கள் அவருடன் ஜோடி போட்டுகொண்டுவிடுவீர்களே! என்றவள்,

பிரகாஷை பார்த்து எப்ப வந்தீங்க நேற்று பேசும்போது கூட வரதா சொல்லவே இல்லை என்றாள்,

சும்மா உனக்கு ஒரு ஷாக் குடுக்கலானுதான், என்றவன் எப்படி இருக்க மித்ரா என்று கேட்டான்,

ரொம்போ நல்லா இருக்க நீங்க எப்படி இருக்கீங்க ஆன்ட்டி, சார், அருண், அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க என்று கேட்டாள்.

அனைவரும் நலம் என்றவன், பின் அவள் படிப்பை பற்றி கேட்டான். சிறிதுநேரத்தில் வள்ளி அழைக்க மித்ரா அவளுடன் சமயலறைக்கு சென்றுவிட்டாள்.

பிரகாஷிற்கோ தான் மூன்று மாதங்களுக்கு முன்பு பார்த்த பயந்து கண்களெல்லாம் கவலையுடன் இருந்த சிறு பெண்ணா இது என்று ஆச்சர்யமாக இருந்தது. பாட்டியின் அன்பிலும் கவனிப்பிலும் தான் நினைத்ததை படிக்க கிடைத்த வாய்ப்பிலும் அதை விட அதிகமாக தினமும் கிடைக்கும் திட்டிலிருந்து அவளுக்கு கிடைத்த விடுதலையிலும்   மித்ராவின் முகமும் அகமும் எந்த நேரமும் மகிழ்ச்சியோடு இருந்தது. 

அது அவளது முகத்தில் பிரதிபலித்தது. அது பிரகாஷிற்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது.

இந்த மகிழ்ச்சி மித்ராவிற்கு நிலைக்குமா????? அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்”

-நறுமுகை

3

No Responses

Write a response